26. பைங்கொடியே உன் சுவாசத்தோடு…(.பா மாலிகை (காதல்

 

பைங்கொடியே உன் சுவாசத்தோடு….

 

மைகொண்ட விழி மலர
மையல் கொண்ட மனமசைய
தையலே! உன் மொழியாலே
தைரியமே தினம் கைகாரியே!

ண்ணேந்தும் துயில் மறந்து
கருத்தேந்தி நிதம் நினைந்து
காதற் சாரல் தூவிடுதே!
காவிரியாகி மோதிடுதே!

வாலிபக் காதல் வசீகரத்தாலே
வயதில் வாசனை வீசுதே!
வாலாயமாகி விழுந்ததினாலே
காதல் போர்க்களமாகிறதே!

ளமை விருந்தால் வென்றிட
இதயம் தேடிப் போராடுதே.
இனியெதற்குப் போர்க்களம்!
இதய நிழலில் இளைப்பாறுவோம்!

பைந்தொடியே! உன் சுவாசத்தோடு
கையேந்தி நடை பயில்வோம்!
கைரேகை அழியும் வரை
வையகத்திலாடுவோம் பைங்கிளியே!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-8-2011

 

                           
 

37 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஜெய்லானி
  ஆக 20, 2011 @ 05:48:16

  //வாலிபக் காதல் வசீகரத்தாலே
  வயதில் வாசனை வீசுதே!/

  சூப்பர் வரிகள் :-))

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 20, 2011 @ 06:41:35

   ஹலோ! முதல் கருத்தாளரே! நல் வரவு! மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மிக்க மிக்க நன்றி!. உங்களுக்கு இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. மகேந்திரன்
  ஆக 20, 2011 @ 06:08:32

  ///இளமை விருந்தால் வென்றிட
  இதயம் தேடிப் போராடுதே.
  இனியெதற்குப் போர்க்களம்!
  இதய நிழலில் இளைப்பாறுவோம்!///

  அருமையான கவிதை சகோதரி,
  இதய நிழலில் இளைப்பாறும் இனிய
  காதல் உணர்ச்சிக் கவிதை.
  உணர்வுள்ளதாக…..

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 20, 2011 @ 06:47:15

   சகோதரா! மகேந்திரா! மகிழ்ச்சி!..மகிழ்ச்சி! வரிகள் உம்மைக் கவர்ந்தது மகிழ்ச்சி! பார்த்துப் பார்த்து, திருத்தித் திருத்தி எழுதும் பயன்..இது. ஆண்டவனுக்கு நன்றி. உமக்கும் மனமார்ந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. unmaivrumbi
  ஆக 20, 2011 @ 07:18:25

  கையேந்தி நடை பயில்வோம்!
  கைரேகை அழியும் வரை
  அருமயான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி !

  உண்மைவிரும்பி,
  மும்பை.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஆக 20, 2011 @ 09:39:52

   ரசித்தீங்களா!..நல்லது… உண்மை விரும்பி!. உங்கள் வரவினால்…..அன்பு வசனங்களால்..மிக்க மகிழ்ச்சி .கைமாறு செய்ய இயலாத நன்றிகள்…நன்றிகள். தெய்வத்தின் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  ஆக 20, 2011 @ 07:27:53

  “கண்ணேந்தும் துயில் மறந்து
  கருத்தேந்தி நிதம் நினைந்து
  காதற் சாரல் தூவிடுதே!
  காவிரியாகி மோதிடுதே!”

  அற்புதம்!!! அழகான சொல் ஆட்சி!! வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஆக 20, 2011 @ 09:46:09

   உங்கள் வரிகளுக்கும் வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி. மிக மகிழ்வடைந்தேன். இறைவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 5. கவி அழகன் --
  ஆக 20, 2011 @ 08:39:18

  தமிழ் திழைக்கும்
  காதல் சுரக்கும்
  கவிதை

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஆக 20, 2011 @ 10:09:06

   அமிழ்தான அழகிய சிறு
   குமிழான கருத்து வரி.
   தமிழ் அழகு மணம்
   கமழ் வரி இது.
   மகிழ்வான நன்றியை
   உமிழ்கிறேன் அன்புடன்.
   வாழ்த்துகள் வாழ்த்துகள்.
   இறை ஆசி கிட்டட்டும்…….Kavi alaka!

   மறுமொழி

 6. nathnavel
  ஆக 20, 2011 @ 09:33:09

  அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஆக 20, 2011 @ 10:11:24

   மிக்க நன்றி ஐயா! உங்கள் அன்பான வாழ்த்துக்களால் வருகையால் மகிழ்வடைந்தேன். உங்களுக்கு ஆண்டன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. மஞ்சுபாஷிணி
  ஆக 20, 2011 @ 12:02:13

  அழகிய உணர்வுகள் கவிதை வரியில் அசத்துகிறது வேதாம்மா…

  அன்பு வாழ்த்துகள்….

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 20, 2011 @ 12:22:10

   மஞ்சும்மா! உங்கள் அன்பான கருத்திற்கும், அதை வந்து பார்த்ததற்கும் மிக்க மகிழ்வு கொண்டேன். மிகுந்த நன்றியும், கூறுகிறேன். ஆண்டவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 8. ramanujam
  ஆக 20, 2011 @ 13:40:09

  //கண்ணேந்தும் துயில் மறந்து
  கருத்தேந்தி நிதம் நினைந்து
  காதற் சாரல் தூவிடுதே!
  காவிரியாகி மோதிடுதே//

  பொற்பனைக் கற்பனை மோதிடுதே-தமிழ்
  பூவென வார்த்தைகள் தூவிடுதே!
  அற்புத கவிதைகள் அளிக்கின்றீர்-வலை
  அறிந்தே கருத்துரை தெளிக்கின்றீர்
  நன்றி!
  புலவர் சா இராமாநுசம்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 20, 2011 @ 18:52:29

   மிக்க மகிழ்வடைந்தேன் ஐயா உங்கள் வருகையாலும, கருத்திடலாலும். இரண்டாவுது பந்தி அருமை ஐயா! புலவர் அன்றோ ! தமிழ் புலமை தெரிகிறது. நன்றி ஐயா! நன்றி. தெய்வத்தின் அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 9. Vai Gopalakrishnan
  ஆக 20, 2011 @ 13:50:55

  //பைந்தொடியே! உன் சுவாசத்தோடு
  கையேந்தி நடை பயில்வோம்!
  கைரேகை அழியும் வரை
  வையகத்திலாடுவோம் பைங்கிளியே!//

  கவிதையின் இந்த வரிகளை மிகவும் ரஸித்தேன்.
  நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 20, 2011 @ 18:55:16

   இரஸித்தீர்களா! மிக்க மகிழ்ச்சி உங்களை ரசிக்க வைத்ததிற்கு. அவனன்றி ஓரணுவும் அசையாது. கருத்திடலுக்கும் வருகைக்கும் நன்றி. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. பொன்-சிவகௌரி
  ஆக 20, 2011 @ 17:29:41

  மைகொண்ட விழி மலர
  மையல் கொண்ட மனமசைய
  தையலே! உன் மொழியாலே
  தைரியமே தினம் கைகாரியே!

  மிக அழகான பிடித்த வரிகள்!
  வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 20, 2011 @ 19:06:10

   மனம் மிக மகிழ்ந்தேன் சகோதரி. உங்களது ரசனைக்கும் கருத்திற்கும் அளவிலா மகிழ்வும் நன்றியும். தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. yaathoramani
  ஆக 20, 2011 @ 21:09:33

  அருமையான படைப்பு
  மீண்டும் மீண்டும் படித்து
  கவிதையின் ஓசை அமைப்பில்
  அசந்து போனேன்
  தரமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 21, 2011 @ 07:33:33

   மிக்க மிக்க மகிழ்ச்சி!. உங்கள் இனிய வரவிற்கும், கருத்திற்கும் மனசார நன்றி கூறுகிறேன். ஓசை அமைப்பில் மகிழ்ந்தீர்கள். நிறைவாக உள்ளது. மேலும் என் கவனத்தைப் பெருக்க வேண்டும். மீண்டும். சந்திப்போம். தெய்வத்தின் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 12. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஆக 20, 2011 @ 22:30:07

  இளமை விருந்தால் வென்றிட
  இதயம் தேடிப் போராடுதே.
  இனியெதற்குப் போர்க்களம்!…..ஹ……….ஹஹா :)))

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 21, 2011 @ 07:38:53

   !…..ஹ……….ஹஹா ))……மறைமுகமாக எழுதும் கலையில் கவிஞர் கண்ணதாசன் மிகப் பிரபலம். அந்தப் பாணியைப் பிடித்தேன். கண்டு பிடித்த சிரிப்பு இது….!…..ஹ……….ஹஹா ))……
   மகிழ்ச்சி ராஜீவ்! உமது அன்பான வரவிற்கும், வரிகளுக்கும். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. SUJATHA
  ஆக 21, 2011 @ 08:05:04

  கண்ணேந்தும் துயில் மறந்து
  கருத்தேந்தி நிதம் நினைந்து
  காதற் சாரல் தூவிடுதே!
  காவிரியாகி மோதிடுதே!

  அருமை………”வேதா” காதல் புரிதலின் வெளிப்பாடு கவிதையில் பிறந்துள்ளது.

  மறுமொழி

 14. கோவை கவி
  ஆக 21, 2011 @ 08:30:06

  OH!…Sujatha..I am very very happy to see your kind… love….. lines. Thank you so much. May god bless you all.

  மறுமொழி

 15. பிரபுவின்
  ஆக 21, 2011 @ 12:45:05

  என்ன அழகான வரிகள் சகோதரி!நன்றி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 21, 2011 @ 12:49:12

   மிகவும் மகிழ்ச்சி பிரபு! உமது அன்பான வருகைக்கும், வரிக்கும் மிகுந்த மகிழ்வுடன் நன்றியும். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 16. ரெவெரி
  ஆக 21, 2011 @ 12:51:33

  அருமையான கவிதை…அழகான வரிகள்…சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 21, 2011 @ 14:05:45

   அன்பின் ரெவெரி! மிக்க மகிழ்ச்சி உமது அன்பான வரவிற்கும், கருத்திற்கும். மிகுந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 17. jaghamani
  ஆக 21, 2011 @ 17:47:41

  கைரேகை அழியும் வரை
  வையகத்திலாடுவோம் பைங்கிளியே!//

  அழகான மனம் கவர்ந்த கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 21, 2011 @ 19:09:10

   அன்பின் சகோதரி இராஐராஜேஸ்வரி! உங்கள் இனிய வருகைக்கும், வரிகளுக்கும் அன்பான வாழ்த்துகளும் நன்றியும் மகிழ்ச்சியும்.ஆண்டவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 18. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஆக 28, 2011 @ 10:16:50

  கண்ணேந்தும் துயில் மறந்து
  கருத்தேந்தி நிதம் நினைந்து
  காதற் சாரல் தூவிடுதே!
  காவிரியாகி மோதிடுதே!
  பிடித்த வரிகள் ………….

  மறுமொழி

 19. கோவை கவி
  ஆக 28, 2011 @ 10:47:01

  ஆமாம் சகோதரா! இனிய காதற் கவி வரிகள் எனக்கும் பிடித்துள்ளது. எழுதும் போது அதது அமைய வேண்டும். சில வேளை நன்றாகவே வராது.
  மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவிற்கும், கருத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 20. கோவை கவி
  ஆக 29, 2011 @ 17:50:07

  தமிழ்த் தோட்டம் wrote:-
  அருமை

  Vetha wrote:- Mikka nanry Thamil thottam.

  மறுமொழி

 21. கோவை கவி
  ஆக 29, 2017 @ 05:44:52

  தமிழ்த் தோட்டம் அருமை
  29 August 2011 at 19:24

  Vetha Langathilakam Mikka nanry…
  29 August 2011 at 19:50 ·

  மறுமொழி

 22. கோவை கவி
  ஆக 29, 2017 @ 05:45:35

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: