வாழ்வியற் குறள்+தாழிசை. 11 (குழந்தைச் செல்வம்)

Art byVetha.

வாழ்வியற் குறட்டாழிசை. 11

குழந்தைச் செல்வம்.

 

குழந்தைச் செல்வத்தை மக்கள் இளமைக்
காலத்தில் பெறுதல் ஆரோக்கியம்.

குறையற்ற குழந்தைச் செல்வத்தை எமது
குறையற்ற உடல் உற்பத்தியாக்குகிறது.

குழந்தையைப் பெற்றால் மட்டும் போதாது
குறைவறப் பராமரித்தல் அவசியம்.

உலகிலேயே இனிய இசை  தம்
மக்கள் மழலைச் சொற்களே.

உலகத்துத் துன்பங்களை  ஒரு மழலை
உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்.

சின்னக் கைகளின், கால்களின் அபிநயத்திற்கு
என்ன விலையும் கொடுக்கலாம்.

நல்ல பிள்ளைகள் பெற்றவருக்கும், பெற்றவர்
நல்லவரானால் பிள்ளைகளுக்கும் பொக்கிஷமே.

உலகிலேயே பெரிய துன்பம் பிள்ளைகள்
உருப்படாது உருவாகுதல் என்பது.

குழந்தைச் செல்வம் நவீன உலகில்
குழப்பமுடைய  செல்வமாம் சிலருக்கு.

குற்றமற்ற பளிங்கு மனதால் தெய்வத்திற்கு
குழந்தையை சமன் படுத்துகிறோம்.

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-8-2011.

In Anthimaalai web site:-      http://anthimaalai.blogspot.com/2011/09/11.html

  

 

                                  

 
 

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. nathnavel
  ஆக 13, 2011 @ 09:19:22

  அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 2. cpsenthilkumar
  ஆக 13, 2011 @ 09:51:32

  வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 13, 2011 @ 10:27:38

   மிக்க நன்றி சகோதரா! உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மகிழ்ச்சியைக் கூறுகிறேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. கவி அழகன் --
  ஆக 13, 2011 @ 12:54:18

  அற்புதமான குறள்கள்
  வாழ்க்கைக்கு தேவையான குறள்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 14, 2011 @ 09:59:50

   மிக்க நன்றி கவி அழகன்! உமது அன்பான வருகையாலும் கருத்தாலும் மகிழ்வடைந்தேன். இறைவனின் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 4. மகேந்திரன்
  ஆக 13, 2011 @ 19:23:37

  ஒன்றேமுக்கால் அடியில் உலகளந்த
  திருக்குறளின் சாரம் ..
  மிக அருமை சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 14, 2011 @ 10:03:01

   ஆம் மகேந்திரன். உமது அன்பான கருத்திற்கும், வருகைக்கும் மிக மகிழ்ச்சியுடன் நன்றி கூறுகிறேன். ஆண்டவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 5. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஆக 14, 2011 @ 00:21:11

  உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை
  உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்.:-)

  மறுமொழி

 6. vinothiny pathmanathan
  ஆக 14, 2011 @ 08:36:05

  எந்த ஒரு துன்பமும் மழலைகளின் சிரிப்பையும் பேச்சையும் கேட்டாலே பறந்தோடி விடும் . வாழ்வியல் குறள் மிகவும் சிறப்பு. பாராட்டுக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 14, 2011 @ 10:12:56

   மகிழ்ச்சி சகோதரி. நேற்று நாம் வந்து 25 வருட நிறைவுக் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்டோம். ஒரு அழகான குழந்தை அங்கு எல்வோரையும் கவர்ந்து கொண்டது நானும் குழந்தையை படம் எடுத்தேன். மிக மகிழ்வாக இருந்தது. வலைக்கு வந்து கருத்திட்டமைக்கு மிக மகிழ்ச்சியும் நன்றியும். தெய்வத்தின் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 7. மஞ்சுபாஷிணி
  ஆக 14, 2011 @ 13:58:05

  குழந்தைகள் தெய்வத்தை போன்றவர்கள்….

  நல்லதை சொல்லிக்கொடுத்து, அன்பாய் பண்பாய் வளர்த்து, எதிர்காலம் பொலிவுறும்படி நல்லவையே செயலாக்க வைத்து, வெற்றிகளைத் தேடி அவர்களே செல்லவைக்க மிக அருமையான இரண்டே வரிகளில் அசத்தல் கருத்துகள் வேதாம்மா….

  ரசிக்க வைத்தன உங்கள் வரிகளும் பிள்ளைகளின் படமும்….

  25 வருடங்கள் வாழ்க்கையை அன்புடன் கடந்தது என்பது மிக பெரிய விஷயம்…. சந்தோஷமான விஷயம்….. என்னுடைய அன்பு வாழ்த்துகளையும் தெரிவித்துவிடுங்கள் வேதாம்மா..

  அழகிய வரிகளுக்கு அன்பு வாழ்த்துகளும் நன்றிகளும் வேதாம்மா….

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 14, 2011 @ 20:30:06

   மஞ்சும்மா! உங்கள் விருப்பப்படி 25 வருட வாழ்த்தை அவர்கள் பக்கத்தில் ஒட்டியுள்ளேன். இங்கு உங்கள் வாழ்த்திற்கும், வருகைக்கும் மிக மகிழ்வும், நன்றியும் உரித்தாகுக. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. பிரபுவின்
  ஆக 15, 2011 @ 04:17:30

  “உலகிலேயே இனிய இசை தம்
  மக்கள் மழலைச் சொற்களே.”

  நிஜமான உண்மை சகோதரி.

  மறுமொழி

 9. kathirmuruga
  ஆக 15, 2011 @ 10:03:49

  குழந்தைகள் மற்றும் பெற்றோரியல் பற்றி நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 15, 2011 @ 11:06:53

   மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் வருகையால். மனமார்ந்த நன்றி உங்கள் அன்பான வரிகளுக்கு. இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 10. ரமேஷ்
  ஆக 15, 2011 @ 19:00:34

  அருமையான குறள்கள்

  குழந்தை பற்றிய அனைத்து விசயமும் உள்ளது

  ஆமாம் சகோதரி

  குழந்தை சிலருக்கு கிடைப்பதில்லை

  கிடைத்த சிலர் சரியாக வளர்ப்பதில்லை

  கிடைத்து மற்றவர் போற்றும் படி

  வளர்த்தால் அவர் உயர்ந்தவர்

  பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 15, 2011 @ 19:31:01

   அன்பின் ரமேஷ்! மிக்க மகிழ்வடைந்தேன் உங்கள் வருகையால். இந்த ஆதரவுக்குத் தானே இத்தனை பாடுகளும். உமது வரிகளுக்கு மனமார்ந்த நன்றி. ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: