27. காத்திரடி வயலோரம். (பாமாலிகை காதல்))

 

 

காத்திரடி வயலோரம்

ண்மை கரைந்தோட
காலிலே சேறாட
கரடுமுரடு வரப்பிலே
காலடி வைப்பவளே!

முந்தானை வரிந்து கட்டி
முடிந்த கொண்டைப் பூமணக்க
சிவந்த வாயாலே சிறு
சிந்து பாடி நடப்பவளே!

ப்பா அம்மாவை
அந்தி மாலை வரச்சொல்லி
முன்னாலே நீ வாயேன்
முழுசாகப் பேசிடுவோம்.

வெள்ளரளி வேலியோரம்
விவரமாப் பேசவேணும்
வெத்திலை வாய் சிவக்க
வெட்கத்திலே நீ குனியவேணும்.

(This photo -Thank you for Sujatha . Anton .(my friend)

ண்ணம்மாவென் கண்மணியே
காத்திரடி வயலோரம்
கட்டாயம் நான் வருவேன்
கதை பேசிக் கைகோர்ப்போம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-9-2011.

                       

 

41 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவி அழகன் --
  செப் 26, 2011 @ 04:19:14

  நான் வந்திட்டன் இன்னும் அவளை காணலையே

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 26, 2011 @ 05:39:13

   ஆகா! காதல் படுத்தும் பாடு! மகனே! மிக்க மகிழ்ச்சி! கவி அழகன்! முதற்தமிழ் ஊற்று, இந்த இடுகைக்கு. மிகுந்த நன்றியும் கூட. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. முனைவென்றி நா சுரேஷ்குமார்
  செப் 26, 2011 @ 04:40:05

  அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 26, 2011 @ 05:41:50

   மிக்க நன்றி சகோதரா! அதிகாலை எமக்கு. உங்கள் கருத்துகள் புது உற்சாகம் தருகிறது. மிகுந்த மகிழ்வும் நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. JK
  செப் 26, 2011 @ 04:43:00

  தமிழில் விளையாடி இருக்கிறீர்கள் அருமை இவ்வளவு அழகாய் காத்திருத்தலை எழுதுவதானால் அவள் தங்கள் தழிழ் படிக்க வேண்டி
  தங்களை இன்னும் காக்க வைக்க கூடும் ஜாக்கிரதை

  நன்றி
  ஜேகே

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 26, 2011 @ 05:45:25

   அவள் என் தமிழ் படித்து,…ஊ:..ஊஊ….. நான் காத்திருந்து…ஓ! இலவு காத்த கிளியோ!..மிகுந்த மகிழ்ச்சி உங்கள் ரசனைக்கு..ரசித்தேன். அன்புடன் நன்றி. இறை அருள் கிட்டட்டும! ஜேகே.

   மறுமொழி

 4. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  செப் 26, 2011 @ 04:53:06

  மண் வாசனை வீசுகிறது!!
  அற்புதம்!

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 26, 2011 @ 05:47:56

   அன்புடன் சகோதரரே! இடமும், சூழலும் பழகி வருகிறதா! மிக மகிழ்ச்சி கருத்துக் கண்டு. நன்றியும் கூட. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. nsureshchennai
  செப் 26, 2011 @ 08:45:17

  இனிய தமிழில் இப்படி ஒரு கவிதை கேட்டு நாளு பல ஆகி விட்டது.
  மிகவும் அருமை..
  நல் வாழ்த்துக்கள்…
  அன்புடன் என் சுரேஷ்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 26, 2011 @ 16:18:30

   மிக்க நன்றி சுரேஷ். நீணட நாட்களின் பின் சுரேஷ்ன் கருத்து விழுந்துள்ளது. மிக்க நன்றி.”’யும், மகிழ்ச்சியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. games for kids
  செப் 26, 2011 @ 09:04:22

  I think this is one of the most significant info for me. And i am glad reading your article. But should remark on some general things, The site style is ideal, the articles is really nice : D. Good job, cheers

  மறுமொழி

 7. மஞ்சுபாஷிணி
  செப் 26, 2011 @ 09:04:43

  பசுமையில் அழகிய தமிழில் காதலை சொல்லி செல்கிறது வரிகள்….

  அழகிய பகிர்வுக்கு அன்பு நன்றிகள் வேதாம்மா….

  மறுமொழி

 8. சத்ரியன்
  செப் 26, 2011 @ 12:51:15

  அருமையான பாட்டு. கொஞ்சம் நீட்டி எழுதி இருக்கலாமே!

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 26, 2011 @ 17:02:22

   நீட்டலாம் என்று கருதுகிறீர்களா சகோதரன். நடுத்தர அளவு உள்ளது. மிக நீள்வது எனக்குப் பிடிப்பதில்லை. பார்ப்போம். உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி. அறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. nathnaveln
  செப் 26, 2011 @ 16:22:22

  அருமையான கவிதைகள்.
  புகைப்படங்கள் இயற்கைச் சூழலை அழகுற காண்பிக்கின்றன.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 10. ரெவெரி
  செப் 26, 2011 @ 16:26:24

  நல்ல வரிகள்…பகிர்வுக்கு நன்றி வேதாம்மா….

  மறுமொழி

 11. dinesh
  செப் 26, 2011 @ 16:52:09

  அருமையான வரிகள் ….

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 26, 2011 @ 17:39:37

   தினேஷ் உமது கவிதை அருமையான வரிகளாக உள்ளது.மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் உமது இனிய வரவிற்கும், கருத்திற்கும்.இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. jaghamani
  செப் 26, 2011 @ 17:02:52

  கண்ணம்மாவென் கண்மணியே
  காத்திரடி வயலோரம்
  கட்டாயம் நான் வருவேன்
  கதை பேசிக் கைகோர்ப்போம்./

  அருமையான கவிதையும் படங்களும் காத்திருக்காமல் கைகோர்க்கவைத்த நேர்த்திக்குப் பாராட்டுக்கள்.

  மறுமொழி

 13. கோவை கவி
  செப் 26, 2011 @ 17:05:59

  மிக்க மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரியே! உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 14. ramani
  செப் 26, 2011 @ 23:54:05

  படமும் கவிதையும்கிராமத்து காதலர்களின்
  காதலுணர்வை மிக அழகாக
  உணரச் செய்து போகிறது
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
  பதிவிட்ட உங்களுக்கும்
  படங்களை கொடுத்து பதிவுக்கு
  வண்ணம் சேர்த்த தங்கள் நண்பி சுஜாதா
  அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 27, 2011 @ 17:23:42

   மிக்க நன்றி ரமணி சகோதரரே. உங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மகிழ்ச்சி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 15. sempakam
  செப் 27, 2011 @ 01:54:57

  அப்பா அம்மாவை
  அந்தி மாலை வரச்சொல்லி
  முன்னாலே நீ வாயேன்
  முழுசாகப் பேசிடுவோம்./

  !!!இப்படியென்றால் பிரச்சனையே இல்லை..
  முன்னாலே பேசிவிட்டால் ஒரு ஏக்கமும் இல்லைத்தானே..
  நல்ல முடிவுதான்..!!
  நல்லாயிருக்கு அக்கா கவிதை..
  அன்புடன் பாராட்டுக்கள்….

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 27, 2011 @ 17:26:10

   சகோதரி உங்கள் பின்னூட்டம் சிரிப்பு தருகிறது. குறும்பு தானே!. உண்மையும் தான். மகிழ்ச்சியும் நன்றியும் உங்கள் பிரசன்னம், வரிகளுக்கு. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 16. Mrs.Mano Saminathan
  செப் 27, 2011 @ 04:54:32

  வெள்ள‌ந்தியான கிராமத்துக் காதலின் ஆழம் தெரிகிறது உங்கள் கவிதை வரிகளில்!

  அருமையான‌ க‌விதை!

  மறுமொழி

 17. malathi
  செப் 27, 2011 @ 09:49:48

  உங்களின் ஆக்கம் சிறப்பானது பாராட்டுகள் நான் உங்கள் பக்கம் வருகிறேன் ஆனால் பின்னூட்டம் இட சில தடைகள் உண்டாகி விடுகிறது. இயற்கை சார்ந்த சூழல் வேலன் தொழில்முனையும் பேரிளம் பெண் நல்ல கருத்து சிறந்த படம். நன்றி .

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 27, 2011 @ 17:38:08

   சகோதரி எனக்கும் சில இடங்களில் கருத்திட மிக மிகச் சிரமம். இடவே முடியாது. சொன்னால் அவர்களுக்கும் மாற்ற முடியாதாம் பாதுகாப்பு கருதி என்கிறார்கள். இப்படிப் பல தொல்லைகள் உள்ளது தான். மிக மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரி.ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 18. தமிழ்த்தோட்டம்
  செப் 28, 2011 @ 07:03:53

  http://www.tamilthottam.in/t20380-2 பூத்துள்ளது நமது தோட்டத்தில்

  மறுமொழி

 19. வே.நடனசபாபதி
  செப் 29, 2011 @ 01:16:43

  கவிதையும் அருமை படங்களும் அருமை. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 20. பழனிவேல்
  செப் 29, 2011 @ 03:02:25

  பசுமை தமிழும்,
  தமிழில் பசுமையும் கலந்த இந்த காதல் அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 29, 2011 @ 07:08:58

   உங்கள் பசுமைக் கருத்து, நீங்கள் வந்து கருத்திட்டது மிக்க மகிழ்ச்சி சகோதரா! மனம் நிறைந்த நன்றியும் உரித்தாகுக. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 21. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  அக் 04, 2011 @ 08:15:18

  பசுமை நிறைந்த மண்ணின் வாசனையை, படங்களோடு தந்துள்ளீர்கள் , நன்றிகள் சகோதரி !

  மறுமொழி

 22. pathmasri
  அக் 10, 2011 @ 02:43:13

  மிகவும் அருமை.
  இந்த வயற்காதலில் இருந்த உண்மை மெயில் காதல்களில் இல்லாமல் போய்விட்டது.
  தொழில் நுட்ப நுகர்ச்சியை எவ்வளவுதான் அனுபவித்தாலும் இவற்றின் சுகம்,இனிமை அம்மாவின் அறுசுவை போன்றது.

  ப்ரியமுடன்,
  சிரபுரத்தான்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 10, 2011 @ 15:00:30

   ஆமாம் அம்மாவின் அறுசுவை போன்றதே தான். மிக்க நன்றி உங்கள் ரசனைக் கருத்திற்கும் வரவிற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: