15. காலையுணவின் முக்கியத்துவம்.(சிறு கட்டுரைகள்)

 

காலையுணவின் முக்கியத்துவம்.

(23-5-2005ல் இலண்டன் தமிழ் வானொலியின் ”ஓடி விளையாடு பாப்பா” நிகழ்வின் அனுபவக் (அவசியக்) குறிப்பில் இடம் பெற்ற குறிப்பு இது.)

காலையுணவை எல்லோரும் முக்கியப் படுத்தி உண்பதில்லை. ஆனால் காலையுணவு உட்கொள்ளுதல் மனித வாழ்வில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நாளின் சக்தியைக் காலையுணவு காலையிலேயே தருகிறது.

காலையுணவைத் தவிர்ப்பவர்களுக்குக் குருதிச் சுற்றோட்ட நோய் வரும் ஆபத்து அதிகளவாக உள்ளது.

புகைப்பவர்களுக்கு உடற் பாரம் அதிகரித்து மதுபாவனை அதிகரிப்புக்கும் ஆளாகிறார்கள்.
என்ன!!…மூச்சுத் திணறுகிறதா?..ஆய்வுகளின் கண்டுபிடிப்பே இது. அமெரிக்க ஆய்வின் படி காலையுணவு உண்பவர்கள் காலையுணவு உண்ணாதவர்களிலும் பார்க்க நோய் வாய்ப்படும் தன்மையைக் குறைவாகப் பெறுகின்றனர்.

காலையுணவு நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்குகிறது. அதே நேரம் இரண்டாவது வகையான நீரிழிவு நோய் வராது தடுக்கிறது.

நாளின் தொடக்கத்தில் அதாவது காலையிலேயே இரத்தத்தில் நிதானமான சீனிச் சத்து உணவில் விருப்பத்தையும், மன அழுத்தம் உருவாகாமலும் சீர் செய்கிறது.

என்ன! உங்களில் எத்தனை பேர் காலையுணவு உண்ணாது நாளைத் தொடங்குகிறீர்கள்?….

சரி! இனியாவது காலையுணவு உண்ண ஆரம்பிக்கலாமே!…


 

இப்படி ஏசுகிறீர்களா?

( இதுவும் 10-1-2006ல் அனுபவக் குறிப்பாக இதே வானொலியில் இடம் பெற்றது.

–    ”  எத்தனை தரம் உனக்குச் சொல்வது? ”
–   ”  உனக்கு இன்னும் விளங்கவில்லையா? ”
–  ” ஏன் இதை முதலிலேயே உனக்கு விளங்கிக் கொள்ள முடியாதா? ”

இப்படி உங்கள் பிள்ளைகளை நீங்கள் ஏசும் போது நீங்கள் பிள்ளைகளுக்கு வேதனையையே விதைக்கிறீர்கள்.

இந்த வார்த்தைகள் ‘நீ புத்தியில்லாதவன்! மடையன்!’ எனும் கருத்தை மறைத்து வைத்திருக்கிறது அல்லது மறைமுகமாகக் கூறுகிறது.

பிள்ளையின்  உணர்வுகள் தேவைகள்  எனும் நிலையில் எம்மை வைத்துப் பிள்ளையை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். உங்கள் பிள்ளை உங்களோடு ஒத்துளைத்து நல்லது செய்யவே விரும்புகிறது.

மிகச் சிறு பிள்ளையானால் அதற்குத் தன் மனதில் உள்ளதை அழகான சொற்களில் உங்களுக்கு  விளங்க வைக்க முடியாது. இந்த நிலையில் இதை நாம் விளங்க முடியாத போது, பிள்ளைக்கு விரக்தி, வெறுப்பு உணர்வு வருகிறது.

ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவர்கள் அழுகிறார்கள், உதைக்கிறார்கள், பிறாண்டுகிறார்கள், அடிக்கிறார்கள், பொருட்களை வீசி எறிகிறார்கள்.

உங்கள் பிள்ளை அருகில் அமருங்கள், அவர்கள் கரத்தை ஆதரவாகப் பிடித்து நீங்கள் அவருக்கு உதவி செய்ய விரும்புவதாகக் கூறி இரு பகுதிக்கும் நன்மை தரும் தீர்வைக் காணுங்கள்.

ஆச்சரியமான விளைவைக் காணுவீர்கள்.

அன்பான அணைப்பு ஒரு அதிசய அட்சய பாத்திரம்.

இது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

  

                             

 

32 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramesh
  அக் 20, 2011 @ 05:17:49

  ஆமாம் சகோதரி ,காலை உணவு அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் .ஏனென்றால் இரவு உணவுக்கு பின் காலை வரை உள்ள நேரம் அதிகம் .அதனால் காலை உணவு எடுத்துக் கொள்ள வில்லை எனில் உடல் சோர்வடையும் ,எடுக்கும் முடிவுகள் தீர்மானமில்லாதது போல் இருக்கும் .

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2011 @ 06:58:28

   ரமேஷ் மிக்க நன்றி. முதல் வரவாகக் கருத்திட்டீர்கள் மிக மகிழ்வும் நன்றியும். இனிய நாள் அமையட்டும். இறை அருளும் கிட்டட்டும். நன்றி..நன்றி.

   மறுமொழி

 2. தமிழ்த்தோட்டம்
  அக் 20, 2011 @ 05:26:33

  பாராட்டுக்கள் நல்ல பகிர்வு அக்கா, நமது தமிழ்த்தோட்டத்திலும் பூத்துள்ளது உங்களின் பூக்கள்

  http://www.tamilthottam.in/t21850-topic
  http://www.tamilthottam.in/t21849-topic

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2011 @ 17:43:36

   சகோதரா நீங்கள் லிங்க் அனுப்பினால் உடனும் எனது முகநூல் சுவரில் போடுகிறேன். லிங் வராத போது அங்கு வந்து எடுக்க பிழையான பாஸ் வேட் என்று புலம்புது வலை. நான் மூடி விட்டு வந்திட்டேன். உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக மிக நன்றியும், மகிழ்வும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. Rajarajeswari
  அக் 20, 2011 @ 06:21:31

  அன்பான அணைப்பு ஒரு அதிசய அட்சய பாத்திரம்./

  மிக அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2011 @ 07:05:16

   நிறைய கூறலாம் ..அன்பான அணைப்பு ஒரு அதிசய அட்சய பாத்திரம், அகக்கண் திறக்கும், அகங்காரம், அச்சம் அழிக்கும், அகண்ட தீபமாகும், அகவிதழ் திறக்கும், என்று தொடரலாம். நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரி உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும். இறை அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 4. வே.நடனசபாபதி
  அக் 20, 2011 @ 07:23:17

  காலை உணவின் அவசியம் பற்றி நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். நம்மில் பலர் காலை உணவை வெகு நேரம் சென்றே எடுத்துக்கொள்கிறார்கள் அல்லது அதை தவிர்த்துவிடுகிறார்கள். ஆங்கிலத்தில் கூட , நாம் இரவு சாப்பிட்டுவிட்டு பல மணி நேரம் கழித்து காலையில் சாப்பிடுவதால் தான் காலை உணவை Break Fast என்கிறார்கள். நல்ல, தேவையான பதிவு. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 20, 2011 @ 07:42:05

  மிக நன்றி சகோதரா. உங்கள் இனிய வருகையால் மிக மகிழ்வடைந்தேன். நல்ல கருத்திட்டீர்கள். நன்றி நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 6. கவி அழகன் --
  அக் 20, 2011 @ 10:23:36

  காலை உணவா அப்படி என்டால்
  அத மறந்து காண நாள் ஆச்சு

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2011 @ 15:39:24

   ஓ! கவிஅழகன்! இது என்ன! மிகத் தப்பு. காலையுணவு உண்ணப் பழகவும். சீரியல் என்பது கூட சாப்பிடலாம். மேலே ஆக்கத்தைப் பார்த்தால் புரியும். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் உமது வரவிற்கும் வரிகளுக்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. ramani
  அக் 20, 2011 @ 10:47:40

  உடலுக்கும் மனதிற்குமான
  இரண்டு அருமையான விஷயங்களைப்
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  பயனுள்ள ப்திவுகளைத் தரும்
  பதிவுகளில் தங்கள் பதிவு
  முதன்மையானதாக இருக்கிறது
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2011 @ 17:11:32

   மிக நன்றி சகோதரரே. உங்கள் இனிய வருகைக்கும், வரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 8. vinothiny pathmanathan
  அக் 20, 2011 @ 13:46:48

  உங்களின் வரிகளில் என் தாயின் அரவணைப்பை உணர்கிறேன். நிச்சயம்
  இனிமேல் காலை உணவில் கவனம் எடுப்பேன் .பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2011 @ 17:30:34

   விநோ! காலையுணவில் வெள்ளைப் பாணும் யோபேய /strawberry) ஜாமும் சீசும் (chees)-ost)மிகவும் பிடிக்கும். இப்போதெல்லாம் ஓட்ஸ் (havegryn) கஞ்சி தான் கூடுதலாக. விருந்தினர் வரும் போது அனைத்தும் பாவிப்போம். டென்மார்க் வட்டப் பாண் (rund stykker)உட்பட.
   கட்டாயம் காலையுணவு சாப்பிடப் பழகவும் விநோ. பிறகு வருத்தங்களை உழைக்க வேண்டாம்.
   உமது கருத்தையிட்டு மகிழ்ந்தேன். மிக நன்றியும் கூட.

   இது தவிர மகள் ஒத்துளைத்த ஆக்க லிங்கை அவரது முகநூல் சுவரில் போட்டேன். உடனும் போய்ப் பார்த்து ஆங்கிலத்தில் கருத்திட்டுள்ளா பார்க்கவும் (வாழ்வியல் குறட்டாழிசை). ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. ரெவெரி
  அக் 20, 2011 @ 15:50:28

  அம்மா தினம் சொன்னது..இன்று நீங்கள்..நன்றி அம்மா…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2011 @ 17:32:59

   அம்மா தினம் சொன்னது அன்று. எத்தனை வயது வந்தாலும் காலையுணவு தேவை என்கதை மறக்க வேண்டாம்.உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக மகிழ்வும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும் சகோதரா.

   மறுமொழி

 10. பழனிவேல்
  அக் 21, 2011 @ 04:28:52

  நல்லதொரு பதிவு… இன்றைய இளைய சமுதாயத்திற்கு தேவையான பதிவு.

  மறுமொழி

 11. கோவை கவி
  அக் 21, 2011 @ 06:47:03

  அன்று பெற்றோர் சொன்னதை நாம் கேட்டு நடந்தோம். இன்று இளைய சமூகம் இப்படி நடந்தால் எத்தனை பிரச்சனை சுமுகமாகத் தீருமே!….
  உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரரே. இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 12. முனைவர் இரா.குணசீலன்
  அக் 21, 2011 @ 09:42:39

  தேவையான வாழ்வியல் அனுபவக் குறிப்புகள்

  அருமை..

  தொடர்க..

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 21, 2011 @ 15:05:30

   மிகவும் மகிழ்ச்சி சகோதரா. உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிகுந்த நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. thirumathi. Mano Saminathan
  அக் 21, 2011 @ 10:16:23

  காலை உணவின் சிறப்பை அழகாக எழுதியிருக்கிறீர்கள். நானும் எப்போதுமே இதைத் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்வது வழக்கம்.

  ‘அன்பான அணைப்பு ஒரு அதிசய அட்சய பாத்திரம் மாதிரி’!

  மிக அழகான வரி!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 21, 2011 @ 15:08:09

   ஓ!……மிக மிக….மகிழ்ச்சி சகோதரி. உங்கள் அன்பு வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக மிக நன்றியைக் கூறுகிறேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 14. arulmozhisrinievasan
  அக் 21, 2011 @ 11:15:04

  ஆம் அன்பால் அணைத்தும் இயலும்.///
  உங்கள் பிள்ளை அருகில் அமருங்கள், அவர்கள் கரத்தை ஆதரவாகப் பிடித்து நீங்கள் அவருக்கு உதவி செய்ய விரும்புவதாகக் கூறி இரு பகுதிக்கும் நன்மை தரும் தீர்வைக் காணுங்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 21, 2011 @ 15:12:19

   மிக நன்றி அன்புறவே. மிக மகிழ்ச்சியும் கூட. முகநூல் இருந்தால் இணையலாமே. அருகில் முகநூல் badge இருக்கிறது. அழுத்தினால் அங்கு போய் விழுவீர்கள். உங்களை யாரென்றே புரிய முடியவில்லை. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 15. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  அக் 21, 2011 @ 15:40:26

  உள்ளத்திற்கு அழகையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளி வழங்கும் சகோதரியே, நீவீர் வாழ்க !!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 21, 2011 @ 20:46:16

   மிக்க நன்றி சகோதரா. உங்கள் அன்பான வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும். எல்லாம் வல்ல இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 16. Kowsy
  அக் 21, 2011 @ 19:49:53

  காலை உணவு இல்லாமல் என்னால் வாழவே முடியாது. அதனால், இந்த நோய்கள் எல்லாம் எனக்கு வராது அல்லவா. ஆனால், விரதம் என்று வந்தால், காலை உணவை ஒறுத்துத்தான் ஆகவேண்டியுள்ளது.

  மறுமொழி

 17. nathnaveln
  அக் 22, 2011 @ 10:57:06

  நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 18. கோவை கவி
  அக் 22, 2011 @ 12:38:21

  மிக்க நன்றி ஐயா. உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிகுந்த மகிழ்வடைந்தேன். இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 19. மகேந்திரன்
  அக் 23, 2011 @ 02:04:51

  காலை உணவு மிக அவசியம்
  என அறிவுறுத்தும் கட்டுரை..
  காலை உணவு எடுத்துக்
  கொள்ளவில்லையெனில் தேவையற்ற
  அமிலங்கள் சுரந்து, உடல் சோர்வடையும்.
  அருமையா பகிர்ந்திருகீங்க சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 23, 2011 @ 08:01:43

   அப்படியான அமிலங்கள் சுரப்பது அல்சர் நோயை வரவழைக்கும், இதையும் நாம் தவிர்க்கலாம் என்று அறிந்தேன். ஆக பசி நேரத்தில் காலியாக இரைப்பை இருத்தல் தவிர்க்கப் பட வேண்டும். மிக நன்றி சகோதரா உமது வருகைக்கும், கருத்திற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: