23. தமிழ்..புதையல்!…(பா மாலிகை (கதம்பம்)

 12299119_981999901857709_556712719288972527_n

தமிழ்..புதையல்!

 

மூத்த புலவன் அகத்தியனும்
முக்குல மன்னரும் அலங்கரித்து
முப்பொழுதும் சீராக்கிய தமிழே!
புதையல் நீ! வண்டி வண்டியாய்
அதையெல்லாம் நான் முழுவதையும்
கதை கதையாய் கிண்டியெடுக்க ஆசை.

ளவையும் கம்பனும் நாளும்
செவ்வையாய்ச் சுவைத்து அனுபவித்த
திவ்விய மொழிக் கடலில்
பவ்வியமாய்க் குளித்தாடி
அவ் உயிர்த் தமிழெடுத்துப்
பயிரிடுகிறேன் வண்ணக் கவிதையாக.

ழு கடலளவிலும் பெரிய
ஆளுமை கொண்ட தமிழ்!
நாளும் குலவும் என்னையும்
ஆளும் அமுதச் சுவை!
சூழும் துன்பங்கள் வீழ்த்தி
வாழும் நிலை உயர்த்துகிறாய்.

ன்னையும் உன்னையும் இணைக்கும்
சின்ன உலகமல்ல தமிழ்!
அன்ன பல இலக்கியங்கள்
பின்னிய  மதுரத்தமிழ்! பார்!
என்னமாய் வளருது கணனியில்!
இன்னமும் வளருது மேற்கில்!

நோய் மொழியாக மனங்களைத்
தீய்க்காது, தூய்மையாய், ஓய்வற்று
வாயூடாக வழிந்தோடிப் பல
ஆய்விற்கும் சென்று ஆழவூன்றி
பாய்விரித்துப் பரவட்டுமெம்
தாய்மொழி அகில உலகமும்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-7-2011.

 

 

                          

 

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூலை 21, 2011 @ 04:54:54

  “என்னையும் உன்னையும் இணைக்கும்
  சின்ன உலகமல்ல தமிழ்!
  அன்ன பல இலக்கியங்கள்
  பின்னிய மதுரத்தமிழ்! பார்!
  என்னமாய் வளருது கணனியில்!”

  அழகு தமிழ் மிகவும் அற்புதமாக
  துள்ளி விளையாடுகிறது!

  வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 21, 2011 @ 17:02:31

   மிகுந்த மகழ்ச்சி சகோதரரே உங்கள் வருகைக்கும, அன்பான கருத்திற்கும். மனமார்ந்த நன்றியும் உரித்தாகட்டும். இறை ஆசியும் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. பிரபுவின்
  ஜூலை 21, 2011 @ 05:18:21

  நல்வாழ்த்துக்கள் சகோதரி.தொடரட்டும் தமிழின் வெற்றிப் பயணம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 21, 2011 @ 17:04:26

   பிரபு! கட்டாயம் எனது தமிழ்ப் பயணம் தொடரும். உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. சிவ. சி. மா. ஜானகிராமன்
  ஜூலை 21, 2011 @ 05:37:53

  உண்மைதான் …
  தமிழ் வானளாவிய மொழி..

  தமிழக்கு அமுதென்று பெயராயிற்றே ?

  அது தங்களைப் போன்ற கவிஞர்களால்
  மேலும் மேலும் எழுச்சி பெறுகிறது..

  வாழ்த்துக்கள்..

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 21, 2011 @ 17:08:46

   தேனளாவிய இனிமையுடைய வானளாவிய மொழி பற்றிய உங்கள் அன்பான கருத்திற்கும், வருகைக்கும் மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. suganthiny
  ஜூலை 21, 2011 @ 07:23:12

  மூத்த புலவன் அகத்தியனும்
  முக்குல மன்னரும் அலங்கரித்து
  முப்பொழுதும் சீராக்கிய தமிழே!
  புதையல் நீ! வண்டி வண்டியாய்
  அதையெல்லாம் நான் முழுவதையும்
  கதை கதையாய் கிண்டியெடுக்க ஆசை.
  இதை விடவா ஒரு வாழ்த்து தேவையா?

  மறுமொழி

 5. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூலை 21, 2011 @ 18:10:15

  மூத்த புலவன் அகத்தியனும்
  முக்குல மன்னரும் அலங்கரித்து
  முப்பொழுதும் சீராக்கிய தமிழே!
  புதையல் நீ! …………………………

  ஒளவையும் கம்பனும் நாளும்
  செவ்வையாய்ச் சுவைத்து அனுபவித்த
  திவ்விய மொழிக் கடலில்………
  ஏழு கடலளவிலும் பெரிய
  ஆளுமை கொண்ட தமிழ்!
  நாளும் குலவும் என்னையும்
  உன்னையும் இணைக்கும்
  சின்ன உலகமல்ல தமிழ்..!!!
  “அப்படியாகப்பட்ட தமிழை வளர்ப்பதுக்கு ஒருவன் தேவையா ?அது உலகம் தோன்றி மனிதகுலம் பேசத் தொடங்கிய போதே தமிழன் சரித்திரம் தொடங்குகிறது. அது இறையவனால் படைக்க்ப்பட்ட “தெய்வத்திருமொழி” ….அது தானாகவே தோன்றி ….தானாகவே வளர்ந்தன…….உலகம் அழியும்போதுதான் தமிழும் அழியும் ..!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 21, 2011 @ 21:00:01

   ராஜீவ்! நீர் சொல்வது சரி. ஆனால் மனிதர்கள் தமிழைப் பேசாது, தமிழோடு பழகாமல் அது பாழாய்ப் போகிறது. அத்துடன் பிறமொழிகளைக் கலந்து குளப்புகின்றனர். உதாரணமாக…நான் டெனிஸ் மொழியுடன் அதிகம் பழகுவதால் -குளப்புகின்றனர்- என்பதில் சரியான ”ள” னா (ழ னா) போட்டேனா என்று சந்தேகமாக உள்ளது. அகராதி எடுத்துப் பார்த்தால் நல்லது என்று எண்ணுகிறேன். இப்படி அழியுது தமிழ். இது எனது கருத்து. ஆனால் சந்தேகமில்லை. தமிழ் தெய்வத் தமிழ் தான்.
   மிக்க நன்றி உமது கருத்திற்கு. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

   • രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
    ஜூலை 21, 2011 @ 21:19:48

    வெளிநாடு வாழும் தமிழர்கள்தான் ,தமிழ்மீதும்,நம்நாட்டு கலாசாரத்தின் மீதும் அதிகம் அக்கறையுள்ளவராக நான் நினைக்கிறேன்..!!

   • രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
    ஜூலை 21, 2011 @ 21:29:01

    கோவை கவி அவர்கள் சொன்னதும் முக்கியமான ஒரு கருத்துதான் ,துய தமிழில் பேச இன்றைய தலை முறை மறந்து விட்டது ,தமிழில் பேசினால் அது கவுரவ குறைச்சலாகவே எண்ணுகிறனர்.

   • கோவை கவி
    ஜூலை 22, 2011 @ 07:12:23

    Rajeev! தமிழில் பேசினால் அது கவுரவ குறைச்சலாகவே எண்ணுகிறனர். This is 100% true.. Thank you. Best wishes for your words. and future. God bless you

 6. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜூலை 21, 2011 @ 23:57:27

  தமிழ் தாத்தாக்களின் புதையலைத் தோண்டியெடுத்து, மதுரத் தமிழாய் கணனியில் வார்க்கின்றாய் !! வார்ப்போம் வளர்ப்போம் உலகெங்கும் நம் தமிழை …………

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 22, 2011 @ 07:09:55

   ஆமாம் சகோதரா நடா சிவா! எங்கும் தமிழை வார்ப்போம், வளர்ப்போம். உங்கள அன்பான கருத்துக்கும், வரவிற்கும் மிக மகிழ்வு, நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. Prahasakkavi Anwer
  ஜூலை 22, 2011 @ 07:20:28

  முத்தே முத்தமிழே
  கண்ணே மணியே
  அப்படி இப்படி என்றல்லாம்
  உன்னை
  தாலாட்ட
  நீ ஒன்றும்
  தேங்கிய குட்டையல்லவே
  தமிழே நீ என்றும்
  தங்க தமிழே …….
  கவி சிறப்பாக உள்ளது
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 22, 2011 @ 14:59:37

   தமிழே நீ என்றும்
   தங்க தமிழே ! அத்துடன்…….
   தெய்வத் தமிழே. நாம் தான் அதை நன்கு பராமரித்து , சிறக்கச் செய்ய வேண்டும். உமது வரவிற்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்வும், நன்றியும் பிரகாசக் கவியே! உமது பெயர் போல நீர் பிரகாசமடைய வேண்டும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. SUJATHA
  ஜூலை 22, 2011 @ 19:41:59

  ஏழு கடலளவிலும் பெரிய
  ஆளுமை கொண்ட தமிழ்!
  நாளும் குலவும் என்னையும்
  ஆளும் அமுதச் சுவை!
  சூழும் துன்பங்கள் வீழ்த்தி
  வாழும் நிலை உயர்த்துகிறாய்.

  தமிழின் பெருமை எழுதும் போது இன்னுமாய் உயருகின்றது. உணர்வுகளின் உயர்வில் தமிழின் பெருமையை கற்றிட வேண்டும். தொடரட்டும் உங்கள் பணி ‘வேதா’

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 23, 2011 @ 11:49:27

   ”…தமிழின் பெருமை எழுதும் போது இன்னுமாய் உயருகின்றது. உணர்வுகளின் உயர்வில் தமிழின் பெருமையை கற்றிட வேண்டும்…”
   nalla vatikal Sujatha! உணர்ந்து எமுதியுள்ளீர். மிக்க மகிழ்ச்சி. அன்பின் வரவிற்கும், கருத்திற்கும் நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. N.Rathna Vel
  ஜூலை 24, 2011 @ 10:02:08

  நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 10. vinothiny pathmanathan
  ஜூலை 27, 2011 @ 11:01:33

  அருமையான கவிதை .உங்கள் தமிழ்ப் பணி தொடர வாழ்த்துக்கள் .

  மறுமொழி

 11. கோவை கவி
  ஜூன் 16, 2016 @ 09:48:32

  9-6-2016 in london tamil radio Vaani Nadamohan vaasiththaar..
  கவிதை நேரத்தில் வாசித்தார்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: