207. மனித தரம் (பாமாலிகை (கதம்பம்)

 

 

மனித தரம்

 

சிரிப்பு உயர் மனித தரம்.
சிந்தனை என்பதும் மனித தரம்.
சிகரம் தொடுவதும் மனித தரம்.
சிவஞானச் சிந்தனையும் மனித தரம்.

‘ சிக்’ கெனத் தவறும் சிந்தனைத் தெறிப்பு
சிக்காது தொடரும் நகைச்சுவைச் சிரிப்பு
நிற்காத மனதின் நிலையற்ற தவிப்பு
தக்காது நிதானம் தவறும் குறிப்பு.

அகரம் தொட்டு வளரும் அறிவு
நுகர இனிமை, தொடரும் உயர்வு.
பகரப் பகர நெருங்காது அயர்வு,
பக்குவமான உயர் அறிவின் உணர்வு.

அஞ்ஞானம் மறைய அகவிருள் ஒளிர்வு.
மெஞ்ஞானம் வந்து மேலோங்கும் உணர்வு.
சுயஞானம் ஒளிர  சுகமான நிறைவு.
சிவஞானம் தானாகத் தோன்றும் உணர்வு.

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-4-2004.

(24-4-2004ல் ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் சகோதரர் லோகதாஸ் நிகழ்ச்சியில் இக் கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.
மறுபடி 17-3-2006 லும் வாசிக்கப் பட்டது.
13-9-2011 ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் என்னால் இக் கவிதை வாசிக்கப் பட்டது.)

 

                             

35 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. palanivels
  செப் 14, 2011 @ 07:12:51

  கவிதை மிக அருமை.. ஒரு சில வரிகள் மறுமுறை வாசித்தப்பின்னரே விளங்கியது.. எமது தமிழறிவு அப்படி! நல்கவிதை வழங்கியமைக்கு மிக்க நன்றி பாராட்டுதல்கள்..!! நீங்கள் வாசித்த ரி.ஆர்.ரி வானொலி ‘கவிதைஒலியையும்’ இங்கே இணைக்கலாமே.!! வாசிப்பதைவிட, கேட்டுத் தெளிவது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் இக்கருத்தை முன் வைக்கிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 14, 2011 @ 19:11:50

   சகோதரா! இப்போதைக்கு கவிதை கேளுங்கள் தலைப்பில் 2-3 கவிதைகள் இங்கு வலையில் இருக்கிறது. எனது குரலில் கேட்கலாம். உங்கள் அன்பான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மகிழ்ச்சியும் நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. மஞ்சுபாஷிணி
  செப் 14, 2011 @ 07:13:04

  அழகிய படங்களை பொருத்தமாக இட்டு வாழ்க்கைக்கு தேவையானதை ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதை மிக அருமையாக மென்மையாக சொல்லி செல்கிறது வரிகள்…

  மனிதனின் தரம் எப்போது உயர்கிறது….
  நல்லதை சிந்தித்து மற்றவரின் மனம் புண்படாது வார்த்தைகள் பகிர்ந்து உதவும் சிந்தனையுடன் நேர்மை வழியில் வெற்றியை குவித்து அந்த போதையில் மனிதன் தடுமாறாமல் நிலையாய் சமனாய் நிற்கும்போது…
  அருமை வேதாம்மா…

  அன்பு நன்றிகள் பகிர்வுக்கு

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 14, 2011 @ 19:29:31

   மஞ்சும்மா! பின்னூட்டத்திங்கு உங்களுக்குப் பி.எச்.டி பட்டம் கிடைத்துள்ளது. மிகச் சரி. அந்த மாதிரி எழுதித் தள்ளுகிறீர்கள் .எனக்கெல்லாம் இவ்வளவு எழுத வராது பின்னூட்டமிட. மிக குறுக்கமாகவே எழுதுவேன். உங்கள் கருத்திடுகைக்கு மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்.இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. Gandhi
  செப் 14, 2011 @ 08:09:03

  வேதா அக்கா, அருமையா பதிவு.

  மறுமொழி

 4. VAI. GOPALAKRISHNAN
  செப் 14, 2011 @ 11:49:01

  அருமையான பதிவு, அழகான படங்கள். பாராட்டுக்கள். vgk

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 14, 2011 @ 19:23:48

   மிக்க நன்றி ஐயா! உங்கள் அன்பான வருகை மகிழ்வைத் தருகிறது. இனிய பின்னூட்டத்திற்கும் நன்றிகள் உரித்தாகுக. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. http://reverienreality.blogspot.com/
  செப் 14, 2011 @ 18:38:05

  கவிதை மிக அருமை…அழகான படங்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 14, 2011 @ 20:08:37

   உங்கள் அன்பான வருகையாலும் பின்னூட்டத்தினாலும் மிக்க மகிழ்ச்சி கொண்டேன். மனமார்ந்த நன்றியும் உரித்தாகுக. ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ரமேஷ்
  செப் 15, 2011 @ 05:43:05

  மனிதனின் பல்வேறு நிலைகள் ,தன்மைகள் அழகாக சொல்கிறது தங்கள் கவிதை

  பகிர்வுக்கு நன்றி சகோ…

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 15, 2011 @ 05:51:54

   அன்பின் ரமேஷ் உமது இனிய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக மகிழ்வும் நன்றியும் கூறுகிறேன். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. stalinwesley
  செப் 15, 2011 @ 07:49:16

  super………..

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 15, 2011 @ 15:23:39

   அன்புடன் ஸ்ராலின் வெஸ்லி! மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும். தாங்கள் ரெம்பப் பிரமாதமான தொழில் நுட்பவியலாளர் போல உள்ளது. அம்மாடீயோ நான் ரெம்பத் தூரம். பயமாயிருக்குங்க….உங்க கிட்ட வர…ஆயினும் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. போளூர் தயாநிதி .
  செப் 15, 2011 @ 10:47:41

  அஞ்ஞானம் மறைய அகவிருள் ஒளிர்வு.
  மெஞ்ஞானம் வந்து மேலோங்கும் உணர்வு.
  சுயஞானம் ஒளிர சுகமான நிறைவு.
  சிவஞானம் தானாகத் தோன்றும் உணர்வு.//

  சிறப்பான பதிவு ஆனால் நாம்தான் கடவுள் கொள்கை கடவுள் பற்று இல்லதவனகிறேன் .அஞ்ஞானம் மறைய தெளிவான ஆய்வு முதிர்ச்சி வேண்டும். ஆனால் அது கடவுள் கொள்கையில் கிடைக்க வாய்ப்பு குறைவு அல்லது இல்லை, எனவே . நீங்கள் குறிப்பிட்டபடி “”சுயஞானம் ஒளிர சுகமான நிறைவு.”” தானே முரியப்படி கற்று தேர்ந்து முழுமையடைய வேண்டும் அதற்கு உண்மையான தேடலும் உயர்ந்த நோக்கமும் தேடலில் தெளிவும் இருக்கவேண்டும் சிறந்த இடுகை உளம் நிறைந்த பாராட்டுகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 15, 2011 @ 15:33:43

   நிறைந்த ஆய்வுடன் கருத்திட்டுள்ளீர்கள். மிக மகிழ்வடைந்தேன் ஐயா. கவிதை என்றாலும் கண்டபடி எழுத முடியாது. மிக சிந்தித்துத் தான் எழுதுவதுண்டு. நானே பிறர் எழுதுவதில் கருத்துப் பிழைகள் இருந்தால் கேட்பதுண்டு. ஆதலால் நானும் சரியானபடி எழுத வேண்டுமென நினைப்பதுண்டு. மிக்க நன்றி ஐயா. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. Kowsy
  செப் 15, 2011 @ 12:24:49

  அகரம் தொட்டு வளரும் அறிவு
  நுகர இனிமை, தொடரும் உயர்வு.
  பகரப் பகர நெருங்காது அயர்வு,
  பக்குவமான உயர் அறிவின் உணர்வு.

  ஆம் தெரிந்த விடயத்தைப் பலருக்கும் சொல்லும் போது தான் நீங்கள் சொன்னது போல் அயர்வு நெருங்காது. அறிவும் உயர்வு பெறும். சிறப்பான வரிகள் வாழ்த்துகள்

  மறுமொழி

 10. Ambaladiyal
  செப் 15, 2011 @ 14:11:10

  மனித தரத்தைப் பற்றி மிக அழகாக
  கவிதை வடிவில் தந்த உங்களுக்கு
  மிக்க நன்றி வாழ்த்துக்கள் அம்மா …..

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 15, 2011 @ 15:40:03

   அம்பாளடியாள்! எனக்கு நேரம் ஒதுக்கி வந்து கருத்திட்டமைக்கு மிக மகிழ்வும் நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. முனைவர் இரா.குணசீலன்
  செப் 15, 2011 @ 16:19:07

  நல்லதொரு பதிவைப் படித்த மனநிறைவுடன் செல்கிறேன்.

  மறுமொழி

 12. முனைவர் இரா.குணசீலன்
  செப் 15, 2011 @ 16:24:40

  இன்று எனது வலையில்..
  1.அடக்கம் செய்யவா அறிவியல்
  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

  2.விடை தெரியாத கேள்விகள்
  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_14.html

  3.இதுவல்லவா செல்வம்
  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_15.html

  காண அன்புடன் அழைக்கிறேன்..

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 15, 2011 @ 17:42:45

   அடடா! கண்டேன்! கருத்துமிட்டேன் மிக மிக மகிழ்ச்சியும் நன்றியும் இந்த இணைப்பைத் தந்ததற்கு. எவ்வளவு அருமையான பதிவுகள்!!!. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. vinothiny pathmanathan
  செப் 15, 2011 @ 16:31:05

  superb

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 15, 2011 @ 17:44:22

   அன்புச் சகோதரி..நேர நெருக்கடியிலும் என் தளம் பார்த்து கருத்திடும் உங்கள் அன்பிற்குத் தலை வணங்குகிறேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

   • vinothiny pathmanathan
    செப் 16, 2011 @ 14:44:35

    நீங்கள் குறிப்பிட்டது மிகவும் சரியே. அண்மையில் தான் புதிய பகுதி நேர வேலை ஒன்றை தொடங்கியிருக்கிறேன். நேரம் பற்றாக்குறை.

 14. maaya ulagam rajesh
  செப் 17, 2011 @ 03:45:38

  இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 17, 2011 @ 15:40:52

   ,இது வலைச்சரத்தில் ராஜேசின் வரிகள்:-

   ”….சகோ வேதா.இலங்காதிலகம் அவர்கள் வேதாவின் வலை என்ற வலைப்பூவில் சிந்தனைச்சாரல் என்ற தொடர் பதிவுகளை இலக்கிய நடையில் நமக்கு ஊட்டி சிந்திக்கவைக்கிறார்… இவரது அருமையான படைப்புகள் இவரது வலைப்பூவிற்கு தொடர்ந்து நம்மை அழைத்துச்செல்லும் என்பது உண்மை….”’

   இப்படி ஒரு அறிமுகம் தந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி சகோதரனே! அங்கும் கருத்திட்டுள்ளேன். இங்கு வருகைக்கும், தகவலுக்கும் மிகுந்த நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 15. பிரபுவின்
  செப் 17, 2011 @ 07:05:46

  எந்த வரிகளைப் பாராட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை.நன்றி சகோதரி.

  மறுமொழி

 16. Rajarajeswari
  செப் 17, 2011 @ 08:08:05

  தரமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  மறுமொழி

 17. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  செப் 19, 2011 @ 07:47:52

  அகரம் தொட்டு வளரும் அறிவு
  நுகர இனிமை, தொடரும் உயர்வு.
  பகரப் பகர நெருங்காது அயர்வு,
  பக்குவமான உயர் அறிவின் உணர்வு………….மிகவும் பிடித்த வரிகள். அருமை சகோதரி !

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: