25. காதல் நயம் தேடு! (பா மாலிகை( காதல்)

 

 

காதல் நயம் தேடு!

அபிநயக் கணகளால்
கவிநயம் பேசிவிட்டு
காதல் நயம் தேடாது
தொலை தூரம் நிற்கிறாய்!

கண்ணடித்துக் கைதொட்டு
உன்னடியில் வீழவைத்து,
காணாதது போலின்று
ஏனோ நீ ஏய்க்கிறாய்!

மலைத்தேனது வாலிபத்தேன்!
வலை விரித்தால் வயோதிபம்
வாலிபத்தேன் தொலைந்திடும்!
காலியாகு முன்னர் களித்திடு!

மன்மத இளமையின்
கன்னல் காதல் வயல்.
மின்னி மறையும்
பின்னல் காதல்நிலா.

தேர்ந்திட்ட காதல் நூலகத்தில்
கண்களே  கருமூலம்.
காதலின் கருவூலம்
ஒருமித்த இதயங்கள்.

நதிமூலம், ரிஷிமூலம்
குருமூலமற்ற மந்திரம்.
போதனைகளற்ற வசீகரம்.
சாதனையூன்றுகோல் காதல்.

கடலளவு உள்ளத்தில்
கையளவு ஆசையேன்!
நேசநறும் தேனருவியை
வாசமாய் ஓடவிடு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-7-2011.

In Anthimaalai web site:-     http://anthimaalai.blogspot.com/2011/08/blog-post_3042.html

 

                

 

 

 

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramanujam
  ஜூலை 14, 2011 @ 10:25:36

  முதற்கண் என் வலைப்பகுதிக்கு வந்து கருத்துரை
  கருத்துரை வழங்கிய தங்களுக்கு நன்றியும் வணக்கமும்
  உரித்தாகுக

  மன்மத இளமையின்
  கன்னல் காதல் வயல்.
  மின்னி மறையும்
  பின்னல் காதல்நிலா

  உள்ளுரை உள்ள
  நல்லுரை வரிகள்
  வாழ்க! வாழ்க!
  வளர்க! வளர்க!

  புலவர் சா இராமாநுசம்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 14, 2011 @ 21:07:58

   புலவர் குரல் ஐயா! இந்த எனது இடுகை வலையேற்றும் போது உங்கள் கவிதை கண்டேன். உடனே புகுந்து கருத்திட்டேன் பிடித்திருந்தது. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. suganthiny
  ஜூலை 15, 2011 @ 05:05:48

  நீங்களும் நல்லா இருங்க உங்க எழுத்தும் நல்லா இருக்கணும்.

  அந்த படமும் நல்லா இருக்கு.

  மறுமொழி

 3. பிரபுவின்
  ஜூலை 15, 2011 @ 05:09:33

  பொருள் பொதிந்த பா மாலிகை.எந்த வரியைப் பாராட்டுவது என்று தெரியவில்லை.நன்றி சகோதரி.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூலை 15, 2011 @ 15:34:09

  mikka nanry pirabu!…..God bless you.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூலை 16, 2011 @ 08:23:47

  Shibly Poems likes this..
  Shibly Poems wrote:
  nice

  மறுமொழி

 6. கவி அழகன் --
  ஜூலை 17, 2011 @ 03:31:29

  கவிதை கலக்குது

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 17, 2011 @ 09:26:21

   இலக்கது கவிதை எழுதுவது.
   விலக்கிட வில்லை உமது
   விமரிசனம் வாசிக்க மனம்.
   விரும்பி மகிழ்ந்தது உமது
   வருகையால் மனம். நிறைந்த நன்றி கவி அழகன்.
   உமது முயற்சிகள் வெற்றி பெறட்டும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. காத்தான்குடி பிரகாசக்கவி எம் . பீ அன்வர்
  ஜூலை 19, 2011 @ 12:13:41

  சொட்ட சொட்ட
  கவி பேசும் வார்த்தைகளும்
  திக்கு முட்ட
  காதல் சொட்டும்
  கைங்கரியங்களும்
  காதலுக்கு கைவந்த கலை அல்லவோ
  அருமை அருமை
  உந்தன் கவிதை
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 19, 2011 @ 15:55:26

   பிரகாசக்கவி! நன்கு ரசித்துள்ளீர்கள் என்று தெரிகிறது. மிக்க நல்லது. மகிழ்ச்சி. உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிகுந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜூலை 22, 2011 @ 00:16:40

  காதல் நயம் தேடுவதில் சுகம் !!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 22, 2011 @ 20:51:42

   காதல் நயம் தேடுவது சுகம் தான். உங்கள் ரசனையை ரசிக்கிறேன். உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. kalanenjan shajahan
  ஜூலை 22, 2011 @ 15:57:06

  காதல் சொட்டும் கவி கண்டு
  காதல் கொண்டேன் நான்.!
  வாழ்துக்கள்!!

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூலை 22, 2011 @ 20:48:02

  மிக்க நன்றி கலா நெஞ்சன். உமது அன்பன காதல் வரிகள், இனிய வருகைக்கும் மிகுந்த நன்றியும் மகிழ்வும். இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: