204. வெட்கக் குமிழிகள். (பாமாலிகை (கதம்பம்)

 

 (படத்தைக் கிளிக் பண்ணினால் குமிழிகள் அசைகின்றன.)

வெட்கக் குமிழிகள்.

நேற்று நீ அவனை ஒதுக்கினாய்!
காற்று அவனுக்கு வீசுகிறது இனிதாய்…
ஏற்றமிகு நட்பின் இராகம் புரியாது
வேற்று மனிதனாய் ஒதுக்கினாய்! தீது!

ஊரின்றி, உறவின்றி உதித்திட்ட நேசம்
சீரியதாய் இதயத்தில் கலக்கவில்லையோ!
இது போல் ஏமாற்றுதல் பழக்கமோ!
எதுவும் தோன்றவில்லையோ உனக்கு!

உத்தம அன்பு காட்டில் மழையானது.
சத்தமின்றிக் காரியமாற்றும் ஒரு
மொத்த சுயநலப் பிறவி என்று
சித்தத்தில் தோன்றலையே முன்னமவனுக்கு.

ஒற்றுமை செயலில் இன்றி அவனிடம்
பெற்ற உதவிகள் மறந்தாய்! ஒதுக்கினாய்!
சற்றுத் தெளிவாயொரு கணம் சிந்தி!
தொற்றிடும் இது உன் வாரிசிற்கும்!

அன்பு கொடுத்து அன்பு பெறுதலே
இன்ப வாழ்க்கையை வாசித்தல். உன்னகம்
அன்பு கொடுத்து அலட்சியம் செய்தலே
அகராதியென வெட்கக் குமிழிகள் இடுகிறது….

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-8-2011.

 

                              

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  ஆக 25, 2011 @ 07:01:54

  ////ஒற்றுமை செயலில் இன்றி அவனிடம்
  பெற்ற உதவிகள் மறந்தாய்! ஒதுக்கினாய்!
  சற்றுத் தெளிவாயொரு கணம் சிந்தி!
  தொற்றிடும் இது உன் வாரிசிற்கும்!////

  ஒவ்வொன்றும் பொன்னேட்டில் பொறிக்கப் படவேண்டிய
  வாக்கியங்கள் …
  படித்து முடிக்கையில் மனது ஒரு புத்துணர்ச்சி பெற்ற சந்தோசம் சகோதரி
  நன்றி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2011 @ 16:50:34

   ”…படித்து முடிக்கையில் மனது ஒரு புத்துணர்ச்சி பெற்ற சந்தோசம் சகோதரி…”’

   மிக்க மகிழ்ச்சி சகோதரர் மகேந்திரன். உங்களுக்கு அப்படி ஒரு புத்துணர்வு வருவது மகிழ்ச்சியே! மிக்க நன்றியும் கூட. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. nathnavel
  ஆக 25, 2011 @ 09:50:11

  நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2011 @ 16:56:10

   மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும். தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. SUJATHA
  ஆக 25, 2011 @ 11:29:41

  ஒற்றுமை ஓங்கின் வாழ்வினில் இன்பம் பொங்கும். வேற்றுமை
  கண்டு மகிழ்வதும், புறந்தள்ளி வாழ்வதும் அவர்தம் பண்பாடு எனின் பின்தள்ளி அனுபவிப்பர் இக்குறையை,்,,்,,்,,்,,்,,்,

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2011 @ 16:57:26

   அன்பின் சுஜாதா! மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உமது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும். தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. Sree
  ஆக 25, 2011 @ 16:11:24

  அழகிய படமும் ஆழமான வரிகளும் அருமை…

  அன்பே இவ்வுலகில் ஈடு இணையற்றது…

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2011 @ 17:37:51

   அன்பின் சகோதரா! சிறீ! உமது வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் மிகுந்ந மகிழ்வடைந்தேன். மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. mohamedthasthageer
  ஆக 25, 2011 @ 19:27:33

  சரியான சாட்டை அடி சுயனலமிக்க நன்றி மறந்தவர்களுக்கு.
  எல்லாம் மறக்கவும், மறுக்கவும் முடியுமா ஆனால் அவன் மூலம் வந்த உயிரின் பிரதி சனித்ததே அந்த வயிறில் அதை வளர்ந்த பின் அழிக்க முடியுமா? அது பிடித்துதோ, பிடிக்காமலோ வாழ்ந்த வாழ்வின் அடையாளம் அல்லவா?

  மறுமொழி

 6. கோவை கவி
  ஆக 25, 2011 @ 20:08:01

  சகோதரா! இந்தக் கவிதையை கணவன் மனைவியாகப் பார்க்கலாம். சிநேகிதன் சிநேகிதியாகப்பார்க்கலாம் ஏன் ஒரு பெண்ணெ பெண்ணை ஏமாற்றுவதையும் எடுக்கலாம். சம்பவங்கள் தானே கோர்வையாகிறது. மிக்க நன்றி வருகைக்கும், கருத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 7. arasan
  ஆக 26, 2011 @ 06:06:44

  உணர்வுகளின் வெளிப்பாடு சற்று அழுத்தமாக ..
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 26, 2011 @ 15:48:08

   ஒத்துக் கொள்கிறேன் அரசன். அழுத்தமாகவே உறைக்க வேண்டுமென்றே எழுதினேன். உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க மிகிழ்ச்சியும் நன்றியும். இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 8. கோவை கவி
  ஆக 26, 2011 @ 06:40:02

  Dhana Dhanendranwrote:-
  super!……….

  மறுமொழி

 9. ரமேஷ்
  ஆக 26, 2011 @ 07:03:49

  ஆஹா வழக்கம் போல் கவிதை அருமை
  இதில் எனக்கு பிடித்தது

  அன்பு கொடுத்து அன்பு பெறுதல் அருமை

  இது கேட்டு நடைபெறாமல் இயல்பாக நடந்தால் அந்த இடம் நந்தவனமாகும் .

  பகிர்வுக்கு நன்றி சகோ

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 26, 2011 @ 15:51:13

   அன்பின் ரமேஷ் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும். ஆண்டவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 10. ramanujam
  ஆக 26, 2011 @ 08:01:37

  அசையும் குமிழ்க் கண்டே
  அசையாமல் நான் இருந்தேன்
  விசையும் எது வென்றே
  விளங்காமல் நான் இருந்தேன்
  பசையாக நெஞ்ச தனில்
  பாடலுடன் படம் ஒட்ட
  இசையாகி செவி வழியே
  இணைத்தீரே கவி மொழியே

  புலவர் சா இராமாநுசம்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 26, 2011 @ 15:55:28

   ஐயா! அருமைக் கவி வரியால் அசத்திவிட்டீர்கள். மரபு வரியன்றோ! உண்மையில் குமிழிகள் அசைய வேண்டும். என்னவென்று புரியவில்லை. அசைந்தால் மட்டும் அழகோ! அழகு! மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்திற்கும் வரவிற்கும் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. பிரணவன்
  ஆக 26, 2011 @ 08:11:26

  ஒற்றுமை செயலில் இன்றி அவனிடம்
  பெற்ற உதவிகள் மறந்தாய்! ஒதுக்கினாய்!
  சற்றுத் தெளிவாயொரு கணம் சிந்தி!
  தொற்றிடும் இது உன் வாரிசிற்கும்!
  அருமையான வரிகள். . .கவிதை நன்று. . .

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 26, 2011 @ 15:58:02

   அன்புடன் பிரணவன் மிக்க நன்றி. உமது வருகைக்கும் வரிகளுக்கும். மிக மகிழ்வடைந்தேன். ஆண்டவன் ஆசீர் வாதம் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 12. மஞ்சுபாஷிணி
  ஆக 26, 2011 @ 15:04:27

  அன்பை அன்போடு பகிர்ந்து விட்டாலே மனம் நிறைவடைவதை உணரமுடியும்….

  உங்கள் வரிகளை படிக்கும்போதே மனம் அமைதி பெறுவதையும் உணரமுடிகிறது….

  நல்லவைகளை அழகிய வரிகளால் கவிதைப்பூக்களாய் மலரச்செய்திருக்கீங்க…

  சிறப்பான படைப்பு.. அன்பு வாழ்த்துகள் வேதாம்மா….

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 26, 2011 @ 16:35:59

   அன்போடு அன்பைப் பகிராத அலட்சியத்தால் தானே எழுந்தது இக் கவிதை மஞ்சும்மா. உலகம் பல விதம் அதில் உருளும் நாமும் பல விதம் . வாழ்ந்து தானே ஆக வேண்டும்! வாழுவோம்!..வாழுவோம்!. எத்தனை அருமையான அன்புள்ளங்கள் உள்ளனவே! மிக்க நன்றி மஞ்சும்மா உங்கள் கருத்திற்கும் வரவிற்கும். தெய்வத்தின் கிருபை கிடைக்கட்டும்.

   மறுமொழி

 13. vinothiny pathmanathan
  ஆக 26, 2011 @ 20:52:20

  superb

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 26, 2011 @ 21:47:19

   உமது வருகையும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரி விநோ. தெய்வத்தின் அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 14. Ambaladiyal
  ஆக 30, 2011 @ 04:18:13

  வணக்கம் அம்மா மன்னிக்க வேண்டும் உங்கள் தளத்திற்கு
  விரைந்து வராமைக்கு .நான் நன்றாகவே உள்ளேன் .உங்கள்
  ஆக்கங்கள் மிகச் சிறப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .எதையாவது
  சாதிக்க வேண்டும் என்று இந்த வலைத்தளம் வந்தேன் .எந்நேரமும்
  என் சிந்தனை புதிய ஆக்கங்களைச் சுற்றி வட்டமிடுவதால் அடிக்கடி
  என்னை வந்து ஊக்குவிப்பவர்களை என்னால் மறக்கமுடியாது .
  தங்களையும் நான் மறக்கவில்லை .முடிந்தவரை இனித் தொடர்ந்து
  வருகின்றேன் .என்னையும் வாழ்த்துங்கள் அம்மா .நன்றி பகிர்வுக்கு .

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 04, 2011 @ 13:16:27

   வணக்கம் சகோதரி உங்கள் கருத்துகள் பல இடங்களில் உடனுக்குடன் பார்க்கிறேன் பாராட்டுகள் உங்கள் முயற்சிக்கு. இங்கும் வந்து கருததிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 15. பிரபுவின்
  ஆக 30, 2011 @ 05:47:54

  “நேற்று நீ அவனை ஒதுக்கினாய்!
  காற்று அவனுக்கு வீசுகிறது இனிதாய்…”

  என்ன அருமையான சொற்கள் சகோதரி.அருமையான பாமாலிகை சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 04, 2011 @ 13:21:24

   நண்பனாய் பழகி நம்மை ஒதுக்குபவர்கள் நிறைய உள்ளனர். தேனாகப் பேசுவர். செயலில் அவர்களுக்குத் தேனாக இருப்பவர் வேற்று மனிதராக இருப்பர். இவர்கள் ஒதுக்குகிறார்கள் என்று காற்று வீசாமலா இருக்கிறது. இதையே கூறினேன் பிரபு. உமது வருகைகக்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்வும் நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: