வாழ்வியற் குறட்டாழிசை. 9. (பிறர்க்குதவல்.)

பிறர்க்குதவல்.

 

பிறர்க்கு உதவல் என்பது மனிதனிற்கு
பிறவியிலேயே வரும் குணம்.

தவுகிறவனை நன்றி யுணர்வு இன்றி
உதாசீனம் செய்யுமுலகு இது.

திமிர், செருக்குடையோன் தான் பெற்ற
உதவியை நிமிர்ந்தும் நினைக்கான்.

தவுவோன் உள்ளம் திறந்தது. எந்தக்
கதவும் போட்டு   மூடாதது.

யன் கருதாது உதவும் மனமும்
பயணிப்பது மரபணுவோடு எனலாம்.

ற்ற தருணத்தில் செய்யும் உதவி
மாற்றில்லாத் தங்கத்திற்கு ஈடாகும்.

தவி செய்தவனைப் பின்னங்காலால் மறந்தும்
உதைப்பவன் மாக்களுள் ஒருவன்.

தவு! முடிந்தளவு உதவு! சொர்க்கத்தின்
கதவு தானாகத் திறக்கும்.

ன மகிழ்வோடு உதவு! கனதியற்ற
மனத்திருப்தியும், நிறைவும் பெறலாம்.

பெற்ற உதவியை நினைத்து நன்றி
பேணுமுணர்வு எல்லோருக்கும் வராது.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
19-7-2011.

In Anthimaalai web site:-   http://anthimaalai.blogspot.com/2011/10/13.html

 

                                  

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவி அழகன் --
  ஜூலை 19, 2011 @ 06:32:43

  அருமையாய் உதவி உள்ளீர்கள்

  மறுமொழி

 2. சிவ. சி. மா. ஜானகிராமன்
  ஜூலை 19, 2011 @ 10:15:38

  நல்ல சிந்தனைகள் ..
  வளரட்டும் உங்களது சமுதாயச் சேவை

  வாழ்த்துக்கள்.

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 19, 2011 @ 15:37:45

   மிக்க நன்றி சகோதரர்! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும். மிகுந்த மகிழ்வடைந்தேன். இறை ஆசி உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கிட்டட்டும். நன்றி…நன்றி

   மறுமொழி

 3. பிரபுவின்
  ஜூலை 19, 2011 @ 10:24:00

  “பெற்ற உதவியை நினைத்து நன்றி
  பேணுமுணர்வு எல்லோருக்கும் வராது”

  உண்மை சகோதரி.இன்னும் சிறிது காலத்தில் எவருக்கும் வராது என்று நீங்கள் எழுத வேண்டி வரலாம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 19, 2011 @ 15:34:27

   பிரபு! எதிர்காலத்தில் வரலாமல்ல, வரும் இப்பவே ஒன்று இரண்டு பேர் தான் நன்றியுணர்வோடு உள்ளனர் முழுதும் சுயநலமாகவே உள்ளனர். இது எனது சொந்த அனுபவம். மிக்க நன்றி பிரபு. உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும். இறை ஆசி உமக்கும் உமது குடும்பத்தினருக்கும் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. SUJATHA
  ஜூலை 19, 2011 @ 11:30:17

  வாழ்வியலிற்கு எடுத்துக்காட்டாக குறலியல் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. தற்பெருமை, உதவிமனப்பாண்மை. அழகாக குறளில் விளக்கி உள்ளமை அருமை…”வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 19, 2011 @ 15:27:44

   சுஜாதா இது எனது சொந்த அனுபவம். அதனால் உணர்ந்து எழுதினேன். பின்னங்காலால் அடிப்பது போலத்தான் அனுபவம். வள்ளுவர் வரிகளை வாசிக்கிறேன் தான் ஆனால் இது முழுதும் என் சொந்தச் சிந்தனைகள். சுஜா உமது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி உங்கள் எல்லோருக்கும்(குடும்பத்தினருக்கு) கிட்டட்டும்.

   மறுமொழி

 5. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூலை 19, 2011 @ 19:28:55

  ஏற்ற தருணத்தில் செய்யும் உதவி
  மாற்றில்லாத் தங்கத்திற்கு ஈடாகும்………(அருமையான ஒரு கருத்தே சொன்னீர்கள் சகோதரி .ஆனால் பெற்ற உதவியை நினைத்து நன்றி
  பேணுமுணர்வு எல்லோருக்கும் வராது.ஆகையால் பிறர்க்கு உதவும் பண்பு நாம் தவறி விட்டல்லவா ..!?

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 19, 2011 @ 20:30:37

   ராஜீவ்! சரியாகச் சொன்னீர்கள். உங்களைப் போல கிட்டத்தட்ட பிரபு கருத்து எழுதியுள்ளார் பதிலை வாசியுங்கள்.உண்மையில் பலர் நன்றி பேணுவதில்லைத் தான். என்ன செய்ய முடியும்!. உதவும் குணமும் அற்றுப் போகும் தான். இது மிகப் பெரிய விவாதத்திற்குரிய தலைப்பு. எம்மால் முடிக்க முடியாதப்பா! உமது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. N.Rathna Vel
  ஜூலை 20, 2011 @ 07:10:49

  வாழ்த்துக்கள்.
  எனது மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள். உங்களது பதிவுகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
  rathnavel_n@yahoo.co.in
  பதிவதற்கு followers widget இணைக்கவில்லை. உங்களது முந்தைய பதிவுகளை அவ்வப்போது படித்துப் பார்த்து பின்னூட்டம் எழுதுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
  நன்றி.

  மறுமொழி

 7. ramanujam
  ஜூலை 20, 2011 @ 13:11:12

  // உதவு! முடிந்தளவு உதவு! சொர்க்கத்தின்
  கதவு தானாகத் திறக்கும்.//

  எரியும் விளக்கிற்குத் தூண்டு கோல் போல‍ இவ்விரண்டு
  வரியும் அமைந்துள்ளன உதவும் உள்ளங்களுக்கு
  அருமை
  புலவர் சா இராமாநுசம்

  மறுமொழி

 8. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூலை 20, 2011 @ 19:03:41

  வையத்துள் வாழவேண்டிய வழிகளை கூறுவது வள்ளுவம்!
  வையத்துள் வாழும் வழிகளை கூறுவது வாழ்வியல் குறள்!

  அற்புதம்! அழகு நடையில் ஓர் அறவியல் கவிதை!

  வாழ்த்துக்கள் அம்மா!!

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூலை 20, 2011 @ 21:14:58

  ஐயமற அனுபவங்களைக் கூறும் அழகு வழி! எழுதுதல் என்பது மகிழ்ச்சி எனக்கு! அப்படி உதிர்ந்தவை இவை. உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க மிகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்

  மறுமொழி

 10. Prahasakkavi Anwer
  ஜூலை 22, 2011 @ 16:21:39

  உங்கள் கவிதை நன்றாக உள்ளது
  வாழ்த்துகள்

  மறுமொழி

 11. கோவை கவி
  ஜூலை 22, 2011 @ 20:42:51

  சகோதரர் உங்கள் நிதர்சனம் கவிதை நன்றாக உள்ளது.வாழ்த்துகள். இதை முகநூலில் போடுங்கள் நண்பர்கள் கருத்தை அறிய முடியும். பலர் வந்து கருத்திட வாய்ப்பு உள்ளது. மிக்க நன்றி.. இறை ஆசி கிட்டட்டும்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: