19. சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு!…..(சிறு கட்டுரைகள்)

 

 

சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு!…..

பதிப்பாசிரியர், கட்டுப்பாடாளர், தலைவர் என்று யாருமின்றி ஒரு சுதந்திர உலகாக வலையுலகம் உருவானது. அவரவர் சுய ஆளுமைகள் வெளியாகும் வெட்டவெளி உலகமாகத் திறமைகள் மின்னத் தொடங்கியது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சிந்தனை என்பது ஊடக சுதந்திரம் போல இருக்கிறது. இக் கருத்துச் சுதந்திரம் சுயமதிப்புத் தருகிறது. இது மனிதனின் அடிப்படை உரிமை.

அருவிச் சாரலாக அழகான திறமைகள் பாய்ந்தோடி, பார்ப்போரை வியக்க வைக்கின்றன. கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம், அரசியல், பொழுது போக்கு, சினிமா, தொழில் நுட்பம் என்று அன்ன பல வழிகளில் திறன்கள் வெளியாகின்றன. வியப்பு, ஆச்சரியம், திகைப்பு, புதுமை அப்பப்பா!…..கட்டுப் பாடற்று திறமைகள் குவிகின்றன.

”வர வர நாச்சியார் (நயினார்) கழுதை போல” என்று ஒரு சொற் தொடர் ஊரிலே கூறுவார்கள். அது போல ”இன்னாய்ய ..சொல்றே!..”  என்று சர்வ சாதாரண நடைகளிலும்,  நாலே நாலு வரி எழுதி 40 பேர் நேரத்தைக் கருத்திட என்று இழுப்பதுமாக இணைய உலகு நடக்கிறது.
திடீரென சிலருக்குப் பழைய ஆசிரியத்தனம் கிளம்பியது. தமது சுதந்திர செயற் பாடுகள் அலுத்து விட்டதோ!..என்னவோ!….

தொடர் பதிவு என்று, ஒருவர் சொல்லிற்குக் கட்டுப் பட்டு, கீழ்ப்படிந்து அவர்கள் சொற்படி ஆட்சி கிளம்பியது. இங்கு சுதந்திரம் நூலால் கட்டுப்பட்டு, வாத்தியார் மாணவர் நிலைக்கு மறுபடி மாறுவதில் பலர் ஈடுபட்டனர்.

இணைய உலகு மறுபடி குண்டுச் சட்டியுள் குதிரை ஓட்டுவதில் குதிக்கிறதோ என்றும் எண்ணம் தோன்றியது.

தாம் கொண்டு வரும் முறைப்படி, ஒரு சீருடைக்குள் அல்லது சீரடிக்குள் பிறரைக் கட்டுப் படுத்தும் ஆசையும் பலருக்கு உருவாகிறது.

ஏன் இந்த மனப்பாங்கு!…எதற்காக இப்படி வந்தது!….

ஆசையைக் கூறலாம், இவர் செய்! அவர் செய்! என்று கட்டளையிடுவது தொடர்கிறது. இது நல்லதா! கெட்டதா! சரணம் சாமி என்று நடக்கும் முறையில்லையா இது?..அப்டியானால்……

மேலே கூறிய சுதந்திர விளக்கம் என்னாகிறது!

இவைகள் என் சிந்தனைக்குள் வந்தவை. உதாரணமாகப் பலரது தொடர் பதிவினை வாசித்தேன்…..

இதென்னடா என்று

சிவனே என்று

இது கிடைத்தற்கரிய பாக்கியம்! என் பேறே மகா பேறு! என்று

என்னை விட்டால் போதும் என்று

இனிமேல் என்னைக் கேளாதீர்கள் என்று

பலர் பல விதமாக எழுதினவைகள் வாசித்து என்னுள் நவ ரசங்களும் வழிந்தோடியது. அதன் விளைவே இந்த மன ஓட்ட விவரணம்….

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-9-2011.

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவி அழகன் --
  செப் 06, 2011 @ 06:49:35

  உண்மை தான் அன்புக்கு கட்டுபடலாம் கட்டளைக்கு அல்ல

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 06, 2011 @ 16:40:57

   நன்றி கவி அழகன்! உமது அன்பான வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். . ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. ramani
  செப் 06, 2011 @ 08:31:25

  மிகச் சரியான கருத்து மட்டுமல்ல
  இப்போது சொல்ல வேண்டிய நேரமும் கூட
  அதை உணர்ந்து ஒரு அழகான கவித்துவமிக்க
  பதிவாகத் தந்தமைக்கு
  மனமர்ந்த நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 06, 2011 @ 16:43:33

   மிக்க நன்றி சகோதரரே! உங்கள் அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மனம் மிக மகிழ்ந்தேன். உலகளந்தவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. மகேந்திரன்
  செப் 06, 2011 @ 08:43:59

  அன்பு சகோதரி
  பதிவின் ஆக்கமும் அதன் கருத்தும் நன்று.
  தனிச் சுதந்திரத்தில் கால்பதித்து அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்
  எண்ணம் மிகவும் கண்டிக்கத்தகுந்ததே..
  ஆயினும் இவர் இதைத் தொடர்ந்து எழுதினால்
  நன்றாக இருக்குமே என்று மன ஓட்டத்தில்
  சிந்தையேற்றிய சில அன்பர்கள் அன்பு வேண்டுகோள்களை எப்படி
  உதற முடியும்.
  நமக்குத் தெரிந்த நடையில் அதன் போக்கை மாற்றி
  சுவாரஸ்யமாக கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது.
  பதிவுலகின் நட்பு கெடுதற்கில்லை என்பது
  என் தாழ்மையான கருத்து.
  மனதில் பட்டதை சொன்னேன் சகோதரி.
  தவறேதும் இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.
  நன்றி.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 06, 2011 @ 16:48:24

   ஆமாம் சகோதரா மகேந்திரன் அன்பு வேண்டுகோளை உதற முடியாது தான். உங்கள் கருத்தை சுதந்திரமாகக் கூற உங்களுக்கு உரிமையுண்டு சகோதரா, நான் கூறியது போல. இதில் தவறேதுமில்லை சகோதரா. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. ஜெய்லானி
  செப் 06, 2011 @ 10:38:56

  100 சதம் கரெக்ட் என் மனதில் ஓடியதை அப்படியே சொல்லிட்டீங்க 🙂

  மறுமொழி

 5. மஞ்சுபாஷிணி
  செப் 06, 2011 @ 10:55:58

  அன்பாய் சொல்லும் எதுவும் ஏற்கக்கூடியதே..

  அதுவே கட்டளையாகும்போது ஏன் நாம இவர் பேச்சை கேட்டு அடங்கி போகனும்னு மனதில் எதிர்ப்பு முளைக்கும்….

  அருமையான கட்டுரை பகிர்வு வேதாம்மா…

  அன்பு வாழ்த்துகள்..

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 06, 2011 @ 17:26:00

   என் மனதில் தோன்றியதை எழுதினேன் சகோதரி. உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ரிஷபன்
  செப் 06, 2011 @ 12:18:29

  அப்படியா நினைக்கிறீர்கள்?
  எல்லாப் பதிவர்களும் அப்படி இல்லையே..
  ‘இவர்’ எழுதினால் ஏதேனும் சுவாரசியமாய் சொல்லக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கலாமே..
  நீங்கள் வாசித்தவைகள் எவை என்று புரியாததால் முழுமையாக கருத்து கூற முடியவில்லை.
  மகேந்திரன் நான் சொல்ல நினைப்பதை அப்படியே சொல்லி விட்டார்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 06, 2011 @ 17:35:17

   அன்புச் சகோதரன் ரிஷபன் நிறைய பதிவுகள் வாசித்தேன். உங்களுக்குப் பிடிக்காதவை என்று எழுதும் போது பதிலாக இந்தத் தொடர் பதிவு என்றும் எழுதப் பட்டிருந்தது. ஆக நான் சொன்னதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறு இல்லை சகோதரா! எந்தக் கருத்தும் கூறும் உரிமை யாருக்கும் உள்ளது. கருத்திற்கு நன்றி, மகிழ்ச்சி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. தமிழ்த்தோட்டம்
  செப் 06, 2011 @ 14:02:28

  நல்ல கருத்து

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 06, 2011 @ 17:37:01

   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தமிழ் தோட்டத்திற்கு உரித்தாகுக. தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. ரெவெரி
  செப் 07, 2011 @ 00:06:01

  மிகச் சரியான கருத்து …நல்லாயிருந்தது சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 07, 2011 @ 07:04:53

   மிக்க நன்றி சகோதரா! உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும். மிக மகிழ்ச்சியும் அடைந்தேன். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. vinothiny pathmanathan
  செப் 07, 2011 @ 08:13:11

  தனி மனித சுதந்திரம் என்பது எல்லோருக்கும் தேவை. என்ன அது தவறான வழியில் செல்லாத வரை .இந்த தனி மனித சுதந்திரத்தை தப்பாக கையாள்பவர்கள் எத்தனை பேர் நம்மவர் மத்தியில் ?உங்கள் கருத்து நன்று

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 07, 2011 @ 10:03:37

   மிக நன்றி விநோதினி. உமது அன்பான சிந்தனைக் கருத்து மிக நன்று. எனது மகிழ்வையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். வருகைக்கும் மிக நன்றி. தெய்வத் திருவருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. jaghamani
  செப் 07, 2011 @ 18:02:42

  அருவிச் சாரலாக அழகான திறமைகள் பாய்ந்தோடி, பார்ப்போரை வியக்க வைக்கின்றன.

  கருத்துக்கு பாராட்டுக்கள்.

  மறுமொழி

 11. பிரபுவின்
  செப் 09, 2011 @ 12:03:00

  மிகச் சரியான கருத்து.மிக்க நன்றி சகோதரி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: