பெற்றோர் மாட்சி. 36.

 

 

பெற்றோர் மாட்சி. 36

10-1-2009.
கடமைகள் என்று பணிகளை
உடைமைகள் ஆக்கி இயங்குவதே
மடைமையற்ற வாழ்வென்று பெற்றோர்
வடமெனப் பிடித்தெமை வளர்த்தனர்.
படமாய் அவற்றையழகு படுத்தலே
திடமான சொத்தாம் எம் கடமை.

27-12-2008
எண்ணங்களால் நமக்கு நன்மை சேர்த்து,
திண்ணமாய் பிறருக்கும் தீங்கு செய்யாது,
வண்ணமான சிந்தனை பரவிடு…
என்ற சூழலில் வளர்த்து
விண்ணேகிய பெற்றோரின் குணநலன்கள்
தினமும் விரிகிறது மனதில்
வானவில் வண்ணங்களாக.

20-12-2008.
ஊக்கமும் ஆக்க உணர்வுக்கும்
நீக்கமற நான் நினைப்பதுவென் பெற்றோரையே.
நீண்டு தொடர்கிறதிதுவென் பிள்ளைகளுடாக.
ஆக்கமுடன் நாம் நடப்பது எப்போதும்
ஊக்கமாகும் எம் பிள்ளைகளுக்கு.
காக்கும் இச்செயல் எமது நம்பிக்கையை.

6-12-2008.
தித்திப்பான தமிழைப் படிக்க
கைப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம்
துவர்ப்பாயும் தூண்டினர் பெற்றோர்.
அறுசுவையாகத் தமிழையின்று  அனுபவிக்கிறோம்.

23-11-2008.
பிறந்தேன். பிறந்து சுயமான திறமையில்,
பிறரோடு கலந்த கூட்டிணைவில், நிறம்
பெற்று வாழ வழி காட்டிய சிறந்த
பெற்றவரை எண்ணி,  வாழ்வதற்காகவே
நான் வளர்ந்தேன்- உயர்ந்தேன்-
இப்புவியில் பிறந்தேன்.

22-11-2008.
நம்பிக்கை பெற்றவரில் கொண்டு நாமும்,
எம்மை நம்பி மனமிணைத்துப் பெற்றவரும்
வாழ்கிறோம். தம்படி கூட நம்பிக்கையிழந்தால்
தரணி வாழ்வு அர்த்தமின்றிப் போகும்.
தம் வழிகாட்டலில் எம் நம்பிக்கையை
பெற்றவர் வளர்க்க வேண்டும்
சிறந்த தன்னம்பிக்கையாக!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
வலையேற்றம்:- 28-8-2011

தம்படி –  அணா நாணயத்தில் 12ல் ஒரு பாகமாகிய பை (பழைய நாணய முறையில்). a pie equal to a twelfth of an anna ( under the old coinage)

 

 

                         
 

 

38 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  ஆக 28, 2011 @ 05:04:10

  இன்று இவ்வுலகில்
  நாம் இருக்க காரணமாயும்
  செம்மொழியை செவ்வேனப் பயின்று
  அவையில் சான்றோர் முன்
  பேசிப் பழகிட காரணமாயும் இருந்தது நீவீரே!
  என்னை பெற்றவரே
  நீர் இன்றி நான் இல்லை..

  பெற்றோர் மாட்சி
  என அழகுக் கவி
  படைத்திருக்கிறேர்கள் சகோதரி.
  நன்றி..

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 28, 2011 @ 07:47:37

   அன்பின் சகோதரா மகேந்திரன்! முதல் மழையாக வந்துள்ளீர்கள் நல் வரவு! மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றியும் கூட. எம் பெற்றவர் இல்லையென்றால் எத்தனையை இழக்கிறோம்! இருக்கும் போது அதன் அருமையை அறிவதில்லையே!. எல்லாம் அனுபவம் தான். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் தான். மறுபடியும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. malathi
  ஆக 28, 2011 @ 05:15:50

  சிறப்பான பதிவு நல்ல வழிகாட்டல் பாராட்டுகள் தொடர்க.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 28, 2011 @ 08:12:32

   அன்பின் சகோதரி மாலதி! உங்கள் இனிய வரிகளுக்கும் எனது பக்கத்திற்கு வருகைக்கும் மிகுந்த மகிழ்வடைந்தேன். என் மனமார்ந்த நன்றிகளைக் தெரிவிக்கிறேன். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. Kowsy
  ஆக 28, 2011 @ 07:21:52

  உலகில் அனைவரும் பெற்றவரைப் பெற்றவர்கள்.
  அவர்களைப் பெற்றவர்கள், வாழ்வைப் பெற்ற பின் மற்றவற்றைப் பெரிதாக எண்ணுகின்றனர். பெற்றவர்களை துச்சமாய்க் கருதுகின்றார்கள்.
  உங்கள் வரிகள் பெற்றோர் மாட்சியை சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது.
  அதற்காகவே இத் தலைப்பை இலண்டன் தமிழ் வானொலியில் கொடுத்திருந்தேன்.
  அன்று மனம் நிறைக்க முடியவில்லை. இன்று மனம் நிறைந்திருக்கின்றது.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 28, 2011 @ 09:34:21

   சகோதரி! சந்திர கௌரி சிவபாலன்! தவறு சகோதரி! செப்ரெம்பர் 10 – 2011ல்
   நானாக வைத்த தலைப்பு ”.பெற்றவர் மாட்சி”.
   திருக்குறளும் படிப்பது உண்டு.
   இறைமாட்சி.
   பகைமாட்சி.
   படைமாட்சி.
   போல ” பெற்றவர் மாட்சி” என்று வைத்தேன்.
   அதுவுமன்றி அவ் வானொலி கேட்பதை நான் நிறுத்தி சுமார் 2,3 வருடங்கள் இருக்கும். அப்படியிருக்க

   உமது தலைப்பு எனக்குத் தெரிய வர இடமில்லை சகோதரி!
   எப்போது வைக்கப் பட்டது இத் தலைப்பு?..நினைவிருக்கா?…
   உமது கருத்து தவறு சகோதரி!.

   வலைக்கு வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. nathnavel
  ஆக 28, 2011 @ 09:51:27

  அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 28, 2011 @ 10:18:26

   அருமை!..அருமை..ஐயா! உங்கள் வரவிற்கும் வார்த்தைக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் கூறுகிறேன் இறை ஆசி கிட்டட்டுமய்யா!

   மறுமொழி

 5. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஆக 28, 2011 @ 10:12:08

  பெற்றோர் மாட்சி,சிறப்பு !!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 28, 2011 @ 10:29:50

   பெற்றொர் மாட்சி ! இது என் சொல்லாட்சி!
   வள்ளுவனாரை யொட்டிய சொல் நீட்சி.
   நான் படித்த தமிழிற்கு மாட்சி!
   ஆக்கத்தின் காட்சிக்கு வருகை தந்தீர்!
   அருமை வார்த்தை தந்தீர்!
   மகிழ்சியுடன் நன்றி சகோதரா.
   உலகைப் படைத்தோன் அருள் கிட்டட்டும்!

   மறுமொழி

 6. நிரூபன்
  ஆக 28, 2011 @ 13:23:55

  வணக்கம் அக்கா,
  பெற்றோரின் பெருமையினால், அவர்கள் செய்த மாட்சிமைகளால் தான் நாம் இவ் உலகில் வாழ்கின்றோம் என்பதனை அகவல் நடையில் நன்றி கூறும் கவியாக, நினைவு மீட்டலுடன் எழுதியிருக்கிறீங்க.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 28, 2011 @ 15:47:55

   மகிழ்ச்சி நிரூபன். உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மனம் நிறைந்த நன்றியும் மகிழ்ச்சியும்.. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. gunathamizh
  ஆக 28, 2011 @ 14:02:27

  அருமையான தலைப்பு.
  அதற்கேற்ற கவிதை

  அருமை!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 28, 2011 @ 15:52:32

   அன்பின் முனைவரே! இது கவிதை என்று கூற முடியாது என்று நினைக்கிறேன். வரிகள் தான் என்று எண்ணுகிறேன். ஏதோ! உங்கள் அன்பான வருகைக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. gunathamizh
  ஆக 28, 2011 @ 14:05:27

  விண்ணேகிய பெற்றோரின் குணநலன்கள்
  தினமும் விரிகிறது மனதில்
  வானவில் வண்ணங்களாக.

  பெற்றோர் என்றும் குழந்தைகளுக்காக
  பகலில் உதிக்கும் பரிதி!
  இரவில் தாலாட்டும் நிலவு!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 28, 2011 @ 16:11:37

   ”..பெற்றோர் என்றும் குழந்தைகளுக்காக
   பகலில் உதிக்கும் பரிதி!
   இரவில் தாலாட்டும் நிலவு!,,”

   மிக சரியாகக் கூறினீர்கள் சகோதரரே! என்றும் என்றும்..என்று அழுத்திக் கூறலாம். உங்கள் வரிகளுக்கும், என் வலைக்கு வருகை தந்தமைக்கும் மிகுந்த மகிழ்வும், மனம் நிறைந்த நன்றியும் உரித்தாகட்டும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. எம்.கே.முருகானந்தன்
  ஆக 29, 2011 @ 01:36:44

  “கடமைகள் என்று பணிகளை
  உடைமைகள் ஆக்கி இயங்குவதே
  மடைமையற்ற வாழ்வென்று பெற்றோர்
  வடமெனப் பிடித்தெமை வளர்த்தனர்.
  படமாய் அவற்றையழகு படுத்தலே
  திடமான சொத்தாம் எம் கடமை…” அருமையான வரிகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 29, 2011 @ 17:38:45

   அன்புடன் முருகானந்தன் ஐயாவிற்கு! உங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா: இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. சத்ரியன்
  ஆக 29, 2011 @ 02:43:46

  படிக்கப் படிக்க இனிக்கும் கவிதை.

  இன்றைய தலைமுறையினருக்கு “தம்படி” என்ற சொல்லின் பொருள் புரியாது. அது போன்றச் சொற்களுக்கு கவிதையின் இறுதியில் விளக்கம் குறிப்பிட்டால் சிறப்பாகவும்/எளிதாகவும் இருக்கும் என்பது இச்சிறியோனின் கருத்து.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 29, 2011 @ 17:43:12

   சகோதரன் சத்திரியன் க்கு உமது அன்பான வருகைக்கும், வரிகளுக்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவிக்கிறேன். தம்படியின் கருத்து ஆக்கத்தின் கீழேயே எழுதியுள்ளேன். ஆலோசனைக்கு நன்றி. சகோதரா. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. ரிஷபன்
  ஆக 29, 2011 @ 13:05:36

  பெற்றோர் மாட்சி தலைப்பும் கவிதைகளும் மிக அருமை.
  பெற்றோரின் குணநலன்கள்
  தினமும் விரிகிறது மனதில்
  வானவில் வண்ணங்களாக.
  அற்புதமான வார்த்தைகள்.. அவர்கள் இல்லாமல் நாம் ஏது.. நம் பெருமை எல்லாம் அவர்கள் தந்த கொடை அல்லவா..

  மறுமொழி

 12. SUJATHA
  ஆக 29, 2011 @ 15:04:36

  பெற்றோர்கள் காட்டிய வழி பின்பற்றியதன் மகிமை வாழ்க்கையில் நாம் பெற்ற பயன். அவ்வழி தொடர்ந்தமை வாழ்க்கையின் ஒவ்வொரு படியும் முதற்கண்கள்.

  மறுமொழி

 13. கோவை கவி
  ஆக 29, 2011 @ 17:23:47

  தமிழ்த் தோட்டம் wrote:-
  அருமை பாராட்டுக்கள்

  Vetha wrote:- Mikka nanry..

  மறுமொழி

 14. http://reverienreality.blogspot.com/
  ஆக 29, 2011 @ 20:22:09

  பெற்றோர் மாட்சி கவிதைகள் அருமை…
  என் வலைக்கு வந்து என்னை ஆசிர்வதித்ததுக்கும் நன்றி…சகோதரி.

  -ரெவெரி

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 29, 2011 @ 20:29:30

   அன்பின் சகோதரா! அன்புடன் வந்து கருத்து தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.ஆண்டவன் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 15. cpsenthilkumar
  ஆக 30, 2011 @ 05:40:21

  டடிட்டில், படம், கருத்துக்கள் அனைத்தும் அழகு

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 30, 2011 @ 17:13:16

   நன்றி சகோதரா செந்தில் குமார்! உங்கள் அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மனமகிழ்ந்தேன். அன்பான நன்றியைக் கூறுகிறேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 16. பிரபுவின்
  ஆக 30, 2011 @ 05:43:12

  “பிறந்தேன். பிறந்து சுயமான திறமையில்,
  பிறரோடு கலந்த கூட்டிணைவில், நிறம்
  பெற்று வாழ வழி காட்டிய சிறந்த
  பெற்றவரை எண்ணி, வாழ்வதற்காகவே
  நான் வளர்ந்தேன்- உயர்ந்தேன்-
  இப்புவியில் பிறந்தேன்”

  என்ன அழகான வரிகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 30, 2011 @ 17:16:06

   பிரபு! உமது ரசனையை ரசித்தேன். மிக்க மகிழ்ந்தேன். இனிய வருகைக்கும் , பின்னூட்டத்திற்கும் மிகுந்த நன்றி ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 17. Ambaladiyal
  செப் 01, 2011 @ 19:57:08

  வணக்கம் அம்மா .இயல்பு நிலை வாழ்க்கைத் தத்துவத்தை
  அழகிய தலைப்பின்கீழ் எழுதியிருக்கும் தன்மை மிகச் சிறப்பாக
  உள்ளது. பாராட்டுகள் .மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .உங்களுக்கு
  எனது விநாயர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ……………..

  மறுமொழி

 18. Kalai Moon
  நவ் 10, 2011 @ 11:38:32

  விண்ணேகிய பெற்றோரின் குணநலன்கள்
  தினமும் விரிகிறது மனதில்
  வானவில் வண்ணங்களாக…

  தாய்மையை சொல்லும் அழகு ,
  தந்தையை போற்றும் பாங்கு
  கவிதையாய் சொல்லும் உன் பாங்கு…

  உலகமெங்கும் ஒலிக்கட்டும் உமது சங்கு.
  வாழ்த்துக்கள் .தொடருங்கள்.

  மறுமொழி

 19. கோவை கவி
  ஜூலை 25, 2016 @ 15:41:47

  Vetha Langathilakam :- சுதா பத்மநாதன் :- அருமைமா
  மீண்டும் பிறப்பதில்லை
  இனிமை
  Unlike · Reply · 2 · 18 June at 19:18

  Amala Jeysingh :- விண்ணேகிய பெற்றோரின் நினைவுகள் இன்றும் மறவாது …
  அனுபவமும் அவை அறிவுரையாகவும் …
  அருமை சகோதரி
  Unlike · Reply ·
  Like · Reply · 2 hours ago

  Vetha Langathilakam:- க்க நன்றியும் மகிழ்வும் உறவே Sutha .P and Amala.J
  Like · Reply · 2 hours ago

  மறுமொழி

 20. கோவை கவி
  ஜூலை 25, 2016 @ 15:43:31

  Vedhai Supa Sathiya :- அடடா
  சிறு வலியிருந்தும் தாங்கிடத் தகுமோ
  பெரும் மகிழ்வது இருந்தும்
  உணர்தல்
  வருமோ..
  இருக்கார் இருக்கும் வரைதானே
  உலகம் உன்னை வசீகரிக்கு மென்ற
  தத்துவக் கோர்ப்பை மீண்டும் பிறப்பதில்லை யென்ற நோக்கில்
  அழகாக கையாண்டீர்..
  சீர்மிகு வரிகள் என்
  சிந்தனையைக் கிளர்ந்தது
  தலைப்பதில் ஒத்து சிறப்பாக பயணித்தீர் மகிழ்கிறேன் கவியே வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 2 · 19 June at 03:06 · Edited

  தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை:- அற்புத பிறப்பன்றோ
  Like · Reply · 2 hours ago

  Vetha Langathilakam மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே..
  Like · Reply · 2 hours ago

  மறுமொழி

 21. கோவை கவி
  ஜூலை 25, 2016 @ 15:44:58

  Muthupet Maran
  Unlike · Reply · 1 · 19 June at 05:23

  கவிஞர் பாலு கோவிந்தராஜன்
  Unlike · Reply · 1 · 19 June at 06:35

  Muthupet Maran :- சிறப்பான கவிதைப் படைத்த உங்களுக்கு நிலாமுற்றத்தின் வாழ்த்துகளும் நன்றியும்…
  Like · Reply · 19 June at 13:23

  Vetha Langathilakam :- சுதா பத்மநாதன் – Amala Jeysingh – vedai Supa Vedhai Supa Sathiya – தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை – Muthupet Maran – கவிஞர் பாலு கோவிந்தராஜன்மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே
  Like · Reply · A few seconds ago · Edited

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: