203. மை….மை…..வறுமை (பாமாலிகை (கதம்பம்)

மை….மை…..வறுமை

ல்லாமை தரும் நிலைமை
வறுமை! பெரும் கொடுமை!
வெறுமை! இதிலில்லை பெருமை!
உண்மை உழைப்பு வறுமை
வராமை காக்கும்! முயலாமை
இயலாமை இணைதலே வறுமை.

னிமை ஒரு வகை வறுமை.
இனிமை வார்த்தை பேசாமை,
அன்பின்மை வேண்டாத வறுமை.
அறியாமை, அறிய மனமில்லாமை,
ஈயாமை, ஆதரவு இல்லாமை,
உண்மை பேசாமையும் வறுமை.

மை போன்றிவை கருமைத்
தன்மை கொண்டு மேன்மை,
பெருமை அழிக்கும் உண்மை.
செழுமை அழிக்குமிச் சிறுமை
வராமை காத்தல் வலிமை.
வறுமை தடுத்தல் மேன்மை.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-8-2011.

another poem:-   

வறுமை

1.
பணம் இல்லாமை மட்டுமல்ல வறுமை
குணம் நற்பழக்கம் இல்லாமையும் வறுமை.
உணவு, உடை, இடமின்மை வறுமை.
டேன்மார்க்கில் வறுமை ஒழிப்பு உண்டு.
2.
இந்தத் திட்டம் இந்தியாவின் வறுமை
ஓழிப்பிற்குப் பயனாக்கி அங்கு வறுமை
இல்லாது ஒழிக்க வேண்டும். வறுமை
பல குற்றங்களுயர்த்திடுமொரு கொடுமை வறுமை.
3.
வறுமையாம் இல்லாமை, ஏழ்மை கொடுமை
ஆதிகாலம் தொட்டு வறுமை துன்பமே.
இருப்போர் ஈந்தால் வறுமை அழியும்.
தீயின் நாக்கிற்கு இல்லை வறுமை.
4.
மனித நாவிற்கும் வறுமை இல்லையாம்.
பெண்மை காத்திட உலகிற்கு வறுமை.
தன்னம்பிக்கை இல்லாதவன் நிலையும் வறுமை.
சொற்களால் கூறவியலா உணர்வு வறுமை.
5.
ஐப்பசி பதினேழு வறுமையொழிப்பு நாள்.
” கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை”
ஒளவையார் சொன்னார் அறிவு வறுமைக்கு.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 19-8-16

Samme heading another poem  :—- https://kovaikkavi.wordpress.com/2010/09/18/80-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/

In Tamil authors.com- This poem :-  http://www.tamilauthors.com/03/444.html

  

                            

35 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவி அழகன் --
  ஆக 16, 2011 @ 07:41:43

  வறுமை பற்றிய வறுமையில்லா கவிதை
  வாசிக்க பெருமை

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 16, 2011 @ 12:57:36

   வறுமை பற்றிய கவிதைக்கு பொறுமையாகக் கருத்துத் தந்த கவியழகன் வருகைக்கும் மகிழ்ச்சியும் நன்றியும். தெய்வத்தின் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 2. unmaivrumbi
  ஆக 16, 2011 @ 09:05:17

  தங்களின் மையிட்ட கவிதை வரிகள் மிகவும் அருமை சகோதரி!

  உண்மைவிரும்பி.
  மும்பை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 16, 2011 @ 12:59:43

   உண்மை விரும்பி பொய்மை இன்றித் தந்த கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. ஜெய்லானி
  ஆக 16, 2011 @ 09:31:01

  அருமை யான கவிதை 🙂

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 16, 2011 @ 13:15:42

   மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் யெய்லானி உமது அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. Gandhi
  ஆக 16, 2011 @ 11:23:56

  வறுமையின் வரிகள் அருமை……

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 16, 2011 @ 13:29:01

   அன்பின் சகோதரா காந்தி! என் வலைக்கு வருகை தந்து கருத்திட்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. மகேந்திரன்
  ஆக 16, 2011 @ 11:24:28

  மை…..மை….அருமை…

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 16, 2011 @ 13:32:01

   அன்பின் சகோதரா மகேந்திரன் ! உமது அன்பான வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். . ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. nathnavel
  ஆக 16, 2011 @ 14:36:30

  அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 16, 2011 @ 17:30:40

   நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா! உங்கள் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. கோவை கவி
  ஆக 16, 2011 @ 19:01:06

  Sujatha Anton and Vijayakumar Kumar like this..

  Sujatha Anton wrote:-
  ‎”வறுமை” அழகாக கவியில் உரைக்கப்பட்டுள்ளது. ”தனிமையும் ஓரு வறுமை’ ‘அன்பின்னாமை வேண்டாத வறுமை’ உண்மை என்னவாக சிந்தனை வடிவமைந்துள்ளது. வாழ்த்துக்கள் ”வேதா”

  Vetha wrote:- Thank you very much Sujatha. God bless you.

  மறுமொழி

 8. ramani
  ஆக 16, 2011 @ 21:22:42

  மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 17, 2011 @ 06:06:37

   மிக்க மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும். தொடரட்டும் இதுவென இறையருளட்டும். இறை ஆசி உங்களுக்கும் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. தமிழ்த்தோட்டம்
  ஆக 17, 2011 @ 12:36:10

  அருமை கலக்குறீங்க

  மறுமொழி

 10. cpsenthilkumar
  ஆக 17, 2011 @ 14:56:06

  how many mai? my friend!!!!!!!!!!!!!!!

  மறுமொழி

 11. கோவை கவி
  ஆக 17, 2011 @ 17:27:03

  OH!…Yes!…..There are so many mai’s.. I wrote few of them…Thank you so much friend!.. and glad. Come again.!..always well come.!.. God bless you.

  மறுமொழி

 12. கலாம் காதிர்
  ஆக 17, 2011 @ 20:44:14

  உன்”மை” கலந்திங்கு உண்மை வெளியிட்டத்
  தன்மைதான் நீடிக்கும் தழைத்து

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 18, 2011 @ 06:21:36

   பெரு-மையின்றி கரு மையால்
   கருத்திட்ட தன்மைக்கு
   வலைக்கு வருகைக்கு மிக்க நன்றி.
   மிக்க மகிழ்ந்தேன்.
   இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 13. vinothiny pathmanathan
  ஆக 18, 2011 @ 16:14:03

  nice poem

  மறுமொழி

 14. cpsenthilkumar
  ஆக 19, 2011 @ 03:45:55

  பேனா மை கொண்டு நீங்கள் தீட்டிய பல மை அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 19, 2011 @ 15:29:42

   மறுபடியும் மிக்க நன்றி சகோதரா! உங்களது ஊக்கம் எங்கள் ஆக்கத்திற்கு வெகு ஊக்கம் தருகிறது. அங்கீகாரம், ஏற்றுக் கொள்ளல் தானே எழுத்தாளனை எழுப்புவது, நீங்கள் அறியாதது அல்ல. நன்றி…நன்றி… ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 15. rajesh
  ஆக 19, 2011 @ 09:56:07

  வறுமை மிக மிக அருமை கவிதையில்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 19, 2011 @ 15:25:39

   அன்பின் மாய உலகம் ராஜேஸ்! ” வறுமை மிக மிக அருமை!”- என்றால் பிழைத்து விடும். மிகப் புத்திசாலித்தனமாக – கவிதையில் – என்பதை மிக யோசனையோடு இணைத்துள்ளீர்! you are great! வரவிற்கும், வரிக்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 16. மஞ்சுபாஷிணி
  ஆக 20, 2011 @ 12:05:15

  நேர்மை மையில் தோய்த்த இனிமை வரிகள் வறுமையிலும்செம்மை, இனிமையான சொற்கள் அழகிய வடித்த பாக்கள், சிறப்பான கவிதை வரிகள் வேதாம்மா அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 20, 2011 @ 12:26:17

   இனிமை உங்கள் வருகை!
   நிறைவைத் தந்தது உங்கள் வரிகள்.
   மகிழ்ச்சியுடன் மிகுந்த நன்றிகள்.
   மஞ்சும்மா இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 17. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஆக 20, 2011 @ 22:18:29

  இல்லாமை தரும் நிலைமை
  வறுமை! பெரும் கொடுமை!
  வெறுமை! இதிலில்லை பெருமை!
  உண்மை உழைப்பு வறுமை
  வராமை காக்கும்! முயலாமை
  இயலாமை இணைதலே வறுமை.

  வறுமையின்..அருமையான கவிதை.. :))

  மறுமொழி

 18. பிரபுவின்
  ஆக 21, 2011 @ 12:48:54

  வறுமை பற்றிய சிறப்பான கவிதை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 21, 2011 @ 14:09:24

   அன்பின் பிரபு!! மிக்க மகிழ்ச்சி உமது அன்பான வரவிற்கும், கருத்திற்கும். மிகுந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 19. jaghamani
  ஆக 21, 2011 @ 17:49:30

  வராமை காத்தல் வலிமை.
  வறுமை தடுத்தல் மேன்மை.//

  அருமை கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 21, 2011 @ 19:12:13

   அன்பின் சகோதரி இராஐராஜேஸ்வரி! உங்கள் இனிய வருகைக்கும் வரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும் உரித்தாகட்டும். தெய்வத்தின் துணையும், அருளும் கிட்டட்டும்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: