211. முதல் விருந்து…(பாமாலிகை (கதம்பம்)

 

முதல் விருந்து…

 

நாளின் ஆரம்பம் இனிய
நாதசுர ஓசை போல
ஆதாரமாகும் முதற்  தேநீர்
தோதாகும் சுவைப் பானம்.

ன்ன சுவை! ஆகா!
என்ன இனிமை! இனிமை!
கன்னற் சுவை, முதற்
கிண்ணம் பால் தேநீர்.

னம் சுவைக்கச் சுவைக்க
நா இனிக்க இனிக்க
பால் மணக்க மணக்க
வெண்மை நுரைக்கும் நுரைக்கும்.

வி பறக்கப் பறக்க
ஆவல் ததும்பத் ததும்ப
உதடு உறிஞ்சி உறிஞ்சி
உணர்ந்து சுவைக்கும் சுவைக்கும்.

திகாலைப் பொழுதில்
புதிதாக எதிர்பார்க்கும்
மதிப்புடை புதுத் தேநீரால்
உதித்திடும் சுறுசுறுப்பு.

நீண்ட இரவில் ஆக்கை
கொண்ட ஓய்வின் பின்னர்
மீண்டும் புதிய நாளை
வேண்டும் உற்சாகம் தரும்.

விதைக்குள் உறங்கும் உயிரை
புதைக்காது உசுப்பும் மழையாக
விதைக்கும் சுறுசுறுப்பு முதல்
விருந்தாகும் ஒரு தேநீர்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-10-2010.
T: 10-6-2014.

  

 

                              

Advertisements

29 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. gokul
  அக் 15, 2011 @ 06:50:01

  தேநீர் இல்லாத நாள் நினைத்துப்பார்க்கவே முடியாதது!
  அருமையான ஆக்கம்!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 15, 2011 @ 08:04:26

   ம்…மிக சுவை.!..கோகுல்!….இன்று காலை தேநீர் சுவைத்துக் குடிக்கும் போது கவிதையையும் நினைத்துக் கொண்டு குடித்தேன் நான் சரியாக எழுதினேனா என்று .பதில் ஆம் நான் சரியாகவே எழுதியுள்ளேன் என்று தெரிந்தது. தேநீர் மிக சுவையாக இருந்தது. மிக நன்றி கோகுல் உமது இனிய கருத்திற்கும் வரவிற்கும். மிக மகிழ்ச்சியும் கூட. நன்றி…நன்றி…நன்றி…இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  அக் 15, 2011 @ 06:50:03

  தேநீர் விருந்துண்டு மகிழ்ந்தேன்!!
  வாழ்த்துக்கள் அம்மா!!

  மறுமொழி

 3. முனைவர் இரா.குணசீலன்
  அக் 15, 2011 @ 09:59:27

  விதைக்குள் உறங்கும் உயிரை
  புதைக்காது உசுப்பும் மழையாக
  விதைக்கும் சுறுசுறுப்பு முதல்
  விருந்தாகும் ஒரு தேநீர்.

  நானும் குடித்தேன்..

  சுறுசுறுப்பானேன்..
  அருமை கவிஞரே..

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 15, 2011 @ 13:47:15

   கணவரிடம் கேட்டேன் ” காலைத் தேநீர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”.. என்று. முக்கியமான ஒன்று தான் என்றார். ஒரு கவிதை எழுதினேன் கேளுங்கள் வாசிக்கிறேன் என்று வாசித்துக் காட்டினேன். நன்றாக உள்ளது என்றார். பிறகென்ன வலையில் ஏற்றினது தான். நேரமிருந்தால் இப்படி நடக்கும். அல்லாவிடில் என்பாட்டிற்கு வலை ஏற்றுவேன்.
   இது ஒரு கதை.
   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் முனைவரே உங்கள் வருகையாலும் கருத்தாலும் ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. nathnaveln
  அக் 15, 2011 @ 10:31:41

  நல்ல கவிதை
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 15, 2011 @ 13:48:56

   மிக்க நன்றி ஐயா!. உங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும். மிக மகிழ்வடைந்தேன். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. கோவை கவி
  அக் 15, 2011 @ 16:45:53

  Vetha ELangathilakam wrote:_
  Piruntha pia and vasantha!..skal vi go ud og drikke en cup tea…(med mælk) Solen skinner rigtigt…..
  வசந்தா சந்திரன் likes this..
  வசந்தா சந்திரன் wrote:-
  ya , tak.
  .வசந்தா சந்திரன் wrote:-
  ‎’உங்கள் தேனீர் மிகவும் சுவையாக இருந்தது. நன்றி சகோதரி…)))
  Vetha wrote :- Thank you. God bless you all.

  மறுமொழி

 6. கலாம்காதிர்
  அக் 15, 2011 @ 16:49:33

  //விதைக்குள் உறங்கும் உயிரை
  புதைக்காது உசுப்பும் மழையாக
  விதைக்கும் சுறுசுறுப்பு முதல்
  விருந்தாகும் ஒரு தேநீர்.//

  உணர்வினைத் தட்டும் வரிகள்
  உணர்வினத் தட்டும் தேநீராய்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 15, 2011 @ 18:58:22

   நன்றி சகோதரரே! மிக்க மகிழ்ச்சி உங்கள் இனிய வரவிற்கும் இனிய கருத்திற்கும். தேநீர் சுவை இழுத்து விட்டது உங்களையும்.நன்றி நன்றி. ஆண்டவர் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. ரமேஷ்
  அக் 15, 2011 @ 17:32:30

  தேநீரின் சுவையை விட தங்கள் கவிதை சுவையாக உள்ளது படிக்க .
  பகிர்வுக்கு நன்றி சகோ

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 15, 2011 @ 19:00:58

   உமது வார்த்தை மகிழ்ச்சி தருகிறது ரமேஷ். மிக்க நன்றிஉமது வரவிற்கும், கருத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. ramani
  அக் 16, 2011 @ 01:39:45

  எத்தனை நாள் நானும் காலையில் தேனீர்
  குடித்து சுறுசுறுப்பாகித் தினசரி
  வாழ்க்கையைத் துவங்கியிருக்கிறேன்.
  இப்படி யோசிக்கவும் அதை ஒரு அழகிய
  படைப்பாக்கவும் தோணவில்லையே என
  எண்ணி கொஞ்சம் சலனப் பட்டது உண்மை
  ஆயினும் கண்ணதாசனின்
  கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
  என்கிற பாடல் ஏனோ நினைவுக்கு வந்தது
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 16, 2011 @ 09:28:02

   ”…தோணவில்லையே என
   எண்ணி கொஞ்சம் சலனப் பட்டது உண்மை…”
   இப்படிப் பல ஆக்கங்களுக்கு நானும் சலனப் பட்டது உண்மை.

   இது 3,4 மாதங்களாக எண்ணி எண்ணி..திடீரென இன்று எழுதியே தீருவது என்று எழுதியது. மிகுதியை இப் பக்கத்திலேயே முனைவர் இரா. குணசீலனுக்கு பதிலாகக் கொடுத்துள்ளேன், அதை வாசித்து உள் வாங்குங்கள் சகோதரா. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. மாலதி
  அக் 16, 2011 @ 06:39:39

  காலையில் எழுந்ததும் அழகிய ஆக்கம், பாராட்டுகள். நமக்கு இந்த விருந்தோம்பலில் தேநீர் பிடிப்பதில்லை, காரணம் எல்லாவற்றிக்கும் எதிர் வினையுண்டல்லவா ? தேநீர் எந்த அளவிற்கு உற்சாகத்தைத் தருகிறதோ அதே அளவு சோர்வையும் தரும் என்கிறது ஒரு குறிப்பு ஆனால் உங்களின் ஆக்கம் உற்சாகத்தை அல்லாவா தருகிறது பாராட்டுகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 16, 2011 @ 09:11:12

   ஓ! சகோதரி மாலதி! உங்கள் கருத்தும் எனக்குப் பிடித்துள்ளது. எனக்கு தெரிந்தவர்கள் தேநீர், கோப்பி கூடக் குடிப்பதில்லை உடல் நலக்கேடு என்று. வெறும் நீர், பழரசம் அருந்துவார்கள். ஆகையால் உங்கள் கருத்தும் ஏற்றுக் கொள்ளலாம். மிக மிக நன்றியும் மகிழ்ச்சியும் உங்கள் கருத்திற்கு. வருகைக்கும் நன்றி.
   தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. SUJATHA
  அக் 16, 2011 @ 09:06:53

  காலை மலர்ந்தது. அது ஒரு கனிவுமலர் கொடுக்கும் புத்தம் புது
  உணர்ச்சி. அதிலும் பருகும் தேனீர், கோப்பி சுவையில் அதைவிட
  ஒரு இன்பம். உங்கள் கற்பனைத் திறன் அருமையாக வெளிப்படுத்தி உள்ளது. ம்……டென்மார்க் வந்தால் ஒருமுறை
  காலை விருந்தையும் சுவைப்போம்!!!!!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 16, 2011 @ 09:17:30

   ஹேய்!..என்ன! டென்மார்க் வந்தால்..!!!!…. எத்தனை தடவை கேட்டாச்சு!…களைத்துப் போய்த் தான் இப்போ கேட்பதில்லை. வரும் போது வரட்டும் என்று. எப்போதும் வந்தாலும் நல்வரவு!!. வலையின் வருகைக்கும், கருத்திற்கும் அன்பு நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. மகேந்திரன்
  அக் 16, 2011 @ 23:44:53

  தேநீர் …
  எனக்கு மிகவும் பிடித்த உற்சாக பானம்.
  சில்லென்று தொண்டைக்குள் இறங்கி
  உயிரை உசுப்பி விடும் தன்மையுடையது.
  சோம்பலை துரத்தி.. உற்சாகமேற்றும்
  உன்னத பானம்..

  தேநீருக்கே உற்சாகமேற்றி விட்டீர்கள்.. பாமாலையால்..
  அருமையா இருக்கு சகோதரி.

  மறுமொழி

 12. cpsenthilkumar
  அக் 17, 2011 @ 04:41:13

  கவிதை நீட். அந்த ஜிகு ஜிகு ஜிகினா படம் டாப்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2011 @ 07:11:38

   ஆகா! படத்திற்குக் கவிதையா, கவிதைக்குப் படமா என்ற கேள்வியும் இங்கு போடலாம். அவ்வளவு அழகு தான் நுரையும் நிறங்களும். மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா உங்கள வருகைக்கும், கருத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. பழனிவேல்
  அக் 17, 2011 @ 04:41:44

  நான் ஒரு தேநீர் பிரியன். உண்மையில் உங்கள் “தேநீர்” விருந்து அருமை.
  அதிலும்,
  “மனம் சுவைக்கச் சுவைக்க
  நா இனிக்க இனிக்க
  பால் மணக்க மணக்க
  வெண்மை நுரைக்கும் நுரைக்கும்.

  ஆவி பறக்கப் பறக்க
  ஆவல் ததும்பத் ததும்ப
  உதடு உறிஞ்சி உறிஞ்சி
  உணர்ந்து சுவைக்கும் சுவைக்கும்.”

  வரிகள் அற்புதம்…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2011 @ 07:14:05

   எனக்கும் இந்த இரண்டு பந்தியும் மிகப் பிடித்தமானது. இதன் சுவையைத் தெளிவாகக் காட்டுவதால். நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா. உங்கள் ரசனைமிகு கருத்திற்கும், இனிய வருகைக்கும். தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 14. வே.நடனசபாபதி
  அக் 19, 2011 @ 01:54:53

  //விதைக்குள் உறங்கும் உயிரை
  புதைக்காது உசுப்பும் மழையாக
  விதைக்கும் சுறுசுறுப்பு முதல்
  விருந்தாகும் ஒரு தேநீர்.//

  புதிய சிந்தனை. வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

 15. கிரேஸ்
  ஏப் 13, 2013 @ 14:38:00

  //விதைக்குள் உறங்கும் உயிரை
  புதைக்காது உசுப்பும் மழையாக// அருமை..
  உங்கள் தேநீர் பாவை ரசித்தேன்..நல்ல சுவை!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: