27. கவிதை பாருங்கள்(photo,poem

 

வலையேற்றியது -18-7-2011.

பெற்றோர் மாட்சி. 35.

 

 

பெற்றோர் மாட்சி. 35.

18-5.2008.
நிறைவு – நிறைந்தது என்பது அங்கு குறைவாயிருக்கும். குறைவற்ற பேராசைக்காரர் எம் இறையான பெற்றோர். தம் பிள்ளைகள் இமயப் புகழ் பெற்றிட இணையில்லா ஆசையுடையோர்.  இவர்கள் எண்ணம் எம் நடவடிக்கையைச் சீராக்கி நிலைக்க வைக்கிறது.

28-5-2008.
உறவுகளின் தொகுப்பு வாழ்வு. திறவுகோல் இங்கு பெற்றவராகிறார். தினம் எம்மை வழி நடத்தி, திகட்டாத உறவுகளை இணைத்து, திறமையாக வாழ்க என்று எம்மைத் திறம்பட நடத்துகிறார்கள், வாழ்வை உறவுகளின் சங்கமமாக்கி.

20-7-2008.
” தூங்கிய பொழுதாக முயற்சியின்றி வாழாதே! ஏங்கிய பொழுதாக இவை போய்விடும்! தீங்கு நீங்க முயற்சி செய்திடு!”…. பெற்றவரிடம் இருந்து வாங்கிய அறிவுரை ஓங்கி ஒலிப்பதால், சோம்பலை ஒதுக்கி நன்றியைத் தூது விட எழுகிறேன் தூக்கத்திலிருந்து.

18-10-2008.
குழந்தையிலிருந்து எம்மைக் குறையின்றி வளர்க்கும் பெற்றவரின் குறிக்கோள் சீரும் சிறப்புமாகக் குன்றில் எம்மை ஏற்றுதலே. அழவைத்து அவர்களுக்கு ஆக்கினை கொடுத்து அறியாது வளர்கிறோம் நாம். குறைகள் கொடுக்காது அவர்களைக் குனிய விடாது வளர்வோம், நட்சத்திரமாவோம் என்று பெரியவரானதும் எண்ணுகிறோம். அப்போது பெற்றவர் எம்முடன் இல்லை.

2-8-2008.
நித்தமும் முத்தத்துடன் சத்தான மொழிகள்
கொத்தாகத் தரும், அன்புப் பெற்றோரின்
உத்தம நோக்கத்தை நிறைவேற்றும் விழுதாக,
வித்தாகப் பிள்ளைகளை ஆக்குவது
சத்தமில்லாத யுத்தமிப் புதிய உலகில்.

9.8.2008.
முத்து பவளமென எம்மைத் தம் சொத்தாக ஏந்திய பெற்றவருக்கு, ”தத்தெடுத்தவர்களாக பிள்ளைகளை எண்ணுக”வென்பது, புத்தம் புதிய சேமநல சமூகச் சிந்தனை. எத்தனை பேர் இதில் நீந்திக் கரையேறுவார், எத்தனை பிள்ளைகள் முத்து மாணிக்கம் ஆவார்!

10-8-2008.
தவழ்ந்த மடியில் அவிழ்த்த எண்ணங்களின் நேர்கோட்டில், கவிழ்ந்து விடாது காலத்தைச் செலுத்து என்று மகிழ்ந்து கவனமாக வளர்த்தனர் பெற்றோர். மதித்து அவ்வழி நடத்தல் உயர் வாழ்விற்கு உறுதியுடைய தளராத படி.

16.8.2008.
பக்குவமாய்ப் பேசிப் பழகி, அன்பில் சிக்க வைத்து, பாசத்தைப் பொழிந்து சொக்க வைப்பவர் எமது பெற்றோர். அக்குவேறு ஆணிவேராய் அவ்வன்பு அழிந்திடாது இணைத்து, பல படிகள் உயர நடப்பது மிக்க பொறுப்பான எமது கடன்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(uploaded.17-7-2011)

 

                         
 

25. காதல் நயம் தேடு! (பா மாலிகை( காதல்)

 

 

காதல் நயம் தேடு!

அபிநயக் கணகளால்
கவிநயம் பேசிவிட்டு
காதல் நயம் தேடாது
தொலை தூரம் நிற்கிறாய்!

கண்ணடித்துக் கைதொட்டு
உன்னடியில் வீழவைத்து,
காணாதது போலின்று
ஏனோ நீ ஏய்க்கிறாய்!

மலைத்தேனது வாலிபத்தேன்!
வலை விரித்தால் வயோதிபம்
வாலிபத்தேன் தொலைந்திடும்!
காலியாகு முன்னர் களித்திடு!

மன்மத இளமையின்
கன்னல் காதல் வயல்.
மின்னி மறையும்
பின்னல் காதல்நிலா.

தேர்ந்திட்ட காதல் நூலகத்தில்
கண்களே  கருமூலம்.
காதலின் கருவூலம்
ஒருமித்த இதயங்கள்.

நதிமூலம், ரிஷிமூலம்
குருமூலமற்ற மந்திரம்.
போதனைகளற்ற வசீகரம்.
சாதனையூன்றுகோல் காதல்.

கடலளவு உள்ளத்தில்
கையளவு ஆசையேன்!
நேசநறும் தேனருவியை
வாசமாய் ஓடவிடு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-7-2011.

In Anthimaalai web site:-     http://anthimaalai.blogspot.com/2011/08/blog-post_3042.html

 

                

 

 

 

200. தூது. (பா மாலிகை (கதம்பம்)

 

 

தூது.

 

தூய அன்புத் துணையோடு
நேயமாய் இணைக்கும் மாய இணைப்பு.
தூது!…அன்பு தூவுமிணைப்பு.
தூரத்தில் தொலைபேசியாலும் இணைப்பு.

கண்களால், கடிதத்தால், தோழியால்
இன்மொழி, ஓலை, சாடையால்,
பண்களால் அனுப்பும் தூதுகள்.
எண்ணிக்கை இல்லாப் பாதைகள்.

அன்னம் நள மகாராஜனுக்கு!
அழகிய புறாவும் தூதாச்சு!
இன்றைய காதல் இவைகளைமிஞ்சி
இணையத்தைத் தூதாகிறது…விஞ்சி.

கண்ணும் கண்ணும் நோக்காது
மின்னஞ்சலில் விரல் நுனியது
எண்ணங்களுக்கு இணை சேர்க்கிறது
இன்பக் காதலின் இன்றைய தூது.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டெனமார்க்.
16-6- 1999.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலி,  ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

 

                  

 

.

 

 

14. நட்பும் நடிப்பும்.

 

 

நட்பும் நடிப்பும்.

 

மூத்தவர்களை மதிப்பதென்பதும், நல்ல நாட்கள், பெருநாட்களில் வயதுக்கு மூத்தோரிடம் ஆசீர்வாதம் வேண்டுதல் என்பதும், பழைய கலாச்சாரம். புதிய உலகம் வேறு மாதிரியானது.

என்ன கூறுகிறேன் என்று ஆச்சரியப் படுகிறீர்களா!….?…..

அந்த இரண்டு குடும்ப நண்பர்கள் திருமண வெள்ளி விழாக்களுக்கு, சீதா வீட்டிற்கு அழைப்பு வரவில்லை. நகரத்தில் வாழ்க்கை அனுபவமும், வயதிலும்  மூத்த தம்பதிகளே சீதாவும் ராமனும்.  அழைப்பு வராததால் மனது சிறிது கசங்கியது போல உணர்வு கொண்டனர் சீதாவும் ராமனும்.

பின்பு கேள்விப்பட்டனர்…. அவை பிள்ளைகளின் ஏற்பாட்டில் நடந்த ஆச்சரியக் கொண்டாட்டங்கள்  என்று. அதிலும் ஒரு குடும்பத்திலேயே, பிள்ளைகள் குடும்பத்தை அழைத்தும், பெற்றவர் குடும்பத்தை அழைக்காமலும் என்று தவறுகள் நடந்துள்ளது என்றும் அறிந்தனர்.

இதில் ஒரு விழாவிற்கு ஒரு குழுவினரின் வேண்டுகோளின் படி சீதா வாழ்த்துப்பாவும் எழுதிக் கொடுத்துள்ளாள், அது வேறு விடயம்.

இந்த இரண்டு குடும்பத்து இளைய பிள்ளைகளுடன் சீதா மிக அன்பாகப் பழகுவாள். முகநூலில் கூட அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளாள். அப்படி இருந்தும் இப்படி நடந்துள்ளது. இதை சிறிது மனவருத்தத்துடன் சீதா என்னிடம் கூறினாள்.

இப்படி நடந்ததின் தவறு யாருடையது?

பெற்றவரின் கொண்டாட்டத்தை ஆச்சரியமாக நடத்துவது சரி. ஆனால்…… பெற்றவரின் மனதுக்குப் பிடித்த மாதிரித் தானே விழாவை நடத்த வேண்டும்!…….

இங்கு பெற்றவர்கள் தமது உறவுகள், நண்பரது பெறுமதிகளை பிள்ளைகளுடன் நாளாவட்டத்தில் கலந்து பேச வேண்டும். உறவின் பெறுமதி, தராதரம் அனைத்தும் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறப்பட வேண்டும். அப்போது தான் பெற்றோர் பழகும் முறை, உறவின் தரம் என்பவைகளைப் பிள்ளைகள் அறிவார்கள். இப்படிப் பேசாவிடில் பிள்ளைகள் தமது நட்பு வட்டத்தைத் தானே,  தாம் ஒழுங்கு பண்ணும் விழாக்களுக்கு அழைப்பார்கள்!…..

விழாவிற்கு வந்தவர்களை ஒளி நாடாவில் பார்த்த போது, இவ்வளவு தூரம் நாம் முக்கிய மற்றவர்களாகி விட்டோமே என்று சீதா மனம் சிணுங்கிளாள்.

” இதென்னப்பா!.. பெடியள் தங்களோடு ஒத்த  கூட்டத்திற்குத் தானே  அழைப்பு அனுப்புவார்கள்! ” என்று ராமன் சீதா மனசைத் தேற்றினார்.

”எல்லாம் பெற்றவர்கள் தவறு”…… என்றாள் சீதா.
”பெற்றோரைக் குறை கூறாதீர். பிள்ளைகள் செய்வதற்கு பெற்றவர் என்ன செய்வார்?”……  என்றார் ராமன்.

”சரியப்பா இந்தக் கதையை விடுங்கள்”…. என்று கதையின் தலைப்பை மாற்றினோம் நாங்கள். 

இனி இந்த இரண்டு குடும்பத்துப் பிள்ளைகளும் சீதாவைப் பார்த்து ”ஹாய்! அன்ரி!”….. என்பார்கள். எல்லாம் மறந்து சிரித்தபடி ”ஹாய்!…. ” என்று சீதா எப்படிப் பேசுவாள் சொல்லுங்கோ!……

இது ஒரு சிறு சம்பவமானாலும் காத்திரமான தாக்கமுடைய ஒரு சம்பவம். பிள்ளைகள் பெற்றொரின்  உறவின் நெருடல் இங்கு தெளிவாகப்  பிரதிபலிக்கிறது. 

இச் சம்பவம்  மற்றைய பெற்றோருக்கு ஏதாவது கூறினால் அது நன்மையே!

நட்பு நடிப்பா!…. நடிப்பு நட்பா!….

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-7-2011.

In Anthimaalai  web site –   http://anthimaalai.blogspot.com/2011/07/blog-post_9411.html

 

                  

199. காலமயில். (பா மாலிகை (கதம்பம்)

 

 

காலமயில்.

திருப்தி வந்து தொடும் வரை
திருமேனி அமைதியடையாது.
நிறைவு தானே பொன்சங்கிலி
குறை களைந்து வரவேணும்.

குளிக்கையில் கண்ணீர் வடிந்தால்
எளிதல்ல இனம் காணல்.
வழி எதுவென வாழ்க்கையில்
விழிகளுக்குத் தெரிவதில்லை.

ருடங்கள் போனாலே புது
திருப்பமும் தோன்றிடும் – முழு
திருப்தியைக் காண்பதே மனித
விருப்பமும் நிறைவுமாகும்.

குழப்பம், குறுக்கு வழிகள்
தழும்பி, தடக்கி, தள்ளாடும்.
கொழுகொம்பாம் நம்பிக்கையால்
முழு முயற்சி வெற்றி தரும்.

ன்பெனும் முல்லைக்கொடி
அகம்(வீடு) நிறைந்து படர்ந்தால்
உலகம் தன் கையிலெனும்
களிப்பு, நிறைவு உருவாகும்.

காம் பூனையாய் பதுங்கி
சாலம் காட்டி ஏமாற்றினாலும்
மீளொரு காலம் வரும்
நீலமயிலாய்த் தோகை விரிக்கும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-7-2011.

 

                         
 

வேதாவின் மொழிகள். 13.

  

 

முனைப்பு, முயற்சி, ஊக்கம் எனும் மகாசக்திகளுக்கு முன் இலவசம், இரப்பு எனும் வார்த்தைகள் அர்த்தமற்றதாகிறது. கேலிக்குரியதாகிறது. கஷ்டப் படுங்கள் பலன் பெறுங்கள்.

யோதிபர்கள் பேருந்தில் நிற்கிறார்களே என்று கருணை காட்டி இங்கே அமருங்கள் என்று இருக்கையைக்  கொடுத்தால், நன்றியைக் கூறி, கொடுக்கும் இருக்கையை தன்னம்பிக்கையுடன் நிராகரிக்கிறார்களே, அந்த தன்னம்பிக்கை மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் வேண்டும்.

18-8-2004.
ண்ணம்:- 3 கருத்துகள் அடைப்புக் குறியுள்
ழு வண்ணம் (நிறம்) நிறை வானவில் வனப்பு.
எண்ணற்ற வண்ணம்(சிறப்பு) கொள் மனிதம் சிறப்பு.
கவிதையில் வண்ணம் (சந்தப் பாட்டு – பாவின் ஓசை) பெரும் சிறப்பு.
புதிய தலைமுறையினருக்கு மனித வண்ணம் (சாதி) வெறுப்பு.

அந்தி.   2-8-2004.
ந்தியில் சந்தி மதகில் குந்தி வம்பு
சிந்துதல் வாலிப இன்பம்.

ந்தி சந்தியில் செந்தில் குமரனை,
தொந்தி அப்பனை வந்தித்தல் அமைதி.

1-9-2004.
டு, ஓடு, இன்பத்தை நாடு. தமிழோடும் கூடு. இதை நாடுவதால் பீடு இல்லை. இதைச் சூடுவதால் பெறும் பெருமைக்கு உலகில் ஈடு இல்லை.
பகலும் இரவும் உங்கள் குழந்தையுடன் தமிழோடு ஈடுபடுங்கள். என்றுமே நீங்கள் வருத்தப் பட மாட்டீர்கள்.

20-1-2004.
மிஞ்சிய பணத்தால் பலரிங்கு பிறரை
வஞ்சித்து வாழ்வதும் ஒரு வாழ்வா?
கஞ்சி குடித்தாலும் வஞ்சியோடிணைந்து
நீதிக்கு அஞ்சி வாழ்வது சிறப்பு.

ட்டுக்கதையின்றி சிறுகதையாய், பெருங்கதையாய், உன் கதை, சுவாரசியக் கதையாக அமைய நல்ல விதை போடு! நல்ல வினை செய்து சுய வாழ்வை நல்ல கதையாக்கலாம்.

18-1-2004.
ரை கடந்த ஆசையால் மனிதம் கரைந்து போகும் நிலை உருவாகிடாது. ஆசைக்குக் கரை கட்டுதல் உலகக் கடலில் கரையேறும் வழியாகும்.

ருக்கு மட்டையால் கருப்பட்டி வெட்டலாம். கருங்காலியை, கருங்கல்லை வெட்டலாம் என்று கருவம் கொள்ளலாமோ? அறிவான மூளை வாள் போன்றது. ஆனால் கருவியும், கருத்தும், கரத்தோடு கலந்துறவாடினால் கருமம் வெற்றி பெறும் என்பார்கள்.

திரிகோண நண்பர்களின் திரிசமம் திரிபுபட்டது. சந்தேக நீர் பட்டு நட்பு திரிகையிலிட்டதாய் ஆகியது. புரிந்துணர்வு நெய்யிலிடும் நட்புத் திரியே என்றும் சுடர் விடும்.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

up loaded-  8-7-2011.

  

 

                          

 

 

 

 

 

Previous Older Entries Next Newer Entries