17. கட்டுரை…எழுதல்..( சிறு கட்டுரைகள்.)

 

 

 

கட்டுரை…எழுதல்..

 

கட்டுரை என்பதற்கு வியாசம், புனைந்துரை, உரை நடை விளக்கம் என்று இன்ன பல விளக்கங்கள் கூறப் படுகின்றன.

சிறு வயதில் கட்டுரை எழுத ஆரம்பிக்கும் போது பசு பற்றி ஐந்து வசனம் எழுதினோம். அதில் பசுவிற்கு நாலு கால்கள் உண்டு. பசு பால் தரும். பசு புல் தின்னும். பசு சாணமிடும். என்று பசு பற்றிய ஒரு மனப் படத்தை அந்த வரிகள் மூலம் கொடுத்தோம்.

முதியவரானதும் இதையே, அறிவு முதிர் நிலையில், அறிவியல் விளக்கத்துடன் கொடுக்கிறோம்.  ஒரு உருவகத்தை உருவாக்கி, ஒரு மனப் படத்தை, ஒரு செய்தியைக் கொடுக்கிறோம்.

உரை நடை விளக்கம் என்ற கருத்தே அனைத்தையும் தெளிவாக விளக்குகின்றதே!

கட்டுரை எழுதும் போது அரைப்புள்ளி, காற்புள்ளி, ஆச்சரியக் குறி இன்னும் பல விதிமுறைகள் கவனிக்கப் படுவதே இல்லை. பந்தி பிரித்து எழுதுவது என்பது தொலைந்தே விட்டது. இந்த விதி முறைகள் கவனிக்கப் படாவிட்டால் கட்டுரையின் அழகு சிதைகிறது.

ஒரு கட்டுரையை வாசித்ததும் கருத்திடும் ஆர்வம் எழவேண்டும். அதுவே கட்டுரையாளனின் வெற்றி.

ஒற்றைக் காலில் நின்று அரை குறை வசனமாக, பாதி விழுங்கியும் விழுங்காமலும் சுருக்கெழுத்துப் போல கொடுப்பதல்ல கட்டுரை. இலக்கணப் பிழையின்றி முழுமையான வசனங்கள் அமையாவிடில் புரிதல் என்பது அங்கு குறைந்து போகிறது.

இந்தக் குளப்பத்திற்கு ஆதியிலிருந்து எழுதியவர்கள், புதிதாக முளைத்தவர்கள், பட்டதாரிகள், பாமரர்கள் என்றும்  ஏதும் பேதமுள்ளதோ தெரியவில்லை.

ஒழுங்கற்ற குழப்பகரமான ( இங்கு கட்டுரை மொழியமைப்பையே குறிப்பிடுகிறேன் கட்டுரைக் கருவை அல்ல ) கட்டுரைகள் படித்ததும் கருத்திடும் ஆர்வத்தை மடக்கி விடுகின்றன.

சிறு கட்டுரையோ பெரும் கட்டுரையோ ஒரு திட்டமிடல் தேவை. மனதில் ஒரு வரை படம் முதலில் வரைந்து கொள்ளல் தேவை. அதற்கு முன்னர் தலைப்பு இடுவது முக்கியம். தலைப்பும், எழுதப்படும் விடயமும் பொருந்தி வர வேண்டும். பொருந்தி வராத பல கட்டுரைகள் உலவுகிறது.

கலவைகள் சரி. கட்டுரைக் கட்டுமானம் தான் தவறாகிறது. அதாவது நீர் மட்டம் பாவிக்காது கட்டப்படும் கட்டடமாகவே கட்டுரை உள்ளது. பூரணத்துவமின்றி உள்ளது.

எழுந்த மானத்தில் எழுதுபவைகளை வாசிக்கும் போது ஆர அமர, கருத்தெழுதும் ஆசையே விலகுகிறது.

”…நவீனக் கட்டுரை, வடிவத்தால், சிறுகதையைப் போன்றது.
அ பளீரென்ற தொடக்கம்
ஆ. பாம்பு ஊர்வது போல சரசரவென்ற போக்கு
இ. கவனத்தில் ஆழப்பதியும் ‘முத்தாய்ப்பு’ கொண்ட முடிவு
– என சிறுகதைக்குரிய மூன்று அடிப்படை இயல்புகளும் கட்டுரைக்கும் தேவை.
சிறந்த கட்டுரையின் அடிப்படைக் குணம் இதுவே– அது வளர்த்தலோ திசை திரும்பலோ இல்லாமல் இருக்கும். ‘கச்சிதமான கட்டுரை’ என்ற வரி ‘சிறந்த கட்டுரை’ என்பதற்கு சமமானதே ”…. இது    — எழுத்தாளர் ஜெயமோகன் கூறுவது.
மேலும் ” ஒரு கட்டுரை ஒரே போக்காக போவது நல்லது. நடுவே உடைபட வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு உடைவு. அதற்குமேல் போனால் அக்கட்டுரை சிதறியிருப்பதாகவே தோன்றும்” என்கிறார்.

இந்த அவசர உலகில் ஆறுதலாகப் பணி செய்யாது கட்டுரை உலகின் அடிப்படை விதியே மாறுபடுவது பரிதாபமான நிலை தான்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-7-2011.

 

 

 

                            

 

 

 

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூலை 24, 2011 @ 05:28:21

  கட்டுரை பற்றிய கட்டுரை மிகவும் அற்புதமாக இருக்கிறது!

  வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 24, 2011 @ 07:03:29

   கட்டுரைகளின் வசன அமைப்பு, பூரணத்துவமின்றி அமைகிறதைக் கவனித்த போது. இந்தச் சிந்தனை உதித்தது. கருத்துக் கூறுகிறவர்கள் எவர் உள்ளதைக் கூறுகிறார்கள்?. ஆகா, ஓகோ என்று ஆக்கதாரர் மனம் குளிர, கருத்திடுவார்கள். உங்கள் கருத்திடலுக்கு மிக்க நன்றி.இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. கோவை கவி
  ஜூலை 24, 2011 @ 07:03:58

  கட்டுரைகளின் வசன அமைப்பு, பூரணத்துவமின்றி அமைகிறதைக் கவனித்த போது. இந்தச் சிந்தனை உதித்தது. கருத்துக் கூறுகிறவர்கள் எவர் உள்ளதைக் கூறுகிறார்கள்?. ஆகா, ஓகோ என்று ஆக்கதாரர் மனம் குளிர, கருத்திடுவார்கள். உங்கள் கருத்திடலுக்கு மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 3. கவி அழகன் --
  ஜூலை 24, 2011 @ 07:23:44

  கட்டுரை பற்றிய உங்கள் ஆக்கமும் ஆய்வும் ஆதங்கமும் அருமை தொடருங்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 24, 2011 @ 09:41:27

   நாம் கூற வேண்டியதைக் கூறுவோம். கேட்பவர் கேட்டு முன்னேறுவது அவரவர் தெரிவு தானே! இப்படிக் கூறினாலே தலைக்கனம் என்போர் தான் பலர். நன்றி கவி அழகன் உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜூலை 24, 2011 @ 08:37:22

  கட்டுரைக்கு கட்டுமானம் தேவை என்பதை கூறியிருக்கிறிர்கள். தேவையான பதிவு !!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 24, 2011 @ 09:52:56

   ஆமாம் நீர் மட்டமற்ற கோணல். விரும்பினால் திருந்தலாம். பிழை என்பதே முதலில் தெரிய வேண்டுமே! நன்றி சகோதரரே! உங்கள் கருத்து, வருகைக்கு. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. N.Rathna Vel
  ஜூலை 24, 2011 @ 10:06:00

  நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 6. ஒப்பிலான் மு.பாலு
  ஜூலை 24, 2011 @ 16:34:48

  வணக்கம் .,.. மிகத் தெளிவான கருத்து .! தமிழில் எழுதும் போது ..ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வெளியிட்டால் ,சிறு சிறு தவறுகளை தவிர்க்கலாம் என்பது என் கருத்து …வாழ்க வளமுடன் !

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 24, 2011 @ 17:40:22

   சகோதரா! ” ழ” னா திருத்தியுள்ளேன். மிக்க நன்றி. இந்த 24 வருட டெனிஸ் பரிச்சயத்தில் இப்படித் தொலைத்துளளேன் என் அருமைத் தமிழை. அகராதி பார்த்தேன் அந்தப் பிழை வருத்தலைத் தடுக்க. பார்த்தும் தவற விட்டு விட்டேன். புலம் பெயர்வினால் வந்த தவறு. இதையே சகோதரர் ராஜீவ்ம் கீழே குறிப்பிட்டுள்ளார். மிக்க மிக்க நன்றி. பாலு சகோதரா. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூலை 24, 2011 @ 16:37:33

  “குழப்பமா” அல்லது “குளப்பமா ” சரியானது எது ?

  மறுமொழி

 8. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூலை 24, 2011 @ 16:42:29

  ஒரு கட்டுரையாளராக எனக்கு ரெம்பவும் பயனுள்ள கருத்துக்கள் கூறினீர்கள். “கவியரசி”!!..:)

  மறுமொழி

 9. SUJATHA
  ஜூலை 25, 2011 @ 19:31:39

  கட்டுரைகள் தொடங்கும் போது எதை மையமாக்கொண்டு ஆரம்பிக்கப்படுகின்றது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
  எழுந்தமானத்தில் தொடர்வீர்களானால் அது முன்னிற்கு பின் முரணானது. ஒருவர் தொடர்ந்து எழுதப்படுபவராயின் அதன் வடிவம் அமைப்பாக ஓழுங்கமையும். இதில் ”வேதா” நீங்கள் புரியவைத்த கட்டுரையும் அழகாக அமைந்துள்ளது

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2011 @ 20:09:24

   சுஜாதா! கட்டுரை அமைப்பின் விளக்கம் அருமை. உமது வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. கட்டுரைகளின் கோலம் கண்டு எழுதிய கட்டுரை இது. இறை ஆசி கிட்டட்டும்

   மறுமொழி

 10. vinothiny pathmanathan
  ஜூலை 27, 2011 @ 10:57:41

  கட்டுரை பற்றிய உங்கள் தொகுப்பு மிகவும் நன்று.

  மறுமொழி

 11. பிரபுவின்
  ஜூலை 27, 2011 @ 13:15:55

  “கட்டுரை எழுதும் போது அரைப்புள்ளி, காற்புள்ளி, ஆச்சரியக் குறி இன்னும் பல விதிமுறைகள் கவனிக்கப் படுவதே இல்லை. பந்தி பிரித்து எழுதுவது என்பது தொலைந்தே விட்டது. இந்த விதி முறைகள் கவனிக்கப் படாவிட்டால் கட்டுரையின் அழகு சிதைகிறது.”

  இது முற்றிலும் உண்மை சகோதரி.தெளிவு பெறவேண்டிய தருணம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 27, 2011 @ 20:20:53

   பிரபு! புரிந்து கொண்டு தெளிவு பெற வேண்டியவர்கள் தெளிவு பெறட்டும். உமது இனிய கருத்திற்கும், அன்பான வரவிற்கும் மிகுந்த நன்றியும், மகிழ்ச்சியும்.இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 12. B.ANTHONY FRANCIS
  மார்ச் 09, 2013 @ 10:37:05

  Very nice to see.Keep it up.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: