208. எங்கே போகிறது உலகம்.(பாமாலிகை (கதம்பம்)

 

 

எங்கே போகிறது உலகம்.

 

அன்பின் தழுவலற்ற மழலைகள்
ஏக்க சமுத்திரத்தில் அல்லாட,
அன்பாலிணைந்த இன்ப ஜோடிகள்
வாழ்வுக்காய் மௌன விசும்பலுடன்,
சினமடக்கிய பூமியாய் துணைகள்
சின்ன வாரிசுகளுடன் ஒற்றைக்காற்தவம்.
முன்னோர் தர்மங்களைப் புரட்டி
எறிந்த மனிதக் கூட்டம்.

விண்தொடும் வியத்தகு தொழில்
நுட்பத்தில் விஞ்ஞானக் குழந்தை.
கண்மயக்கும் அடுக்கு மாடிகளைக்
கண்முன்னே பொலபொலவென
நொறுக்கும் உடைந்த மனிதன்.
உன்னத மானுடப் பிறவியை
அங்கவீனர் ஆக்குவோராய் உலகம்
கண்ணிழந்த மானுடராய்ப் புவியில்.

திருவுடை அன்பு வட்டத்தால்
விலகி தனியாய்- குழுவாய்
உருவாக்கிய மனச்சிலந்தியின் பசையில்
சிக்கி, அல்லாடி, பின்னப்பட்டு
பெருகும் பயமற்ற அமிலத்தில்
தோய்ந்து ஊறிய மனிதன்.
பொங்கும் சுயநல விநோத
உருவில் ஆறறிவாளன் மனிதன்!

பூங்காவனம் உலகென்பதை மறக்கிறான்
தொங்கும் வன்முறை நூலாம்படைகள்
தேங்கிய நரகக்குழியாக்கி உலகில்
தங்க மனிதனெங்கே போகிறான்!
எங்களுலகமிங்குதானிங்குதான்! தானே சுற்றி
பங்கமின்றிக் கதிரவனையும் சுற்றும்
எங்கள் உலகம் எங்கள் கையிலே!
அமைதியைக் கைப்பற்றுதல் எமதுகடன்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
4-8-2006.

(ரி.ஆர்.ரி தமிழ் அலையில் என்னால் வாசிக்கப் பட்டது.)

                       

                            

 

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  செப் 21, 2011 @ 05:25:41

  ///பூங்காவனம் உலகென்பதை மறக்கிறான்
  தொங்கும் வன்முறை நூலாம்படைகள்
  தேங்கிய நரகக்குழியாக்கி உலகில்
  தங்க மனிதனெங்கே போகிறான்!////

  அழகாய் சொன்னீர்கள் சகோதரி…
  வன்முறை ஒழித்து, தீவிரவாதம் அழித்து
  அமைத்திப்பூங்காவாய் அகிலத்தை மாற்ற
  எத்தனிக்கும் இனிய கவிதை.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 21, 2011 @ 14:38:01

   உண்மையில் இது 2006ல் எழுதிய கவிதை, இன்று வலையேறியுள்ளது. உமது நல்ல கருத்திற்கு மிக மகிழ்ச்சியும், நன்றியும் சகோதரா மகேந்திரன். . இனிய இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. முனைவென்றி நா சுரேஷ்குமார்
  செப் 21, 2011 @ 05:26:36

  நீங்கள் கவிதைவழி சொல்வது முற்றிலும் உண்மை.

  மறுமொழி

 3. ramani
  செப் 21, 2011 @ 09:30:46

  ஆதங்கத்தை அருமையான கவிதையாக்கியதுடன்
  நம்பிக்கையுடன் முடித்திருப்பது அருமை
  சிலர் வார்த்தைகளிடம் மன்றாடிக் கொண்டிருகிறனர்
  சிலரிடமோ தன்னை ஏற்றுக் கொள்ளும்படி
  வார்த்தைகள் தவமிருக்கின்றன.
  நீங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் என்பதை
  நான் சொல்ல வேண்டியதில்லை
  தங்கள் படைப்பே சொல்லிப் போகிறது
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 21, 2011 @ 14:42:33

   நான் நினைக்கிறேன் இரட்டைக் கோபுரம் தகர்த்த போது எழுதப்பட்டதாகலாம். அது தான் அந்த ஆதங்கம். மிக மகிழ்ச்சியும் நன்றியும். உங்கள் அன்பான வருகைக்கும் கருத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. SUJATHA
  செப் 21, 2011 @ 21:25:04

  உலகம் எங்கே போகின்றது???? அருமையாக விளக்கவுரையில்
  வடித்தகவி. மனிதன் உயரப்பறக்க ஆசையாய் காணும் கனவுகள்
  எதிர்பார்ப்பில் வன்முறைகளாக வளர்ந்து வருகின்ற நிலை மாறும்
  என்பதும் கேள்விக்குறி. கவிதை அருமை——”வேதா”

  மறுமொழி

 5. ரெவெரி
  செப் 22, 2011 @ 17:19:15

  அமைதிப்பூங்காவாய் ஆக நம்பிக்கையோடு உங்கள் கவிதை…

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 22, 2011 @ 19:21:54

   மிக்க ஆனந்தம் ரெவேரி. உங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலுக்கும். எனது மனம் நிறைந்த நன்றியும் உரித்தாகுக.ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. வே.நடனசபாபதி
  செப் 23, 2011 @ 02:08:12

  // எங்கள் உலகம் எங்கள் கையிலே!
  அமைதியைக் கைப்பற்றுதல் எமதுகடன்!//
  தங்கள் கவிதையின் வீச்சும், கருத்தும் அற்புதம். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 7. polurdhayanithi
  செப் 23, 2011 @ 09:49:07

  இன்றய சூழலில் மனிதம் மரித்து மனிதநேயம் குறைத்து பொறியாக மாறி போகிறது உங்களின் எழுத்து மிகசிறந்த ஆயுதமாக மனிதத்தை வளர்க்கும் சிறந்த ஆயுதமாக படுகிறது சிறந்த ஆக்கம் தொடர்க, பாராட்டுகள் ..

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 23, 2011 @ 14:51:22

   மக்கள் எல்லாம் மிகுந்த சுயவலவாதிகளாக மாறும் போது இது தானே நடக்கிறது. எம்மால் முடிந்ததைச் செய்யலாம் முற்று முழுதாக உலகை மாற்ற என்னால் முடியாது. என்றுமே நானதைக் கூறுவதும் இல்லை. நானொரு சிறு அணில் அவ்வளவு தான். நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. Vai Gopalakrishnan
  செப் 23, 2011 @ 14:12:11

  முதலில் காட்டப்பட்டுள்ள குழந்தையின் படம்

  அந்த மிக உயர்ந்த கட்டடம்

  //தானே சுற்றி
  பங்கமின்றிக் கதிரவனையும் சுற்றும்
  எங்கள் உலகம் எங்கள் கையிலே!
  அமைதியைக் கைப்பற்றுதல் எமதுகடன்!//

  என்ற வரிகள் யாவும் அழகோ அழகாக உள்ளன. பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 23, 2011 @ 14:56:36

   மிக்க நன்றி ஐயா உங்கள் ரசனைக்கு . நன்கு ரசித்துள்ளீர்கள். குழந்தை ஒரு மாடல் குழந்தை. ஆனால் முகத்தில் ஒரு ஏக்கம் தெரிகிறது. அதனால் தான் இந்தக் குழந்தையைத் தெரிவு செய்தேன். உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. கோவை கவி
  செப் 24, 2011 @ 06:52:24

  சிவ மேனகை wrote:-
  வணக்கம் அக்கா நீங்கள் அறிவியல் உலகத்தின் ஆணிவேர் ,,உங்கள் கருத்துக்களில் கவிதைகளில் எழுத்துக்களில் நான் என்னை மறக்கின்றேன் ,,,தமிழ் கூறும் நல்லுலகில் உங்களை சந்தித்ததில் நான் சந்தோசம் அடைக்கின்றேன் ,,,,வாழ்த்துக்கள் ,,தொடரட்டும் உங்கள் பணி அட்சரத்தில் தொடங்கிய இலக்கிய சேவை தமிழினத்துக்கு என்றென்றும் தேவை ,,,,,

  Vetha wrote:-
  mikka nanry sakotharyfor your words.. God bless you

  மறுமொழி

 10. ramanujam
  செப் 24, 2011 @ 08:43:49

  // எங்களுலகமிங்குதானிங்குதான்! தானே சுற்றி
  பங்கமின்றிக் கதிரவனையும் சுற்றும்
  எங்கள் உலகம் எங்கள் கையிலே!
  அமைதியைக் கைப்பற்றுதல் எமதுகடன்//

  அறிவுரை தந்தீர் -நல்
  அறவுரை தந்தீர்
  நெறிமுறை காக்க-நீர்
  நினைப்பது நன்றே!

  புலவர் சா இராமாநுசம்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 24, 2011 @ 15:50:53

   மிக்க நன்றி ஐயா! உங்கள் இனிய கருத்திற்கும், வலைக்கு வருகை தந்தமைக்கும், மிக்க மகிழ்ச்சி, மிகுந்த நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. வசந்தா சந்திரன்.
  செப் 25, 2011 @ 06:27:09

  பூங்காவனம் உலகென்பதை மறக்கிறான்
  தொங்கும் வன்முறை நூலாம்படைகள்
  தேங்கிய நரகக்குழியாக்கி உலகில்
  தங்க மனிதனெங்கே போகிறான்!
  எங்களுலகமிங்குதானிங்குதான்! தானே சுற்றி
  பங்கமின்றிக் கதிரவனையும் சுற்றும்
  எங்கள் உலகம் எங்கள் கையிலே!
  அமைதியைக் கைப்பற்றுதல் எமதுகடன்!

  உங்கள் கவிதை சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள். மனிதன் தடுமாறுகிறான் என்பதை அழகாக எடுத்து காட்டியுள்ளீர்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 25, 2011 @ 06:37:13

   அந்தத் தடுமாற்றம் தானே வாழ்வு. இதில் தடுக்கி வீழவதும், தொடர்நது எழுவதுமே வாழ்வாகிறது. நம் போராட்டமாகிறது. மிக நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 12. பழனிவேல்
  செப் 29, 2011 @ 03:11:44

  “பூங்காவனம் உலகென்பதை மறக்கிறான்
  தொங்கும் வன்முறை நூலாம்படைகள்
  தேங்கிய நரகக்குழியாக்கி உலகில்
  தங்க மனிதனெங்கே போகிறான்!”

  அருமையான வரிகள்…
  அழகான கவிதை…

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 29, 2011 @ 07:11:28

   நன்றி!…நன்றி!….. நீங்கள் வந்து கருத்திட்டது மிக்க மகிழ்ச்சி சகோதரா! மனம் நிறைந்த நன்றியும் உரித்தாகுக. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. கோவை கவி
  ஏப் 16, 2015 @ 08:31:35

  You, Annamalai Balamanoharan, Mani Kandan, Shenbaga Jagatheesan ,Jeyanthe Nagalingam, Sivakumary Jeyasimman
  sand others like this.

  சி வா :-
  அம்மா.. சொல்லின்றித் தலை வணங்குகிறேன்..
  தள்ளாடும் தமிழை
  தலை நிமிரச் செய்யும்
  நீவீர்.. இன்று முதல்
  “தமிழ் மகள்” என்று
  அழைக்கப் படூவீர்..
  (ஹா ஹா ஹா … “சரசுவதி சபதம்” படம் பாத்த எப்பெக்டு மம்மி.. யூ.. கூலிங்… கூலிங்.. ஹா ஹா ஹா..)

  Vetha Langathilakam OH!….

  சி வா :-
  மம்மி நோ ஆங்ரி.. சும்மா.. தமாஸ்..

  **
  தள்ளாடும் தமிழை
  தலை நிமிரச் செய்யும்
  நீவீர்.. இன்று முதல்
  “தமிழ் மகள்” என்று
  அழைக்கப் படூவீர்..
  **
  இதுக்கு தான் அடைப்புக்குள்ள விளக்கம் சொன்னேன்.. (பட் “தமிழ் மகள்” சொல்ற தகுதி கண்டிப்பா உங்களுக்கு இருக்கு)
  14-4-2014

  தேன்மதுரத்தமிழ் கிரேஸ்:-
  //தொங்கும் வன்முறை நூலாம்படைகள் // அருமை..
  //சுடச்சுடத் தேனீர் தந்தாள்.
  கதகதக்கும் வீட்டு வெப்பமும்
  கமகமக்கும் அம்மாவின் உணவும்
  சுறுசுறுப்புத் தந்தது எமக்கும். //வாழ்த்துகள் சகோதரி..

  Mani Kandan:-
  தொங்கும் வன்முறை நூலாம்படைகள்
  தேங்கிய நரகக்குழியாக்கி உலகில்
  தங்க மனிதனெங்கே போகிறான்!மீயாழ பா.

  Kannan Sadhasivam:-
  பூங்காவனத்தை புதைகுழியாக்கி என்னதான் செய்யப்போகிறான்…நல்ல ஆக்கம்.
  16-4-2015

  Vetha Langathilakam :-
  அன்பின் சிவா மிக ரசனை உமது கருத்து மகிழ்ச்சி.. நன்றி.
  அன்பின் தேன் மதுரத் தமிழ் – மணிகண்டன் – கண்ணன் சதாசிவம்
  தங்கள் கருத்து மகிழ்வு தருகிறது.
  மனம் நிறைந்த நன்றி. 16-4-2015

  மறுமொழி

 14. கோவை கவி
  ஏப் 19, 2015 @ 08:34:42

  http://www.stsstudio.com/?p=7718

  Mikka nanry sakothara…

  மறுமொழி

 15. கோவை கவி
  மே 19, 2015 @ 07:32:37

  Malini Mala :-
  எங்கள் உலகம் எங்கள் கையிலே!
  அமைதியைக் கைப்பற்றுதல் எமதுகடன்!
  April 17
  Vetha Langathilakam:-
  Nanry and makilchchy malini
  April 17

  Subajini Sriranjan:-
  எங்கள் உலகம் எங்கள் கையில் //இது தான் உண்மை …
  பாதுகாப்போம்!
  April 18
  Alvit Vasantharany Vincent:-
  அமைதிக்கான அழைப்பு. வாழ்த்துக்கள் சகோதரி.
  April 18

  Vetha Langathilakam:-
  Nanry and makilchchy Suba and Alvit .V
  April 18 -2015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: