வாழ்வியற் குறட்டாழிசை.10

Art by Vetha.

*

வாழ்வியற் குறட்டாழிசை. 10

*

கல்விச் செல்வம்.

லகில் உயர் செல்வம். வாழ்க்கைக்கு
வாய்ப்பாடானது வளமான கல்வியே.

ல்லையற்ற பெருமை, வல்லமை தரும்
இல்லாமையாகாத கல்விச் செல்வம்.

மின்சாரம் ஒளி தருதல் போல
தன்சாரமாய்க்  கல்வி(அறிவு) ஒளிரும்

ற்றாத கல்வியை ஒருவன் விற்றாலும்,
வெற்று மனிதனாகினாலும் போகாதது.

பாலாவியன்ன பட்டுடை போன்ற அழகு
மேலான கல்வி தரும்.

பெற்ற ஒருவரின் கல்வியால்  குடும்பமும்
உற்றவரும் பயன் பெறுவார்.

கொடுக்கக் கொடுக்க முடிவது பணம்
கொடுக்கக் கொடுக்க வளர்வது கல்வி

நீதியாகக் கற்றபடி ஓழுகாததால் உலகில்
அநீதி மலிந்து நிறைந்துள்ளது.

ல்வியெனும் அமுத தாரையில் அமிழ்ந்து
மூழ்க மூழ்க இன்பம் பெருகும்.

வெட்டினும், கட்டி அடிப்பினும், சுட்டாலும்
பட்டுப் போகாதது கல்வி.

முதாயப் பள்ளங்கள் நிரவும் கல்வியாளன்
சமூகத்துக் கலங்கரை விளக்கமுமாகிறான்.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-7-2011.

In Anthimaalai. web site :-     http://anthimaalai.blogspot.com/2011/09/10.html#comments

  

                             

 

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. cpsenthilkumar
  ஜூலை 30, 2011 @ 05:28:20

  குட் ஒன்

  மறுமொழி

 2. stalinwesleyley
  ஜூலை 30, 2011 @ 05:57:43

  சூப்பர் பாஸ் ………..

  மறுமொழி

 3. மகேந்திரன்
  ஜூலை 30, 2011 @ 06:21:02

  அருமையான ஆக்கம்
  சகோதரி

  http://ilavenirkaalam.blogspot.com/.

  மறுமொழி

 4. pathmanathan family denmark
  ஜூலை 30, 2011 @ 06:49:06

  very nice

  மறுமொழி

 5. vinothiny pathmanathan
  ஜூலை 30, 2011 @ 06:51:51

  ஒருவன் எங்கு சென்றாலும் அவனை சபையில் முன்னிருக்கச் செய்வது கல்வி. அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 30, 2011 @ 09:14:01

   மிக்க மகிழ்ச்சி சகோதரி! உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மனம் நிறைந்த நன்றி. அந்தக் கல்வியால் தானே நாமும் அறிமுகமானோம். வாழ்க! வளர்க கல்வி!.இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. யாழினி
  ஜூலை 30, 2011 @ 11:09:10

  // கொடுக்கக் கொடுக்க முடிவது பணம்
  கொடுக்கக் கொடுக்க வளர்வது கல்வி //

  அருமையான உண்மையான வரிகள் ….

  வாழ்த்துக்கள் சகோதரி !

  மறுமொழி

 7. ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூலை 30, 2011 @ 18:06:52

  “கல்வியெனும் அமுத தாரையில் அமிழ்ந்து
  மூழ்க மூழ்க இன்பம் பெருகும்.

  வெட்டினும், கட்டி அடிப்பினும், சுட்டாலும்
  பட்டப் போகாதது கல்வி”

  அற்புதம்!!! வாழ்த்துக்கள்!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 30, 2011 @ 19:57:42

   வாழ்வியல் குறளிற்கு கருத்துரையிட்டுள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் உரித்தாகுக.இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. SUJATHA
  ஜூலை 30, 2011 @ 19:04:31

  வாழ்வில் பெற்றது அறிவு கற்றிடக்கற்க கற்று அறவோம். குறள்
  வடிவத்தில் எடுத்துரைத்த கருத்துக்கள் அழகாக உள்ளன

  மறுமொழி

 9. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூலை 30, 2011 @ 21:40:00

  பதினொரு குறள்களில் மிக சிறந்தது எது என்று கண்டு பிடிக்க முடியவில்லை அத்தனையும் அற்புதமானவை கல்வியின் பெருமையே ……பெருமை தான் ::)))

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 31, 2011 @ 07:35:35

   ராஜீவ்! கல்வியின் பெருமை உணர்ந்து மேலும் முயற்சிப்போம். இங்கு வந்து கருத்திட்டுமைக்கு மிகுந்த நன்றி ராஜீவ்! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. பிரபுவின்
  ஜூலை 31, 2011 @ 05:56:59

  மிகவும் அருமையான பார்வை.கல்விக்கு வயதில்லை.அனைவரும் கற்போம்.வாழ்வில் உயர்வோம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 31, 2011 @ 07:33:03

   பிரபு! சிறிது கற்றனதினாலும் இங்கு சந்தித்தோம் வாழ்வில் உயர முயற்சிப்போம். வலைக்கு வந்து கருத்திட்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியும், மனமார்ந்த நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. SUJATHA
  ஆக 02, 2011 @ 10:52:56

  கல்வி என்னும் மூன்று எழுத்தில் குறள் தந்த உங்கள் படைப்பில்
  தளைத்து ஒங்கும் கல்விச்செல்வத்தை விட வேறோன்றும் இல்லை. வளர்க உங்கள் பணி !!!!!!!!!!!!!! தமிழ் வாழ்க!!!!!!!!!!!

  மறுமொழி

 12. Rajarajeswari
  ஆக 03, 2011 @ 06:30:26

  கல்வியெனும் அமுத தாரையில் அமிழ்ந்து
  மூழ்க மூழ்க இன்பம் பெருகும்.//

  அமிழ்தாய் தந்த குறள்களுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 07, 2011 @ 10:33:00

   மிக்க நன்றி சகோதரி. ஒவ்வொரு தலைப்பாக இது ஒரு தொடர் இடுகையாகச் செய்கிறேன். உங்கள் அன்பான வரவிற்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 13. Kalai Moon
  நவ் 04, 2011 @ 11:41:54

  கல்விச் செல்வம். தேடிக்கொள்ள
  சொல்லும் நிலை அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 04, 2011 @ 20:59:23

   அன்புச் சகோதரா! உங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிகுந்த மகிழ்வடைந்தேன், மிக்க நன்றியும் கூறுகிறேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: