23. அறுபதாம் அகவை வாழ்த்து. – பா மாலிகை (வாழ்த்துப்பா, )

(அவர்கள் வாழ்த்துப்பாவை முறைப்படி அழகாக அச்சடித்து செய்தார்கள் . இது நானாக எனது வரிகளுக்காக இங்கு இந்தப் படத்தின் மேல் எழுதியது.)

 

அறுபதாம் அகவை வாழ்த்து.

 

லையான வாழ்வுப் பாதையின்
இலை பழுக்கும் பொற்காலம்.
விலையற்ற வரமிக்க காலம்.
தொலைதூரப் பாதையின் அறுபதாம்
நிலையான அடையாளப் புள்ளி.
கோலாகலமான அறுபதாம் பிறந்த நாள்.

ங்கமணி கணேசமூர்த்தி எம்
தமிழ் விளையாட்டுத் தோழி.
எல்லை விளையாட்டில் இவர்
நல்கும் ஆர்வம் சொல்லும் தரமன்று.
சொல்லிய நேரம் தவறாது, எல்லை
விளையாட்டு மைதானத்திலிருப்பார்.

புங்குடுதீவு தந்த தங்கமணியம்மாவிற்கு
வயதொரு எல்லை இடாது.
வாலிபமாய்த் துள்ளி விளையாடுவார்.
வாடாத இவரின் ஆர்வம்
தேடாது எம்மிடமும் ஒட்டும்.
கிள்ளப் படும் எமது ஆர்வமும்.

விளையாட்டின் இறுதிக் கட்டத்தில்
சுளையாக வெற்றியெட்டும் நேரம்
பிழையாகப் பந்தடித்து, இவர்
வெளியேறும் தருணங்களிலும்
முளைவிடும் பிள்ளைகள் கோபம்.
துளைத்திடும் வார்த்தைத் தொல்லைகள்.

தூக்கியெறிவது போற் கணக்கிலெடுக்காது
துடைத்துவிட்டாற் போல் தொடர்வார்,
தென்பு தருமொரு விளையாட்டுத் தோழி.
இவர் நல்லாரோக்கியமுடன் இன்பமாக
நீடுழி வாழ்ந்து எம்மோடு விளையாடவேண்டும்.
எம் விளையாட்டுக் கழகத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

 

வி ஆக்கம் —–திருமதி வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-1-2011

 

                       
 

202. வசீகர இளமை. – பாமாலிகை (கதம்பம்)

(படம்: நன்றி ஆனந்தவிகடன். – எழுத்துலக இராணி சிவசங்கரி பிடிக்கும். அரசியலில் ஆர்வமில்லை. இளமையின் கிடைத்தற்கரிய புகைப்படம் என்பதால் இங்கு பிரசுரிக்கப் பட்டது.)

 

வசீகர இளமை.

 

ளமுடை வயலில் பயிராகும் வல்லமை
வாலிபம் வானத்தை வில்லாய் வளைக்கும்.
வாழ்வில் உயர, தாழ்வில் முன்னேற
நீள்வில்லா இளமை கோலென உதவும்.

யல்பு வாழ்வியல் வழியில் காண்கிறோம்
இளமையில் பேச்செதையும் எடுத்தெறியும் வாலிபம்.
வண்ணமிகு வசீகர இளமை சாதனையை
எண்ணிவிட்டால் திண்ணமாய் விண்தொடும்.

ந்தியில் சந்தி மதகில் வம்பு
சிந்த, குந்துதல் இளமை இன்பம்.
காயப்படும் இளமை மனங்களால் பல
காலித்தன செயற்பாடு வேலிதாண்டும்.

ன்பு ஆதரவு இழந்த இளமை
ஆற்றாமை மேவி, ஆழமாய்ப் புண்பட்டு,
ஆவேசமாவது பெரும் சமூகக் கேடு.
ஆதரவு கொடுத்தல் நல்லோர் கடனே!

பாரிய பொறுப்புடை பூவிரிக்கும் இளமையை
நேரிய நடத்தையால் நிதானமாய்க் காத்திடு!
சீரிய வாழ்வு வீரியமாய்ப் பாய்
விரிக்க மனிதன் சூரியகாந்தியாய் மலரலாம்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2-8-2011.

http://www.tamilauthors.com/03/456.html

 

இதனையொட்டிய இன்னொரு கவிதை இணைப்பு இதோ!…

https://kovaikkavi.wordpress.com/2013/10/03/286-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/

(இன்று 2-8-2011 மாலை 7.00 8.00 மணிக்கு ரி.ஆர்.ரி.தமிழ்ஒலி வானொலிக் கவிதை நேரத்தில் இந்தக் கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                            

 

22. பா மாலிகை (வாழ்த்துப்பா)

 

திருமண வெள்ளிவிழா வாழ்த்து.

 

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று
(அதிகாரம் 5 குறள் 49.)

கருவிலேயே நீருள் விளையாட்டு
உருவாக்கம் மனிதன் பிறப்போடு.
விளை – என்றால் விருப்பம்.
விரும்பி ஆடுதல் விளையாட்டு.
ஆட்டு என்ற சொல்லுடன்
ஆம் – விகுதி கூட்டிணைப்பு.
ஆட்டம் என்றானது. விளையாட்டானது.
மட்டற்ற சமூகத்தாக்கம் உருவாக்குகிறது.

தொன்மை விளையாட்டொரு கலை.
உடன் பிறக்கிறது உடலாரோக்கியம்,
உன்னத மனநலம், ஒற்றுமையோடு,
பென்னம்பெரு படிப்பினைகள், மகிழ்ச்சி.
பண்பாடு, நாகரீகம், பொழுது போக்க
உதவுகிறது ஓகுஸ் விளையாட்டுக்கழகம்.
களிப்பாக எம்மோடு விளையாடும் (சோடி)
நவநீதராஜா – அருந்ததி தம்பதியர்.

மைதானத்திலவர் திறமையைக் கூட்ட
வீட்டிலும் விடாது பயிற்சியெடுப்பார்.
கற்கும் பேராவலுடைய தம்பதியரின்
அற்புத திருமண வெள்ளிவிழா நாளின்று.
ஓகுசின் கலாச்சார சமூக ஒற்றுமைக்கு
உதவும் விளையாட்டுக் கழகம், தம்பதியர்
நீடூழிவாழ மனமார்ந்து வாழ்த்துகிறோம்.
வாழ்க! இனிதாக! பல்லாண்டு வாழ்க!

 

 வாழ்த்துவோர் – ஓகுஸ், விளையாட்டுக்கழகம்.

5-5-2011. ( poem by Vetha.Elangathilakam)

 

                     
 

Next Newer Entries