209. நிலைமாறும் உலகில்..(பாமாலிகை (கதம்பம்).

 

 

நிலைமாறும் உலகில்….

 

நிலைமாறும் புவியினுள்
கலைகலையாய் அனுபவங்கள்
அலையலையாய்ப் புரளும்
வலைவலையாய்ப் பின்னும்.

லைத்தேனெனும் திறமைக்
கோலையூன்றி மனிதன்
கலைச்சாலை உலகில்
நிலையம் அமைக்கிறான்.

தொலையாது எஞ்ஞான்றும்
நிலைப்பது சாதனைகள்.
நிலையூன்றும் எத்தனங்களுக்கு
விலையாகிறது வாழ்வு.

விலையில்லாப் பாடங்கள்
இலைபோட்டுப் பரிமாறும்,
மலைக்கும் உயர்த்தும்
நிலையையும் பெயர்க்கும்.

நிலையாத வாழ்வில்
நிலைக்களம் அமைக்கையில்
தலைகளை உருட்டி
அலைக்கழிக்கும் உறவுகள்.

வியந்திடும் பீடுநடை
விலையற்ற பொதுச் சேவைகளால்
நிலைத்திடும் பெயர்
கற்சிலை அடையாளங்கள்.

மூலைக்குமூலை மனிதன்
மாலை சூடி வாகையோடு
பாலைவன உலகைச்
சோலைவனமாய் ஆக்குகிறான்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
5-8-2008.

(.ரி.ஆர் (பிரான்ஸ)  வானொலியில் 7-8-2008ல் என்னால் வாசிக்கப் பட்டது.)

                        

Advertisements

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பழனிவேல்
  அக் 01, 2011 @ 04:45:54

  “நிலையாத வாழ்வில்
  நிலைக்களம் அமைக்கையில்
  தலைகளை உருட்டி
  அலைக்கழிக்கும் உறவுகள்.”

  அருமையான வரிகள்…
  அனுபவ வரிகள்…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 01, 2011 @ 08:52:58

   அலைக்கழிக்கும் உறவுகளால் தானே வாழ்வு பல் சுவையில் ஓடுகிறது. அதே நேரம் மனதை உடைப்பவர்களும் அவர்கள் தானே! நன்றி சகோதரா! அருமையான கருத்திடுகைக்கும், இனிய வரவிற்கும் மிக மகிழ்ச்சி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

  • கோவை கவி
   அக் 04, 2011 @ 12:40:17

   உண்மை தானே! ஒரு மனிதனை உருப்பட விடுகிறார்களா? எப்படியாவது…தடைக் கட்டை போடுவோர் தானே பலர் ஆதரவாக கை கொடுப்போர் யாருளர்? சரி! இது முடியாத கதை. உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும் மிக மகிழ்ச்சியும் நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. சத்ரியன்
  அக் 01, 2011 @ 06:01:08

  //விலையற்ற பொதுச் சேவைகளால்
  நிலைத்திடும் பெயர்
  கற்சிலை அடையாளங்கள்.//

  எல்லோருக்கும் மனம் வரவேண்டுமே!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 01, 2011 @ 08:56:48

   ஆமாம் சகோதரா! பொதுச் சேவைக்கு எல்வோருக்கும் மனம் வராது. இந்த எழுத்துச் சேவையும் ஒரு பொதுச் சேவை தானே! எம்மைக் கேலி செய்பவர்கள் எத்தனை பேர்! நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா உமது இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும். எல்லாம் வல்ல தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. nathnaveln
  அக் 01, 2011 @ 07:45:31

  அருமை

  மறுமொழி

 4. ரெவெரி
  அக் 02, 2011 @ 03:38:33

  பொதுச்சேவை பொற்சிலை தான்..உங்களதும்…சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 04, 2011 @ 13:08:51

   மிக்க நன்றி சகோதரா! உங்கள் இனிய வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக மகிழ்ச்சி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. jaghamani
  அக் 02, 2011 @ 06:43:30

  மூலைக்குமூலை மனிதன்
  மாலை சூடி வாகையோடு
  பாலைவன உலகைச்
  சோலைவனமாய் ஆக்குகிறான்.//

  அருமையான கருத்துக்களம். பாராட்டுக்கள்!

  மறுமொழி

 6. பிரபுவின்
  அக் 03, 2011 @ 04:20:25

  “மூலைக்குமூலை மனிதன்
  மாலை சூடி வாகையோடு
  பாலைவன உலகைச்
  சோலைவனமாய் ஆக்குகிறான்”

  நல்ல கருத்தாளம் மிக்க வரிகள் சகோதரி.தொடர்தும் இவ்வாறான அருமையான இடுகைகளை எதிர்பார்க்கின்றேன்.வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

 7. cpsenthilkumar
  அக் 03, 2011 @ 04:44:42

  2008ல வாசிச்சதை எல்லாம் இன்னுமா ஞாபகம் வெச்சிருக்கீங்க?!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 04, 2011 @ 17:20:55

   ஆமாம்! கோப்பில் எழுத்துப் பிரதியை வைத்தால் பத்திரமாக இருக்கும் தானே!.உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக மகிழ்வும், நன்றியும் சகோதரரே. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. kathirmuruga
  அக் 03, 2011 @ 13:42:26

  “..நிலையாத வாழ்வில்
  நிலைக்களம் அமைக்கையில்
  தலைகளை உருட்டி
  அலைக்கழிக்கும் உறவுகள்…”
  நிஜவாழ்வின் கசப்பான பக்க்ங்களை
  அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்

  மறுமொழி

 9. Rajarajeswari
  அக் 04, 2011 @ 13:34:11

  விலையில்லாப் பாடங்கள்
  இலைபோட்டுப் பரிமாறும்,
  மலைக்கும் உயர்த்தும்
  நிலையையும் பெயர்க்கும்.

  அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 04, 2011 @ 17:25:39

   உலக நடப்பைக் கவிதையில் கொண்டு வந்தேன். மிக்க நன்றி உணர்வும், மகிழ்வும் அடைந்தேன் உங்கள் கருத்திடலாலும், வருகையாலும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. jramanujam
  அக் 04, 2011 @ 15:07:18

  // வியந்திடும் பீடுநடை
  விலையற்ற பொதுச் சேவைகளால்
  நிலைத்திடும் பெயர்
  கற்சிலை அடையாளங்கள்//

  உண்மைதான் சகோதரி!
  கருத்து அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  மறுமொழி

 11. மகேந்திரன்
  அக் 07, 2011 @ 03:48:18

  ஒவ்வொன்றும் வாழ்வியல் அனுபவ வாக்கியங்கள்
  கதம்பம் மணக்கிறது.

  மறுமொழி

 12. கோவை கவி
  அக் 07, 2017 @ 08:02:03

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: