26. அந்திமாலைக்கு வாழ்த்து.

 

 

                                                  

 

 

அந்திமாலைக்கு ஆண்டுநிறைவு வாழ்த்து.

 

லட்சியம் ஊற்றி நிரப்பி
இலக்கோடு மானுடம் நிமிர்த்த
கோலோச்சும் அந்திமாலைக்கு தமிழ்
மொழியோச்சும் பணி வலையில்.
தலை நிமிர்ந்த தமிழை
அலைந்திட விடாது டென்மார்க்கிலும்
இலை விட்டு வளர்கவென
நிலையூன்றும் வினை வலைப்பூ

ந்திமாலை இணையம் ஓயாது
பந்தி விரித்துத் தமிழை
சிந்தி வந்து இப்போது
ஏந்துகிறது ஓராண்டு நிறைவை.
நிலைமைக்கேற்ற உரை கல்லாக
கலை, இலக்கியம், தகவல்,
விலையற்ற பொது அறிவென
நிலைபெற்ற பல சேவை வாழ்க!.

சின்னஞ் சிறாருக்கும் எந்தப்
பென்னம் பெரும் கலைஞருக்கும்
சின்ன வேற்றுமையற்ற சமவிடம்.
என்னே! உன் சேவை வாழ்க!
என்னையும் உன்னுள் எடுத்தாய்!
என் நெஞ்சார்ந்த சேவையுண்டு.
விரிபுவியில் நீ வளர்ந்து
வியத்தகு புகழ் நாட்டு!

சொற்கள் கொம்பு சீவிய
நாவார்ந்த ஓராண்டு நிறைவு
செஞ்சார்ந்த வாழ்த்துகள்!
வாழ்க! வளர்க! வளர்க!

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
22-9-2011.

In Anthimaalai web site:-   http://anthimaalai.blogspot.com/2011/09/blog-post_7875.html

                           

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramesh
  செப் 24, 2011 @ 05:00:27

  இரண்டாம் ஆண்டு அடியெடுத்துவைக்கும் அந்திமாலைக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 24, 2011 @ 15:37:06

   ரமேஷ் உமது வாழ்த்து அந்திமாலைக்குச் சென்று சேரும். எனது மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் இங்கு தெரிவிக்கின்றேன். ஆண்டவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 2. stalinwesley
  செப் 24, 2011 @ 05:23:05

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 24, 2011 @ 15:39:40

   சகோதரா ஸ்ராலின் வெஸ்லி! மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் – உமது வருகைக்கும் கருத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. ஜெய்லானி
  செப் 24, 2011 @ 05:46:50

  இன்னும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் 🙂

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 24, 2011 @ 15:42:55

   அன்பின் யெய்லானி உங்கள் வாழ்த்து அந்திமாலைக்குச் சென்று சேரும். இங்கு வருகை தந்து கருத்திட்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. சத்ரியன்
  செப் 24, 2011 @ 08:43:48

  அந்திமாலை – க்கு ஆண்டு நிறைவு பாமாலை சிறப்பு.

  என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 24, 2011 @ 15:44:11

   அன்பின் சகோதரா! உங்கள் வாழ்த்து அந்திமாலைக்குச் சென்று சேரும். இங்கு வருகை தந்து கருத்திட்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. எம்.கே.முருகானந்தன்
  செப் 24, 2011 @ 10:02:13

  அருமையாக கவிமாலையாகப் பாராட்டு அந்திமாலைக்கு . சிறப்பாக படைப்பு

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 24, 2011 @ 15:46:49

   நன்றி ஐயா! உங்கள் வாழ்த்து அந்திமாலைக்குச் சேரும். இங்கு வந்து கருத்திட்டமைக்கு மிக மகிழ்ச்சியும், நன்றியும் உரித்தாகுக. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. இ.சொ.லிங்கதாசன்.
  செப் 24, 2011 @ 10:35:33

  அருமையான வாழ்த்துக் கவிதைக்காக சகோதரி ‘கோவைக்கவி’ அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றிகள். ஒரு ‘வாழ்த்துக்கவிதை’ மிகவும் தரமானதாக இருக்க வேண்டும் என்ற முழு அக்கறையோடு முயற்சி செய்து எழுதியிருக்கிறார் என்பது தெரிகிறது. பாராட்டுக்களும் உரித்தாகுக. தங்கள் தளம் மூலமாகவும் வாழ்த்துத் தெரிவித்தமைக்கு எங்கள் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
  “ஒன்றுபட்டு உயர்வோம்”
  என்றும் வேண்டும் இந்த இனிய உறவு.

  மிக்க அன்புடன்
  இ.சொ.லிங்கதாசன்.
  ஆசிரியர்
  http://www.anthimaalai.dk

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 24, 2011 @ 16:01:13

   உங்கள் எண்ணம் நிறைவேறட்டும். என் வலைக்கு உங்கள் வருகையும் கருத்துப் பதிவும் மகிழ்ச்சி தருகிறது. மிகுந்த நன்றி. மேலும் உயர்ந்து வாழ்விலும் வலையிலும் முன்னேற்றம் காண இறையருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. ரிஷபன்
  செப் 24, 2011 @ 15:47:28

  அந்திமாலையின் அழகான வளர்ச்சிக்கு அன்பு கலந்த நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 24, 2011 @ 15:54:28

   வணக்கம் ரிஷபன்! உமது அன்பான வாழ்த்து அந்திமாலைக்குச் சேன்று சேரும். இங்கு வருகை தந்து வாழ்த்தியமைக்கு என் மகிழ்ச்சியும் அன்பு நன்றியும். தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. மகேந்திரன்
  செப் 24, 2011 @ 18:02:30

  இரண்டாம் ஆண்டில்
  இனிமையுற அடியெடுக்கும்
  அந்திமாலைக்கு வாழ்த்துக்கள்

  தங்களின் வாழ்த்துப் பாமாலிகை
  அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 24, 2011 @ 19:11:49

   மிக்க நன்றி மகேந்திரன். உங்கள் வாழ்த்து அந்திமாலைக்குப் போய்ச் சேரும். இங்கு வந்து வாழ்த்தியதற்கு மிக மகிழ்ச்சியும் நன்றியும் சோதரா. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. கவி அழகன் --
  செப் 25, 2011 @ 02:19:41

  வாழ்த்துப்பா அருமை வாசிக்கவாசிக்க இனிமை வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 25, 2011 @ 06:08:13

   அருமை கவி அழகன்! உமது வருகையை காணக் காண இனிமை, கருத்தையும் காண மிக இனிமை . உமக்கும் இனிய வாழ்த்துகள் மேலும் முன்னேற. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. மகேந்திரன்
  செப் 25, 2011 @ 08:22:43

  அன்பு சகோதரி
  தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்தமைக்கு
  மனம் மகிழ்கிறேன்.
  இணைப்பு

  அன்பன்
  மகேந்திரன்

  மறுமொழி

 11. மகேந்திரன்
  செப் 25, 2011 @ 08:24:48

  மறுமொழி

 12. jaghamani
  செப் 25, 2011 @ 15:26:55

  சொற்கள் கொம்பு சீவிய
  நாவார்ந்த ஓராண்டு நிறைவு
  செஞ்சார்ந்த வாழ்த்துகள்!
  வாழ்க! வளர்க! வளர்க!//

  வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 26, 2011 @ 05:35:49

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரி இராஜேஸ்வரி. வாழ்த்துகள் அந்திமாலைக்குச் சேரும். உங்களுக்கு இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: