23. அறுபதாம் அகவை வாழ்த்து. – பா மாலிகை (வாழ்த்துப்பா, )

(அவர்கள் வாழ்த்துப்பாவை முறைப்படி அழகாக அச்சடித்து செய்தார்கள் . இது நானாக எனது வரிகளுக்காக இங்கு இந்தப் படத்தின் மேல் எழுதியது.)

 

அறுபதாம் அகவை வாழ்த்து.

 

லையான வாழ்வுப் பாதையின்
இலை பழுக்கும் பொற்காலம்.
விலையற்ற வரமிக்க காலம்.
தொலைதூரப் பாதையின் அறுபதாம்
நிலையான அடையாளப் புள்ளி.
கோலாகலமான அறுபதாம் பிறந்த நாள்.

ங்கமணி கணேசமூர்த்தி எம்
தமிழ் விளையாட்டுத் தோழி.
எல்லை விளையாட்டில் இவர்
நல்கும் ஆர்வம் சொல்லும் தரமன்று.
சொல்லிய நேரம் தவறாது, எல்லை
விளையாட்டு மைதானத்திலிருப்பார்.

புங்குடுதீவு தந்த தங்கமணியம்மாவிற்கு
வயதொரு எல்லை இடாது.
வாலிபமாய்த் துள்ளி விளையாடுவார்.
வாடாத இவரின் ஆர்வம்
தேடாது எம்மிடமும் ஒட்டும்.
கிள்ளப் படும் எமது ஆர்வமும்.

விளையாட்டின் இறுதிக் கட்டத்தில்
சுளையாக வெற்றியெட்டும் நேரம்
பிழையாகப் பந்தடித்து, இவர்
வெளியேறும் தருணங்களிலும்
முளைவிடும் பிள்ளைகள் கோபம்.
துளைத்திடும் வார்த்தைத் தொல்லைகள்.

தூக்கியெறிவது போற் கணக்கிலெடுக்காது
துடைத்துவிட்டாற் போல் தொடர்வார்,
தென்பு தருமொரு விளையாட்டுத் தோழி.
இவர் நல்லாரோக்கியமுடன் இன்பமாக
நீடுழி வாழ்ந்து எம்மோடு விளையாடவேண்டும்.
எம் விளையாட்டுக் கழகத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

 

வி ஆக்கம் —–திருமதி வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-1-2011

 

                       
 

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. jaghamani
  ஆக 05, 2011 @ 04:46:22

  இவர் நல்லாரோக்கியமுடன் இன்பமாக
  நீடுழி வாழ்கென வாழ்த்தி வணங்குகிறோம்.

  மறுமொழி

 2. vinothiny pathmanathan
  ஆக 05, 2011 @ 07:28:54

  வாழ்க வளமுடன்

  மறுமொழி

 3. மகேந்திரன்
  ஆக 05, 2011 @ 09:35:24

  அறுபதாண்டுகள் இசைபட வாழ்ந்த நீவீர்
  இன்னும் பல்லாண்டுகள் இனிமையுற வாழ்ந்திட
  இறைவனை இறைஞ்சுகிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 05, 2011 @ 19:29:53

   மிக்க நன்றி மகேந்திரன். உங்கள் இனிய வரவிற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றி. இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 4. nathnavel
  ஆக 05, 2011 @ 14:11:04

  மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. ஸ்ரீராம்
  ஆக 06, 2011 @ 08:33:14

  எங்கள் வாழ்த்துகளும் உரித்தாகுக. வாழ்க வளமுடன்.

  மறுமொழி

 6. kanthsamy
  ஆக 06, 2011 @ 09:06:01

  எனது வாழ்த்துக்களும் …

  மறுமொழி

 7. SUJATHA
  ஆக 06, 2011 @ 10:51:06

  நல்ல ஆரோக்யத்துடன் நீடூழி காலம் வாழ நாமும் வாழ்த்துகின்றோம்,்,,்,,்,,்,

  மறுமொழி

 8. மஞ்சுபாஷிணி
  ஆக 06, 2011 @ 12:55:51

  மிக அருமையான அழகான அன்பு பாக்கள் …

  உங்கள் வலைத்தளம் பார்க்கவே அத்தனை அழகாக இருக்கிறதுப்பா…

  அன்பு வரவேற்புகள் என் தளத்திற்கு வருகை தந்தமைக்கு…

  அன்பு வாழ்த்துகள்பா…

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 07, 2011 @ 09:02:59

   மஞ்சுபாஷிணிம்மா! உங்கள் பேச்சின் பாணியே தனிம்மா. வார்த்தைகளிலேயே பாசம் பசையாக ஒட்டுகிறது. உங்கள் அன்பு வருகைக்கும் கருத்திற்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சியும் நன்றியும். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. malathi
  ஆக 07, 2011 @ 04:01:04

  வாழ்க வளமுடன்

  மறுமொழி

 10. G.M.Balasubramaniam
  ஆக 07, 2011 @ 12:50:39

  உங்கள் தோழியின் பிறந்த நாள் வாழ்த்தில் நானும் உங்களுடன் சேருகிறேன்.God bless you and your friend.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 07, 2011 @ 13:32:35

   நன்றி ஐயா. நமது நகரத்தில் வாழும் தோழி இவர். உங்கள் வாழ்த்து அவருக்கு சேமம் சேர்க்கட்டும். உங்கள் நேசமான வருகைக்கும், வாழ்த்து வரிகளுக்கும் அன்பான நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. பிரபுவின்
  ஆக 08, 2011 @ 11:35:50

  என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். வாழ்க வளமுடன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: