14. நட்பும் நடிப்பும்.

 

 

நட்பும் நடிப்பும்.

 

மூத்தவர்களை மதிப்பதென்பதும், நல்ல நாட்கள், பெருநாட்களில் வயதுக்கு மூத்தோரிடம் ஆசீர்வாதம் வேண்டுதல் என்பதும், பழைய கலாச்சாரம். புதிய உலகம் வேறு மாதிரியானது.

என்ன கூறுகிறேன் என்று ஆச்சரியப் படுகிறீர்களா!….?…..

அந்த இரண்டு குடும்ப நண்பர்கள் திருமண வெள்ளி விழாக்களுக்கு, சீதா வீட்டிற்கு அழைப்பு வரவில்லை. நகரத்தில் வாழ்க்கை அனுபவமும், வயதிலும்  மூத்த தம்பதிகளே சீதாவும் ராமனும்.  அழைப்பு வராததால் மனது சிறிது கசங்கியது போல உணர்வு கொண்டனர் சீதாவும் ராமனும்.

பின்பு கேள்விப்பட்டனர்…. அவை பிள்ளைகளின் ஏற்பாட்டில் நடந்த ஆச்சரியக் கொண்டாட்டங்கள்  என்று. அதிலும் ஒரு குடும்பத்திலேயே, பிள்ளைகள் குடும்பத்தை அழைத்தும், பெற்றவர் குடும்பத்தை அழைக்காமலும் என்று தவறுகள் நடந்துள்ளது என்றும் அறிந்தனர்.

இதில் ஒரு விழாவிற்கு ஒரு குழுவினரின் வேண்டுகோளின் படி சீதா வாழ்த்துப்பாவும் எழுதிக் கொடுத்துள்ளாள், அது வேறு விடயம்.

இந்த இரண்டு குடும்பத்து இளைய பிள்ளைகளுடன் சீதா மிக அன்பாகப் பழகுவாள். முகநூலில் கூட அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளாள். அப்படி இருந்தும் இப்படி நடந்துள்ளது. இதை சிறிது மனவருத்தத்துடன் சீதா என்னிடம் கூறினாள்.

இப்படி நடந்ததின் தவறு யாருடையது?

பெற்றவரின் கொண்டாட்டத்தை ஆச்சரியமாக நடத்துவது சரி. ஆனால்…… பெற்றவரின் மனதுக்குப் பிடித்த மாதிரித் தானே விழாவை நடத்த வேண்டும்!…….

இங்கு பெற்றவர்கள் தமது உறவுகள், நண்பரது பெறுமதிகளை பிள்ளைகளுடன் நாளாவட்டத்தில் கலந்து பேச வேண்டும். உறவின் பெறுமதி, தராதரம் அனைத்தும் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறப்பட வேண்டும். அப்போது தான் பெற்றோர் பழகும் முறை, உறவின் தரம் என்பவைகளைப் பிள்ளைகள் அறிவார்கள். இப்படிப் பேசாவிடில் பிள்ளைகள் தமது நட்பு வட்டத்தைத் தானே,  தாம் ஒழுங்கு பண்ணும் விழாக்களுக்கு அழைப்பார்கள்!…..

விழாவிற்கு வந்தவர்களை ஒளி நாடாவில் பார்த்த போது, இவ்வளவு தூரம் நாம் முக்கிய மற்றவர்களாகி விட்டோமே என்று சீதா மனம் சிணுங்கிளாள்.

” இதென்னப்பா!.. பெடியள் தங்களோடு ஒத்த  கூட்டத்திற்குத் தானே  அழைப்பு அனுப்புவார்கள்! ” என்று ராமன் சீதா மனசைத் தேற்றினார்.

”எல்லாம் பெற்றவர்கள் தவறு”…… என்றாள் சீதா.
”பெற்றோரைக் குறை கூறாதீர். பிள்ளைகள் செய்வதற்கு பெற்றவர் என்ன செய்வார்?”……  என்றார் ராமன்.

”சரியப்பா இந்தக் கதையை விடுங்கள்”…. என்று கதையின் தலைப்பை மாற்றினோம் நாங்கள். 

இனி இந்த இரண்டு குடும்பத்துப் பிள்ளைகளும் சீதாவைப் பார்த்து ”ஹாய்! அன்ரி!”….. என்பார்கள். எல்லாம் மறந்து சிரித்தபடி ”ஹாய்!…. ” என்று சீதா எப்படிப் பேசுவாள் சொல்லுங்கோ!……

இது ஒரு சிறு சம்பவமானாலும் காத்திரமான தாக்கமுடைய ஒரு சம்பவம். பிள்ளைகள் பெற்றொரின்  உறவின் நெருடல் இங்கு தெளிவாகப்  பிரதிபலிக்கிறது. 

இச் சம்பவம்  மற்றைய பெற்றோருக்கு ஏதாவது கூறினால் அது நன்மையே!

நட்பு நடிப்பா!…. நடிப்பு நட்பா!….

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-7-2011.

In Anthimaalai  web site –   http://anthimaalai.blogspot.com/2011/07/blog-post_9411.html

 

                  

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. kathirmuruga
  ஜூலை 10, 2011 @ 06:37:18

  சிறிய சம்பவத்திற்கு ஊடாக உறவின் சிக்கல்களை அழகாக ஆய்ந்திருக்கிறீர்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 10, 2011 @ 07:55:38

   பல தடவை சிந்தித்தேன் இதைப் போடுவதா விடுவதா என்று. ஆனால் பிள்ளைகளை நல்வழிப்படுத்த சிறிதளவாவது இது உதவட்டுமே! மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் உங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும். மிகுந்த நன்றி ஜயா!. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. இ.சொ.லிங்கதாசன்.
  ஜூலை 10, 2011 @ 09:14:27

  இங்கு Frederikshavn(Denmark) நகரத்தில் அடிக்கடி இத்தகைய கொண்டாட்டங்கள், முக்கிய நண்பர்கள் தவற விடப்படுதல் போன்றவை நிகழும். நான் டென்மார்க்கிற்கு வந்து எட்டு வருடங்களே ஆன போதிலும், பல பெற்றோர்கள் என்னையும் ஒரு முக்கியமான மனிதனாக, நண்பனாக எண்ணுகின்றனர். காரணங்கள் பல.இத்தகைய விழாக்களில் நான் தவற விடப்படும் வேளைகளில், பெற்றோர்கள் மிகவும் கவலையடைந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. சில பெற்றோர் அடுத்த கொண்டாட்டத்தில் என்னைக் காணும்போது “கூனிக் குறுகிப் போய்விடுகிறார்கள்” யாரைக் குற்றம் சொல்வது?
  ஆக்கம் அருமை, அவசியம் கருதி ‘அந்திமாலையில்’ மறு பிரசுரம் செய்ய விரும்புகிறேன். அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  அன்புடன்
  இ.சொ.லிங்கதாசன்.
  டென்மார்க்.

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜூலை 10, 2011 @ 09:48:54

  நிச்சயமாக! மறு பிரசுரம் செய்யுங்கள்! யாராவது ஒருவராவது பயனடைந்தால் அது நன்மை தானே! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூலை 10, 2011 @ 20:38:17

  Sujatha Anton wrote:-
  சமுதாயச் சீர்திருத்தப்பார்வையில் தவறுகள் சுட்டிக்கட்டப்படுவதில் தவறில்லை. இன்னும் திருந்துவதற்கு
  வழிகாட்டு. தொடரட்டும் பணி. வாழ்த்துக்கள் ”வேதா”

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூலை 10, 2011 @ 20:38:59

  mikka nanry sujatha. Best wishes. God bless you

  மறுமொழி

 6. பிரபுவின்
  ஜூலை 11, 2011 @ 03:58:45

  சிந்தனையைத் தூண்டும் நிகழ்வு.இவ்வாறான சம்பவங்கள் வாசிப்பவர்கள் எல்லோருக்கும் முன் மாதிரியாக இருக்கும்.எல்லோரும் உணர்ந்து செயற்பட உங்கள் பதிவு வழிகாட்டியுள்ளது.
  புகைப்படம் அழகாக உள்ளது.
  நன்றி சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 11, 2011 @ 08:36:26

   பல தடவை யோசித்து இதை வலையில் ஏற்றினேன். எனது முதல் விமர்சகருக்கு (கணவருக்கு) இது பெரிதாகப் படவில்லை. இது ஏற்ற வேண்டியதில்லை என்பது போல. எனது கருத்து இது வலையேற்ற வேண்டிய ஒன்று என்பது. அவர் கருத்துத் தான் கூறுவார் என் முயற்சியில் தலையிட மாட்டார். ஏற்றிவிட்டு நடந்தவைகளைக் கூறுவேன். உமது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி பிரபு. இறை ஆசி கிட்டட்டும். புகைப் படம் டென்மார்க்கில் எமது 25வது விழா(1992).

   மறுமொழி

 7. Kowsy
  ஜூலை 11, 2011 @ 15:19:00

  இப்படிப் பல சம்பவங்கள் எம்மவரிடம் நடைபெறுகின்றன. அவற்றை வெளிக் கொண்டுவரும்போதே பலரும் அறிந்து சிந்திக்க வழிபிறக்கும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 11, 2011 @ 15:44:08

   எல்லாவற்றையும் எழுத முடிவது, விரும்புவது, என்றும் உண்டல்லவா! வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கௌசி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. நிரூபன்
  ஜூலை 12, 2011 @ 00:55:01

  வணக்கம் சகோதரி,
  பிள்ளைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வாக இருப்பினும், பெற்றோர் தமக்கு நெருங்கியவர்களுக்கு அழைப்பு விடுப்பது தொடர்பில் பிள்ளைகளுக்கு நினைவூட்டுவதும், தமக்கு நெருங்கியவர்களைப் முன்னுரிமை கொடுப்பதும் இயல்பான விடயம் தான், இதில் பிள்ளைகளில் தவறென்று சொல்ல முடியாது. அவ்வாறு சொல்லும் பெற்றோரின் செயல் கண்டிக்கப்படத்தக்கது.

  முழுக்க முழுக்க பிள்ளைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வாக இருப்பினும், பெற்றோர் தமக்கு நெருங்கியவர்களைப் பற்றிச் சிறிதளவாவது கரிசனை எடுக்க வேண்டும்.

  மேற்படி விழாவிற்கு அந்த சீதா ராமனை அழைக்காது விட்டமைக்கு பிள்ளைகள் மீது குற்றம் சுமத்தாது, நேரடியாகப் போய் மன்னிப்புக் கேட்டு- தவறு எங்களில் தான் நாம் தான் பிள்ளைகளுக்கு நினைவுபடுத்தவில்லை என அப் பெற்றோர் கூறினால். அது விழா கண்ட- தம்பதிகளின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும்.

  தாங்கள் செய்த இச் செயலுக்குப் பிள்ளைகள் மீது தவறென்று கூறி ஒதுங்குவது அழகான செயலல்ல.

  நட்பும் நடிப்பும் பற்றிய ஒரு சம்பவத்துடன் கூடிய விளக்கத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
  நாம் நம்மை அறியாமல் விடும் சிறிய தவறுகள் எத்தகைய(பெரிய) பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக இச் சம்பவம் அமைந்துள்ளது.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2011 @ 20:17:40

   நிரூபன்! நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள். இப்படித் தவறு நடக்காது தெளிவு ஏற்பட்டால் சரிதானே. அதாவது பெற்றோர், பிள்ளைகளிடம் நல்ல புரிந்துணர்வான கூட்டறவு இருந்தால் அனைத்தும் சுகமாகும். நிரூபன்! உமது வரவிற்கும், கருத்திற்கும் மிகுந்த நன்றி இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. கவி அழகன் --
  ஜூலை 12, 2011 @ 03:05:22

  சிறியவர்கள் தங்கள் நண்பர்கள் விழாக்களுக்கு அழைக்காவிடினும் அவர்களோடு சகயமாக பழகுவார்கள்
  ஆனால் பெரியவர்கள் முறை பார்ப்பவர்கள் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் ஒருமுறை பிழை விட்டால் அவ்வளவு தான் கடைசி மட்டும் அவர்களை மாற்றுவது என்பது கஷ்டம்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2011 @ 20:24:31

   கவி அழகன் சரியாகவே சொன்னீர்கள். உதாரணத்திற்காக இச்சம்பவம் கூறப்பட்டது. அந்திமாலை இணையத்தளமும் விரும்பிப் பிரசுரித்தது. பலர் இப்படி அனுபவித்துள்ளனர். சரி .உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: