16. இரு அனுபவங்கள்.

இரு அனுபவங்கள்.(சிறு கட்டுரைகள்)

(இங்கு வரும் இரு அனுபவக் குறிப்புகளும் 2005ல் ஓடி விளையாடு பாப்பா அனுபவக் குறிப்பாக இண்டன் தமிழ் வானொலியில் ஒலி பரப்பானது.)

ஒரு தாயும் ஐந்து வயதுப் பிள்ளையும் கடைக்குப் பொருட்கள் வாங்க வருகிறார்கள். பிள்ளை தனக்குத் தேவையான ஐஸ்கிறீம், இனிப்பு வகைகளைத் தானாகத் தெரிவு செய்து தாயுடன் சேர்ந்து வாங்குகிறது.

முடிவில் தாயார் வங்கி அட்டையைப் பாவித்துப் பணம் கொடுக்கும் போது, பிள்ளை தானே தான் அட்டையை யந்திரத்தில் உரசி பணம் கொடுக்க வேண்டுமென்று அடம் பிடித்தது. அட்டையை அழுத்தித் தேய்க்க பிள்ளையின் கைப்பலம் கூட,    போதுமாவெனத் தெரியவில்லை.

இரண்டு பேரும் சேர்ந்து செய்வோமென உடன்பட்டுத் தாயாரும் பிள்ளையுமாக அட்டையைத் தேய்த்தனர்.

பின்னர் இலக்கங்களையும் தானே தான் அழுத்த வேண்டுமென பிள்ளை அடம் பிடித்தது. தாயார் பதிலேதும் கூறாமல் மௌனமாக இலக்கங்களை அழுத்திவிட்டு, இறுதியில் அங்கீகரிக்கும் பச்சைக் கட்டையை அழுத்தும்படி பிள்ளையிடம் கூறினார், பிள்ளை    அழுத்துகிறார்.   உலகை வென்ற ஆனந்தம் பிள்ளை முகத்தில்.

விடயம் இனிமையாக முடிந்தது.

இது ஒரு சிறு விடயம். எவ்வளவு புத்தி சாதுரியமாக இந்தத் தாயார் விடயத்தைக் கையாண்டார்!  இரு பகுதியும் திருப்தியாக மகிழ்வாகச் செல்கிறார்கள்!

இதுவே நம்மவர் ஒருவரானால்  எத்தனை மறுதலிப்பு, பிரதிபலிப்புக்கு இந் நிகழ்வு ஆளாகும்!
தர்க்கம், எதிர்ப்பு என்று பலமான தாக்கங்கள் உருவாகுமல்லவா!….

இப்படி நுணுக்கமாக விடயங்களைக் கையாளும் திறமை நமக்கு வேண்டும்!

நம்மில் எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ளது!….

19-9.2005.

 

பயணப் பொருட் பட்டியல்.

நீங்கள் குழந்தைகளுடன் குடும்பமாகப் பயணம் செய்கிறீர்கள். போயிருக்கும் இடத்தில் நித்திரையின் போது உங்கள் குழந்தை, எப்போதும் தனது கையில் வைத்தபடி அல்லது அணைத்தபடி நித்திரை கொள்ளும் பொம்மையையோ, பொருளையோ கேட்டு  அடம் பிடித்து நித்திரை கொள்ளாது உங்களைப் படுத்துகிறது.

இது தவிர சிறிது வளர்ந்த பிள்ளைகளானால் தானாகவே ஏதாவது படம் வரைந்தோ அல்லது தானாக அடுக்கி விளையாடும் சில பொருட்களுக்காக ஏங்கி, கவலைப்படுவார்கள். இவைகளைப் போகும் அவசரத்தில் நீங்களும் மறந்திருப்பீர்கள்.

இதற்கு மிக சுலபமான ஒரு வழி இருக்கிறது.
நீங்கள் பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பட்டியலிடுங்கள்.

உங்கள் பயணப் பெட்டியை அடுக்கும் போது சரியாகப் பார்த்துப் பார்த்து அடுக்குங்கள். இதில்
அப்பாவின் பொருட்கள்,
அம்மாவின் பொருட்கள்,
பிள்ளையின் பொருட்கள்,
போகும் இடத்து விருந்தினர் பரிசு உட்பட எழுதுங்கள்.

கணனியில் கூட இந்தப் பட்டியலைப் பதிந்து வைத்துத் தேவையான போது பிரதி எடுத்து பார்த்துப் பார்த்து பொருட்களை அடுக்கலாம்.

இப்படியானால் பெரும்பாலும் பொருட்களை மறந்து விட சந்தர்ப்பம் அமையாது.  இப்படித்தான் நான் செய்கிறேன். இது எனது அனுபவம்.

உங்களுக்கும் பயன் படுமா? சிந்தித்துப் பாருங்கள்.

நன்றி.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-5-2005.
வலையேற்றம். 29-10-2011.

                               
 

Advertisements

வாழ்வியற் குறட்டாழிசை 17.

 

 

வாழ்வியற் குறட்டாழிசை 17.

 

புகழ்.

ல்ல வாழ்வு, நடத்தை, செயல்களே
ஒருவனிற்குப் புகழ் தருபவை.

குதியானவரைப் பற்றி உண்மையாய், இனிமையாய்
உரைத்தல் புகழ் ஆகும்.

கெட்ட செயல் செய்து  ஒருவன்
எட்டும் பெயர் புகழல்ல.

கேட்டுப் பெறுவதல்ல புகழ், தானாக
நாட்டுவதே புகழெனும் பெருமை.

சாதனையாளரைப் பலர் மத்தியில் புகழ்!
வேதனையதை மனதில் அடக்குதல்.

ளி கொண்ட கைதட்டல், சபையில்
மொழியற்ற புகழ் அங்கீகாரம்.

புகழ்வதில் கஞ்சம் தேவையில்லை. ஒருவனை
இகழ்வதில்  வெகு கஞ்சத்தனமாகு!

புகழை இன்று பணத்திற்கு வாங்குவது
இகழ்வான செயலாகிப் போச்சு.

புகழ் ஒரு போதை. அதை
அகழ்ந்து புதைப்பதும் வாதை.

புகழோடு பிறப்பவனும் உண்டு. முனைந்து
புகழைத் தேடுபவனும் உண்டு.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-10-2011.

In Anthimaalai web site:-     http://anthimaalai.blogspot.com/2011/11/17.html

  

                                     

 

214. மத்தாப்பு முத்தம்.(பாமாலிகை (கதம்பம்)

(Sujatha. Anton’s news photo – Thank you)

த்தாப்பு முத்ம்.

                  

(அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல வாழ்த்துகள்.)

 

மனமெங்கும் ஒளி வெள்ளம்.
கனமற்ற குதூகலம், பூ
வனம் போல பூவாணம்
தினத்திற்குக் கையிலேந்தல்.
புது ஆடை, பலகாரம்.
இது தீபாவளி ஆரவாரம்.
பொதுவான அந்தக் காலம்
முதுபெரும் கனவுக் கோலம்.

பூக்கள் அழியும் ஆட்சி.
மக்கள் மனதுயர் நீட்சி.
எக்காலம் வாழ்நிலையில் தீபஒளி
அக்காலமே தீபாவளியாகும்!
பட்டாசு வெடிகள் ஒலியும்
தொட்டசைக்கும் போரெனும் கிலி.
கட்டாயமொளி பிறக்க வேண்டும்!
எட்டிய கடாபி நிலையுணர வேண்டும்!

மண்ணில் முளைக்கும் அநியாயங்கள்
கண்ணில் தெரியாது அழியட்டும்!
கண்ணீரும் செந்நீரும் மாறி
நன்னீராய் அமைதி ஓடட்டும்!
நாதசுர இசை ஒலி
நரகாசுரர்கள் அழியும் ஒலி!
பிரகாசிக்கட்டும் அமைதி ஒளி
வரமாகும் அன்று தீபாவளி!

உருகட்டும் கயவர் கொடுமை!
பெருகட்டும் தமிழர் வாழ்வில்!
தீப ஒளி தீப ஆவளி
திருவிழா கோல ஒளி!
உறவுகளின் நிம்மதி வாழ்வே
திறப்பது தீப ஒளியை!
பிறக்கட்டும் நாட்டில் அமைதி!
சிறக்கட்டும் மத்தாப்பு முத்தம்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-10-2011.

(25-10-2011 ல் மாலை ஏழு மணிக்கு ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கவிதை பாடுவோம் நிகழ்வில் என்னால் வாசிக்கப்பட்டது இக் கவிதை.)

பட்டாசு பற்றிய இன்னொரு கவிதை இணைப்பு இதோ!….:-  

https://kovaikkavi.wordpress.com/2015/01/27/359-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/

 

                                   

 

 

 

 

213. விடியல். (பாமாலிகை (கதம்பம்)

 

விடியல்.   

ருவாகும் ஒரு விடியலின் தேடல்
கருவாகும் கனவு விதையினால் கூடும்.
பெரு நம்பிக்கையில் காலூன்றும் எத்தனம்
ஒரு விடியலுக்காய் வெளிக்கும் கீழ்வானம்.
சுருளலை உருள்வின் பிரம்மப் பிரயத்தனம்
ஒரு விடியல் முயற்சிக்குப் பூரண இலக்கணம்.
ஆனந்த விடியலைத் தேடிடும் எதிர்பார்ப்பு
ஆழ்ந்த துயிலினால் கூடும் அமைதிப்பூ.

காய மழைத் துளிக்கு ஏங்கும் தவிப்பு
ஆட்படும் விளைநிலத்து விடியலின் காத்திருப்பு.
ஓட்டினைச் சன்னமாய் உடைக்கும் தவிப்பு
முட்டையுள் குஞ்சு விடியலிற்கு உயிர்ப்பு.
வான்கடலில் சந்திரனிற்கு விடியல் தேவையில்லை.
அவன் மந்திர விடியலே கருக்கிருட்டு வேளை தான்.
விண்ணிலே நட்சத்திரங்கள் விடியலைத் தேடி
கண் சிமிட்டி ஓடாது வான் தடாகத்தில்

ன்னைச் சுற்றியொரு ஒளி வட்டம் இயற்கையில்
பின்னும் உன் முயற்சியே பெரும் பங்கு பெறுவது.
ஈழத்து விடியலின் சுதந்திர முழுப் பாகம்
ஈடற்ற உயிர், உடமையின் பெரும் பாகம்.
ஈவிரக்கமின்றிக் கொள்ளையிடும் உயிரும் பொருளும்
ஈடேறும் விடியலின் பெரும்பாக விலையோ?
இணையற்ற சொர்க்கபுரி எமது நாட்டிற்கு
இது யாரிட்ட பெரும் சாபக்கேடோ?

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
14-12-2004

நெய்தல்.கொம் ல் பிரசுரமானது. 23-4-2008.

ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப் பெற்ற கவிதையுமாகும்.

trt…2-9-2014 மாலை 7 மணி கவிதை நேரத்தில் என்னால் வாசிக்கப்பட்டது.(தர்சன் அறிவிப்பாளர்)

                        

28. வெற்றி தொற்றும் வேளை…(பாமாலிகை -காதல்)

 

வெற்றி தொற்றும் வேளை…

 

வெற்றி தொற்றும் வேளை
பற்றிப் படர்ந்து நடப்போம்.
காற்றைத் தோழியாய் ஏற்று
ஆற்றலைக் கேட்டுப் பெறுவோம்.

வாழ்வின் அர்த்தம் புரியாது
வாழ்ந்த காலம் போதும்.
வாழ்வை முழுதாய் அள்ளுவோம்.
வா வா அன்பே வா!

வாலிபக் காற்று வசந்தம்.
வாலிபம் முடியுமுன்னே
வாழ்வை முழுதாய் எடுப்போம்.
வளமாய் வாழ்வோம் வா!

எங்கோ நீயும் நானும்
இங்கே இப்படி இணைந்தோம்.
எங்கள் மழலை தரணியில்
உங்கு உண்ணப் போகிறது.

சந்ததி வளரும் தருணம்
பந்தம் இறுகும் பூரணம்.
சிந்திடும் உன்னழகு வதனம்
முந்தி என்னை இழுக்கிறதே!

மகிழ்ச்சியை மாலை கட்டி
மகிழ்ந்து அணிந்து பயணிப்போம்.
சோகத்தை மூட்டை கட்டி
சோடியாய்க் கடலில் எறிவோம்.

அயர்ச்சி என்ற சொல்லை
அறுதியாய் மறப்போம் துறப்போம்.
முயற்சி ஒன்றே துணையாய்
முன்னேறி உயரச் செல்வோம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-10-2011.

                             

15. காலையுணவின் முக்கியத்துவம்.(சிறு கட்டுரைகள்)

 

காலையுணவின் முக்கியத்துவம்.

(23-5-2005ல் இலண்டன் தமிழ் வானொலியின் ”ஓடி விளையாடு பாப்பா” நிகழ்வின் அனுபவக் (அவசியக்) குறிப்பில் இடம் பெற்ற குறிப்பு இது.)

காலையுணவை எல்லோரும் முக்கியப் படுத்தி உண்பதில்லை. ஆனால் காலையுணவு உட்கொள்ளுதல் மனித வாழ்வில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நாளின் சக்தியைக் காலையுணவு காலையிலேயே தருகிறது.

காலையுணவைத் தவிர்ப்பவர்களுக்குக் குருதிச் சுற்றோட்ட நோய் வரும் ஆபத்து அதிகளவாக உள்ளது.

புகைப்பவர்களுக்கு உடற் பாரம் அதிகரித்து மதுபாவனை அதிகரிப்புக்கும் ஆளாகிறார்கள்.
என்ன!!…மூச்சுத் திணறுகிறதா?..ஆய்வுகளின் கண்டுபிடிப்பே இது. அமெரிக்க ஆய்வின் படி காலையுணவு உண்பவர்கள் காலையுணவு உண்ணாதவர்களிலும் பார்க்க நோய் வாய்ப்படும் தன்மையைக் குறைவாகப் பெறுகின்றனர்.

காலையுணவு நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்குகிறது. அதே நேரம் இரண்டாவது வகையான நீரிழிவு நோய் வராது தடுக்கிறது.

நாளின் தொடக்கத்தில் அதாவது காலையிலேயே இரத்தத்தில் நிதானமான சீனிச் சத்து உணவில் விருப்பத்தையும், மன அழுத்தம் உருவாகாமலும் சீர் செய்கிறது.

என்ன! உங்களில் எத்தனை பேர் காலையுணவு உண்ணாது நாளைத் தொடங்குகிறீர்கள்?….

சரி! இனியாவது காலையுணவு உண்ண ஆரம்பிக்கலாமே!…


 

இப்படி ஏசுகிறீர்களா?

( இதுவும் 10-1-2006ல் அனுபவக் குறிப்பாக இதே வானொலியில் இடம் பெற்றது.

–    ”  எத்தனை தரம் உனக்குச் சொல்வது? ”
–   ”  உனக்கு இன்னும் விளங்கவில்லையா? ”
–  ” ஏன் இதை முதலிலேயே உனக்கு விளங்கிக் கொள்ள முடியாதா? ”

இப்படி உங்கள் பிள்ளைகளை நீங்கள் ஏசும் போது நீங்கள் பிள்ளைகளுக்கு வேதனையையே விதைக்கிறீர்கள்.

இந்த வார்த்தைகள் ‘நீ புத்தியில்லாதவன்! மடையன்!’ எனும் கருத்தை மறைத்து வைத்திருக்கிறது அல்லது மறைமுகமாகக் கூறுகிறது.

பிள்ளையின்  உணர்வுகள் தேவைகள்  எனும் நிலையில் எம்மை வைத்துப் பிள்ளையை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். உங்கள் பிள்ளை உங்களோடு ஒத்துளைத்து நல்லது செய்யவே விரும்புகிறது.

மிகச் சிறு பிள்ளையானால் அதற்குத் தன் மனதில் உள்ளதை அழகான சொற்களில் உங்களுக்கு  விளங்க வைக்க முடியாது. இந்த நிலையில் இதை நாம் விளங்க முடியாத போது, பிள்ளைக்கு விரக்தி, வெறுப்பு உணர்வு வருகிறது.

ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவர்கள் அழுகிறார்கள், உதைக்கிறார்கள், பிறாண்டுகிறார்கள், அடிக்கிறார்கள், பொருட்களை வீசி எறிகிறார்கள்.

உங்கள் பிள்ளை அருகில் அமருங்கள், அவர்கள் கரத்தை ஆதரவாகப் பிடித்து நீங்கள் அவருக்கு உதவி செய்ய விரும்புவதாகக் கூறி இரு பகுதிக்கும் நன்மை தரும் தீர்வைக் காணுங்கள்.

ஆச்சரியமான விளைவைக் காணுவீர்கள்.

அன்பான அணைப்பு ஒரு அதிசய அட்சய பாத்திரம்.

இது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

  

                             

 

212. வாழ்வெனும் அற்புத தீபம்.(பாமாலிகை (கதம்பம்)

 

வாழ்வெனும் அற்புத தீபம்.

 

உற்சவக் கேளிக்கை உலகில்
பற்றுடை நற்தவம் மனிதம்.
அற்புத தீபம் வாழ்க்கை.
அகல் விளக்காய் அடக்கமாய்
அகண்ட தீபமாய் ஆடம்பரமாய்
அனுபவக் கதிரின் பிரகாசம்
இகமதில் வாழும் ஆசையை
இசைவாய்த் தந்திடும் பிறருக்கு.

வற்றாத புரிந்துணர்வு விளக்கில்
ஊற்றுகிறோம் முயற்சி நெய்யை.
ஓற்றுமைப் புனிதத் திரியில்
பற்றும் அன்புத் தீபமே
பசுந்தான வாழ்வுத் தீபம்.
தீபதூபச் சுகந்த ஈர்ப்பு
தீமை விலகிய பாதையானால்
தீரம் பெருகும் திவ்வியமாகும்.

கடலில் மீனவர் பயனடைவார்
கலங்கரை தீப ஒளியிலே.
கர்ப்பக்கிரகம் ஒளி பெறும்
குத்து விளக்கு தீபத்திலே.
மொத்தத் திசைகளால் கிளம்பும்
பத்துத் துன்பங்களும் தீபத்தை
பொத்தி அணைக்காது காத்திடல்
சத்தான புத்தியின் வித்தையாகும்.

வளமான வாழ்வு தீபமானால்
வலியான வாழ்வு தீயாகும்.
வாழ்வில் வழுக்குவோர் பாடம்
வலிவான கைத்தடி பிறருக்கு.
வசமான நிம்மதி வாழ்வினால்
வதையான பிரச்சனைகள் உருகிடும்.
சோதியான வாழ்வை அவிக்கும்
சோகம் சிலிர்த்து நிமிர்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-4-2007.

(ரி.ஆர்.ரி தமிழ் அலையிலும், ரி.ஆர். ரி தமிழ் ஒலியிலும் இரண்டு தடவை  (18-10-2011) என்னால் வாசிக்கப் பட்டது.)

 

                      

 

Previous Older Entries