214. மத்தாப்பு முத்தம்.(பாமாலிகை (கதம்பம்)

(Sujatha. Anton’s news photo – Thank you)

த்தாப்பு முத்ம்.

                  

(அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல வாழ்த்துகள்.)

 

மனமெங்கும் ஒளி வெள்ளம்.
கனமற்ற குதூகலம், பூ
வனம் போல பூவாணம்
தினத்திற்குக் கையிலேந்தல்.
புது ஆடை, பலகாரம்.
இது தீபாவளி ஆரவாரம்.
பொதுவான அந்தக் காலம்
முதுபெரும் கனவுக் கோலம்.

பூக்கள் அழியும் ஆட்சி.
மக்கள் மனதுயர் நீட்சி.
எக்காலம் வாழ்நிலையில் தீபஒளி
அக்காலமே தீபாவளியாகும்!
பட்டாசு வெடிகள் ஒலியும்
தொட்டசைக்கும் போரெனும் கிலி.
கட்டாயமொளி பிறக்க வேண்டும்!
எட்டிய கடாபி நிலையுணர வேண்டும்!

மண்ணில் முளைக்கும் அநியாயங்கள்
கண்ணில் தெரியாது அழியட்டும்!
கண்ணீரும் செந்நீரும் மாறி
நன்னீராய் அமைதி ஓடட்டும்!
நாதசுர இசை ஒலி
நரகாசுரர்கள் அழியும் ஒலி!
பிரகாசிக்கட்டும் அமைதி ஒளி
வரமாகும் அன்று தீபாவளி!

உருகட்டும் கயவர் கொடுமை!
பெருகட்டும் தமிழர் வாழ்வில்!
தீப ஒளி தீப ஆவளி
திருவிழா கோல ஒளி!
உறவுகளின் நிம்மதி வாழ்வே
திறப்பது தீப ஒளியை!
பிறக்கட்டும் நாட்டில் அமைதி!
சிறக்கட்டும் மத்தாப்பு முத்தம்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-10-2011.

(25-10-2011 ல் மாலை ஏழு மணிக்கு ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கவிதை பாடுவோம் நிகழ்வில் என்னால் வாசிக்கப்பட்டது இக் கவிதை.)

பட்டாசு பற்றிய இன்னொரு கவிதை இணைப்பு இதோ!….:-  

https://kovaikkavi.wordpress.com/2015/01/27/359-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/

 

                                   

 

 

 

 

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  அக் 25, 2011 @ 04:30:54

  அமைதி வேண்டி பிரார்த்தனை செய்யும்
  ஓர் அற்புதமான கவிதை!!

  வாழ்த்துக்கள் அம்மா!
  தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்!!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2011 @ 04:38:14

   மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. unmaivrumbi
  அக் 25, 2011 @ 05:06:13

  மண்ணில் முளைக்கும் அநியாயங்கள்
  கண்ணில் தெரியாது அழியட்டும்!
  கண்ணீரும் செந்நீரும் மாறி
  நன்னீராய் அமைதி ஓடட்டும்!
  நாதசுர இசை ஒலி
  நரகாசுரர்கள் அழியும் ஒலி!
  பிரகாசிக்கட்டும் அமைதி ஒளி
  வரமாகும் அன்று தீபாவளி!

  இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!

  unmaivrumbi
  mumbai.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2011 @ 05:16:28

   சகோதரா! மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.
   வேதா. இலங்காதிலகம்.

   மறுமொழி

 3. maheswaran
  அக் 25, 2011 @ 05:15:02

  நீரோடை-காம் தீபாவளி வாழ்த்துகள்

  வலைப்பக்கம் வந்ததற்கு நன்றி
  http://www.neerodai.com/
  மகேஷ்

  மறுமொழி

 4. பழனிவேல்
  அக் 25, 2011 @ 05:42:06

  “கண்ணீரும் செந்நீரும் மாறி
  நன்னீராய் அமைதி ஓடட்டும்!”

  என்ற சிந்தனை மிக அருமை.
  மொத்தத்தில்,

  மத்தாப்பு முத்தம்
  திகட்டாத இன்பம்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2011 @ 17:36:24

   சகோதரா! நாட்டு நிலைமையால் இவ்வரிகள் வந்தது. உங்கள் ரசனைக்கும், வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக் மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. gunathamizh
  அக் 25, 2011 @ 06:22:08

  மண்ணில் முளைக்கும் அநியாயங்கள்
  கண்ணில் தெரியாது அழியட்டும்!..

  அருமை..

  எழுத்துக்களால் வேள்வி செய்யும் தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2011 @ 19:18:35

   என் எழுத்து வேள்வியைப் பார்க்க வந்த உங்களுக்கும், கருத்தைப்பதிந்ததற்கும் மிக மகிழ்வும், நன்றியும் தெரிவிக்கின்றேன். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. nathnaveln
  அக் 25, 2011 @ 09:30:35

  உறவுகளின் நிம்மதி வாழ்வே
  திறப்பது தீப ஒளியை!
  பிறக்கட்டும் நாட்டில் அமைதி!

  நல்ல கவிதை.
  மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2011 @ 19:20:39

   மிக்க நன்றி. உங்களுக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துகள்.இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்ச்சியும் நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. ramani
  அக் 25, 2011 @ 10:41:42

  தீபாவளி சிறப்புக் கவிதை
  அருமையிலும் அருமை
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  எனது இனிய மனம் கனிந்த தீபாவளி
  நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2011 @ 19:22:07

   சகோதரரே! மிக்க நன்றி. உங்களுக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துகள். இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்ச்சியும் நன்றியும்.ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. ரெவெரி
  அக் 25, 2011 @ 12:52:07

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2011 @ 19:25:02

   மிக்க நன்றி ரெவெரி. உங்களுக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துகள். இனிய வருகைக்கும், வாழ்த்திடலுக்கும் மிக மகிழ்ச்சியும் நன்றியும்.ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. SUJATHA
  அக் 25, 2011 @ 15:33:04

  தீபத்திருநாளில் இன்பம் பொங்க இல்லறம் சிறக்க
  மத்தாப்பூ மலரும் நினைவுகளாக இன்ப ஒளி வீசட்டும்
  திருநாள் நம் தமிழர் திருநாள்!!!!
  புதுப்பொலிவு பெற்றிடவே மனமார வாழ்த்துகின்றோம்.!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2011 @ 19:28:07

   இதே வரிகளை சுஜாதாவிற்கும் பிள்ளைகளுக்கும் நானும் கூறுகிறேன். இனிய வாழ்த்துகள். சீரும் சிறப்புமான தீபத் திருநாள் அமையட்டும். வாழ்தலுக்கு மிக நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  அக் 25, 2011 @ 15:35:52

  “மண்ணில் முளைக்கும் அநியாயங்கள்
  கண்ணில் தெரியாது அழியட்டும்!
  கண்ணீரும் செந்நீரும் மாறி
  நன்னீராய் அமைதி ஓடட்டும்!
  நாதசுர இசை ஒலி
  நரகாசுரர்கள் அழியும் ஒலி!
  பிரகாசிக்கட்டும் அமைதி ஒளி
  வரமாகும் அன்று தீபாவளி!”

  அன்புக்குரிய வேதா அக்காவுக்கும் ,குடும்பத்தார்க்கும் ..
  தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2011 @ 20:02:39

   மிக நன்றி ராஜீவ். நீங்கள் தீபாவளி கொண்டாடுவீர்களோ தெரியாது. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். உமது இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. Natarajan Mariappan
  அக் 26, 2011 @ 06:47:39

  “மண்ணில் முளைக்கும் அநியாயங்கள்
  கண்ணில் தெரியாது அழியட்டும்!
  கண்ணீரும் செந்நீரும் மாறி
  நன்னீராய் அமைதி ஓடட்டும்!
  நாதசுர இசை ஒலி
  நரகாசுரர்கள் அழியும் ஒலி!
  பிரகாசிக்கட்டும் அமைதி ஒளி
  வரமாகும் அன்று தீபாவளி!”

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
  அருமை வரிகள்
  சகோதரி! தொடரட்டும் உங்கள் சொற்காலம்!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 26, 2011 @ 07:33:16

   மிக்க நன்றி சகோதரா. உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். இங்கு வருகைக்கும், வரிகளுக்கும, உங்கள் இனிய ரசனைக்கும், மிக மகிழ்வும், இனிய நன்றியும். எல்லாம் வல்ல இறையின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. angelin
  அக் 26, 2011 @ 09:40:27

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 26, 2011 @ 16:40:15

   மிக்க நன்றி ஏஞ்சலின். உங்களுக்கும் உங்கள் குடம்பத்திநருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. vinothiny pathmanathan
  அக் 26, 2011 @ 14:07:52

  இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 26, 2011 @ 16:41:38

   மிக்க நன்றி விநோதினி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 14. வே.நடனசபாபதி
  அக் 27, 2011 @ 02:13:56

  //மண்ணில் முளைக்கும் அநியாயங்கள்
  கண்ணில் தெரியாது அழியட்டும்!
  கண்ணீரும் செந்நீரும் மாறி
  நன்னீராய் அமைதி ஓடட்டும்!//

  வரும் நாட்கள் உங்களின் நல்லெண்ணம் நிறைவேற, இறையை வேண்டுகிறேன். உங்களுக்கு எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 29, 2011 @ 06:49:55

   அன்பின் சகோதரா மிக்க நன்றி உங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலுக்கும். தீபாவளி வாழ்த்திற்கும் நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 15. vazeerali
  அக் 28, 2011 @ 07:58:56

  உங்கள் கவிதை வரி சரவெடி.
  தினம் கவிதையாய் நீ வெடி.
  கொட்டும் முரசொலி.
  தொடருங்கள் உறவே.உங்கள் கவிதை – பயணத்தை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: