22. பா மாலிகை (வாழ்த்துப்பா)

 

திருமண வெள்ளிவிழா வாழ்த்து.

 

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று
(அதிகாரம் 5 குறள் 49.)

கருவிலேயே நீருள் விளையாட்டு
உருவாக்கம் மனிதன் பிறப்போடு.
விளை – என்றால் விருப்பம்.
விரும்பி ஆடுதல் விளையாட்டு.
ஆட்டு என்ற சொல்லுடன்
ஆம் – விகுதி கூட்டிணைப்பு.
ஆட்டம் என்றானது. விளையாட்டானது.
மட்டற்ற சமூகத்தாக்கம் உருவாக்குகிறது.

தொன்மை விளையாட்டொரு கலை.
உடன் பிறக்கிறது உடலாரோக்கியம்,
உன்னத மனநலம், ஒற்றுமையோடு,
பென்னம்பெரு படிப்பினைகள், மகிழ்ச்சி.
பண்பாடு, நாகரீகம், பொழுது போக்க
உதவுகிறது ஓகுஸ் விளையாட்டுக்கழகம்.
களிப்பாக எம்மோடு விளையாடும் (சோடி)
நவநீதராஜா – அருந்ததி தம்பதியர்.

மைதானத்திலவர் திறமையைக் கூட்ட
வீட்டிலும் விடாது பயிற்சியெடுப்பார்.
கற்கும் பேராவலுடைய தம்பதியரின்
அற்புத திருமண வெள்ளிவிழா நாளின்று.
ஓகுசின் கலாச்சார சமூக ஒற்றுமைக்கு
உதவும் விளையாட்டுக் கழகம், தம்பதியர்
நீடூழிவாழ மனமார்ந்து வாழ்த்துகிறோம்.
வாழ்க! இனிதாக! பல்லாண்டு வாழ்க!

 

 வாழ்த்துவோர் – ஓகுஸ், விளையாட்டுக்கழகம்.

5-5-2011. ( poem by Vetha.Elangathilakam)

 

                     
 

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீஸ்கந்தராஜா
  ஆக 01, 2011 @ 17:59:58

  தம்பதிகளுக்கு!!

  இன்றுபோல் என்றென்றும்
  இனிது வாழ வாழ்த்துகிறேன்!

  வாழ்க பல்லாண்டு!

  மறுமொழி

 2. மகேந்திரன்
  ஆக 01, 2011 @ 18:23:51

  அழகிய வாழ்த்துப் பா

  தம்பதிகள் இன்று போல் என்றும் வாழ
  எல்லாம்வல்ல இறைவனை நெஞ்சார இறைஞ்சுகிறேன்.

  மறுமொழி

 3. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஆக 01, 2011 @ 19:56:15

  “வாழ்க பல்லாண்டு…

  மறுமொழி

 4. கவி அழகன் --
  ஆக 02, 2011 @ 02:56:03

  அழகாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 02, 2011 @ 06:46:27

   ம்..ம்…நண்பர்கள் வேண்டுகோளிற்கு செவி சாய்த்து எழுதுவது தான். உங்கள் ரசனைக்கு மகிழ்ச்சி. வாழ்த்திற்கு நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. nathnavel
  ஆக 02, 2011 @ 05:06:47

  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 6. vinothiny pathmanathan
  ஆக 02, 2011 @ 10:25:03

  அழகான வாழ்த்துப்பா . பாராட்டுக்கள் உங்களுக்கு. தம்பதிகளுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .வாழ்க வளமுடன் .

  மறுமொழி

 7. கோவை கவி
  ஆக 14, 2011 @ 17:25:48

  மஞ்சுபாஷிணி சொன்னது:-
  25 வருடங்கள் வாழ்க்கையை அன்புடன் கடந்தது என்பது மிக பெரிய விஷயம்…. சந்தோஷமான விஷயம்….. என்னுடைய அன்பு வாழ்த்துகளையும் தெரிவித்துவிடுங்கள் வேதாம்மா..

  வேதா. எழுதியது:-
  இதோ நீங்கள் கூறியபடி உங்கள் வாழ்த்தை உரிய இடத்தில் சேர்த்துள்ளேன். மிக்க நன்றிம்மா.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: