212. வாழ்வெனும் அற்புத தீபம்.(பாமாலிகை (கதம்பம்)

 

வாழ்வெனும் அற்புத தீபம்.

 

உற்சவக் கேளிக்கை உலகில்
பற்றுடை நற்தவம் மனிதம்.
அற்புத தீபம் வாழ்க்கை.
அகல் விளக்காய் அடக்கமாய்
அகண்ட தீபமாய் ஆடம்பரமாய்
அனுபவக் கதிரின் பிரகாசம்
இகமதில் வாழும் ஆசையை
இசைவாய்த் தந்திடும் பிறருக்கு.

வற்றாத புரிந்துணர்வு விளக்கில்
ஊற்றுகிறோம் முயற்சி நெய்யை.
ஓற்றுமைப் புனிதத் திரியில்
பற்றும் அன்புத் தீபமே
பசுந்தான வாழ்வுத் தீபம்.
தீபதூபச் சுகந்த ஈர்ப்பு
தீமை விலகிய பாதையானால்
தீரம் பெருகும் திவ்வியமாகும்.

கடலில் மீனவர் பயனடைவார்
கலங்கரை தீப ஒளியிலே.
கர்ப்பக்கிரகம் ஒளி பெறும்
குத்து விளக்கு தீபத்திலே.
மொத்தத் திசைகளால் கிளம்பும்
பத்துத் துன்பங்களும் தீபத்தை
பொத்தி அணைக்காது காத்திடல்
சத்தான புத்தியின் வித்தையாகும்.

வளமான வாழ்வு தீபமானால்
வலியான வாழ்வு தீயாகும்.
வாழ்வில் வழுக்குவோர் பாடம்
வலிவான கைத்தடி பிறருக்கு.
வசமான நிம்மதி வாழ்வினால்
வதையான பிரச்சனைகள் உருகிடும்.
சோதியான வாழ்வை அவிக்கும்
சோகம் சிலிர்த்து நிமிர்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-4-2007.

(ரி.ஆர்.ரி தமிழ் அலையிலும், ரி.ஆர். ரி தமிழ் ஒலியிலும் இரண்டு தடவை  (18-10-2011) என்னால் வாசிக்கப் பட்டது.)

 

                      

 

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  அக் 17, 2011 @ 04:54:24

  அற்புத தீபம் வாழ்க்கை.
  அகல் விளக்காய் அடக்கமாய்
  அகண்ட தீபமாய் ஆடம்பரமாய்
  அனுபவக் கதிரின் பிரகாசம்
  இகமதில் வாழும் ஆசையை
  இசைவாய்த் தந்திடும் பிறருக்கு.

  மிகவும் அற்புதமான படைப்பு!!!
  வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2011 @ 07:16:21

   மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரா உங்கள் இனிய உடன் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. nathnaveln
  அக் 17, 2011 @ 09:21:17

  வளமான வாழ்வு தீபமானால்
  வலியான வாழ்வு தீயாகும்.

  அருமையான வரிகள்.
  அழகு கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2011 @ 15:38:11

   கருத்திடும் ஒளியிலே ஆக்கங்கள் துலக்கமாகும். சுறுசுறுப்பான உங்கள் கருத்து என்னை மகிழ்வடையச் செய்கிறது ஐயா. மிகுந்த நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. ரெவெரி
  அக் 17, 2011 @ 17:52:06

  வாழ்வெனும் அற்புத தீபம்…அற்புத கவிதை…
  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2011 @ 20:18:52

   உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும் மிக மகிழ்ச்சியும், மனம் நிறைந்த நன்றியும்.ஆணடவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. கலாம் காதிர்
  அக் 17, 2011 @ 18:39:51

  தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. மகேந்திரன்
  அக் 17, 2011 @ 22:45:43

  திசைகளின் ஆதிக்கத்தில் அடங்காது
  தன் சக்தி இருக்கும் வரை அங்கும் இங்கும் எங்கும்
  என்று சொல்ல முடியாதபடி எங்கெங்கும் நிறைந்திருக்கும்
  தீபத்தின் ஒளியை, வாழ்விற்கு ஒப்பிட்டு கூறிய பாமாலிகை
  அற்புதம் சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 18, 2011 @ 07:07:51

   வாழ்வை எத்தனைக்கும் ஒப்பிடுகிறார்கள். பல வருடங்களுக்கு முன் எழுதியது. எனக்கே வாசிக்கும் போது ஆச்சரியமாக இருந்தது, நானா எழுதினேன் என்று. வித்தியாச கற்பனை என்று. மிக நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா. உங்கள் இனிய வருகை இன்பம். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ramesh
  அக் 18, 2011 @ 03:51:46

  அழகாக தீபம் மூலம் வாழ்வின் தத்துவத்தை உணர்த்தும் கவிதை .
  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி.

  மறுமொழி

 7. jaghamani
  அக் 18, 2011 @ 16:12:47

  வளமான வாழ்வு தீபமானால்
  வலியான வாழ்வு தீயாகும்/

  அற்புதமான வரிகளும்
  அருமையான படங்களும்
  அணி செய்யும் கவிதைக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

 8. SUJATHA
  அக் 18, 2011 @ 18:52:31

  தீபத்திருநாளில் இல்லத்தில் இன்பம் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகின்றோம். உற்சவக் கேளிக்கை உலகில்
  பற்றுடை நற்தவம் மனிதம்.
  அற்புத தீபம் வாழ்க்கை.
  அகல் விளக்காய் அடக்கமாய்
  அகண்ட தீபமாய் ஆடம்பரமாய்
  அனுபவக் கதிரின் பிரகாசம்
  இகமதில் வாழும் ஆசையை
  இசைவாய்த் தந்திடும் பிறருக்கு.

  பிடித்தமான உங்கள் வரிகள். வாழ்க்கை சிறப்பு வளம்பெற தீபத்திருநாளில் வணங்கிடுவோம்!!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 18, 2011 @ 20:20:40

   சுஜாதாவிற்கும் தீபத் திருநாள் வாழ்த்துகள். எல்லா நலமும் பெற்றுச் சிறக்கட்டும் வாழ்வு. கருத்துடை கருத்திடலுக்கும், வருகைக்கும் நன்றியும், மகிழ்ச்சியும். இறை அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 9. ramani
  அக் 19, 2011 @ 00:49:27

  கவிதையை திரும்பத் திரும்பப் படித்தேன்
  இருள் விலகி ஓடவும் நம்பிக்கை ஒளி மனதினுள்
  மெல்லப் பரவுதலையும் உண்ர்ந்தேன்
  தீபத் திரு நாள்தான் எத்தகைய மகத்தானது
  நம் முன்னோர்கள்தான் எத்தனை தீர்க்க த்தரிசிகள்
  அதனைநினைவுறுத்தும் விதமாக அருமையான
  படைப்பை கொடுத்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 19, 2011 @ 07:39:51

   திட்டமிட்டு தீபம் எனும் கருத்துடைக் கவிதையை வலை யேற்றவில்லை. ஒன்று ஏற்றியதும், அடுத்தது எது என்று முதலே திட்டமிடுவேன். அப்படி, எப்போதோ திட்டமிட்டது. தானாகப் பொருந்தி வந்துள்ளது. உண்மையில் தீபாவளி எப்போது என்றே தெரியவில்லை. தமிழ் – காலண்டர் இருந்தால் தானே சரியாக அறிய முடியும். எல்லோரும் எல்லா இடத்திலும் தீபாவளி பற்றிப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், ஆனால் யாருமே அது எப்போது என்று இன்னும் குறிப்பிடவே இல்லை. எனக்கு வாழ்த்தும் வந்துள்ளது.

   இது இப்படி இருக்க, உங்கள் அன்பான கருத்திற்கும், வருகைக்கும் மிக மகிழ்வடைந்தேன். எனது நன்றி உரித்தாகுக. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. கோவை கவி
  அக் 19, 2011 @ 07:46:23

  19-10-2011.(in FB wall.)
  வசந்தா சந்திரன் wrote:-
  Vetha ELangathilakam
  TRTதமிழ் ஒலியில் கவிதை பாடும் நேரத்தில் நீங்கள் படித்த கவிதை நன்றாக இருந்தது, வாழ்த்துக்கள்.
  Follow Post · about an hour ago
  வசந்தா சந்திரன் likes this..
  Vetha ELangathilakam wrote:-
  Oh! mikka nanry Vasantha. God bless you…

  மறுமொழி

 11. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  அக் 19, 2011 @ 08:48:23

  வாழ்வுத் தீபம் சுடர்க நாளும் , வரவேற்போம் !

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 19, 2011 @ 14:38:56

   வாழ்வுத் தீபத்திற்குக் கருத்துத் தீபம் ஏற்றினீர்கள். மிகுந்த நன்றியும், மகிழ்ச்சியும். இறைவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. arulmozhisrinievasan
  அக் 22, 2011 @ 04:24:59

  அழகிய மின் விளக்கு
  அழகிய தீப ஒலி
  அழகிய கவி

  மறுமொழி

 13. கோவை கவி
  அக் 22, 2011 @ 12:44:22

  மிக்க நன்றி சகோதரா. உங்கள் வரவிற்கும், கருத்திற்கும், ரசனைக்கும் மிகுந்த மகிழ்வடைந்தேன்.
  இறை அருள் கிட்டட்டும்.

  ( முகநூலில் போய் இதே பெயருக்கு தகவல் அனுப்பினேன் தாங்களா கருத்திடுவது என்று அது வேறு யாரோவாக இருக்கலாம்.)

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: