கேட்டறிதல் 14. (வாழ்வியல் குறள்+தாழிசை)

 

 

வாழ்வியற்  குறட்டாழிசை

கேட்டறிதல் 14.

 

கூட்டறிவின் ஒரு பகுதி அறிவுடன்
கேட்டறியும் செவிச் செல்வம்.

பார்த்தறிதல், படித்தறிதல் போன்று உலகில்
கேட்டறிதலும் பெரும் செல்வமே.

கேட்டதும் கெட்டதை உடன் மற!
கேட்ட நல்லதோடு தொடர்.

நல்லதைக் கேட்டு பிறருக்கும் தெரிவி!
சொல்வதால் உயர்வாய்! கீழாகாய்!

பெரியோர் வாய் மொழிகள் கேட்டு
உரிய வழியில் செல்லலாம்.

நூலறிவு இல்லாவிடிலும் கேட்ட அறிவு
மேலுயரப் பயனாகும் நல்லவனிற்கு.

பொல்லாத ஊனக்காரர் சிலர் புவியில்
நல்லனவற்றைப் பிறருக்குக் கூறார்.

விட்டு விலகி எதிரியாகாது, பார்த்தும்
கேட்டும் பழகுதல் நட்பு.

வயிற்றிற்கு உணவு, கண்ணிற்குக் காட்சி
செவிக்குக் கேட்டலும் பூரணம்.

கேட்கும் கேள்விகளால் தெளிவு பிறக்கும்.
வாட்டும் ஐயப்பாடு விலகும்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
17-9-2011.

In Anthimaalai web site:-   http://anthimaalai.blogspot.com/2011/10/14.html

  

 

                        
 

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பிரபுவின்
  செப் 17, 2011 @ 07:03:04

  “பார்த்தறிதல், படித்தறிதல் போன்று உலகில்
  கேட்டறிதலும் பெரும் செல்வமே.

  கேட்டதும் கெட்டதை உடன் மற!
  கேட்ட நல்லதோடு தொடர்”

  என்ன அழகான தெளிவான வரிகள்.உண்மையில் கேட்டறிதலின் சிறப்பு பார்த்தறிதல், படித்தறிதலை விட மிகவும் சிறப்பானது.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 17, 2011 @ 08:27:48

   மிக்க மகிழ்ச்சி பிரபு. (once in a blue moon – your presence .its o.k) உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக மிக நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. Rajarajeswari
  செப் 17, 2011 @ 08:06:25

  கூட்டறிவின் ஒரு பகுதி அறிவுடன்
  கேட்டறியும் செவிச் செல்வம்./

  செல்வத்துள் செல்வம் செவிச்செலம் -அச்செல்வம்
  செலவத்துள் எல்லாம் தலை

  அருமையான தலையாய படைப்புக்கு பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 17, 2011 @ 08:35:05

   அப்பப்பா! இறுதியில் என்னிடம் வர நேரம் வந்திச்சு..சகோதரி. நன்றி…நன்றி…உங்கள் இனிய கருத்திற்கும் மிக மகிழ்வும் நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. cpsenthilkumar
  செப் 17, 2011 @ 08:15:49

  நீங்க தமிழ் எம் ஏவா?

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 17, 2011 @ 08:32:03

   நீங்க சினிமா எம்.ஏ…..வா?
   அப்படி அக்கு வேறு ஆணி வேறா பிட்டுப் பிட்டு வைக்கிறீங்களே?

   நன்றி சகோதரா உங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. ரிஷபன்
  செப் 18, 2011 @ 11:19:42

  நல்லதைக் கேட்டு பிறருக்கும் தெரிவி!
  சொல்வதால் உயர்வாய்! கீழாகாய்!

  ஆமாம். ஆமாம். பகிர்தலில் கிட்டும் இன்பம், மேன்மை சொல்லில் அடங்காதது..

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   செப் 18, 2011 @ 19:20:50

   பகிர்ந்து தானே நாம் அனுபவிக்கிறோமே ரிஷபன். இல்லாவிடில் இப்படி வேலை மெனக் கெட்டு ஆக்கம் வலையேற்றுவோமா? மிக்க நன்றி ரிஷபன் உமது வருகைக்கும், வரிகளுக்கும் இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. ramani
  செப் 18, 2011 @ 13:05:44

  கற்றலின் கேட்டலே நன்று
  தங்கள் பதிவைப் போல தரமான பதிவுகளை
  விடாது தொடர்தல் அதனினும் நன்று

  மறுமொழி

 6. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  செப் 19, 2011 @ 07:59:53

  வாழ்வியல் குறள்கள் அனைத்தும் சிறப்பு, தொடருங்கள் …………..

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   செப் 19, 2011 @ 16:39:46

   மிக்க மகிழ்ச்சி சகோதரா நடா சிவா. உங்கள் அன்பான வருகை, கருத்திடலுக்கு மிகுந்த நன்றி.ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. மஞ்சுபாஷிணி
  செப் 19, 2011 @ 16:23:05

  படித்து அறியும் தெளியும் விஷயங்களை விட கேட்டு அறியும் பெறும் ஞானங்கள் அதிகமாகும். அனுபவங்கள் நமக்கு பாடங்கள் ஆவதுண்டு…

  பார்த்து அறிவதை போல படித்து அறிவதை போல கேட்டு அறியப்படும் கேள்வி ஞானத்தின் சிறப்பை மிக அழகாக தெள்ளத்தெளிவாக பகிர்ந்துள்ளீர்கள் வேதாம்மா…

  நல்லவை கேட்டு அறியும் விஷயங்களை மற்றவருக்கும் பகிரும் நல்ல மனமும் வேண்டும் என்றும்….

  மூத்தோர் சொல்லை மதித்து நடக்கவேண்டுமென்றும்….
  வயிற்றுக்கு ஈயப்படும் உணவினை போல, செவிக்கும் நல்லதை தருமாறு கேட்டுக்கொள்ளும் இதம் ரசிக்கவைக்கிறது வேதாம்மா..

  உங்கள் கைவிரல்களில் எழுத்துகள் வசப்படுகிறதை அறியமுடிகிறது…
  நல்லவை எடுத்தியம்பும் பாங்கு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது…

  நல்லவை தொடர என் அன்பு வாழ்த்துகள் வேதாம்மா…

  சிறப்பான ஈரடியில் உலகத்துக்கே அறிவுரை சொல்லும் பாங்கு சிறப்பு வேதாம்மா…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   செப் 19, 2011 @ 16:45:04

   மிக்க மகிழ்ச்சி மஞ்சும்மா.மிக ரசித்து கருத்து எழுதுகிறீர்கள். உண்மையில் கடந்த பிறவியில் நீங்கள் ஒரு பேராசிரியர் ஆக இருந்திருப்பீர்கள் என்று கூறலாம். அவ்வளவு விதமாக எல்லோருக்கும் கருத்திடுகிறீர்கள் . மிக்க நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. ரெவெரி
  செப் 21, 2011 @ 01:34:39

  அழகான தெளிவான வரிகள்…தொடர என் வாழ்த்துகள் …

  மறுமொழி

 9. Dhavappudhalvan
  செப் 22, 2011 @ 08:51:53

  வாழ்வியல் குறட்பாக்கள் சிறப்பாக அமைத்து இருக்கிறீகள். வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

 10. மஞ்சுபாஷிணி
  செப் 26, 2011 @ 09:09:27

  ஐயோ வேதாம்மா நானா பேராசியரா.. இன்னும் கற்கும் நிலையிலேயே இருக்கிறேன் வேதாம்மா….

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 26, 2011 @ 17:34:57

   சரி கற்போம் கற்று கற்று பேராசிரியர் ஆவோம். உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும் இனிய நன்றியும், மகிழ்ச்சியும். இறை அருள் கிட்டட்டும் சகோதரி.

   மறுமொழி

 11. மகேந்திரன்
  அக் 07, 2011 @ 03:45:26

  வாய்மை பேசும் உள்ளம் ஒரு வெள்ளை மாளிகை
  அங்கே பொய்மை எனும், சிறு கருந்துகள் பட்டாலும் அங்கே
  அதன் அழகு குறைந்து விடும்.

  கேள்வி அறிவே சிறந்த அறிவு. கேள்வி அறிவினால் அனுபவத்தை பெருக்கி கொள்ளவேண்டும்.
  ஒவ்வொரு குறளும் அழகு…

  மறுமொழி

 12. கோவை கவி
  அக் 13, 2011 @ 20:46:19

  அருமையான கருத்துகள் இட்டீர்கள் சகோதரா மகேந்திரன். மிக நன்றியும், மகிழ்ச்சியும் இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: