18. ஆதரவிற்கு நன்றி!..நன்றி. (சிறு கட்டுரைகள்.)

 

தரவிற்கு நன்றி!..நன்றி.

”..எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..” -(குறள்)

எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண் என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
நான் மகிழும் எழுத்தால் உலகம் என்னோடு மகிழ்வது ஆனந்தம்..ஆனந்தமே!

எழுத எழுத பயிற்சி தானே!
ஏகாந்தமான என் உன்னத
எண்ண மின்னல்கள் அறிவு
உழவின் விளைச்சல்.

விளைச்சல் கொட்டிக் கிடக்கும் எனது வலை 1-7-2010ல் தோற்றமாகி ஒரு வருட நிறைந்துள்ளதையொட்டி இந்த ஆக்கம் எழுதுகிறேன்.

என்ன தான் நடக்கிறது!…. என்று எல்லோருக்கும் ஆர்வம் எழுவது இயல்பு தானே!

ஒருவர் 100வது ஆக்கம் இடும் போதோ அன்றி 150 – 200வது ஆக்கமிடும் போதோ பெரிய கொண்டாட்டமாக பரபரப்பாக வலையுலக மக்களுக்கு அறிவித்து,  ஆசீர்வாதம் வாங்கும் வழமையுள்ள உலகில்  நானும் என் வலை பற்றி சிறிது கூற விரும்புகிறேன்.

இந்த ஒரு வருடத்தில் (18046) பதினெட்டாயிரத்து நாற்பத்திஆறு  பார்வையாளர்கள் வந்துள்ளனர்.  27.7.2011  இது வேட் பரஸின் பதிவு.  இன்றைய பார்வையாளர் ஆம் 108 ஆகியது. ஆடி 24ம் திகதி 207 பேர் வந்து பார்த்துள்ளனர்.  இதுவே நேற்றுவரை அதிகரிப்பான தொகை. வழமையாக ஒரு நாளிற்கு வலையைப் பார்வையிட  60 பேர், 150 பேர், 170 பேர்களென வருவார்கள்.

நேயர்கள், நீங்கள், அன்புள்ளங்கள் இட்ட கருத்துகள் 27-7-2011 மாலை 7 மணி வரை 1196 பின்னூட்டங்கள் வந்துள்ளன.

மௌனம் பசை தடவாத வார்த்தை ஊர்வலத்தின் பாதையில்… என்ன!…நான் எத்தனை தலைப்புகளிட்டு எழுதியுள்ளேன் என்றால்….21 தலைப்புகளில் (கற்றகறி) எழுதியுள்ளேன். (அண்மைய இடுகைகளுக்குக் கீழே பார்த்தால் தெரியும். அதில் என்னைப் பற்றியும் சேர்த்து விடுங்கள்.)

கவிதைச் செங்கோல் ஏந்தி பாக்களை, கலப்புச் சுவையாகவும் (பாமாலிகை கதம்பம்) கவிதையை (பாமாலிகை) தனித்தனி பிரிவாகவும் எழுதுகிறேன். முதல் 265 கவிதைகள் (கதம்பமாக) வலையேற்றினேன்.  இனி பாமாலிகை கதம்பம் பகுதி- 2 என்று, ஒன்றிலிருந்து போடத் தொடங்குகிறேன்.

இதில் இன்னொரு மகழ்ச்சியான விடயம் நானாக வரைந்து பாவித்த அழகான படங்கள் பலவற்றை கூகிள் நிறுவனம் தனது தமிழ் படம் தேடல் பகுதிக்கு சேர்த்துள்ளது. இது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

பாமாலிகை – கவிதை மாலை.

உறவு சிநேகிதம் என்று உலகில் பயணிக்கிறோம். கூடிக் கையிணைத்து வருபவர்களும், விட்டு விட்டு ஓடுபவர்களும் என்று பல விதமானவர்கள். நம்பிக்கை, முயற்சிகளின் நட்பு கூட வரும் போது பயணம் இனிக்கிறது. ஏமாற்றம் வருவதில்லை.

தான் எனும் சுயநலம் செறிந்த கூட்டுப் புழு நிலை மாறி, அதை உடைத்த பட்டாம் பூச்சிப் பக்குவ நிலை கொண்டு தமிழ் வானில் பறக்கும் நிலை இது.

இத்தனை நேயர்கள் அன்புள்ளங்களின் ஆதரவினால் தான் நான் இவ்வளவு தூரம் வர முடிந்தது. ஆதலால் அனைவருக்கும்  என் அன்பு கலந்த நன்றியை இங்கு கூறி மகிழ்கிறேன்.
துன்பத்தைத் தூக்கிலேற்றும் இன்பப் பயணத்திற்கு மேலும் உங்கள் ஆதரவு பல்கிப் பெருகுக என்று ஆண்டவனை வேண்டுகிறேன்.

உங்களனைவருக்கும் இறை ஆசி கிட்டட்டும்.

நன்றி! நன்றி! நன்றி!

கற்றது கைம்மண்ணளவு.
சற்றதைச் சிந்தித்து எம்
சிற்றறிவை நாளும் பெருக்கலாம்.
வற்றாத அறிவு விற்றாலும்,
வெற்று மனிதனாகிலும் போகாது.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-7-2011.

                       

 

 

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூலை 28, 2011 @ 05:39:34

  இறைவன் படைத்த பூக்களை பறித்து
  இறைவனுக்கே சாற்றுவது போல

  தங்களுக்கு எழுதிய வாழ்த்துக்களாலேயே
  மீண்டும் வாழ்த்துகிறேன்!

  “ஆழ வேரூன்றி!
  அகலக் கிளைகள் பரப்பி!
  வானோக்கி உயர்ந்து!
  விரிந்து விருட்சமாகி!
  விழுதுகள் பல இறக்கி!
  எங்குமாய் வியாபித்து நின்று
  நிழல் கொடுக்கும் இந்த ஆலமரம்..”

  இன்னும் இன்னும் ஆயிரம் ஆயிரம்
  படைப்புக்களை தரவேண்டும்!

  எல்லாம் வல்ல இறைவன்
  என்றென்றும் அருள் புரியவேண்டும்!

  வாழ்த்துகிறேன் அம்மா!!

  வாழ்த்தட்டும் தலைமுறைகள்!
  வளரட்டும் தங்கள் திருத்தொண்டு!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 28, 2011 @ 17:51:08

   என் கடன் நன்றி கூறுதல். அதைக் கூறிவிட்டேன். முன்பு ஒருவர் எனது வலை பற்றிய கண்ணோட்டம் போட்டதும் தன் தொடர்பையே துண்டித்து விட்டார். எரிச்சல் வந்து விட்டதோ தெரியாது. இப்படி உலகம் பல விதம். உங்கள் அன்பான வாழ்த்துரைக்கு மிகுந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. cpsenthilkumar
  ஜூலை 28, 2011 @ 07:27:34

  வாழ்த்துகள்

  மறுமொழி

 3. vinothiny pathmanathan
  ஜூலை 28, 2011 @ 10:29:22

  தங்கள் அறிவையும் ஆற்றலையும் கண்டு வியந்து போயிருக்கிறேன் .வேதாவுக்குள்ளே இத்தனை ஆற்றல்களா ! உங்கள் கவிதைகளை ஆரம்பங்களில் தமிழ் அலையில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் .இப்போ அந்திமாலையின் ஊடக உங்கள் எண்ணங்களையும் சேர்த்து வாசித்து வியந்திருக்கின்றேன் .அண்மையில் தான் வேதாவின் வலை சென்று வந்தேன் .அள்ள அள்ள குறையாத பொக்கிஷங்கள் எனக்காக அங்கே காத்திருந்தன .பேருவகை அடைந்தேன் .உங்கள் நட்பு முக நூலில் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி .உங்களிடமிருந்து நிறைய கவிதைகள் மற்றும் சிந்தனை சாரல்களையும் எதிர்பார்க்கிறேன் . .உங்களுக்கு நிறைந்த ஆரோக்கியத்தையும் ,நீண்ட ஆயுளையும் வேண்டி ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .அன்புடன் வினோ.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 28, 2011 @ 17:55:58

   சகோதரி மிக்க நன்றி எல்லாம் அவன் செயலே. எனது முயற்சி மட்டுமே. ”…நிறைந்த ஆரோக்கியத்தையும்…”’ ஆம் இது மட்டும் வேண்டும். இதை இறைவன் தரட்டும். உமது அன்பான கருத்திற்கு மனம் நிறைந்த மகிழ்வும் நன்றியும்.இறை ஆசி கிட்டட்டும்

   மறுமொழி

 4. பொன்-சிவகௌரி
  ஜூலை 28, 2011 @ 12:20:20

  “கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு”..
  உங்களுக்குள் இருக்கும் திறமைகளைக் கண்டு வியப்படைகிறேன்.
  ஒருவரது திறமைகள் எங்கேயும் எப்போதும் எல்லோராலுமே பாராட்டப் படுவதுண்டு. உங்கள் திறமைக்கு கிடைக்கும் பூமாலைகள்தான் வாசகர்களின் கருத்துக்கள்.. அவற்றை விருப்புடன் ஏற்று உங்கள் கழுத்தில் சூடிக் கொள்ளுங்கள்.

  எழுதுவது என்பது ஒரு படைப்பாளிக்கு இனிப்பான விடயமாக இருக்க முடியாது. ஒரு அமுத சுரபியை உலகிற்கு உற்பத்தி செய்வதற்காக தன்னை சில கணங்கள் சித்திரைவதைக்கு உள்ளாக்கிக் கொள்கிறான்..ஆனால் தனது ஒவ்வொரு படைப்பின் முற்றுப் புள்ளி மீதும் தனது அத்தனை அவஸ்தைகளையும் இறக்கி வைத்து விடுகிறான்.

  அந்த வகையில்தான் இந்த அமுத சுரபிகளை எமக்கு தருவதற்கு நீங்களும் அவஸ்தைப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை. நானும் அந்த அவஸ்தைகளை பல முறைகள் அனுபவித்திருக்கிறேன்.
  பிரசவத் தாயைப் போல் விருப்பத்தோடு வேதனையை அனுபவித்து நாம் பெற்றெடுக்கும் இயக்கியக் குழந்தைகள்தான் எமது படைப்புக்கள்!

  மேலும் பல இலக்கியக் குழந்தைகளை நீங்கள் பெற்றெடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
  தொடரட்டும் உங்கள் பயணம்.
  வாழ்த்தட்டும் தமிழ் நல்லுலகம்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 28, 2011 @ 20:09:43

   நானும் பிறரது திறமை கண்டு வியப்படைகிறேன் பொன். சிவா! ஆமாம் ஒவ்வொரு படைப்பும் பல வலிகளோடு தான அந்தப் பிரசவம் நடக்கிறது. முற்றுப்புள்ளி இடும் போது நிம்மதிப் பெருமூச்சும், பெருமிதமும் கிடைக்கிறது. மிகவும் மகிழ்ச்சியும் நன்றியையும் உங்கள் கருத்திற்குக் கூறுகிறேன். இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 5. sivakumaran
  ஜூலை 28, 2011 @ 17:46:51

  வாழ்த்துக்கள். ஓராண்டு நிறைவுற்றதற்கு
  மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 28, 2011 @ 20:15:26

   அன்பின் சகோதரா! சிவகுமார்! உமது அன்பான வாழ்த்திற்கும், வருகைக்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. SUJATHA
  ஜூலை 28, 2011 @ 19:21:40

  உங்கள் படைப்புக்கள் ஆக்கங்கள் தொடரவேண்டும். வலைத்தளங்களை யார் பார்க்கின்றார்கள் என்பதையும் விட நான்
  ஒவ்வொரு முறையும் சுற்றி வந்து உங்கள் ஆக்கங்களை வாசிப்பதில் ஆர்வம் கொள்வேன். தொரட்டும் பணி !!! தமிழ் வளர்க!!!!!!!!!!!!!!!!!!!!!!

  மறுமொழி

 7. Kowsy
  ஜூலை 28, 2011 @ 19:47:02

  ஒரு வருடக்குழந்தையை திரும்பிப் பார்த்த மகிழ்ச்சியில் தரப்பட்ட இக்கட்டுரை, உங்கள் அத்தனை உழைப்பையும் எடுத்துக்காட்டுகின்றது. பார்வையாளர்கள் பலரைக் கொண்டிருக்கும் இத்தளம் மேலும் வளர வாழ்த்தகிறேன்.

  மறுமொழி

 8. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூலை 28, 2011 @ 21:43:21

  நான் தமிழில் ஏராளமான வலைகளை வசித்திருக்கிறேன் …ஆனால் எந்தவொரு வலையிலும் கருத்துக்கள் கூறியதில்லை …..முதல் முதலில் எனது கருத்துக்களை நான் ”..வேதாவின் வலை”..யில் தான் பதிவு செய்துள்ளேன்.. “தமிழின் அழகைப் பார்த்து வியந்து போனதினால் நான் இந்த வலையில் சிக்கிவிட்டடேன்”…

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூலை 29, 2011 @ 06:25:12

  அன்பின் ராஜீவ்! நான் (ஐ மீன்) எனது வலை உங்களைக் கவர்ந்ததையிட்டு மகிழ்வடைகிறேன். மிக நல்லது தமிழிலும் நீங்கள் முன்னேற உதவுமே! எதுவும் நாம் முன்னேற உதவ வேண்டும். பின்னேற அல்ல. இவ்வகையில் நாமிருவருமே வெற்றியாளர்கள்.உங்கள் கருத்து மகிழ்வும் நிறைவும் தருகிறது. மிகுந்த நன்றி. ஆண்டவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

  மறுமொழி

 10. எழுச்சிக் கவிஞர் கங்கை மணிமாறன்
  ஜூலை 31, 2011 @ 04:53:04

  உங்கள் எழுத்துகளில் இருக்கிற
  உண்மைக்கு இணையாக
  வன்மையும் இருக்கிறது!
  கூடவே —
  பெண்மைக்கு இணையான
  மென்மையும் இருக்கிறது!
  அன்பைத் தேடும்
  ஆத்மாக்களைப் பற்றிய
  அவலக் கவிதைகள் —
  அழகுணர்ச்சி பற்றிய
  ஆனந்த வெளிப்பாடு—
  சமுதாய நேசமுடனான
  சமர்ப்பணங்கள் —
  அனைத்தும் அருமை!
  ஒரு தாயின் நேசமுடன்
  சமூகத்தை வசீகரிக்கும் தங்கள் எழுத்துகள்
  தவச் சிறப்புடையன என்பதில் ஐயமில்லை!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 31, 2011 @ 20:29:00

   சகோதரரே! கங்கை மணிமாறன் அவர்களே! உங்களைத் தேடினேன். மிக்க நன்றி. அங்கும் வருவேன். உங்கள் இனிய கருத்திற்கும், வரவிற்கும் மிக மிக மகிழ்ச்சி.நன்றியும் கூட. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. பிரபுவின்
  ஜூலை 31, 2011 @ 06:02:24

  உங்கள் வலையின் சிறப்பும் அது பற்றிய பார்வையாளர்களின் பாராட்டுகளும் உங்கள் திறமைக்கு கடவுள் கொடுத்த அங்கீகாரமாகும்.வாழ்க தமிழ்.வளர்க சகோதரி வேதாவின் வலை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 31, 2011 @ 07:39:59

   பிரபு! மகிழ்ச்சி பிரபு. இறைவனை மிகவும் நம்புகிறேன். அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற மனவியல் வழி, வாழ்வுக்கு மிக உதவியாக உள்ளது. உமது கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: