210. தீண்டத் தீண்ட…(.பாமாலிகை (கதம்பம்).

தீண்டத் தீண்ட…..

ன்பின் தீண்டல்
ஆத்மார்த்தமானால்
ஆன்மாவின் திருப்தி
அளவிறந்தது.

றிவின் தீண்டல்
குறியான தவமானால்
முறியாது உயரலாம்.
அறியாமையிருள் விலகும்.

முரண்பாடுகளின் தீண்டலில்
சமன்பாடு விலகும்.
ஐயப்பாடு விரியும்.
ஒருமைப்பாடு அழியும்.

ட்பின் தீண்டல்
நல்லிரசாயனக் கலவையானால்
அல்லி நெஞ்சில் மலரும்.
நலமற்ற சுயநலமானால் நஞ்சாகும்.

நாகரீகம் தீண்டலால்
நற்பழமை அழியும்.
ஆகாத பழக்கங்களிற்கு
ஆன்மா அடிமையாகும்.

ழலையின் தீண்டலில்
மானுடன் உயிர்க்கிறான்.
மானுடத் தீண்டலில்
மழலையின் நம்பிக்கையூன்றும்.

தீண்டுதலால் உணர்வும்
சீண்டப்படும், நரம்பு
மண்டலமும் தூண்டப்படும்.
ஆண்டகையாகிறான் மனிதன்.

தீண்டுங்கள் மீண்டும்
மீண்டும் தீண்டுதலால்
மாண்டிடாத சக்திகள்
மூண்டெழுந்து சாதிக்கும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-10-2011.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=450%3A-1&catid=4%3A2011-02-25-17-28-36&Itemid=23

(11-10-2011ல் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் என்னால் இக் கவிதை –  கவிதை பாடுவோம் நிகழ்வில் வாசிக்கப் பட்டது.)

                             

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari
  அக் 11, 2011 @ 04:45:28

  முரண்பாடுகளின் தீண்டலில்
  சமன்பாடு விலகும்.

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 11, 2011 @ 19:27:56

   நன்றி சகோதரி. உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்வும் மன நிறைவும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. முனைவென்றி நா சுரேஷ்குமார்
  அக் 11, 2011 @ 05:07:18

  அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 11, 2011 @ 19:29:34

   அன்பான சகோதரரே! நன்றி. உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்வும் மன நிறைவும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. cpsenthilkumar
  அக் 11, 2011 @ 05:21:21

  ஆஹா.. படங்கள் கவிதை சொல்கிறது, கவிதை கதை சொல்கிறது

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 11, 2011 @ 19:30:42

   அன்பான சகோதரரே! நல்ல கவிதையான கருத்திடலுக்கு நன்றி. உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்வும் மன நிறைவும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. Palanivel
  அக் 11, 2011 @ 08:33:07

  அருமையான பதிவு…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 11, 2011 @ 20:07:30

   உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கும், வருகைக்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும். தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. nathnaveln
  அக் 11, 2011 @ 10:02:25

  அழகு கவிதை
  வாழ்த்துக்கள்
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

  மறுமொழி

 6. gokul
  அக் 11, 2011 @ 18:32:44

  அருமை!பாராட்டுக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 11, 2011 @ 20:09:18

   மிக மகிழ்ச்சி கோகுல். இனிய கருத்திடலுக்கும், வருகைக்கும் மனம் நிறைந்த நன்றியும், மகிழ்ச்சியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. vathiri .c. raveendran.
  அக் 12, 2011 @ 07:01:55

  மழலையின் தீண்டலில்
  மானுடன் உயிர்க்கிறான்.
  மானுடத் தீண்டலில்
  மழலையின் நம்பிக்கையூன்றும்..

  Fine.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 12, 2011 @ 15:01:23

   நன்றி சகோதரரே! உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும் மிக மகிழ்வு கொண்டேன். நேரமிருக்கும் போது வாருங்கள், கருத்துத் தாருங்கள் மகிழ்வடைவேன். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. வே.நடனசபாபதி
  அக் 12, 2011 @ 11:19:49

  அருமையான கவிதை. நல்ல எண்ணங்கள் உங்கள் மனதை தீண்டியதால்தான், இக்கவிதை பிறந்தது என எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 12, 2011 @ 20:40:57

   இனிய கருத்திடலுக்கும், வருகைக்கும் மனம் நிறைந்த நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரரே. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. Kowsy
  அக் 12, 2011 @ 13:51:26

  தீண்டுங்கள் மீண்டும்
  மீண்டும் தீண்டுதலால்
  மாண்டிடாத சக்திகள்
  மூண்டெழுந்து சாதிக்கும்.

  வாழ்த்துகள்

  மறுமொழி

 10. கலாம்காதிர்
  அக் 12, 2011 @ 15:41:34

  //மழலையின் தீண்டலில்
  மானுடன் உயிர்க்கிறான்.
  மானுடத் தீண்டலில்
  மழலையின் நம்பிக்கையூன்றும்//

  ஸ்பரிசம் என்னும் தீண்டலும் தூண்டலும் தான் மானுடம் மட்டுமன்று எல்லா விலங்கினங்களின் இனப்பெருக்கம்

  மறுமொழி

 11. SUJATHA
  அக் 12, 2011 @ 19:19:00

  தீண்டலின் முரண்பாடுகளால் வரும் அழிவுகள் மட்டுமல்ல மனிதன் தன்னுடைய சக்தியையும் இழக்கின்றான்… அருமை.
  தொடரட்டும் பணிகள் ”வேதா”

  மறுமொழி

 12. kavithaikirukkal
  அக் 12, 2011 @ 21:13:03

  சகோதரி அருமையான கவிதை.தொடரட்டும் பணிகள். நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 13, 2011 @ 17:33:41

   அன்பின் சகோதரா! உமது இனிய கருத்திற்கும், ஆர்வமாக வலையைப் பார்வையிட்டமைக்கும் மிகுந்த நன்றியும், மகிழ்ச்சியும். எல்லாம் வல்ல இறைவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. மகேந்திரன்
  அக் 13, 2011 @ 23:07:45

  தீண்டல் பற்றி காவியமே படைத்திருக்கிறீர்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 15, 2011 @ 13:52:49

   ஆமாம் உங்கள் கருத்தும் என்னைத் தீண்டியதற்கு மிக ஆனந்தம் அனடந்தேன். மிகுந்த நன்றியும் கூட. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: