202. வசீகர இளமை. – பாமாலிகை (கதம்பம்)

(படம்: நன்றி ஆனந்தவிகடன். – எழுத்துலக இராணி சிவசங்கரி பிடிக்கும். அரசியலில் ஆர்வமில்லை. இளமையின் கிடைத்தற்கரிய புகைப்படம் என்பதால் இங்கு பிரசுரிக்கப் பட்டது.)

 

வசீகர இளமை.

 

ளமுடை வயலில் பயிராகும் வல்லமை
வாலிபம் வானத்தை வில்லாய் வளைக்கும்.
வாழ்வில் உயர, தாழ்வில் முன்னேற
நீள்வில்லா இளமை கோலென உதவும்.

யல்பு வாழ்வியல் வழியில் காண்கிறோம்
இளமையில் பேச்செதையும் எடுத்தெறியும் வாலிபம்.
வண்ணமிகு வசீகர இளமை சாதனையை
எண்ணிவிட்டால் திண்ணமாய் விண்தொடும்.

ந்தியில் சந்தி மதகில் வம்பு
சிந்த, குந்துதல் இளமை இன்பம்.
காயப்படும் இளமை மனங்களால் பல
காலித்தன செயற்பாடு வேலிதாண்டும்.

ன்பு ஆதரவு இழந்த இளமை
ஆற்றாமை மேவி, ஆழமாய்ப் புண்பட்டு,
ஆவேசமாவது பெரும் சமூகக் கேடு.
ஆதரவு கொடுத்தல் நல்லோர் கடனே!

பாரிய பொறுப்புடை பூவிரிக்கும் இளமையை
நேரிய நடத்தையால் நிதானமாய்க் காத்திடு!
சீரிய வாழ்வு வீரியமாய்ப் பாய்
விரிக்க மனிதன் சூரியகாந்தியாய் மலரலாம்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2-8-2011.

http://www.tamilauthors.com/03/456.html

 

இதனையொட்டிய இன்னொரு கவிதை இணைப்பு இதோ!…

https://kovaikkavi.wordpress.com/2013/10/03/286-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/

(இன்று 2-8-2011 மாலை 7.00 8.00 மணிக்கு ரி.ஆர்.ரி.தமிழ்ஒலி வானொலிக் கவிதை நேரத்தில் இந்தக் கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                            

 

Advertisements

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari
  ஆக 02, 2011 @ 06:04:58

  இயல்பாய் அருமையாய் மலர்ந்த கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 2. மகேந்திரன்
  ஆக 02, 2011 @ 09:33:45

  உங்கள் கவிநடை அழகு
  நான்கு சீர் நான்கு அடிகளில்
  அழகுப்பாடல்களாக
  வடிக்கிறீர்கள்.
  சிந்தையைக் கவரும் கவிதை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 02, 2011 @ 17:51:22

   அன்பின் சகோதரர் மகேந்திரன்! இக் கவிதை 4 சீருடையது. பாமாலிகை கதம்பம் பகுதி-1ல் 265 கவிதைகள் உள்ளது. பல வகையானது. இப்போது பகுதி -2ல் எழுத ஆரம்பித்துள்ளேன். உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சி, நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. S.Kumar
  ஆக 02, 2011 @ 09:51:39

  உங்கள் கவிநடை அழகு

  மறுமொழி

 4. vinothiny pathmanathan
  ஆக 02, 2011 @ 10:29:43

  இளமை என்றென்றும் இனிமை அல்லவா வேதா அன்ரி.எழுத்தாளர் சிவசங்கரியின் இளமைக்கால புகைப்படம் நன்றாக இருந்தது. எனக்கும் கூடஅவரின் நாவல்கள் மிகவும் பிடிக்கும்.
  நன்றி இணைத்தமைக்கு

  மறுமொழி

 5. கவி அழகன் --
  ஆக 02, 2011 @ 13:14:59

  அருமை

  மறுமொழி

 6. ரிஷபன்
  ஆக 02, 2011 @ 16:01:19

  வசீகர இளமைக்கு வார்த்தைகளால் அலங்கரித்து கூடவே வேலியும் கட்டி கவிதை விருந்து தந்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 02, 2011 @ 16:35:22

   அன்பின் ரிஷபன் உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றியும், மகிழ்ச்சியும்.இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. ramanujam
  ஆக 03, 2011 @ 09:58:36

  அன்பு ஆதரவு இழந்த இளமை
  ஆற்றாமை மேவி, ஆழமாய்ப் புண்பட்டு,
  ஆவேசமாவது பெரும் சமூகக் கேடு.
  ஆதரவு கொடுத்தல் நல்லோர் கடனே

  அருமைய‍ன வரிகள்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 03, 2011 @ 16:43:21

   மிக்க மகிழ்ச்சி ஐயா. உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிகுந்த நன்றி. என்றும் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. best stud finders
  ஆக 03, 2011 @ 19:53:10

  That’s pretty exciting news and I really hope more people get to read this.

  மறுமொழி

 9. sempakam
  ஆக 04, 2011 @ 15:59:03

  கடவுள் என்ற சொல்லை மிக ஆழமாக சிந்திச்சு பதிவு செய்திருக்கிறீங்க…
  எல்லாமே மனம் …..
  ஏதோஒரு சக்தி அதை கடவுள் என்று சொல்கிறோம்…
  பதிவுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 10. sempakam
  ஆக 04, 2011 @ 16:04:30

  இயல்பு வாழ்வியல் வழியில் காண்கிறோம்
  இளமையில் பேச்செதையும் எடுத்தெறியும் வாலிபம்.
  வண்ணமிகு வசீகர இளமை சாதனையை
  எண்ணிவிட்டால் திண்ணமாய் விண்தொடும்./

  நல்ல கவிதை…
  அன்புடன் பாராட்டுக்கள்..

  மன்னிக்க வேண்டும் கொப்பி பண்ணும்போது மாறி வந்துவிட்டது….
  முதல் பினூட்டத்தை அளித்துவிடுங்கள்…பிளீஸ் அக்கா…

  மறுமொழி

 11. kalanenjan shajahan
  ஆக 05, 2011 @ 14:26:36

  கவிதை நன்று.படமும் நன்று

  மறுமொழி

 12. பிரபுவின்
  ஆக 08, 2011 @ 11:28:00

  அற்புதமான பாமாலிகை.

  மறுமொழி

 13. கோவை கவி
  ஆக 08, 2011 @ 11:59:09

  Mikka nanry Pirabu. God bless you.

  மறுமொழி

 14. முத்துலெட்சுமி
  ஆக 08, 2011 @ 17:33:30

  அழகிய கவிதையும் அதற்கேற்ற அழகிய புகைப்படமும் …கவி .:)

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 08, 2011 @ 20:37:56

   மிக்க நன்றி சகோதரி. உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: