வேதாவின் மொழிகள். 14

 

 

Art:- Vetha.

 

நெருங்கி நெருங்கித் தேனாகப் பேசுவார்கள். காரியம் பெற்றதும் கழன்று விடும் மனிதர்கள் யாரென நேரியதாகக் கூறுவதா! வீரியமாகக் கூறுவதா! அவர்கள் பாரிய சுயநலவாதிகள் தானே! வேறு எப்படிப் புரிந்து கொள்வது!

பிறரின் உபதேசம் பிடிக்காத போது பிறருக்கு உபதேசிப்பதை விட்டு விடுவது சரியாகும்.
உன்னை மதிப்பவனை நீ அலட்சியம் செய்தால்,  நீ மதிப்பவன் உன்னை அலட்சியம் செய்வான்.

5-12-2006.  தேடல் இன்பம்

சமூகத்துடன் உறவாடி உறவின் நெருக்கம்
சுமுகமாக உறவு தேடல் இன்பம்.

மக்களுக்கு மனமகிழ்வை ஊடகங்கள் தரவேண்டும்.
மனமகிழ்வைத் தொலைக்கும் தேடல், இன்பம் தராது.

தமிழ் சுரங்கமெனும் கணனியில்
அமிழ்ந்து தமிழ் தேடல் இன்பம்.

6-2-2007.  அகத்தான் கடமை.

பொருட்கள் வாங்கிக் குவித்தல், பணம் சேர்த்தல் மட்டுமல்ல, அன்பால் அகம் குளிரச் செய்து அறம் காத்தல் அகத்தான் கடமை. பெண்ணை மதித்து, பிள்ளைகளோடு குலாவுதலும், முகத்தாலும் கோணாத வழியோடு முன்னுதாரணமாகுதலும் அகத்தான் கடமை.

பட்டு.
பட்டுப் போன மரம் படகாகிறது. பட்டுப் போன மனிதன் பிணமாகிறான்.
பட்டும் பட்டும் மனிதர் வார்த்தைகளை
பட்டுப் பட்டென வீசி, நல்ல இதயங்களைப்
பட்டுவிடச் செய்வது தொடர் கதையாகிறது.

தமிழ்.
ஆடு! ஓடு! இன்பத்தை
நாடு! கூடு! தமிழோடு
கூடு! இதை நாடுவதால்
பீடு இல்லை. இதைச்
சூடுவதால் பெறும் பெருமைக்கு
உலகில் ஈடு இல்லை.

பகலும் இரவும் உங்கள் வாரிசுகளுடன் தமிழோடு ஈடுபடுங்கள். என்றுமே நீங்கள் வருந்தமாட்டீர்கள்.

நறுமணம்.
மலரின் சுகந்தம் மட்டும் நறுமணமல்ல.
மனிதன் பெறும் அறிவும் அவன் நறுமணம்.
மனிதனின் ஆற்றல், முயற்சி ஆக்கம்
அனைத்துமே நறுமணமாகிறது.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
வலையேற்றம்:  23-7-2011.

 

                                
 

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜூலை 23, 2011 @ 09:48:34

  ஆடு! ஓடு! இன்பத்தை
  நாடு! கூடு! தமிழோடு
  கூடு! இதை நாடு..இதைச்
  சூடுவதால் பெறும் பெருமைக்கு
  உலகில் ஈடு இல்லை…..
  சிந்தனையின் சாரல் தெறிக்கட்டும் …………..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 23, 2011 @ 10:15:12

   ஆகா!….மகிழ்ச்சி!…. முதல் கருத்து இந்த இடுகைக்கு!… மகிழ்வோம், தமிழோடு மகிழ்வோம்!…உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க மிக்க நன்றி. ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

   மறுமொழி

 2. Ambaladiyal
  ஜூலை 23, 2011 @ 10:57:40

  தமிழின்பக் கடலினிலே தரமான முத்தெடுத்து
  அழகிய கவிதை மாலைகள் தொடுத்து அதை நாளும்
  தமிழ்த் தாய்க்கு பரிசாக்கு. அங்கே புகழோடு பெருமையும்
  இனம் புரியாத இன்பமும் மழைச்சாரல் போல் வந்து மனதைக்
  குளிரவைக்கும் இதுதானே பேரின்பம்!…இது நாளும் தொடர
  உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தாயே………..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 23, 2011 @ 11:16:55

   இதுதானே பேரின்பம்!…..இதில் தானே மகிழ்கிறேன்! சகோதரி! மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும், கருத்திறகும். எவ்வளவு காலம் எடுக்கிறது..நமது கூட்டுறவிற்கு! ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. கவி அழகன் --
  ஜூலை 23, 2011 @ 10:58:46

  வழமை போல் பதிவு கலக்குதுங்க

  மறுமொழி

 4. பிரபுவின்
  ஜூலை 23, 2011 @ 11:01:55

  “பிறரின் உபதேசம் பிடிக்காத போது பிறருக்கு உபதேசிப்பதை விட்டு விடுவது சரியாகும்.
  உன்னை மதிப்பவனை நீ அலட்சியம் செய்தால், நீ மதிப்பவன் உன்னை அலட்சியம் செய்வான்.”

  எல்லா சிந்தனைகளும் எனக்குப் பிடித்திருக்கின்றது.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 23, 2011 @ 11:21:56

   நிச்சயம் பிரபு! நீர் துணிந்து கருத்து கூறுகிறவர். மிக்க மகிழ்ச்சி உமது கருத்திற்கும், வரவிற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. vinothiny pathmanathan
  ஜூலை 23, 2011 @ 12:19:42

  இன்று தான் வேதாவின் வலைப்பக்கம் வந்தேன் .ஆஹா பேரின்பம் .சிந்தனைச்சாரல் என்னை சந்தோஷத்தில் மூழ்கச் செய்து விட்டீர்கள்.அருமை .
  உங்கள் எழுத்துக்கள் எண்ணங்கள் அனைத்துமே நம்பர் 1 .

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 23, 2011 @ 12:55:47

   சகோ! இது சிந்தனைச் சாரல் இலக்கம் 14. உள்ளே சுரங்கமே இருக்கிறது. மிக்க மகிழ்ச்சியடா உங்கள் வருகைக்கு. சரியாக வலை தொடங்கி ஒரு வருடமாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொரு தலைப்பாகப் பாருங்கள் வாசியுங்கள் கருத்திட மட்டும் மறக்க வேண்டாம் மிக்க மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூலை 23, 2011 @ 14:03:35

  “அகத்தான் கடமை.

  பொருட்கள் வாங்கிக் குவித்தல், பணம் சேர்த்தல் மட்டுமல்ல, அன்பால் அகம் குளிரச் செய்து அறம் காத்தல் அகத்தான் கடமை. பெண்ணை மதித்து, பிள்ளைகளோடு குலாவுதலும், முகத்தாலும் கோணாத வழியோடு முன்னுதாரணமாகுதலும் அகத்தான் கடமை!”

  சிந்தனைச் சாரல்…..
  மிகவும் குளிர்ச்சியான
  பன்னீர் தெளிக்கிறது!
  தேகம் சிலிர்க்கிறது!
  வாழ்த்துக்கள்!!!.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 23, 2011 @ 17:27:05

   குளிர்ச்சியான பன்னீரில் தேகம் சிலிர்ப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆகா!..என்ன ஆனந்தம்!..தொடரட்டும் இந்த ஆனந்தம்! உங்கள் வரவிற்கும், கருத்திடலுக்கும் மிக்க மகிழ்ச்சி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. சிவ. சி. மா. ஜானகிராமன்
  ஜூலை 23, 2011 @ 14:20:35

  தமிழ் என்பதின் கீழ் உள்ள

  //இதை நாடுவதால்
  பீடு இல்லை. //

  என்ற வரிகளின் பொருள் என்ன ?
  சரியாகப் பிடிபடாவிட்டால் பொருள் தவறாகுமே ?

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 23, 2011 @ 17:35:16

   ஐயா! தமிழை நாடுவதால் பீடு(துன்பம்)இல்லை. பீடு என்பதற்குப் பல கருத்துகள் உண்டு. இவை – பெருமை, வலிமை, தாழ்வு, தரிசு நிலம், துன்பம், குறைவு, ஒப்பு. என்பனவாகும்.
   உங்கள் அன்பான வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி, மகிழ்ச்சி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. Kowsy
  ஜூலை 23, 2011 @ 18:29:03

  அடுத்தவர் மனம் மகிழும் போது அதன் அலைகள் ஏதோ வகையில் எம்மை வந்தடைகின்றது. பாராட்டல் பண்பு வளரும் போது எமக்குள் இருக்கும் மமதை மறைந்து போகின்றது. தேவையான பதிவை எப்போதும் தேடி வந்து தரும் உங்கள் பண்புக்கு வாழ்த்துகள

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 24, 2011 @ 21:34:18

   நன்றி கௌசி. உமது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்வும் நன்றியும். ஆடி 1றுடன் எனது வலைக்கு ஒரு வயது முடிந்துள்ளது. ஆரம்பத்தில் தமிழ் யூனிக்கோட் எழுத நீர், பத்மாசனி பட்ட பாடுகள் நினைவுக்கு வருகிறது. இன்று வளர்ந்துள்ளோம். ஓ.கே. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. N.Rathna Vel
  ஜூலை 24, 2011 @ 10:08:00

  அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 24, 2011 @ 21:36:30

   மிக்க நன்றி ஐயா. நீங்கள் என் வலையைப் பார்த்து மகிழ்வது தெரிகிறது. ஆண்டவனுக்கு நன்றி. உங்களுக்கும் நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூலை 24, 2011 @ 16:10:15

  நறுமணம்.
  மலரின் சுகந்தம் மட்டும் நறுமணமல்ல.
  மனிதன் பெறும் அறிவும் அவன் நறுமணம்.
  மனிதனின் ஆற்றல், முயற்சி ஆக்கம்
  அனைத்துமே நறுமணமாகிறது……………………………

  எனக்கு ரெம்பவும் பிடிச்சிருக்கு இந்த கவிதை

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 24, 2011 @ 21:39:05

   அந்த நறுமணம் பரப்பவே நாங்கள் முயற்சி செய்கிறோம் . நன்றி ராஜீவ்.உமது வருகைக்கும், கருத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. கோவை கவி
  ஜூலை 31, 2011 @ 21:05:04

  Arul Mozhi wrote.:-2:06pm Jul 31

  நெருங்கி நெருங்கித் தேனாகப் பேசுவார்கள். காரியம் பெற்றதும் கழன்று விடும் மனிதர்கள் யாரென நேரியதாகக் கூறுவதா! வீரியமாகக் கூறுவதா! அவர்கள் பாரிய சுயநலவாதிகள் தானே! வேறு எப்படிப் புரிந்து கொள்வது!

  நன்றி வேதா அவர்களே நல்ல கருத்தை சொன்னீர்கள்
  யாவரும் படிக்க புரிந்து கொள்ள வேண்டியது.

  Vetha wrote :- Mikka nanry sakothary…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: