201. ஒரு வயது வேதாவின் வலை

 

 

ந்தனதோமென்று வேதாவின்வலை
தலைநிமிர்கிறது ஒரு வயதில்.
தமிழ் வர்ணமிட  ஆடி ஒன்றில்
தரணியில் பிறந்தது இரண்டாயிரத்துப் பத்தில்.
சொற் தொடர்கள் சிதறித் தெளித்து
அற்புதப் புதையலாய் விதைக்கிறேன் கவியாக.
தனித்தன்மையின் தமிழ் வர்ணமிது.
இனிதான தாகம்! குறையாத ஞானமிது!

பூக்கள் பரப்பும் எழுத்து ஊர்வலத்தில்
வாழ்க்கை வாசிப்பும் வாகாக மொழிதலுமான
தனமிது! அம்பலத்தில் ஆடுதலெனும், அறிவு
மனம் நெய்திடும் தமிழ் பூவிது!
வெட்டவெளிக் கருத்துகள் சிலகணம்
பொட்டென்று விழும் எங்ஙணும்.
பட்டுத் தெறித்துப் பிரதிபலிக்கும் கருத்து
எட்டிப் பலஅடி எடுக்கச் செய்யும்.

றவு மேடையின் அறிவுப் பாலிது!
மனிதநேயத்து நீதியின் ஆடையிது!
விமரிசனத்தராசில்  விழும் பெரும்
உண்மையின் கனம், ஆளுமைச் சிதறல்!
அறிவு உழவு இது! என்
எழுத்தெனும் சுவாசம்! உயிர்ச் சுவாசம்!
நான் எழுந்து நிற்கவுனைச் சரணடைந்தேன்!
தமிழே! உன் கதிரால் எனைப் பிணை!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-7-2011.

 

இக் கவிதையை 26-7-2011ல் ரி.ஆர்.ரி.தமிழ் ஒலி வானொலியில் கவிதை பாடுவோமில் என்னால் வாசிக்கப்பட்டது..

In Pathivukal web site :-       http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=332:2011-08-10-03-17-34&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23

 

 

                        

 

 

43 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வலையகம்
  ஜூலை 26, 2011 @ 05:30:30

  வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்…

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  மறுமொழி

 2. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூலை 26, 2011 @ 05:35:57

  ஆழ வேரூன்றி!
  அகலக் கிளைகள் பரப்பி!
  வானோக்கி உயர்ந்து!
  விரிந்து விருட்சமாகி!
  விழுதுகள் பல இறக்கி!
  எங்குமாய் வியாபித்து நின்று
  நிழல் கொடுக்க வேண்டுமென
  வாழ்த்துகிறேன்!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 26, 2011 @ 20:35:06

   மிக்க மகிழ்ச்சி சகோதரர் சிறீ. உங்கள் அனைவரினது வாழ்த்தும் நல்ல பலனைத் தரட்டும். உங்கள் வாழ்த்திற்கும், வருகைக்கும் மனம் நிறைந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. Ambaladiyal
  ஜூலை 26, 2011 @ 06:39:50

  வாழ்த்துக்கள் மென்மேலும் சிறந்த ஆக்கங்களுடன்
  தங்கள் வலைத்தளம் பொலிவுபெற்று,புகழ்பெற்று
  வாசகர் மனதில் என்றும் நிலைத்திட வாழ்த்துகின்றேன்.
  தொடரட்டும் தங்கள் வலைத்தளப் பயணம் இன்னும்
  பலநூறு ஆண்டுகள் சிறப்பாக……………..

  மறுமொழி

 4. subbiahvijayakumar
  ஜூலை 26, 2011 @ 09:16:41

  வாழ்த்துக்கள் …..வாழ்க வளமுடன் !!!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 26, 2011 @ 19:29:42

   சகோதரர் சுப்பையா விஐயகுமார்! மிக்க மகிழ்ச்சி. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் வலைப்பக்கம் சென்றேன் அங்கு பதிவுகள் இல்லை. ஆர்வமுடன் நீங்கள் எனக்கு ஆதரவு தருகிறீர்கள் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. Naguleswarar Satha
  ஜூலை 26, 2011 @ 09:26:57

  Vaazththukkal valaiyin oru varuda niraivukku.

  மறுமொழி

 6. kalanenjan shajahan
  ஜூலை 26, 2011 @ 10:00:02

  உங்கள் வலை மேலும் வளர வாழ்த்துக்கள்!உங்கள் தமிழ் பணி தொடர்க.

  மறுமொழி

 7. Kowsy
  ஜூலை 26, 2011 @ 12:35:28

  ஒரு வருடப் பயணத்தில் பூக்கவிட்டதும் போதித்ததும் போட்டிருக்கின்றீர்கள். வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் தமிழ்ப்பணி தொடரத் தளராத எங்கள் ஊக்குவிப்புக்களும் நிலைக்கட்டும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 26, 2011 @ 17:49:03

   தமிழ்ப்பணி தொடரத் தளராத எங்கள் ஊக்குவிப்புக்களும் நிலைக்கட்டும்……நிலைக்கட்டும்……ம்…ம்….கருத்திற்கும், வரவிற்கும் நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. இ.சொ.லிங்கதாசன்.
  ஜூலை 26, 2011 @ 13:00:30

  என்ன இது? இதையெல்லாம் நம்மகிட்ட பகிர்ந்துக்க மாட்டீங்களா?
  ஓகூஸ்ல(Aarhus) ஒரு பெரிய விழாவே எடுத்து அசத்தியிருப்போமில்ல,
  நீங்கள் தாமதமாக தெரிவித்ததால் “தாமதமான வாழ்த்துக்கள்” வாழ்த்துக்களுடன் உங்களால் சுமக்கக் கூடிய ஒரு கூடை நிறைய எங்கள் அன்பையும்,பாராட்டுக்களையும்,மகிழ்ச்சியையும்,மலர்களையும், நல்லெண்ணத்தையும்,உற்சாகத்தையும் அனுப்புகிறோம். பெற்றுக் கொண்டதும் ‘பற்றுச் சீட்டை’ அனுப்பி வையுங்கள்.

  “ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி
  தமிழ்போல் நிலைத்து வாழ்க வேதாவின் வலை”

  என்று கூறி அமைகிறேன்.

  மிக்க அன்புடன்
  இ.சொ.லிங்கதாசன்
  http://www.anthimaalai.dk

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 26, 2011 @ 17:09:58

   அப்பப்பா! ரெம்பப் பாரமாக இருக்கிறது பூங்கொத்துகள். தண்ணீர் விட்டு பாதுகாக்கிறேன் பார்க்கப் பார்க்க நினைவு வருகிறது. நன்றி, நன்றி. இது தான் பற்றுச் சீட்டு.. சும்மா நினைவு வந்தது. சுவரில் போட்டுவிட்டேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜூலை 26, 2011 @ 15:36:30

  உண்மையின் கனம் ! ஆளுமைச் சிதறல் !!
  அறிவு உழவு இது !!!
  தமிழாள் பக்கம் இது தமிழுக்கே பக்குவம்
  வேதாவின் வலை விரிந்து ஆண்டு பூர்த்தி
  விளையட்டும் தமிழ் பயிர்கள் நூற்ராண்டுக்காய்……………
  வாழ்த்துக்கள் ! வளர்க மென்மேலும் !!

  நட்புடன் நடாசிவா:

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 26, 2011 @ 17:04:16

   தமிழின் பிரியம்! நட்பின் உயர்வு! உன் கருத்தின் விரிவு!. சகோதரா மிக்க நன்றி உங்கள் வரவு, கருத்திற்கு. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. SUJATHA
  ஜூலை 26, 2011 @ 18:38:14

  வேதாவின் வலைக்கு வயது ஒன்று!!!!!!!!!!!!!!

  வானோலியில் அடியெடுத்தது உங்கள் கவி
  வடிவமாகத் தொடர்ந்த்து உங்கள் கவி
  வான்வெளியில் தவழ்ந்த்து புத்தகமாய் வெளிவந்த கவி
  அன்று தொட்டது கவி பின் தொடர்ந்தது கட்டுரை, குறள்வடிவம்
  நின்று விடாத உங்கள் பணி தொடர்கின்றது பலவடிவமாய்
  நாம் ஈன்றெடுத்த பெருமையது தமிழ்ப்பெண்மணியாய்
  தமிழிற்கு வளம் கொடுத்தது உங்கள் படைப்புக்கள்
  வளரட்டும் பணி!!!!! வழ்க தமிழ்!!!!!!!!!!!!!!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 26, 2011 @ 19:11:52

   வானொலியில் சுஜாதாவுடன் கவிதை பாடியது, செய்தி வாசித்தது, யெர்மனி ரி.ஆர்.ரி தமிழ் அலை விழாவில் என் முதல் கவிதைப் புத்தகம் வெளியான மேடையில் நாம் ஒன்றாக நின்றது. இன்று வரை தொடர்கிறது. நன்றி சுஜாதா. நல்லதிலும் கெட்டதிலும் ஒன்றாக இருப்பது தான் நட்பு. நானும் சில நட்புகள் பெற்றேன். காரியம் ஆகும் வரை உள்ள நட்புகள் தான். தொடருவோம்.உமது கருத்திற்கு மனமார்ந்த நன்றி சுஜாதா. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூலை 26, 2011 @ 19:46:10

  உங்கள் வலை மேலும் வளர வாழ்த்துக்கள்!உங்கள் தமிழ் பணி தொடர்க…… வாழ்க தமிழ் …
  உங்கள் கவிதைகளே கேளக்க மிக ஆவலாகேயுள்ளேன் ,எனவே கவிதைகளே வலையின் மூலமாக பிரசுரிக்க அன்போடு கேட்டு கொள்கிறேன் ..:))

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 26, 2011 @ 20:27:55

   மிக்க நன்றி ராஜீவ்! கவிதை கேளுங்கள் என்று 3 ஆக்கம் இட்டுள்ளேன். அதுவே எனது குரல். இன்றும் ரி.ஆர்.ரி வானொலியில் இதே ஒரு வயதுக் கவிதையை வாசித்தேன் குரலில் மிக அருமையாக வந்தது. பர்ப்போம். உமது வாழ்த்திற்கு மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும் ராஜீவ்!.

   மறுமொழி

 12. பிருந்தா இராமலிங்கம்
  ஜூலை 26, 2011 @ 20:03:48

  வேதா ஆண்டி,

  உங்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். வேதாவின் வலை என்று கூறுவதை விட, எழுத்தாளர் வேதாவின் வலை என்பதே பொருந்தும்.

  அன்புடன் உங்கள் ரசிகை
  பிருந்தா பியா இராமலிங்கம்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 26, 2011 @ 20:20:12

   அன்பின் பிருந்தா! எழுத்தாளர் வேதா, கவிதாயினி வேதா என்று பிறர் என்னை அழைப்பது பொருந்தும். நானே என்னை அப்படி அழைப்பது அழகல்ல. கோவைக்கவி என்றது கூட கோப்பாய் எனது ஊர், அதை வைத்து அப்படி எழுதினேன். இன்று தான் உங்கள் வலைப்பதிவு பார்த்தேன் நல்லது. வாழ்த்துகள்.தொடருங்கள். எனக்கு வாழ்த்துக் கூறியதற்கும் மிக்க நன்றியும் அதற்காக மகிழ்ச்சியும் அடைகிறேன். இறை ஆசி கிட்ட்டும்.

   மறுமொழி

 13. கவி அழகன் --
  ஜூலை 27, 2011 @ 07:43:15

  ஓராண்டு வாழ்த்துக்கள்
  கவி பல தந்து
  தமிழ் சுவை சேர்த்து
  தமிழ் தாகத்தை தீர்க்க
  வாழ்த்துக்க்கள்

  மறுமொழி

 14. sempakam
  ஜூலை 27, 2011 @ 08:54:29

  உங்கள் படைப்புக்கள் இன்னும் இன்னும் மேலோங்க, வாசகர்கள் நிறைந்த நிரம்பி வழியும் தளமாக திகழ, தமிழுக்கு உரம் சேற்கும் எழுத்தாக என்றென்றும் சிறக்க, இந்த ஒரு அகவையில் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 27, 2011 @ 20:27:11

   அன்புடன் செம்பகம்! உமது இனிய வாக்கு பொன்னான வாக்காக அமையட்டும்! உமது இனிய வாழ்த்திற்கு மனம் நிறைந்த நன்றிகள். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 15. vinothiny pathmanathan
  ஜூலை 27, 2011 @ 10:55:11

  வாழ்த்துக்கள் வேதா அன்ரி. ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டு நீங்களும் உங்கள் தமிழும், தமிழ் மொழிக்கு சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன் .பாராட்டுக்கள் .

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 27, 2011 @ 20:14:41

   Vino! என்னால் முடிந்தவரை இப்பணி தொடர்வேன். உமது இனிய வரவிற்கும், கருத்திற்கும் மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 16. பிரபுவின்
  ஜூலை 27, 2011 @ 13:13:28

  நல்வாழ்த்துக்கள் சகோதரி.தமிழின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.

  மறுமொழி

 17. மகேந்திரன்
  ஜூலை 27, 2011 @ 15:59:11

  அழகிய சொல்லாடல்கள் சகோதரி.
  இன்றுதான் உங்கள் வலைத்தளம் வந்தேன்
  இனி தினமும் வருகிறேன்.

  மறுமொழி

 18. ரெகுபதி ராஜகோபாலன்
  ஜூலை 28, 2011 @ 20:55:26

  அன்பு சகோதரி வணங்கி மகிழ்கிறேன்
  உங்களின் ஒப்பற்ற எழுத்தின் வழியே
  ஓராண்டை கடந்தது கண்டு
  மதியும் மனமும் ஒரு சேர மகிழ்ச்சி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 29, 2011 @ 06:38:06

   அன்புச் சகோதரா! ரெகுபதி ராஜகோபாலன்!
   உங்கள் அன்பான வாழ்த்தைக் கூற இங்கு வருகை தந்ததையிட்டு மிக்க மிக்க மகிழ்வடைகிறேன். மனம் நிறைந்த நன்றியைக் கூறுகிறேன். இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 19. சக்தி சக்திதாசன்
  ஜூலை 30, 2011 @ 09:34:45

  அன்புச் ச்கோதரி வேதா, ஓராண்டல்ல ஓராயிரம் ஆண்டுகள் நிலைத்து, பெயர் பெற்று தமிழ் தாங்கி வலம் வர வேண்டுமென்று மனம்நிறைந்து வாழ்த்துகிறேன்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 30, 2011 @ 19:09:03

   அன்புச் சகோதரா! (சக்தி) மிக்க மகிழ்ச்சி. உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்

   மறுமொழி

 20. Rajarajeswari
  ஆக 02, 2011 @ 06:06:59

  ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி சிறக்க வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 02, 2011 @ 16:32:27

   அன்பின் சகோதரி! உங்கள் அன்பான வருகைக்கும், அன்பான வாழ்த்திற்கும் மிகுந்த மகிழ்வும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 21. வசந்தா சந்திரன்.
  ஆக 02, 2011 @ 06:37:37

  சகோதரி வேதா அவர்களுக்கு,
  உங்கள் வலைப் பயணம் இன்னும் பல பதிய ஆக்கங்களுடன் பல்லாண்டு காலம் புதுப் பொலிவுடன் நடை போடவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
  என்றும் அன்புடன் வசந்தா சந்திரன்.

  மறுமொழி

 22. வசந்தா சந்திரன்.
  ஆக 02, 2011 @ 06:52:11

  சகோதரி வேதா அவர்களுக்கு
  உங்கள் வலைப்பயணம் இன்னும் பல புதிய ஆக்கங்களுடன் புதுப் பொலிவுடன் பல்லாண்டு காலம் நடை போடவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

  அன்புடன் வசந்தா சந்திரன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 02, 2011 @ 16:48:09

   அன்பின் வசந்தா! மிக்க மிகிழ்ச்சி. உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றி. இறை ஆசி கிட்டுட்டும்.

   மறுமொழி

 23. கோவை கவி
  ஆக 04, 2011 @ 20:53:39

  Sujatha Anton and வசந்தா சந்திரன் like this..

  Sujatha Anton wrote:-
  உறவு மேடையின் அறிவுப் பாலிது!
  மனிதநேயத்து நீதியின் ஆடையிது!
  விமரிசனத்தராசில் விழும் பெரும்
  உண்மையின் கனம்இ ஆளுமைச் சிதறல்!
  தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்!!!!!!!! வளர்க தமிழ்!!!!!!!!!!!!!

  Vetha. wrote:- Thank you so much Sujatha. God bless you.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: