205. எது மூலதனம்? (பாமாலிகை (கதம்பம்)

எது மூலதனம்?

 

நம்பிக்கை மூலதனத்தில்
தன்னம்பிக்கைச் சிங்காசனம்.
சுயநம்பிக்கை நிர்மாணத்தில்
சுகவாழ்வு ஆரோகணம்.
மூலதனமற்ற எத்தனம்
கோலப் பிழையாகும்.
பாலைவனத்தில் பயிர்செய்ய
வேலையற்றவனும் சிந்திக்கான்.

ஆரோக்கிய உடலிற்கு
உழைப்பு இலட்சணம்.
உழைப்பின் மூலதனத்தில்
உல்லாசம் வேதனம்.
அங்கீகாரம், அரவணைப்பு
தங்கமூலதனம் பாலருக்கு.
பொங்கும் ஞானமிதால்
பூங்காவன வளர்ச்சியாகும்.

பஞ்சபூத நியமனத்தில்
கொஞ்சும் இயற்கைத் தரிசனம்.
மோகன மூலதனம், இது
அமைதியூருக்கு விமானம்.
நிர்வாகம் சிறக்க
நிதி மூலதனம்,
நிதிநிலை தடுமாறினாலோ
நந்தவனமல்ல குடித்தனம்!

அன்பின்மை பலவீனம்.
அன்பு காலமுழுதும்
சந்தனப் பற்றாகட்டும்.
மனிதநேயம் உலக
சமாதானத்திற்கு மூலதனம்.
மண்மானம், இனமானம்
பிரதான ஆதனம். இது
அவமானமல்ல விழியுங்கள்!

3-9-2011

http://www.vaarppu.com/view/2542/

 

 

                          
 
  
 

 

 

 
 

31 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Rajarajeswari
    செப் 03, 2011 @ 04:57:13

    உலக
    சமாதானத்திற்கு மூலதனம்.
    மண்மானம், இனமானம்
    பிரதான ஆதனம். இது
    அவமானமல்ல விழியுங்கள்!//

    மூலதனப் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

    மறுமொழி

    • Vetha ELangathilakam
      செப் 03, 2011 @ 19:18:42

      எது மூலதனத்திற்குப் பிரதானமான உங்கள் கருத்துத் தானம் தந்ததும், வந்ததும் கண்டு மனம் மகிழ்ந்தேன். மிகுந்த நன்றி உரித்தாகட்டும். இறைவன் அருள் கிட்டட்டும்

      மறுமொழி

  2. மஞ்சுபாஷிணி
    செப் 03, 2011 @ 05:50:35

    முயற்சி சிறப்பு….

    அதிலும் நம்பிக்கையுடனான முயற்சியுடனான உழைப்போ இன்னும் சிறப்பு…..

    இதனால் பெறப்போகும் வெற்றிகளில் மனம் மகிழ்வதும் இயல்பு….

    பணம் அவசியம்…

    ஆடம்பரத்திற்கு அல்ல ஆனால் குடும்பம் நடத்த பணம் கண்டிப்பாக அவசியம்….

    அப்ப தான் குடும்பம் கோகுலமாக சிரித்து மகிழ்ந்திருக்கும்….

    அன்பு உயர்வு…..

    தன்னலமில்லா அன்போ இன்னும் உயர்வு….. பிரதிபலன் பாராமல் தரும் மழை இயற்கை வளங்களை போல தன்னிகரில்லா அன்பு சந்தன மணத்தைப்போல எல்லோரையும் அது ஈர்க்கவும் செய்வது சிறப்பு…

    வாழ்க்கைக்கு தேவையானவை…. மனிதன் எப்படி இருந்தால் உயர்வடைவான் என்பதையும் உங்கள் முத்து போன்ற வரிகளால் மிக அசத்தலாக எழுதி இருக்கீங்க வேதாம்மா…

    அன்பு வாழ்த்துகள் வேதாம்மா…

    மறுமொழி

    • Vetha ELangathilakam
      செப் 03, 2011 @ 19:22:06

      அன்பு மஞ்சும்மா! ஒன்றாக வந்து கருத்துகள் தருகிறீர்கள். மிகுந்த மகிழ்ச்சியும் மனம் நிறைந்த நன்றியும் கூறுகிறேனம்மா. இறைவன் ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  3. sambathkumar
    செப் 03, 2011 @ 06:03:12

    //அங்கீகாரம், அரவணைப்பு
    தங்கமூலதனம் பாலருக்கு.//

    அருமையான வரிகள்

    தொடரட்டும் தங்கள் வெற்றிப்பயணம்

    நட்புடன்
    சம்பத்குமார்

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 04, 2011 @ 04:55:21

      அன்பின் சகோதரா சம்பத்குமார்! உங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் மனம்மிக மகிழ்ந்தேன். மிகுந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இறை ஆசி கிடைக்கட்டும்.

      மறுமொழி

  4. SUJATHA
    செப் 03, 2011 @ 12:10:47

    மூலதனம் தன்னம்பிக்கையின் வழிகாட்டி.வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளும் நமக்கு எடுத்துக்காட்டுபவை. அருமை…….கருத்துக்கள் அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
    வாழ்த்துக்கள் ”வேதா”

    மறுமொழி

    • Vetha ELangathilakam
      செப் 03, 2011 @ 19:27:53

      அன்பின் சுஜாதா! உமது அனபான வருகைக்கும் பினள்னூட்டத்திற்கும் மிக மகிழ்ச்சியும் நன்றியும். உலகளந்தோனின் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  5. gunathamizh
    செப் 03, 2011 @ 14:58:45

    மனிதநேயம் உலக
    சமாதானத்திற்கு மூலதனம்.

    விழிப்பளிக்கும் கவிதை.

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 04, 2011 @ 04:57:30

      அன்பின் சகோதரர் குணா தமிழ்! உங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் மனம் மிக மகிழ்ந்தேன். மிகுந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இறை ஆசி கிடைக்கட்டும்.

      மறுமொழி

  6. gunathamizh
    செப் 03, 2011 @ 15:06:44

    ஆரோக்கிய உடலிற்கு
    உழைப்பு இலட்சணம்.

    உழைத்தவர்களுக்குத்தான் பசி கூட எடுக்கும்..

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 04, 2011 @ 05:00:32

      ”….உழைத்தவர்களுக்குத்தான் பசி கூட எடுக்கும்…..””
      மிக உண்மையான கருத்து. மிக மகிழ்ந்தேன். உங்கள் கருத்திற்கு மனம் நிறைந்த நன்றிகளைக் கூறுகிறேன். தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  7. N.Rathna Vel
    செப் 03, 2011 @ 16:37:22

    அருமை.

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 04, 2011 @ 05:04:32

      மிக நன்றி ஐயா! உங்கள் வருகைக்கும் , கருத்திற்கும் மிகுந்த மகிழ்வடைந்தேனய்யா! மனம் நிறைந்த நன்றியைக் கூறுகிநேன். இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  8. kjailani
    செப் 03, 2011 @ 19:28:23

    ஒவ்வொன்னும் அழகா சிறப்பா சொல்லி இருக்கீங்க 🙂

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 04, 2011 @ 05:09:11

      அன்பின் யெய்லானி மிக மகிழ்வடைந்தேன் உமது கருத்திற்கும், வருகைக்கும். மிக்க மிக்க நன்றியைக் கூறுகிறேன். இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  9. ramani
    செப் 04, 2011 @ 09:11:24

    திரும்பத் திரும்ப படித்து மகிழச் செய்யும்
    சந்தச் சிலம்பம்.கருத்துப் பெட்டகம்
    தங்கள் முழுப் படைப்புகளையும்
    தொடர்ந்து படித்தாலே ஒருவர்
    சிறந்த கவிதைகளைத் தர முடியும்
    தரமான பதிவு
    தங்கள் பதிவினைத் தொடர்வதில்
    பெருமிதம் கொள்கிறேன்

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 04, 2011 @ 10:09:22

      மிகுந்த மகிழ்ச்சி சகோதரா ரமணி! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அதையே நான் நெய்கிறேன். மற்றும்படி நான் எவ்வகையிலும் சிறந்தவள் என்பது தெரியவில்லை. சிறப்பாகப் படைக்க முயல்கிறேன் மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும் உங்கள் பின்னூட்டத்தால். இறை ஆசி கிடைக்கட்டும்.

      மறுமொழி

  10. gunathamizh
    செப் 04, 2011 @ 09:52:08

    வேர்களைத்தேடி வந்து இலக்கியத் தேன் பருகியதோடு தங்கள் சிந்தனைகளுக்கும் களம் அமைத்து உலவும் தங்களுக்கு “சிந்தனைச் சிற்பி“ என்னும் விருதளித்து மகிழ்கிறேன்..

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

    நன்றி.

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 04, 2011 @ 10:35:58

      ஓ! என் வலைக்கு வந்து ” சிந்தனைச் சிற்பி ” என்று பட்டம் அளித்தமைக்கு மிகுந்த நன்றியும் மகிழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  11. cpsenthilkumar
    செப் 04, 2011 @ 11:08:54

    உழைப்பு உயர்வு

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 04, 2011 @ 13:01:14

      உழைப்பு உயர்வு.
      மலைப்பு மகிழ்வு.
      களைப்பு ஓய்வு…
      இப்படியே கூறிக்கொண்டு போகலாம். வருகை தந்து கருத்தை வரவு வைத்ததற்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். இறைவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  12. ரெவெரி
    செப் 04, 2011 @ 14:18:06

    கண்டிப்பாய் இது அவமானமில்லை சகோதரி..நாம் விழிக்கும் வரை…நல்ல ஆக்கம்..தொடருங்கள்..ஆவலாய் இருக்கிறேன்…

    மறுமொழி

  13. கோவை கவி
    செப் 06, 2011 @ 20:47:22

    நன்றி சகோதரரே!. உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும். இறை அருள் கிட்டட்டும்.

    மறுமொழி

  14. vinothiny pathmanathan
    செப் 07, 2011 @ 08:07:53

    மனித வாழ்விற்கு மூலதனம் அன்பு/ பாசம் . நல்ல அருமையான விடயங்களை சொல்லியிருக்கின்றீர்கள் .பாராட்டுக்கள்

    மறுமொழி

  15. பிரபுவின்
    செப் 09, 2011 @ 12:06:23

    “அன்பின்மை பலவீனம்.
    அன்பு காலமுழுதும்
    சந்தனப் பற்றாகட்டும்.
    மனிதநேயம் உலக
    சமாதானத்திற்கு மூலதனம்.
    மண்மானம், இனமானம்
    பிரதான ஆதனம். இது
    அவமானமல்ல விழியுங்கள்!”

    மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.

    மறுமொழி

  16. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
    செப் 19, 2011 @ 07:57:06

    மனிதநேயம் உலக
    சமாதானத்திற்கு மூலதனம்.
    மண்மானம், இனமானம்
    பிரதான ஆதனம்……இது ஒரு அரிய சாசனம் ! உங்களுக்கு ஒரு அரியாசனம் !!

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 21, 2011 @ 17:31:34

      அன்புச் சகோதரா நடா சிவா, உங்கள் இனிய வருகைக்கும், வரிகளுக்கும் மிக மகிழ்வும், நன்றியும் உரித்தாகுக. இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  17. கோவை கவி
    டிசம்பர் 03, 2017 @ 09:41:40

    மறுமொழி

gunathamizh -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி