16. இரு அனுபவங்கள்.

இரு அனுபவங்கள்.(சிறு கட்டுரைகள்)

(இங்கு வரும் இரு அனுபவக் குறிப்புகளும் 2005ல் ஓடி விளையாடு பாப்பா அனுபவக் குறிப்பாக இண்டன் தமிழ் வானொலியில் ஒலி பரப்பானது.)

ஒரு தாயும் ஐந்து வயதுப் பிள்ளையும் கடைக்குப் பொருட்கள் வாங்க வருகிறார்கள். பிள்ளை தனக்குத் தேவையான ஐஸ்கிறீம், இனிப்பு வகைகளைத் தானாகத் தெரிவு செய்து தாயுடன் சேர்ந்து வாங்குகிறது.

முடிவில் தாயார் வங்கி அட்டையைப் பாவித்துப் பணம் கொடுக்கும் போது, பிள்ளை தானே தான் அட்டையை யந்திரத்தில் உரசி பணம் கொடுக்க வேண்டுமென்று அடம் பிடித்தது. அட்டையை அழுத்தித் தேய்க்க பிள்ளையின் கைப்பலம் கூட,    போதுமாவெனத் தெரியவில்லை.

இரண்டு பேரும் சேர்ந்து செய்வோமென உடன்பட்டுத் தாயாரும் பிள்ளையுமாக அட்டையைத் தேய்த்தனர்.

பின்னர் இலக்கங்களையும் தானே தான் அழுத்த வேண்டுமென பிள்ளை அடம் பிடித்தது. தாயார் பதிலேதும் கூறாமல் மௌனமாக இலக்கங்களை அழுத்திவிட்டு, இறுதியில் அங்கீகரிக்கும் பச்சைக் கட்டையை அழுத்தும்படி பிள்ளையிடம் கூறினார், பிள்ளை    அழுத்துகிறார்.   உலகை வென்ற ஆனந்தம் பிள்ளை முகத்தில்.

விடயம் இனிமையாக முடிந்தது.

இது ஒரு சிறு விடயம். எவ்வளவு புத்தி சாதுரியமாக இந்தத் தாயார் விடயத்தைக் கையாண்டார்!  இரு பகுதியும் திருப்தியாக மகிழ்வாகச் செல்கிறார்கள்!

இதுவே நம்மவர் ஒருவரானால்  எத்தனை மறுதலிப்பு, பிரதிபலிப்புக்கு இந் நிகழ்வு ஆளாகும்!
தர்க்கம், எதிர்ப்பு என்று பலமான தாக்கங்கள் உருவாகுமல்லவா!….

இப்படி நுணுக்கமாக விடயங்களைக் கையாளும் திறமை நமக்கு வேண்டும்!

நம்மில் எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ளது!….

19-9.2005.

 

பயணப் பொருட் பட்டியல்.

நீங்கள் குழந்தைகளுடன் குடும்பமாகப் பயணம் செய்கிறீர்கள். போயிருக்கும் இடத்தில் நித்திரையின் போது உங்கள் குழந்தை, எப்போதும் தனது கையில் வைத்தபடி அல்லது அணைத்தபடி நித்திரை கொள்ளும் பொம்மையையோ, பொருளையோ கேட்டு  அடம் பிடித்து நித்திரை கொள்ளாது உங்களைப் படுத்துகிறது.

இது தவிர சிறிது வளர்ந்த பிள்ளைகளானால் தானாகவே ஏதாவது படம் வரைந்தோ அல்லது தானாக அடுக்கி விளையாடும் சில பொருட்களுக்காக ஏங்கி, கவலைப்படுவார்கள். இவைகளைப் போகும் அவசரத்தில் நீங்களும் மறந்திருப்பீர்கள்.

இதற்கு மிக சுலபமான ஒரு வழி இருக்கிறது.
நீங்கள் பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பட்டியலிடுங்கள்.

உங்கள் பயணப் பெட்டியை அடுக்கும் போது சரியாகப் பார்த்துப் பார்த்து அடுக்குங்கள். இதில்
அப்பாவின் பொருட்கள்,
அம்மாவின் பொருட்கள்,
பிள்ளையின் பொருட்கள்,
போகும் இடத்து விருந்தினர் பரிசு உட்பட எழுதுங்கள்.

கணனியில் கூட இந்தப் பட்டியலைப் பதிந்து வைத்துத் தேவையான போது பிரதி எடுத்து பார்த்துப் பார்த்து பொருட்களை அடுக்கலாம்.

இப்படியானால் பெரும்பாலும் பொருட்களை மறந்து விட சந்தர்ப்பம் அமையாது.  இப்படித்தான் நான் செய்கிறேன். இது எனது அனுபவம்.

உங்களுக்கும் பயன் படுமா? சிந்தித்துப் பாருங்கள்.

நன்றி.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-5-2005.
வலையேற்றம். 29-10-2011.

                               
 

34 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  அக் 30, 2011 @ 05:38:27

  இனிமையான அனுபவப் பாடங்களை
  தெளிவுபட சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி…
  குழந்தைகளின் மனநிலை அறிந்து
  அவர்களின் வழியில் நம் செயலுக்கேதும் பாதிப்பில்லாமல்
  விடயத்தை லேசாகக வேண்டும்.
  அனுபவப் பகிர்வுகளுக்கு நன்றி சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 30, 2011 @ 18:57:03

   அன்பான சகோதரர் மகேந்திரன் உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும்.ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. ramani
  அக் 30, 2011 @ 06:45:00

  இரண்டு அனுபவங்களையும் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  முதல் அனுபவத்தில் சொன்ன தாயின்படி நடந்து கொள்ள
  இன்னமும் பெரும்பாலோர் முதிர்சியடையவில்லை என்பதே நிஜம்
  இரண்டாவது கொடுத்துள்ள அட்டவணை பயணம்செய்கிற
  அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியது
  பய்னுள்ள அருமையான பதிவு.நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 30, 2011 @ 19:12:34

   எனக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்தமில்லாத செயல் பயணப் பெட்டி அடுக்குவது. மிகவும் பிடித்த செயல் கணவருடன் பயணம் போவது. இது எப்படியிருக்கு? இது பெரிய தொல்லையாக இருப்பதால் தான் இப்படி லிஸ்ட் போட்டு அடுக்குவது. கீழே வரும் கருத்துகளையும் பார்த்தால் வேறும் தகவல்கள் இருக்கிறது. நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரரே உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. Vidu
  அக் 30, 2011 @ 09:23:40

  நல்ல அனுபவங்கள்! பகிர்வுக்கு நன்றி!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 30, 2011 @ 20:10:38

   அன்பின் விது முதலில் சப்ஸ்கிறைப் பண்ணியதற்கு நன்றி விது. அடுத்து வலைக்கு வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க மிக்க நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. கவி அழகன் --
  அக் 30, 2011 @ 11:40:40

  முதலாவது சூப்பர்! இரண்டாவது நமக்கு யதார்த்தத்துக்கு ஒத்துவராது
  எங்கேயப்பா லிஸ்ட் போட நேரம்!…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 30, 2011 @ 20:24:45

   அப்பப்பா..கவி அழகன்! கொஞ்சம் காலை நிலத்தில் தரிக்கவும். இப்படி ஓடினால் உடம்பு என்னத்திற்கு ஆகும்? இந்தக் காலத்துப் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையப்பா!
   மிக்க நன்றிஉமது கருத்திற்கும், வருகைக்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. nathnaveln
  அக் 30, 2011 @ 12:51:47

  நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள் அம்மா.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 30, 2011 @ 20:26:38

   மிக்க நன்றி ஐயா! வரவிற்கும், கருத்திற்கும். லிங்க் போட்டதற்கும் நன்றி. கருத்திட்டுள்ளேன். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. gokul
  அக் 30, 2011 @ 14:17:10

  நல்ல பகிர்வு!
  நன்றி!

  மறுமொழி

 7. சென்னைபித்தன்i
  அக் 30, 2011 @ 14:34:00

  இரண்டு முத்துக்கள்.
  இரண்டாவதைப்படிக்கும்போது ஜெரோம் கே ஜெரோம் இன் ஒருபுத்தகம் நினைவுக்கு வருகிறது.அதில் எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்களைப் பட்டியலிட்டு விட்டு அந்தப் பட்டியலையே தொலைத்து விடுவார்கள்!!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 30, 2011 @ 20:35:57

   மிக்க நன்றி ஐயா உங்கள் வரவிற்கும், கருத்திற்கும். உண்மையில் நானும் எழுதிய லிஸ்ட்டை தொலைத்திட்டு அவதிப்பட்டேன். பின்பு வேறொன்று வைத்திருக்கிறேன்.
   உலகிலேயே மிகவும் பிடிக்காத விடயம் எனக்கு, பயணப் பெட்டி அடுக்குவது. துண்டைக் கையிலேயே கொண்ட திரிந்து அடுக்குவேன்.
   அந்தப் பட்டியலால் சிறிது ஆறுதல்.
   மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவிற்கு.
   இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. angelin
  அக் 30, 2011 @ 16:07:54

  இரண்டுமே அருமையான அனுபவ முத்துக்கள் .
  முதல் சம்பவத்தில் அந்த தாய் அழகாய் பொறுமையாய் சூழ்நிலையை சமாளித்திருக்கிறார் .உண்மையில் இப்படியான பாடங்கள் நம்மில் பெரும்பாலோனோர் கற்றுக்கொள்ள வேண்டியது .
  இரண்டாம் விஷயம் உண்மையில் தேவையான ஒன்று
  ஒரு ஆறு வயதுக்கு மேல்உள்ள பிள்ளைகளிடம் ஒரு சூட்கேஸ் கொடுத்து அவர்களுக்கு தேவையானதை அதில் பாக் செய்ய விடலாம் .இது என் சொந்த அனுபவம் .

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 30, 2011 @ 20:48:48

   ஏஞ்சலின்.ஆறு வயது இல்லையம்மா…நான் நர்சரி படிப்புத் தான 3 வருடம் செமினார் ல் படித்து 14 வருடங்கள் 3-10 வயதுப் பிள்ளைகளோடு வேலை செய்தேன்.

   பாடசாலை முடிய வந்து மாலை 5 வரை நிற்கும் கிரியேட்டிவிட்டி செயயும் வகுப்பகளிலும். 3-5 வயதுப் பிள்ளைகளோடு பிக்னிக் போகும் போது முதுகில் சுமக்கும் குட்டிக் குட்டி பைகளை நிலையமே வாங்கிகொடுத்து அவர்களது உணவுப் பொதி பழரச போத்தல் குவளைகள் யாவுமே பிள்ளைகள் தான் காவ வேண்டும்.

   இது 3- 5 வயதிலேயே பழக்குகிறோம். நடைமுறையில் நடக்கிறது. நீங்கள் 6 வயது என்பது கூடிவிட்டது.
   மிக்க நன்றி சகோதரி உங்கள் வரவிற்கும், கருத்திற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. கலாம் காதிர்
  அக் 30, 2011 @ 18:51:21

  கதை, கவிதை, கட்டுரை யாவும் உங்கட்கு கைவந்த கலையாகி விட்டதால் ஒரு சஞ்சிகை துவங்கலாம்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 30, 2011 @ 20:52:19

   ஓ! இது போதும்! இதிலேயே எல்லாம் அடங்குகிறதே…மிக்க நன்றி சகோதரா வருகைக்கும், கருத்திற்கும் மிக மகிழ்வும் நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. விச்சு
  அக் 31, 2011 @ 01:20:53

  குழந்தைகளை கையாளும் விதம் பெரும்பாலனவர்கள் தவறாகவே செய்கின்றனர். நல்லதொரு பகிர்வு. நன்றி.
  http://alaiyallasunami.blogspot.com/2011/10/blog-post_27.html
  உங்கள் விமர்சனத்தை கூறுங்கள்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 02, 2011 @ 17:44:11

   மிக்க நன்றி சகோதரா. உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்வடைந்தேன் நன்றி. நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. ரெவெரி
  அக் 31, 2011 @ 13:44:51

  இரண்டுமே அருமையான அனுபவ முத்துக்கள்…நன்றி சகோதரி…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 02, 2011 @ 17:45:21

   மிக்க நன்றி ரெவேரி. உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்வடைந்தேன் நன்றி. நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 12. vazeerali
  அக் 31, 2011 @ 21:40:19

  தேவையான ஒன்று .பகிர்வுக்கு நன்றி .

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 02, 2011 @ 17:46:45

   மிக்க நன்றி Vazeerali உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்வடைந்தேன் நன்றி. மிக நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 13. jaghamani
  நவ் 02, 2011 @ 17:34:02

  இப்படி நுணுக்கமாக விடயங்களைக் கையாளும் திறமை நமக்கு வேண்டும்!

  நம்மில் எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ளது!…./

  அருமையான ஆக்கபூர்வமான பகிர்வு. பாராட்டுக்கள்>

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 02, 2011 @ 17:47:44

   மிக்க நன்றி சகோதரி. உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்வடைந்தேன் நன்றி. மிகுந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 14. பழனிவேல்
  நவ் 03, 2011 @ 05:26:53

  அனுபவப்பாடம்… அற்புதம்…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 03, 2011 @ 20:06:46

   நன்றி சகோதரா. உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்வும், நன்றியும் உரித்தாகுக. இறை அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 15. vinothiny pathmanathan
  நவ் 05, 2011 @ 07:30:52

  குழந்தைகளுடனான செயல்களில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் நிறைய இருக்கிறது. ஆக்கபூர்வமான ஒரு விடயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி .

  மறுமொழி

 16. arulmozhisrinievasan
  நவ் 08, 2011 @ 16:13:19

  நம்மில் எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ளது!….

  நான் இவ்வாறு தான் செய்வேன் குழந்தைகளை எப்பவும் அலச்சிய படுத்தகூடாது

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 09, 2011 @ 17:38:27

   நீங்கள் குழந்தைகளைப் புரிந்து கொண்டு நடக்கிறீர்கள் சகோதரர். அவர்கள் நிறைய தன்னம்பிக்கை பெறுவார்கள். நல்லது உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 17. Kalai Moon
  நவ் 08, 2011 @ 19:55:32

  ஒன்று சாதுரிய தன்மை
  அடுத்து மறதியை போக்கும் நிலை
  இரண்டும் நமக்கு தேவை,
  கட்டுரை மிக அருமை!
  வாழ்த்துக்கள்.
  http://vazeerali.blogspot.com/

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 09, 2011 @ 17:40:29

   சகோதரரே உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: