வாழ்வியற் குறள்+தாழிசை 16. (பொறுமை.)

 

16. வாழ்வியற் குறட்டாழிசை.

பொறுமை.

 

கழ்வாரைப் பொறுத்தலும் ஓரளவோடு உனை
அகழ்ந்து புதைக்காமற் பார்.

பொறுமையெனும் பண்பு  மனித வாழ்வில்
பெருடையுடைய ஒரு திறவுகோல்.

ணவம், அகங்காரத்தை பொறுமையால் கொல்பவன்
நாணவும் தேவையில்லை எதற்கும்.

வாயாடியுடன் சொற்களால் பேயாடுவதிலும் பொறுமையுடன்
போராடுதல் வெகு சிறப்பு.

பொறுமையெனும் கனி பழுத்திட கடுமையாக
வறுமைப் படுகிறார் பலர்.

கெட்டவனைத் தன் பொறுமையால் சாதுரியமாய்க்
குட்டுதல் நற் பண்பு.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
13-10-2011.

(மேலேயுள்ள பன்னிரண்டு வரிகளும் வழமை போல நானாக எழுதியது. மகளிடம் போயிருந்த போது பெரிய பிரித்தானியாவில்  இருக்கையறையில் இருந்து இதை எழுதியபடி கதைத்தேன். ”அம்மா என்ன பரீட்சைக்குப் படிப்பது போல செய்கிறா´´  என்று கூறினா. ” ஓன்றுமில்லை மகள்! பொறுமை பற்றி எழுதுகிறேன். பொறுமை பற்றி உன் எண்ணத்தை கூறேன்” என்றேன். கீழ் வரும் எட்டு அடிகளும் அவரின் கருத்துகளே. இவர் மனோ தத்துவத்தில் டிப்ளோமா முடித்தவர்.              இதை ஏன் கூறுகிறேன் என்றால் கீழே வரிகள் முழுவதும் உணர்வு சம்பந்தமாகவே உள்ளது. இது தவிர டென்மார்க்கிலிருக்கும் போது தமிழ் சஞ்சிகைகட்கு கதைகள் எழுதினார். இலண்டனில் தனது வைத்தியசாலைச் சஞ்சிகையில் ஆங்கிலத்தில் சிறு கதைகள் எழுதியவர். சிறந்த பாடகி. ஓவியக்காரி. இனி படியுங்கள்!)

பொறுமை பொறுமையென்று மனித உணர்வுகளைக்
குறுகிடச் செய்தல் சரியல்ல.

னக்கு ஆபத்து என்றால் பொறுமை
விலக்கு! துணிந்து எழு!

பொறுத்தார் பூமியாள்வாராம்! தன்னையிழந்த பின்
பொறுத்து என்ன பயன்!

கேடு செய்வோரை உணரவிடாது பொறுமையென்று
பாடு படுத்தல் வீண்.

 

க்கம் லாவண்யா. 

U.K           

 

*

In Anthimaalai  web site :-       http://anthimaalai.blogspot.com/2011/11/16.html

  

 

                                    
 

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. gokul
  அக் 13, 2011 @ 05:01:53

  பொறுமையின் பெருமை சொல்லும் வரிகள் அனைத்தும் அருமை!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 13, 2011 @ 14:27:56

   இறைமைக்குச் சமமான பொறுமை பற்றிய கோகுலின் கருத்திற்கு நான் மனம் மிக மகிழ்ந்தேன். முதல் கருத்தாளருக்கு என் மனமார்ந்த நன்றியை இங்கு பதிகிறேன். அன்பான வருகைக்கும் மிக்க நன்றி. இறைவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. முனைவென்றி நா சுரேஷ்குமார்
  அக் 13, 2011 @ 05:19:48

  அருமையான பாக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 13, 2011 @ 14:30:48

   முனைவென்றிச் சகோதரர் சுரேஷ்! உங்கள் ஆர்வம் எனக்கும் உற்சாகமளிக்கிறது. ஆர்வமான வருகைக்கும், கருத்திடலுக்கும் மகிழ்வுடன் நன்றி. தெய்வத்தின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 3. Tamil Comedy World
  அக் 13, 2011 @ 05:29:03

  மிகவும் அருமையான பகிர்வு…….

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  மறுமொழி

 4. nathnaveln
  அக் 13, 2011 @ 09:37:50

  தனக்கு ஆபத்து என்றால் பொறுமை
  விலக்கு! துணிந்து எழு!

  நல்ல வரிகள்.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 13, 2011 @ 14:47:42

   மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா உங்கள் உடன் கருத்திற்கு உடன் வருகைக்கு . உங்கள் உற்சாகத்தை நாங்களும் பழக வேண்டும். ஆண்டவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 5. சத்ரியன்
  அக் 13, 2011 @ 11:18:51

  அடடே!

  இருவர் கூறும் கருத்துக்களும் சரியானவைகளே!

  இடம் பொருள் ஏவல் பொருத்து…!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 13, 2011 @ 14:50:19

   ஆமாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இரு கருத்துகளும் சரியானவைகளே. மிக்க நன்றி சகோதரா உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும். மிக மகிழ்வு கொண்டேன். இறைவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ramesh
  அக் 13, 2011 @ 11:43:38

  நீங்கள் சொல்வதும் சரியே , தங்கள் மகள் சொல்வதும் சரியே , வெவ்வெறு சமயத்தில்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 13, 2011 @ 16:52:02

   ஓம் ரமேஷ்! வேறு வேறு நிலையில் அக்கருத்துகள் சரியே. ரமேஷின் இனிய கருத்திற்கும் வலையின் விஜயத்திற்கும் மிகுந்த மகிழ்வு கொண்டேன். மனம் நிறைந்த நன்றியைக் கூறுகிறேன். ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 7. ரெவெரி
  அக் 13, 2011 @ 13:27:15

  உங்கள் இருவர் ஆக்கமும் அருமை ..அருமை சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 13, 2011 @ 16:54:37

   சகோதரர் ரெவெரியின் இனிய கருத்திற்கும் வலைக்கு வருகை தந்தமைக்கும் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன்.. மனம் நிறைந்த நன்றியைக் கூறுகிறேன். ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 8. Rajarajeswari
  அக் 13, 2011 @ 14:08:48

  பொறுத்தார் பூமியாள்வாராம்! தன்னையிழந்த பின்
  பொறுத்து என்ன பயன்!

  கேடு செய்வோரை உணரவிடாது பொறுமையென்று
  பாடு படுத்தல் வீண்.

  அருமையான ஆக்கங்களுக்குப் பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 13, 2011 @ 16:57:37

   சகோதரி இராஜராஜேஸ்வரிக்கு உங்கள் கருத்திற்கு மிகுந்த நன்றியும், உங்கள் அன்பான வருகைக்கு மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. SUJATHA
  அக் 13, 2011 @ 15:11:11

  பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அழகாக குறள் வடிவம் விளக்கியுள்ளது. அதே போன்று மகளின் குறள் வடிவத்தையும்
  இதில் பதிந்துள்ள பெருமையும் வரவேற்கத்தக்கது. பணிகள் தொடரட்டும்!!!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 13, 2011 @ 16:59:47

   அன்பின் சுஜா! உமது இனிய கருத்திற்கும், ஆர்வமாக வலையைப் பார்வையிட்டமைக்கும் மிகுந்த நன்றியும், மகிழ்ச்சியும். எல்லாம் வல்ல இறைவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. மகேந்திரன்
  அக் 13, 2011 @ 23:06:18

  அத்தனையும் பொன்மொழிகள்..
  வாழ்வியலின் நிதர்சனம் சொல்லும்
  ஈரடிப் பாக்கள்.

  பொறுமை கடலினும் பெரிது என்பார்கள்.
  பொறுத்தார் பூமியாள்வார் என்றும் சொல்வார்கள்.
  அப்படிப்பட்ட விலைமதிப்பு சொல்ல இயலாத
  பொறுமையை இனிமையாய் தொகுத்திருக்கிறீர்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 14, 2011 @ 17:40:00

   பொறுமையைப் பொறுமையாகக் கருத்திட்டுள்ளீர்கள். இனிய வரவிற்கும் சேர்த்து அன்பு நன்றியும, கூடவே மகிழ்ச்சியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. கோவை கவி
  அக் 14, 2011 @ 20:40:15

  Ilaya bharathy .India.wrote:–
  ”…பொறுமையெனும் கனி பழுத்திட கடுமையாக வறுமைப் படுகிறார் பலர்…”
  superb.

  Vetha wrote:- Thank you Bharathy. God bless you.

  மறுமொழி

 12. கவி அழகன் --
  அக் 15, 2011 @ 01:07:38

  பொறுமையின் பெருமை அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 15, 2011 @ 06:04:35

   பெருமையின்றிப் பொறுமையின் கருத்துக் கூற வந்த கவிஅழகன் மிக மகிழ்ச்சி அடைந்தேன். எனது நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.தெய்வத்தின் அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 13. வே.நடனசபாபதி
  அக் 15, 2011 @ 02:16:39

  // பொறுத்தார் பூமியாள்வாராம்! தன்னையிழந்த பின்
  பொறுத்து என்ன பயன்!//

  அருமையான கருத்து! மனோதத்துவம் படித்தவரல்லவா. அதனால்தான் இயல்பான கருத்தை கூறியுள்ளார். அவருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 15, 2011 @ 06:06:31

   மிக மகிழ்ச்சி சகோதரா. உங்கள் இனிய கருத்தால் மகிழ்ந்தேன். மிக நன்றியைக் கூறுகிறேன். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 14. vinothiny pathmanathan
  அக் 17, 2011 @ 16:46:28

  புலிக்கு பிறந்தது பூனையாகுமா என நிருபித்திருக்கிறார் சகோதரி லாவண்யா .அருமையான வரிகள் லாவண்யா .பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 18, 2011 @ 15:17:04

   மிக்க நன்றி விநோ. உமது அன்பான கருத்திற்கும், வரவிற்கும் மகிழ்வும், மிக்க நன்றி மறுபடியும். அவ இன்னும் பார்க்கவில்லை. நான் கூறவும் இல்லை. ஓட்டமான வாழ்வில் இதெல்லாம் பார்க்கக் கூட நேரமின்றி ஓடுகிறார்கள். இறை ஆசி கிட்டட்டும் விநோ.

   மறுமொழி

 15. Lavanniya
  அக் 18, 2011 @ 16:23:29

  Thank you for all the comments. Sorry I don’t have Tamil writing on my computer so have to write in English. I enjoyed talking about this topic with my mum on that day and it bought us closer. I am also glad that I could contribute few lines to my mums collection of poems. I love you amma, always!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 18, 2011 @ 17:13:56

   முகநூலில் லிங்க் போட்டதும் உடனே சென்று வாசித்து கருத்திட்டமைக்கு மிக மகிழ்ச்சி மகளே. என்றுமே அம்மா உன்னோடு நெருக்கமாகவே இருக்கிறேன். எமது பிள்ளைகளை நிறைய நிறைய நேசிக்கிறோம் அப்பாவும் அம்மாவும். அனைத்திற்கும் இறைவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 16. Natarajan Mariappan
  அக் 26, 2011 @ 06:45:23

  ஆணவம், அகங்காரத்தை பொறுமையால் கொல்பவன்
  நாணவும் தேவையில்லை எதற்கும்.

  வாயாடியுடன் சொற்களால் பேயாடுவதிலும் பொறுமையுடன்
  போராடுதல் வெகு சிறப்பு.

  பொறுத்தார் பூமியாள்வாராம்! தன்னையிழந்த பின்
  பொறுத்து என்ன பயன்!

  அன்னையும் அன்புமகளும் தமிழ் வழி சொன்ன பொறுமை வரிகள்
  அருமை சகோதரி! தொடரட்டும் உங்கள் சொற்காலம்!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 26, 2011 @ 07:37:05

   இனிய சகோதரா! மிக்க நன்றி. இங்கு வருகைக்கும், வரிகளுக்கும, உங்கள் இனிய ரசனைக்கும், மிக மகிழ்வும், இனிய நன்றியும். எல்லாம் வல்ல இறையின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: