199. காலமயில். (பா மாலிகை (கதம்பம்)

 

 

காலமயில்.

திருப்தி வந்து தொடும் வரை
திருமேனி அமைதியடையாது.
நிறைவு தானே பொன்சங்கிலி
குறை களைந்து வரவேணும்.

குளிக்கையில் கண்ணீர் வடிந்தால்
எளிதல்ல இனம் காணல்.
வழி எதுவென வாழ்க்கையில்
விழிகளுக்குத் தெரிவதில்லை.

ருடங்கள் போனாலே புது
திருப்பமும் தோன்றிடும் – முழு
திருப்தியைக் காண்பதே மனித
விருப்பமும் நிறைவுமாகும்.

குழப்பம், குறுக்கு வழிகள்
தழும்பி, தடக்கி, தள்ளாடும்.
கொழுகொம்பாம் நம்பிக்கையால்
முழு முயற்சி வெற்றி தரும்.

ன்பெனும் முல்லைக்கொடி
அகம்(வீடு) நிறைந்து படர்ந்தால்
உலகம் தன் கையிலெனும்
களிப்பு, நிறைவு உருவாகும்.

காம் பூனையாய் பதுங்கி
சாலம் காட்டி ஏமாற்றினாலும்
மீளொரு காலம் வரும்
நீலமயிலாய்த் தோகை விரிக்கும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-7-2011.

 

                         
 

9 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ஸ்ரீஸ்கந்தராஜா
    ஜூலை 09, 2011 @ 05:51:18

    மிகவும் அற்புதமான சொல்லாடல்!
    அழகான மொழிப் பிரயோகம்!
    வார்த்தைகளில் அணி நலன்கள் மெருகேற்றுகின்றன!
    தங்கள் கைவண்ணம் கண்டு தமிழன்னை
    மெய்சிலிர்க்கின்றாள்!!

    தலைப்பு மிக அற்புதமாக இருக்கிறது!

    வாழ்த்துக்கள் அம்மா!

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூலை 09, 2011 @ 06:20:33

      மிக்க நன்றி சகோதரரே! உணர்ந்து எழுதியதாக உங்கள் மொழிப் பிரயோகம் எனக்கு உணர்த்துகிறது. மிக மகிழ்வடைகிறேன். மனமார்ந்த நன்றி. இது என்னை இன்னும் ஒரு அடி ஊன்றிக் காலூன்ற ஏதுவாக அமைத்திடும். 4, 5 நாட்களாக என்னோடு காவி, முதலே எழுதிய கவிதையை மினுக்கியதன் பலன் உங்கள் வரிகள். இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  2. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
    ஜூலை 09, 2011 @ 08:35:12

    அன்பெனும் முல்லைக்கொடி
    அகம் நிறைந்து படர்ந்தால்
    உலகம் தன் கையிலெனும்
    களிப்பு, நிறைவு உருவாகும்………………….
    காலமயிலின் தமிழ் கோலநடனம் கண்டு மனம் நெகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் !!

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூலை 09, 2011 @ 10:06:46

      காலமயிலின் சாலம் நிறை நடனம் கண்டு களித்து அன்பு வரிகள் தந்தீர்கள். உங்கள் அன்பான கருத்து வரிகள், உங்கள் வரவு அத்தனைக்கும் மிக்க மகிழ்வு. மனம் நிறைந்த நன்றி. ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

      மறுமொழி

  3. SUJATHA
    ஜூலை 09, 2011 @ 11:13:09

    குழப்பம், குறுக்கு வழிகள்
    தழும்பி, தடக்கி, தள்ளாடும்.
    கொழுகொம்பாம் நம்பிக்கையால்
    முழு முயற்சி வெற்றி தரும்.

    காலம் கனியும்….அருமை வாழ்த்துக்கள் ”வேதா”

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூலை 09, 2011 @ 11:44:11

      மிக்க நன்றி சுஜா! உமது அன்பான வரவு, கருத்திற்கு. எல்லாம் அனுபவமே! …எல்லோரிற்கும் கிடைக்கும் அனுபவமே! இரவு- பகல், வெயில்- நிழல், இனிப்பு – கசப்பு, போன்று தான். இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  4. compound sliding miter saws
    ஜூலை 09, 2011 @ 12:19:52

    Pretty good post. I just stumbled upon your blog and wanted to say that I have really enjoyed reading your blog posts. Any way I’ll be subscribing to your feed now.

    மறுமொழி

  5. பிரபுவின்
    ஜூலை 11, 2011 @ 03:48:43

    “குளிக்கையில் கண்ணீர் வடிந்தால்
    எளிதல்ல இனம் காணல்.
    வழி எதுவென வாழ்க்கையில்
    விழிகளுக்குத் தெரிவதில்லை”

    “காலம் பூனையாய் பதுங்கி
    சாலம் காட்டி ஏமாற்றினாலும்
    மீளொரு காலம் வரும்
    நீலமயிலாய்த் தோகை விரிக்கும்”

    உண்மையான நற்சிந்தனைகள்.இதனைப் படித்தால் உலகைப் பற்றிய தெளிவு பிறக்கும்.

    மறுமொழி

பிரபுவின் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி