வாழ்வியற் குறள்+தாழிசை. 13

 

Art by Vetha.

வாழ்வியற்  குறட்டாழிசை  13.

முயற்சியுடைமை.

 

முயற்சியுடன் முனைவோனின் நல்ல வினை
அயர்ச்சி  காண்பது அரிது.

த்தனை செல்வம் குறைந்தாலும் முயற்சியாளன்
சித்தம் என்றும் சோர்வதில்லை.

தேனீயின் சுறுசுறுப்புடைய முயற்சியாளனால் ஒரு
விநாடியும் சோர்ந்திட முடியாது.

பொறாமை அனல், வெட்கக் குமிழ்கள்
தேறாத தடையாகும் முயற்சிக்கு.

முயற்சியாளனுக்கு அயர்ச்சியற்ற மனமே காந்தம்.
பயிற்சி ஒன்று தேவையில்லை.

றும்பின் அயராத முயற்சியாளனுக்கு  என்றும்
வறுமையென்பது தோல்வி தான்.

முயற்சியுடையோன் வாழ்வு புன்னகைத் தோட்டம்.
இழந்தோனிற்கு மயான வட்டம்.

முயற்சியாளன் சுய நம்பிக்கைக்காரன். தனவந்தன்.
யெயம் பெறுவது திண்ணம்.

யாருக்கும் தலை வணங்காத வாழ்வை
ஓயாத முயற்சியாளன் கொள்வான்.

முயற்சி ஆனந்தத்தின் சைகை, சாதனைக்
கயிறு, நல்லேணிப் படி.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-9-2011.

(திவான் பகதூர் பாவாந்தப் பிள்ளையின் யாப்பருங்கல விருத்தியுரையின் படி
” இரண்டடியாய் ஈற்றடி குறைந்த இஃது குறட்டாழிசை என்பர்.”
இலக்கிய அறிவு சார்ந்த அன்புள்ளத்தின் திருத்தத்தை ஏற்று இனி  குறள் – தாழிசை  என்று வருகிறது)

In Anthimaalai web site:-     http://anthimaalai.blogspot.com/2011/10/13.html

  

                            

 

 

 

 

32 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. soundarapandiann
  செப் 09, 2011 @ 05:06:36

  நன்று

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 09, 2011 @ 19:26:18

   என்ன தெரியுமா! சௌந்தர பாண்டியன்! கவிதைவீதி சௌந்தர் என்றால் தெரியும்..சௌந்தர பாண்டியன் என்றவுடன் முழித்து விட்டேன் இது யாரடா என்று! அது தான கேள்வி கேட்டு லிங்க் கேட்டேன். மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. soundarapandiann
  செப் 09, 2011 @ 05:07:29

  வித்தியாசமான முயற்ச்சி நவீன காலத்திற்கக்கு ஏற்றார் போல் உள்ளது..

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 09, 2011 @ 19:28:13

   மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ….சகோதரா உமது ரசனைக்கு. வரவிற்கும், கருத்திற்கும் மேலும் நன்றிகள். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. ramanujam
  செப் 09, 2011 @ 06:22:00

  முயற்சி உடையார்
  இகழ்சி அடையார்
  முன்னது நீங்கள்
  பின்னது பெறுவீர்
  சொன்னது நன்கே
  சொல்லினீர் இங்கே

  புலவர் சா இராமாநுசம்

  மறுமொழி

 4. dhayanithi
  செப் 09, 2011 @ 09:56:16

  இந்த வாழ்வியல் குரல் உண்மையில் பாராட்டுகளுக்கு உரியன காரணம் இந்த வாழ்வியல் தேவையில் நல்லன எல்லாமே மரித்துபோகிறது நல்ல கருத்துகளை இப்படி பதியமிடுகிற போது நாளைய விளைச்சல் இளைய குமுகத்தில் வாழ்வியல் சிறப்பாக மலரும் தொடர்க இனிய வணக்கங்களுடன் …

  மறுமொழி

 5. cpsenthilkumar
  செப் 09, 2011 @ 11:15:56

  குட்

  மறுமொழி

 6. பிரபுவின்
  செப் 09, 2011 @ 12:01:15

  “யாருக்கும் தலை வணங்காத வாழ்வை
  ஓயாத முயற்சியாளன் கொள்வான்”

  இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கின்றது.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 09, 2011 @ 20:47:24

   இது நிச வாழ்வில் நாம் காண்பது தானே பிரபு. உமது வரவிற்கும், கருத்திற்கும் மிக மகிழ்வும் நன்றியும்.ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. http://reverienreality.blogspot.com/
  செப் 09, 2011 @ 15:54:20

  வாழ்வியல் குறள்…முயற்சியுடன் முனைவோனின் நல்ல வினை
  அயர்ச்சி காண்பது அரிது….

  நவீன குறள் அழகு…

  ரெவெரி

  மறுமொழி

 8. கோவை கவி
  செப் 09, 2011 @ 17:32:43

  தமிழ்த் தோட்டம் wrote:- நல்லா இருக்கு

  Vetha.Wrote. I am glad . Thank you very much. God bless you.

  மறுமொழி

 9. JK
  செப் 09, 2011 @ 21:21:24

  கோவைக்கவி

  முயற்சி ஆனந்தத்தின் சைகை, சாதனைக்
  கயிறு, நல்லேணிப் படி.

  மிக அருமை இது தான் என் முதல் வருகை உங்களின் கோவைக்கவி வலைக்கு , வலைக்குள் விழுந்துவிட்டேன் என்றால் மிகையாகாது

  நன்றி
  ஜேகே

  மறுமொழி

 10. Ambaladiyal
  செப் 09, 2011 @ 22:29:05

  யாருக்கும் தலை வணங்காத வாழ்வை
  ஓயாத முயற்சியாளன் கொள்வான்.

  அருமையம்மா தங்கள் ஆக்கத்துக்கு
  வாழ்த்துக்கள் .மிக்க நன்றியம்மா
  கருத்திட்டுச் சென்றமைக்கு ………

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 10, 2011 @ 16:06:49

   சகோதரி ஓடி ஓடி கருத்தெழுதும் உமது ஊக்கம் காண்கிறேன். இங்கு வந்து கருத்தெழுதியதற்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. மகேந்திரன்
  செப் 10, 2011 @ 00:57:28

  முயற்சியுடையோர் இகழசியடையார்
  என்ற கருத்தை
  தாங்கி வந்த
  எல்லாக் குறள்களும்
  அழகாக மிளிர்கிறது சகோதரி..

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 10, 2011 @ 16:08:41

   முயற்சியுடைய சகோதரா! மகேந்திரன்! மிக்க மிக்க நன்றி உமது இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 12. ramani
  செப் 10, 2011 @ 10:57:47

  ஒரு பொருள் குறித்து இப்படி தொடர் சிந்தனை செய்து
  படைப்பைத் தருதல் அரிய செயலே
  அதையும் மிக அருமையாகச் செய்துள்ளீர்கள்
  இப்படி நேர்மறையான சொல்லை திரும்பத் திரும்ப
  உச்சரித்தலே நமக்குள் ஒரு நேர்மறை எண்ணத்தைத்
  தோற்றுவிக்கும் என்கிற உயரிய நோக்கிலேயே
  இதை படைத்துள்ளீர்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது
  தரமான மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 10, 2011 @ 16:13:58

   மிக நன்றாக உள்வாங்கி நல்ல கருத்தை உமிழ்ந்துள்ளீர்கள் இதற்கொரு திறமை வேண்டும். அது அங்கு உள்ளது. நன்றி..நன்றி. மிக மகிழ்ச்சியும் கூட. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. மஞ்சுபாஷிணி
  செப் 10, 2011 @ 17:39:19

  மிக மிக அருமையாக முயற்சியுடைமை என்ற ஒற்றை வார்த்தையில் இத்தனை அழகிய வரிகளை படைக்கமுடிகிறது என்றால் அப்ப நீங்க எத்தனை யோசிச்சிருப்பீங்கன்னு அறிய முடிகிறது வேதாம்மா…

  சிறப்பான வரிகள் மட்டுமல்லாது எங்கள் எல்லோருக்குமே இது என்றும் பயன் தரக்கூடிய பொக்கிஷ வரிகளும் கூட….

  ஒவ்வொரு வரியும் நமக்கு சொல்லி செல்லும் கருத்து மிக மிக அருமை வேதாம்மா..

  பகிர்வுக்கு அன்பு நன்றிகள் வேதாம்மா…

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 11, 2011 @ 08:02:56

   நிசம் மஞ்சும்மா! நிறைய யோசித்து, கிழித்துக் கிழித்து எழுதுவேன். துணைக்கு வாசிப்பதும் உண்டு. ஆனால் வேறு பலர் செய்வது போல பெரிய இலக்கிய நூல்கள் புரட்டுவதில்லை. உங்கள் நல்ல கருத்திற்கு மிக மகிழ்ச்சியும் நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 14. vinothiny pathmanathan
  செப் 10, 2011 @ 18:16:03

  முயன்றால் முடியாதது எதுவுமல்ல .

  நல்ல கருத்துக்கள்
  வாழ்த்துக்கள் வேதா அன்ரி

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 11, 2011 @ 08:10:46

   உண்மை விநோ! முயற்சியே முழு மனிதனின் தாரக மந்திரம். இதை முழுமையாகச் செய்பவள். உமது கருத்திற்கும் வருகைக்கும் தலை வணங்குகிறேன் நன்றி…நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 15. கவி அழகன் --
  செப் 11, 2011 @ 04:40:17

  முயற்சி பற்றி முழு விளக்கம் தரும் வரிகள்
  அற்புதமான பாடங்கள்

  மறுமொழி

 16. ரிஷபன்
  செப் 11, 2011 @ 14:48:40

  உங்கள் முயற்சியில் விளைந்த நல்முத்துக்கள்..
  படிக்க படிக்க தனி உற்சாகம்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 12, 2011 @ 19:30:16

   மிக்க மகிழ்ச்சியும, நன்றியும் ரிஷபன். உமது இனிய வருகை கருத்திடல் மிக மகிழ்வைத் தருகிறது. மறுபடியும் நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 17. Natarajan Mariappan
  அக் 03, 2011 @ 00:07:42

  முயற்சியுடன் முனைவோனின் நல்ல வினை
  அயர்ச்சி காண்பது அரிது

  வாழ்க்கை என்ற வண்டிக்கு அச்சாணி முயற்சி…
  அதை அழகு தமிழில் அல்லிப் பூவாய் அள்ளிக்கொடுத்துள்ளீர்கள் சகோதரி!
  பகிர்வுக்கு நன்றி!

  மறுமொழி

 18. கோவை கவி
  அக் 11, 2011 @ 20:57:30

  சகோதரரே! சகோதரரே! உங்கள் இனிய வரவிற்கும், கருத்திற்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: