206. உறவு ஊஞ்சல்.(பாமாலிகை (கதம்பம்)

உறவு ஊஞ்சல்.

 

டலில் ஆடும் படகு
உடலில் ஆடும் உணர்வு
உயிரில் ஆடும் உடல்
வயிற்றில் ஆடும் கரு
கயிற்றில் ஆடும் ஊஞ்சல்
காற்றில் ஆடுது கவிதையாய்.

வாழ்வெனும் ஊஞ்சலில் ஆடுகிறோம்
தாழ்ந்திடாத தடம் தேடுகிறோம்
வாழ்ந்திடப் பாடு படுகிறோம்.
வீழ்ந்திடாத இடம் நாடுகிறோம்.
ஆசையின் பிடியில் ஆடுகிறோம்.
ஆடிக் காற்றாய் அலைகிறோம்.

ன்பெனும் ஊஞ்சலில் ஆடுகிறோம்.
அத்திவாரம் உறவில் தேடுகிறோம்.
அங்கீகாரம் தேடி அலைகிறோம்
அனுபவ ஊஞ்சலில் முதிர்கிறோம்.
அமோகமாகவும் ஆடுகிறோம்.
அத்துவானமாகவும் போகிறோம்.

(அனுபவ ஊஞ்சலில் முதிர்கிறோம்.
ஆசையின் பிடியில் ஆடுகிறோம்.
ஆடிக் காற்றாய் அலைகிறோம்.
ஓடுவதெதற்கு! உயிரில் கலக்கும்
ஒன்றிணைந்த பாச உறவுகளே
ஒதுக்கிவிட்டால் துடிக்கிறோம்.

22-3-2018)
 

வி ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2001.

(த்துவானம் – பாழிடம்)

31-1-2001ல் – ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியிலும்
23-3.2006ல் இலண்டன் தமிழ் வானொலியிலும்
14-8.2007ல் மறுபடி ரி.ஆர்.ரி வானொலியிலும் என்னால் வாசிக்கப் பட்டது.

 

ஊஞ்சல் ஆடலாம்.

கவிதை ஊஞ்சல் ஆடலாம்
கருத்து ஊஞ்சல் ஆடலாம்.
உயரே உயரே ஆடலாம்
உந்தி உந்தி ஆடலாம்.
கச்சிதமாய் எவரும் ஆடலாம்.
கரிசனமாய் நாமும் ஆடலாம்.

கனவு ஊஞ்சலில் கன்னியரும்
கற்பனை ஊஞ்சலில் காளையரும்
கட்டுப்பட்டு வீணாகாமல் நற்
கடமை ஊஞ்சல் ஆடியே
காரியம் ஆற்றுவோம் வாரீர்!
கருத்தாம் ஊஞ்சல் கேளீர்!

சுற்றம் சூழல் மறந்து
கற்ற நினைவுகள் நினைந்து
சுயநலம் மட்டும் பெரிதாய்
சுகம் காணும் மனதாய்
ஆடும் ஊஞ்சல் தவிர்ப்போம்
ஆகும் களிப்பும் தவிர்ப்போம்.

3-2-2001

 

                           
 

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவி அழகன் --
  செப் 11, 2011 @ 12:34:10

  வாழ்ந்திடப் பாடு படுகிறோம்.
  வீழ்ந்திடாத இடம் நாடுகிறோம்.
  சூப்பர் வரிகள்

  அருமையான பாடல் போன்ற வரிகள்
  கவரும்படியாக உள்ளது

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 11, 2011 @ 17:49:13

   கவி அழகா! கவி அழகன் அழகா! மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உமது அன்பான வருகைக்கும் வரிகளுக்கும். தெய்வத்தின் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. VAI. GOPALAKRISHNAN
  செப் 11, 2011 @ 13:15:18

  கவிதை வெகு அருமை.

  //வாழ்வெனும் ஊஞ்சலில் ஆடுகிறோம்
  தாழ்ந்திடாத தடம் தேடுகிறோம்
  வாழ்ந்திடப் பாடு படுகிறோம்.
  வீழ்ந்திடாத இடம் நாடுகிறோம்.//

  சபாஷ்.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 11, 2011 @ 17:52:23

   மிக்க நன்றி ஐயா. வெகு நாட்களுக்கு அப்புறம் வந்துள்ளீர்கள். உங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக மகிழ்வும் நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. ரிஷபன்
  செப் 11, 2011 @ 14:46:03

  அனுபவ ஊஞ்சலில் முதிர்கிறோம்.
  அமோகமாகவும் ஆடுகிறோம்.
  அத்துவானமாகவும் போகிறோம்.

  அனுபவ வரிகள்.. அழகாய் ஆடுது மனசில் இப்போது.
  படங்கள் அருமையான தேர்வு.

  மறுமொழி

 4. மகேந்திரன்
  செப் 11, 2011 @ 17:34:15

  //வாழ்வெனும் ஊஞ்சலில் ஆடுகிறோம்
  தாழ்ந்திடாத தடம் தேடுகிறோம்//

  வாழ்வெனும் ஊஞ்சலில்
  ஆடுகையில்
  தாழ்ந்துவிடா தளம் தேடல்

  அருமையான வார்த்தைப் பிரயோகம்
  சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 11, 2011 @ 18:00:22

   உயர்ந்த தளம் தேட உன்னி உன்னி ஆடுகிறோம். எண்ணிலாத் துன்பம் அடைகிறோம். பலவற்றைச் சொல்லிட முடியாது. சிலவற்றைச் சொல்லி ஆறிட முடிகிறது. சிரித்த படியே வதைக்கும் அரக்கர்கள்….தாழ்ந்திடாத் தளம் தேட….மிக்க மகிழ்வடைந்தேன் மகேந்திரா உங்கள் வருகையால்.இனிய கருத்திற்கும் மிக்க நன்றி உரித்தாகுக. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. மஞ்சுபாஷிணி
  செப் 11, 2011 @ 18:26:04

  சிந்திக்க வைத்த வரிகள் வேதாம்மா..

  எங்கள் மனதையும் ஊஞ்சலில் ஆடவிட்டு சிலாகிக்க வைத்த கவிதை வேதாம்மா….

  அருமையான அசத்தல் வரிகளுடன் பொருத்தமான அழகு படங்கள் வேதாம்மா..

  அன்பு வாழ்த்துகள் அழகிய படைப்புக்கு…

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 12, 2011 @ 17:22:02

   ஊஞ்சலாடுவது எப்போதும் எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா! நாமும் கருத்து ஊஞ்சல் ஆடி மகிழ்ந்து நன்றி கூறுகிறேன். இனிய உங்கள் வரிகளுக்கும் நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ramani
  செப் 11, 2011 @ 23:32:11

  ரசித்து நிறுத்தி தங்கள் கவிதையைப் படிக்கையில்
  ஊஞ்சலில் ஆடுவது போன்றே உணர முடிகிறது
  கருத்தும் சந்தமும் பின்னிப் பிணைந்து
  படிப்போரை சுக ஊஞ்சலில் ஆடவைத்துப் போகிறது
  தரமான பதிவைத் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 12, 2011 @ 17:24:52

   எல்லோருக்கும் பிடித்த கருத்து ஊஞ்சலில் ஆடி உங்களுக்கு நன்றி கூறுகிறேன். மிக மகிழ்வடைந்தேன் உங்கள் பின்னூட்டத்திற்கு. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. முனைவென்றி நா சுரேஷ்குமார்
  செப் 12, 2011 @ 03:37:02

  அருமை

  மறுமொழி

 8. SUJATHA
  செப் 12, 2011 @ 04:14:58

  ”வேதா” உறவின் ஊஞ்சலில் அன்பு, பரிவு, அரவணைப்பு கிடைக்கும் போது அதைவிட இன்பம் வேறில்லை. வாழ்க்கை ஒரு ஒடம். கற்றுக்கொள்ளும் போது அதில் பாதி வாழ்ந்திடவும் பாடு படுகின்றோம்…………..அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 12, 2011 @ 17:31:07

   இனிய சுஜாதா! சரியானபடி கருத்தைப் பதிந்துள்ளேன். என்னால் உள்ளே எடுத்துத் திருத்த முடியுமல்லவா! உமது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மகிழ்வான நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. ரெவெரி
  செப் 12, 2011 @ 05:04:54

  உறவு ஊஞ்சல்… எங்கள் மனதையும் ஆடவிட்டு சிலாகிக்க வைத்த கவிதை…வாழ்த்துக்கள்

  மறுமொழி

 10. unmaivrumbi
  செப் 12, 2011 @ 05:26:48

  உடலில் ஆடும் உணர்வு
  உயிரில் ஆடும் உடல்
  வயிற்றில் ஆடும் கரு!

  அருமையான வரிகள் சகோதரி, வாழ்த்துக்கள்!

  உண்மைவிரும்பி.
  மும்பை

  மறுமொழி

 11. ரமேஷ்
  செப் 12, 2011 @ 16:48:58

  வாழ்ந்திடப் பாடு படுகிறோம்.

  உண்மை தான் பாடாய் படுகிறோம்

  அன்பெனும் ஊஞ்சலில் ஆடுகிறோம்.

  அது இல்லை என்றால் பிடிமானமில்லாமல் போய்விடுமே வாழ்க்கை

  ஆசையின் பிடியில் ஆடுகிறோம்.
  ஆடிக் காற்றாய் அலைகிறோம்.

  உண்மை தான் இதை அடக்கமாட்டாமல் தான் பல பிழைகள் செய்ய விழைகிறோம்

  பாடல் கவிதை அருமை சகோ

  மறுமொழி

 12. cpsenthilkumar
  செப் 13, 2011 @ 06:39:24

  ?>>>வாழ்வெனும் ஊஞ்சலில் ஆடுகிறோம்
  தாழ்ந்திடாத தடம் தேடுகிறோம்
  வாழ்ந்திடப் பாடு படுகிறோம்.
  வீழ்ந்திடாத இடம் நாடுகிறோம்.
  ஆசையின் பிடியில் ஆடுகிறோம்.
  ஆடிக் காற்றாய் அலைகிறோம்.

  டாப்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 13, 2011 @ 06:44:25

   உங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மகிழ்வடைந்தேன். அன்பான நன்றியும். தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: