பெற்றோர் மாட்சி. 35.

 

 

பெற்றோர் மாட்சி. 35.

18-5.2008.
நிறைவு – நிறைந்தது என்பது அங்கு குறைவாயிருக்கும். குறைவற்ற பேராசைக்காரர் எம் இறையான பெற்றோர். தம் பிள்ளைகள் இமயப் புகழ் பெற்றிட இணையில்லா ஆசையுடையோர்.  இவர்கள் எண்ணம் எம் நடவடிக்கையைச் சீராக்கி நிலைக்க வைக்கிறது.

28-5-2008.
உறவுகளின் தொகுப்பு வாழ்வு. திறவுகோல் இங்கு பெற்றவராகிறார். தினம் எம்மை வழி நடத்தி, திகட்டாத உறவுகளை இணைத்து, திறமையாக வாழ்க என்று எம்மைத் திறம்பட நடத்துகிறார்கள், வாழ்வை உறவுகளின் சங்கமமாக்கி.

20-7-2008.
” தூங்கிய பொழுதாக முயற்சியின்றி வாழாதே! ஏங்கிய பொழுதாக இவை போய்விடும்! தீங்கு நீங்க முயற்சி செய்திடு!”…. பெற்றவரிடம் இருந்து வாங்கிய அறிவுரை ஓங்கி ஒலிப்பதால், சோம்பலை ஒதுக்கி நன்றியைத் தூது விட எழுகிறேன் தூக்கத்திலிருந்து.

18-10-2008.
குழந்தையிலிருந்து எம்மைக் குறையின்றி வளர்க்கும் பெற்றவரின் குறிக்கோள் சீரும் சிறப்புமாகக் குன்றில் எம்மை ஏற்றுதலே. அழவைத்து அவர்களுக்கு ஆக்கினை கொடுத்து அறியாது வளர்கிறோம் நாம். குறைகள் கொடுக்காது அவர்களைக் குனிய விடாது வளர்வோம், நட்சத்திரமாவோம் என்று பெரியவரானதும் எண்ணுகிறோம். அப்போது பெற்றவர் எம்முடன் இல்லை.

2-8-2008.
நித்தமும் முத்தத்துடன் சத்தான மொழிகள்
கொத்தாகத் தரும், அன்புப் பெற்றோரின்
உத்தம நோக்கத்தை நிறைவேற்றும் விழுதாக,
வித்தாகப் பிள்ளைகளை ஆக்குவது
சத்தமில்லாத யுத்தமிப் புதிய உலகில்.

9.8.2008.
முத்து பவளமென எம்மைத் தம் சொத்தாக ஏந்திய பெற்றவருக்கு, ”தத்தெடுத்தவர்களாக பிள்ளைகளை எண்ணுக”வென்பது, புத்தம் புதிய சேமநல சமூகச் சிந்தனை. எத்தனை பேர் இதில் நீந்திக் கரையேறுவார், எத்தனை பிள்ளைகள் முத்து மாணிக்கம் ஆவார்!

10-8-2008.
தவழ்ந்த மடியில் அவிழ்த்த எண்ணங்களின் நேர்கோட்டில், கவிழ்ந்து விடாது காலத்தைச் செலுத்து என்று மகிழ்ந்து கவனமாக வளர்த்தனர் பெற்றோர். மதித்து அவ்வழி நடத்தல் உயர் வாழ்விற்கு உறுதியுடைய தளராத படி.

16.8.2008.
பக்குவமாய்ப் பேசிப் பழகி, அன்பில் சிக்க வைத்து, பாசத்தைப் பொழிந்து சொக்க வைப்பவர் எமது பெற்றோர். அக்குவேறு ஆணிவேராய் அவ்வன்பு அழிந்திடாது இணைத்து, பல படிகள் உயர நடப்பது மிக்க பொறுப்பான எமது கடன்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(uploaded.17-7-2011)

 

                         
 

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. காத்தான்குடி பிரகாசக்கவி எம் . பீ அன்வர்
  ஜூலை 17, 2011 @ 05:45:06

  தாய் தன் உயிரில் இருந்து
  உயிர் தருபவள். அதனால்தான்
  நபிகள் நாயகம் சொன்னார்கள்.
  தாயின் பாதத்தின்கீழ் சுவர்க்கம்
  இருக்கிறது என்றும். பெற்றோரை
  பார்த்து சீ. என்றும் சொல்லிவிடாதே
  என்றும் சொன்னார்கள். ஆக
  பெற்றோர் நம் இரு கண்கள்.
  ஆக்கம் சிறப்பாக உள்ளது
  வாழ்த்துக்கள் .

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 17, 2011 @ 10:08:55

   வணக்கம் பிரகாசக்கவி! உமது வருகைக்கும், கருத்திற்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும்.மதங்கள் அனைத்தும் ஓரளவிற்கு ஒன்றையே கூறுகின்றன. நான் இதை மிக மதிப்பவள் இவைகளை வாசித்தால் உமக்குப் புரியும் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. SUJATHA
  ஜூலை 17, 2011 @ 07:03:32

  தவழ்ந்த மடியில் அவிழ்த்த எண்ணங்களின் நேர்கோட்டில், கவிழ்ந்து விடாது காலத்தைச் செலுத்து என்று மகிழ்ந்து கவனமாக வளர்த்தனர் பெற்றோர். மதித்து அவ்வழி நடத்தல் உயர் வாழ்விற்கு உறுதியுடைய தளராத படி.
  உண்மை பெற்றவர்கள் உறுதி உடன் பெற்றெடுத்தது போல் எமக்கு உறுதியாகவும் வழிகாட்டியவர்கள்…..அவர்கள் இருகண்களாக போற்றப்பட வேண்டியவர்கள்… தொடரட்டும் உங்கள் பணி!!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 17, 2011 @ 10:26:42

   சுஜாதா! இந்த வரிகளை ஒழுங்காக எழுத வேண்டு மென்று சிறிது கவனமெடுத்தேன். அவ் வரிகளே உமது கண்ணில் பட்டுள்ளது. மகிழ்ச்சி. உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக மகிழ்ச்சி. இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 3. பிரபுவின்
  ஜூலை 17, 2011 @ 08:20:10

  “அக்குவேறு ஆணிவேராய் அவ்வன்பு அழிந்திடாது இணைத்து, பல படிகள் உயர நடப்பது மிக்க பொறுப்பான எமது கடன்”

  நிச்சயமாக சகோதரி.மெய் சிலிர்க்க வைக்கும் உணர்ச்சி பூர்வமான இடுகை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 17, 2011 @ 10:20:01

   பிரபு! நலமா? உமது கருத்து சரியே. எழுதி விட்டு திரும்ப வாசிக்கும் போது எனக்கும் எனது வரிகள் பிடித்துள்ளது. உணர்வு பூர்வமான வரிகள் தான். உமது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. தஞ்சை.வாசன்
  ஜூலை 17, 2011 @ 09:05:42

  நாட்குறிப்புகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு ஒரு சிந்தனையை தந்துக்கொண்டு…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 17, 2011 @ 10:40:37

   .அன்புள்ள வாசன்! இவை நாட் குறிப்பல்ல . இலண்டன் தமிழ் வானொலியில் அந்தந்தத் திகதிகளில் தலைப்புத் தருவார்கள். பெற்றவர் பெருமை பற்றி உடன், ஒரு 5 -10 நிமிடங்களில் நாம் எழுதி வாசித்தவை. அதாவது வானலையில் தொலை பேசி மூலம் நான் வாசித்தவைகளே இவைகள். பத்திரப் படுத்தி இன்று பதிவாக்குகிறேன்.வானொலி இன்றும் நடக்கிறது. நான் போவதில்லை. அதன் லிங்க் இது தான்.http://www.firstaudio.net/
   உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. கவி அழகன் --
  ஜூலை 17, 2011 @ 13:23:03

  காத்திரமான படைப்பு தமிழ் புலமை உங்களிடம் தவழ்கிறது வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூலை 17, 2011 @ 20:42:06

  அமிழ்தினும் இனிய தமிழோடு பழகுதல் காத்திரமான மகிழ்வு தருகிறது. பழகப் பழக மொழி செழுமைப்படுகிறது. மனதில் இனம் புரியாத திருப்தி உருவாகிறது. கவிஅழகனின் வருகைக்கும், கருத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 7. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூலை 17, 2011 @ 21:10:50

  முத்து பவளமென எம்மைத் தம் சொத்தாக ஏந்திய பெற்றவருக்கு, ”தத்தெடுத்தவர்களாக பிள்ளைகளை எண்ணுக”வென்பது, புத்தம் புதிய சேமநல சமூகச் சிந்தனை. எத்தனை பேர் இதில் நீந்திக் கரையேறுவார், எத்தனை பிள்ளைகள் முத்து மாணிக்கம் ஆவார்!……………………..:))!!!!????

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூலை 17, 2011 @ 21:47:10

  சேமநல சமூகம் – welfair sociaty. பிள்ளைகள் எமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. சில காலம் எம்மோடு வாழப் பிறந்தவர்கள் என்று எண்ணக் கூறுகிறார்கள். அதையே அங்கு குறிப்பிட்டேன். ராஜீவ் உமது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. மகிழ்ச்சி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 9. N.Rathna Vel
  ஜூலை 24, 2011 @ 11:06:08

  குறைகள் கொடுக்காது அவர்களைக் குனிய விடாது வளர்வோம், நட்சத்திரமாவோம் என்று பெரியவரானதும் எண்ணுகிறோம். அப்போது பெற்றவர் எம்முடன் இல்லை.

  அருமை அம்மா. மனம் நெகிழ்ந்து விட்டேன்.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 24, 2011 @ 21:45:46

   உண்மை. பிரிந்திருந்து அவர்களைப் பறி கொடுத்த வேதனைகள் தான் இவைகள். உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றியும் மகிழ்வும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: