வேதாவின் மொழிகள்.. 15

 

வேதாவின் மொழிகள். 15

வரி.  16-10-2004.

ள்ளங்கை வரியில் சிலர் வாழ்க்கை வரியைக் கூறுகின்றனர். சித்திர வரிகளிலும், அதன் நிறங்களிலும் சிலர் மனவரியைக் கூறுகின்றனர். கண்களால் காதல் வரி கூறாமல் கூறுவர். காதல் வரியை இன்னொருவன் முத்த வரியில் காட்டுவான். கடித வரியில் காட்டுவான் அடுத்தொருவன். கானல் வரி பாடுவான் செம்படவன்.

குத்து அறியும் தன்மை கொண்ட நாம் கோயிலில் அருச்சனைக்கும், பிரசாதம் வாங்கலுக்கும் வரிசை தவறி கும்பலாக இடிபடுவது போலன்றி, வானத்தில் பறவைகள் வரிசையாக அழகாகப் பறக்கின்றன – உயர்திணை, அஃறிணை வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.

ன்னம் (சோறு) இல்லையென்று ஊரில் அழுபவர் ஒரு புறம். அன்னம் (சோறு) உண்ணவே அந்நியப் படுவது புலம் பெயர்வின் மறுபுறம்.  அந்நிய உணவுக் கவர்ச்சி இது.

26-7-2004
குழந்தைகள் மனதில் நன்கு பாய் விரிக்க மெல்லென தமிழைப் பாய்ச்சுங்கள். பசுமரத்தாணியாகப் பாய்ச்சுங்கள்.

ன்றிணைப்பின்   சாரம்  சம்சாரம்.    அன்பின்சாரம்,   அறிவின் ஈரம், அமைதியின் ஆரம்   பூணவேண்டும் சம்சாரம்.

விடாமுயற்சியாளன் நிறைய சாதிப்பான்.சோம்பேறி இதை நினைக்கவே மாட்டான்.
வாலிப வயதினர் தலை காலியாக இருந்தால்   சாத்தான் புகுந்திடுவான். பொறுப்புகள் கடமைகளை அவர்களிடம் ஒப்படையுங்கள்.   காலியாகத் திரியவும் நேரம் அமையாது.

ற்செயல், நற்பண்பால் சமூகத்தில் நமது நிலைப்பாட்டை ஒரு நல்ல நிலையில் நிலை நிறுத்த முடியும். நிலை குலைந்த வாழ்வு நமது நற்பெயரை   நிலை  நாட்ட   மாட்டாது.

புகைத்தலால் ஈரல் குலை கருகுதலும், உடல் சுகாதாரம் குலைதலும் நிதர்சனமாகியும், பலர் தமது உயிருக்கு வாழ்ந்தபடி, தாமே கொள்ளி வைப்பது தான் வியப்பிலும் வியப்பு!

ஆதவன்.(சூரியன்)    2-5-2006.

தவனின் கடமையுணர்வு, விடாமுயற்சி ஒரு
மாதவத்திலும் நற்பயன் தரும்

நோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு
ஆதவனாய்ப் பயன் தரும்.

பிரதிபலன்  கருதாத கொடையாளி ஆதவன்.
பிரதியுபகாரம் வேண்டுபவன் மனிதன்.

றைந்தாலும் பேசப்படுவாய் ஆதவனாய்..நீ
நிறைந்த அன்பைக் கொடு.

றிக்கும் நாற்பது பாகை ஆதவமும்
தெறிக்கும் நாற்றமுடைய வார்த்தையும் சமம்.

ல்லவை ஆதவன் பொற்கதிராகும் அல்லாதவை
கதிர் மறைக்கும் கருமேகம்.

18-2-2006.
பிள்ளைகளை அடித்து ஏசி வளர்த்தது அன்று. பிழைகளை எடுத்துக் கூறி, பயனை விளக்குவது இன்று.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-8-2011.

 

                           

 

36 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  ஆக 10, 2011 @ 05:44:47

  ஒவ்வொரு சிந்தனையும் என்னை
  சிந்தை கவரச் செய்தது சகோதரி..

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 10, 2011 @ 06:07:01

   மிக்க மகிழ்ச்சி மகேந்திரன் உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக மகிழ்வும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. Rajarajeswari
  ஆக 10, 2011 @ 07:00:06

  வானத்தில் பறவைகள் வரிசையாக அழகாகப் பறக்கின்றன – உயர்திணை, அஃறிணை வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.//

  அழ்கான சிந்தனைத் துளிகளுக்கு பாராட்டுக்கள்.

  மறுமொழி

 3. unmaivrumbi
  ஆக 10, 2011 @ 07:27:34

  அழகான வரிகள்!பாராட்டுக்கள் சகோதரி!
  unmaivrumbi.
  Mumbai

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 10, 2011 @ 07:35:39

   பௌர்ணமி போல வரும் அன்புச் சகோதரா! உங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. nathnavel
  ஆக 10, 2011 @ 07:31:52

  அருமையான சிந்தனைகள்.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 10, 2011 @ 07:37:32

   மிக்க மகிழ்ச்சி ஐயா! உங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  ஆக 10, 2011 @ 15:47:28

  “ஓன்றிணைப்பின்சாரம் சம்சாரம். அன்பின்சாரம், அறிவின் ஈரம், அமைதியின் ஆரம் பூணவேண்டும் சம்சாரம்”

  அற்புதம்!!! அழகு!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 10, 2011 @ 16:27:46

   வசனத்தில் இவைகள் அழகு. வாழ்க்கையெனும் போது தானே இடிபாடு ஏற்படுகிறது. ஆயினும் உங்கள் கருத்து, வரவிற்கு மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. vinothiny pathmanathan
  ஆக 10, 2011 @ 16:14:17

  சிந்தனைச் சாரலில் ஒவ்வொரு விடயமும் அருமை .
  குழந்தைகளுக்கு மெல்லென தமிழை பசுமரத்தாணி போல
  பாய்ச்ச வேண்டும் . நன்றாக சொன்னீர்கள். இதை ஒவ்வொரு பெற்றோரும்
  உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதே என் எண்ணமும் .நன்றி சிந்தனைச்சாரலுக்கு

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 10, 2011 @ 20:06:22

   மிக்க நன்றி விநோ! உங்கள் ரசனைக்கு. உங்கள் விஐயத்திற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சியும் நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. rajesh
  ஆக 10, 2011 @ 17:07:14

  சிந்தனைச்சாரல் சிந்திக்க வைத்தது. மனதை கவர்ந்த வரிகள்… வாழ்த்துக்கள் சகோதரி

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 10, 2011 @ 20:12:01

   மிக்க நன்றி மாய உலகம் ராஜேஸ். உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஆண்டவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 8. பொன்-சிவகௌரி
  ஆக 10, 2011 @ 21:28:33

  அன்னம் இல்லையென்று ஊரில் அழுபவர் ஒரு புறம்.
  அன்னம் உண்ணவே அந்நியப் படுவது புலம் பெயர்வின் மறுபுறம்.

  பிள்ளைகளை அடித்து ஏசி வளர்த்தது அன்று.
  பிழைகளை எடுத்துக் கூறி, பயனை விளக்குவது இன்று.

  யதார்த்தத்தை அழகாக கூறிஇருப்பது சிந்திக்க வைக்கிறது.
  மிகவும் பிடித்த சிந்தனைகள்.. அருமை!
  வாழ்த்துக்கள்!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 11, 2011 @ 06:46:41

   உண்மை தானே இங்குள்ள பிள்ளைகளுக்கு (பலருக்கு) சோறு என்றாலே பிடிக்காது. பிள்ளைகளை அடித்து ஏசி என்பது போல கணவன் மனைவி பிரச்சனைகளும் இங்கு விசுவரூபமானதே. சகோதரி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. cpsenthilkumar
  ஆக 11, 2011 @ 04:04:51

  படித்ததில் பிடித்தது

  பிள்ளைகளை அடித்து ஏசி வளர்த்தது அன்று. பிழைகளை எடுத்துக் கூறி, பயனை விளக்குவது இன்று.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 11, 2011 @ 06:49:02

   அன்பின் சகோதரா! செந்தில் குமார்! உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும், மிக மகிழ்ச்சியும் நன்றியும் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. malathi
  ஆக 11, 2011 @ 08:31:16

  அக்கா உங்களின் சிந்தனைகளை நகல் எடுக்க இயலவில்லை எழுதிக்கொண்டேன் பாராட்டுகள் சிந்திப்போம் ……….

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 11, 2011 @ 15:34:25

   சகோதரி மாலதி! எனக்கு இந்த தொழில் நுட்பங்கள் அவ்வளவாகப் புரியாது. ஏன் நகல் எடுக்க முடியவில்லை யென்று தெரியாதம்மா. உமது அன்பான வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மிக மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. polurdhayanithi
  ஆக 11, 2011 @ 08:33:11

  உங்களின் சிந்தனைகள் எல்லாமே சிறப்பானவைகள் பின் பற்றக் கூடியன. உள் – உள்ளத்தில் இருந்து தோற்றம் கொண்டவைகளாகும்
  இந்த குமுகம் பின் பற்றட்டும் பயன் பெறட்டும் தொடர்க….

  ……

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 11, 2011 @ 15:37:35

   மிக்க நன்றி ஐயா. உங்கள் வருகையாலும், கருத்திடலாலும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 12. sempakam
  ஆக 11, 2011 @ 08:34:00

  நல்ல நல்ல சிந்திக்கச்செய்யும் சிந்தனைகள்…
  அருமையான படைப்பு அக்கா…
  அன்புடன் பாராட்டுக்க்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 11, 2011 @ 15:40:56

   அன்பின் சகோதரா! செம்பகம்! எல்லாமே சொந்தச் சிந்தனைகளானதால் மிக எளிமையாகவும் ஏற்கக் கூடியதாகவும் இருக்கலாம். உமது வருகைக்கும், கருத்திற்கும் மிக மகிழ்வடைந்தேன். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. மஞ்சுபாஷிணி
  ஆக 11, 2011 @ 18:26:59

  சிந்திக்க வைக்கிறது வேதாம்மா வரிகள் ஒவ்வொன்றும் வைரமாய் மின்னுகிறது…. உலகில் கண்ட அத்தனை நல்லவை தீயவை அழகாக பிரித்து எழுதி இப்படி இருப்பதால் என்ன பயன் இப்படி கெட்டழிந்து போவது ஏன் என்று மனம் நொந்து சில வரிகள்…..

  ஒரு முறை படித்தேன்,, அட என்று இன்னுமொரு முறை படித்தேன்… அட உடனே எழுதனுமே என் எண்ண துளிகளை அப்டின்னு தேடுகிறேன்…மறுமொழி இடும் இடம் வந்ததும் தாயை கண்ட குழந்தை போல் ஓடி வருகிறேன்… எல்லா வரிகளுமே முத்து பத்திரமாய் படித்து அதோடு விடாமல் சொத்து போல் சேர்த்து வைத்துக்கொண்டால் நம் வாழ்க்கைக்கு அது பொக்கிஷமாய் திகழும் என்பதில் சந்தேகமே இல்லை… சிகரெட் பிடிப்பதால் எப்படி மரணம் நிகழ்கிறது என்று வேதனை வரிகள்…..

  சிந்தனைகளின் துளிகள் இல்லை இது சிந்தனைகளின் அருவி வேதாம்ம்மா இது…..

  நானும் சேமித்து வைத்துக்கொண்டேன்… நற்பண்புகளை கற்று அதன்படி வாழ என்னையும் பக்குவப்படுத்திக்கொள்கிறேன்… நல்லவை எல்லாம் எனக்கே என்று எடுத்துக்கொள்கிறேன் வேதாம்மா…

  நீங்கள் என் தளத்தில் வந்து படித்து கருத்திட்டதை படித்தப்ப மனம் சந்தோஷத்தில் நன்றி கூற துடித்தது வேதாம்மா… எனக்கு போட்ட கருத்தை நான் பார்ப்பேனோ இல்லையோன்னு ஓடி வந்து எனக்கு மின்னஞ்சலிலும் அனுப்பிய அன்பை எப்படி சொல்வேன்… தங்கமாய் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மிகவும் உயர்வு வேதாம்மா….இனி கதைகளை பழையபடி பாசிட்டிவ் அப்ரோச்சுடன் எழுத முயற்சிக்கிறேன் வேதாம்மா, தமிழ் இலக்கணத்தில் நான் பூஜ்யம்… தெரிந்தவற்றை வைத்து என்னவோ கிறுக்கலுடன் படைக்கும் எனக்கு உங்கள் ஊக்கம் இன்னும் சிறப்பாக தரவேண்டுமே என்ற பதைப்பு ஏற்படுகிறது வேதாம்மா…

  உங்கள் ஆசி என்றும் வேண்டிடும் உங்கள் அன்புக்குழந்தை மஞ்சு….

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 11, 2011 @ 20:53:10

   அன்பின் மஞ்சும்மா…இது எனது 15வது சிந்தனைச் சாரல். என் சொந்த எண்ணங்களையே இங்கு எழுதுகிறேன். இனி உங்கள் கதையை எடுத்தால்…யாருக்குத்தான் வாழ்வில் துன்பம் இல்லை? துன்பம் என்று அழுவதால் அது தீரப் போவதில்லையே! அதனால் இதை வெல்லும் வழிமுறையை நாம் நோக்கினால் அதை வெல்லலாம். அந்த நோக்கிலேயே அங்கு கருத்திட்டேன். அழுது வடிவது எனக்குப் பிடிக்காது. நானும் லேசில் அழமாட்டேன். தமிழ் இலக்கணத்தில் நானும் பூஜ்யம் தான். சகோதரி எனக்குப் பொய்யாக ஆகா, ஓகோ என்று புகழ வராது. உள்ளதை உள்ளபடி எழுதுவேன். மிச்சப் பேருக்கு பிடிக்காது அப்படி எழுதுவது. மிக்க நன்றி உங்கள் அன்பிற்கும் கருத்திற்கும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும். தொடருவோம். உங்கள் அன்பிற்கு நன்றி.

   மறுமொழி

 14. Natarajan
  ஆக 14, 2011 @ 12:36:02

  //வானத்தில் பறவைகள் வரிசையாக அழகாகப் பறக்கின்றன – உயர்திணை, அஃறிணை வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.//

  //நோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு
  ஆதவனாய்ப் பயன் தரும்.//

  சிந்தனைச் சாரலில் தமிழ்த் தென்றல் விசிறிகொண்டு வீசிவிடுகிறது..
  அம்மாவின் அறிவுரை போல இயற்கையாகவும் யதார்த்தமாகவும்..
  தொடரட்டும் உங்கள் சொற்காலம் சகோதரி!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 14, 2011 @ 18:19:25

   நடராஐன் உங்கள்கருத்து விசிறல் என்னை மகிழ்வடையச் செய்கிறது. உங்கள் வாழ்த்திற்க்கு மிகுந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்

   மறுமொழி

 15. மஞ்சுபாஷிணி
  ஆக 14, 2011 @ 13:54:20

  அன்பின் வேதாம்மா,

  நீங்க சொன்னது அட்சரம் பிசகாமல் அத்தனையும் கரெக்ட்…. பொசுக்குன்னா அழுதுருவேன் நான்….. உங்களுடைய ஆத்மபலம் எனக்கும் கிடைக்கட்டும்…

  என்றென்றும் உங்கள் அன்பினை நாடி

  அன்பு மஞ்சு….

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 14, 2011 @ 17:53:28

   சேச்சே…அப்படியெல்லாம் பொசுக்கென்று அழவே கூடாது மன தைரியமாக இருக்கோணும். நல்ல சிந்தனை வரிகளை வாசியுங்கள். நல்ல புத்தகங்கள் மன பலம் தரும் உங்கள் வரிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள் மஞ்சும்மா. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 16. பிரபுவின்
  ஆக 15, 2011 @ 04:19:34

  “அன்னம் (சோறு) இல்லையென்று ஊரில் அழுபவர் ஒரு புறம். அன்னம் (சோறு) உண்ணவே அந்நியப் படுவது புலம் பெயர்வின் மறுபுறம்.அந்நிய உணவுக் கவர்ச்சி இது.”

  என்ன சொல்லுறது என்றே தெரியவில்லை.சிரிப்பதா அழுவதா என்றும் தெரியவில்லை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 15, 2011 @ 09:18:25

   உண்மை தான். பிள்னைகளுக்கு இடித்துத் தீத்துவோர் ஒரு புறம், பிற உணவை விரும்புவோர் பலர். இது நாம் அன்றாடம் கேட்கும் சர்வ சாதாரண பிரச்சனை இங்கு. உதாரணமாக அங்கிருந்து இங்கு வந்து வாழ விரும்புவோரும், இங்குள்ளோர் அங்கு போய் வாழ விரும்புவது போலவும் எனக் கொள்ளலாம். பிரபு! இதுவும் தீராத பிரச்சனை தான். இங்கு வநது கருத்திட்டமைக்கு மிக்க நன்றி பிரபு. தெய்வத்தின் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 17. gunathamizh
  ஆக 15, 2011 @ 15:26:40

  அழாகச் சொல்லியிருக்கீங்க..

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 15, 2011 @ 17:19:31

   வணக்கம் முனைவர் இரா.குணசீலன் அவர்களே! அளவற்ற மகிழ்ச்சி.உங்கள் வரவிற்கும், வரிகளுக்கும் மிகுந்த நன்றி. ஆண்டவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 18. gunathamizh
  ஆக 15, 2011 @ 15:27:54

  நோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு
  ஆதவனாய்ப் பயன் தரும்.

  உண்மை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 15, 2011 @ 17:25:35

   சிந்தனைச் சாரலில் உங்கள் கருத்துச் சாரல் இணைந்தமையையிட்டு மிக்க மகிழ்ச்சி. அத்துடன் மனமகிழ்வான நன்றியையும் கூறுகிறேன். ஆண்டவனின் ஆசீர்வாதம் கிட்டட்டும்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: