37. பேசாத எழிலே!….

பேசாத எழிலே!….

நீல ஆழியில் செல்லும் வெள்ளி ஓடம்.
நூலில் ஆடாத வெள்ளிப் பந்து.
நிலத்தின் இருட்டைச் சலவை செய்து
நிலா மஞ்சள்  பூசும் சந்திர வட்டக் கவியாள்!
தலைக் கனமற்று கலைத் தடமிடுபவளே!
திடல் ஏறி உன்னைத் தொடுமாசை தான்
திருடன் உன்னைத் தூற்றகிறான், அவன்
திருட்டு உன்னொளியில் தெரியப் படுமாம்.

நட்சத்திர  நங்கையர் கூட்ட
நல்லிரவு ராணியே! முகில் வலைத் துணி
முக்காட்டை விலக்கி நிலத்தினையொரு
முறை பாரேன்! தண்ணொளி வீசேன்!
காலைச் சூரியன் ஒளியில் நீ முற்றாகக்
காணாமற் போவதில் என்றும்
கவலையே கொள்வதில்லையா இரவரசியே!

நீலவானில் அம்புலியாய், கவிஞருள்ளக்
கோல எழிற் கற்பனை ஊற்றாய்
வலம் வருகிறாய் அற்புதமாய்!
ஓய்வில்லா நிலவே! கலம் இறங்கிய மனிதன்
காலடியும் நிலவில் விழுந்துள்ளதே!
நிலவு அந்த மழலைக் காலம்!
நிலவாய்த் தேய்ந்து முதுமை மறுபடி
உலவுகிறது மழலைத் திங்களாய்.


இகத்துச் சீவராசிகளின் வைப்பு நிதியாய்
இதய வங்கியில் ஆனந்தக் காசு
சேர்க்கும் தண்மதி வெண்ணிலவே!
வேண்டுதல் வேண்டாமையற்று
பேதா பேதங்கள் அற்ற பேசாத எழிலே!
இலங்கையிலும் உன்னைக் கண்டேன்.
இங்கும் உன்னைக் காண்கிறேன்
அறிவில் உயர்ந்தோன் எங்கும் தெரியப் படுவதாய்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-6-2006.

வேறு:-

விண்ணிலாடும் தண்ணிலவே
கண்ணிலாடும் வெண்ணிலவே
எண்ணிலாக் கனவுகளையே
மண்ணிலெ தருகிறாயே

2010

(சீஐ ரி  வி (cee i tv) யில் கவிதையே தெரியுமா நிகழ்வில் என்னால் வாசிக்கப் பட்ட கவிதை.)

                            

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீஸ்கந்தராஜாsri
  நவ் 03, 2011 @ 05:51:35

  “நட்சத்திர நங்கையர் கூட்ட
  நல்லிரவு ராணியே! முகில் வலைத் துணி
  முக்காட்டை விலக்கி நிலத்தினையொரு
  முறை பாரேன்! தண்ணொளி வீசேன்!
  காலைச் சூரியன் ஒளியில் நீ முற்றாகக்
  காணாமற் போவதில் என்றும்
  கவலையே கொள்வதில்லையா இரவரசியே!”

  அணிகள் கவிதைக்கு அணிகலன்கள் பூட்டி மேலும் அழகு பார்க்கின்றன.. அற்புதம்!!!

  அம்மா சிறு வேண்டுகோள்…

  கொஞ்சம் எதுகை மோனை கவனித்தால் கவிதை இன்னும் அழகு பெறும் என்பது ஆனது ஆசை!!

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 03, 2011 @ 06:15:26

   Kalai vanakkam. நன்றி சகோதரா! உங்கள் இனிய வருகைக்கும் கருத்திடலுக்கும். பேசாத எழில் 2006ல் எழுதியது. எல்லாரைப் போலவும் சாதாரண கவிதை எழுத ஆசைப் பட்டு வசன கவிதையாக விரும்பி எழுதியது. தவறு தான். (ஒரு சின்ன ஆசையை நிறைவேற்றியது.) இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. முனைவென்றி நா சுரேஷ்குமார்
  நவ் 03, 2011 @ 06:33:19

  அருமை.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 03, 2011 @ 08:19:28

   காலை வணக்கம் சகோதரா.வலைக்கு வந்தது ம் கருத்திட்டதும் மகிழ்ச்சி சகோதரா, அத்துடன் மிகுந்த நன்றியும்.
   இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. சண்முகம்
  நவ் 03, 2011 @ 08:07:04

  படங்கள் அருமை.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 03, 2011 @ 16:44:54

   மிக்க நன்றி சகோதரரே உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும். மிக மகிழ்வடைந்தேன். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. மகேந்திரன்
  நவ் 03, 2011 @ 08:59:12

  நிலாமகளை அற்புதமாக வர்ணனை செய்திருக்கிறீர்கள்
  சகோதரி.
  கவியின் நேர்த்தி அழகு.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 03, 2011 @ 16:47:39

   நிலா மகளுக்கு வந்து கருத்திட்ட இந்த தமிழ் மகனுக்கு மிக்க நன்றி.உங்கள் வருகையால் மிக மகிழ்வடைந்தேன் சகோதரா மகேந்திரன். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. ramesh
  நவ் 03, 2011 @ 09:07:21

  அருமையான கவிதை சகோதரி ,அர்த்தம் நிறைந்தது , இன்று படங்களும் அருமையாக உள்ளது ,ரசித்தேன்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 03, 2011 @ 17:35:15

   அன்பின் ரமேஷ் உமது இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், உமது ரசனைக்கும் மிக மகிழ்ந்தேன், மிக்க நன்றியும் கூட. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ரெவெரி
  நவ் 03, 2011 @ 11:53:22

  நிலாமகளை அருமையாக வர்ணனை செய்திருக்கிறீர்கள்
  சகோதரி…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 03, 2011 @ 17:37:31

   நிலாமகளை ரசித்த சகோதரர் ரெவெரிக்கும், இங்கு வந்து கருத்திட்டமைக்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. nathnaveln
  நவ் 03, 2011 @ 13:45:51

  அழகு கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 03, 2011 @ 17:39:17

   அன்புள்ள ஐயா, உங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. SUJATHA
  நவ் 03, 2011 @ 18:27:11

  நிலவை தொட்டு நிற்கும் வானின் அழகோடு கூடிய காட்சிகளும்,
  அழகான வர்ணனையோடு நிலவை வர்ணித்த கவியழகு பிரமாதம். ”கவியரசி வேதா” தமிழோடு தமிழ் உருண்டு நிற்கும்
  கவிவடிவம் அற்புதம்……வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்!!!!!!!!!!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 03, 2011 @ 18:57:41

   அன்பின் சுஜாதா! மிக்க மிக்க நன்றி. உமது இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. சத்ரியன்
  நவ் 03, 2011 @ 23:34:19

  //இங்கும் உன்னைக் காண்கிறேன்
  அறிவில் உயர்ந்தோன் எங்கும் தெரியப் படுவதாய்.//

  அருமையாகச் சொன்னீர் சகோதரி..!

  மறுமொழி

 10. Vetha ELangathilakam
  நவ் 04, 2011 @ 06:44:34

  மிக நன்றி சகோதரா உமது இனிய வரவிற்கும், கருத்திடலுக்கும். நான் மிக மகிழ்ந்தேன். இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 11. oppilan mu.balu
  நவ் 04, 2011 @ 15:32:53

  அழகான கவிதை நிலவுக்கு ! நிலவு என்று ஒன்று இல்லை என்றால் கவிதைகளுக்கே ..ஒரு அழகு இல்லாமல் போயிருக்கும் …!எத்தனை கவிதையாளர்கள் ..காதலர்கள் வந்தாலும் நிலவிற்கு ..முதலிடம்தான் …வாழ்க !

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 04, 2011 @ 18:10:46

   எத்தனை பேர் கால் மிதித்தாலும்..அது கனவுலகம் தான்! அழகு தான்! சகோதரா உங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்ந்தேன் மிக்க நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. jaghamani
  நவ் 04, 2011 @ 16:23:13

  இகத்துச் சீவராசிகளின் வைப்பு நிதியாய்
  இதய வங்கியில் ஆனந்தக் காசு
  சேர்க்கும் தண்மதி வெண்ணிலவே!/

  அருமையன படங்களும் அழகான வரிகளும்.
  பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 04, 2011 @ 18:13:27

   நன்றி சகோதரி. உங்கள் இனிய வருகையால் மனம் மிக மகிழ்ந்தேன் உங்கள் கருத்திற்கும் ரசனைக்கும் மிக நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. arulmozhisrinievasan
  நவ் 08, 2011 @ 15:20:05

  இகத்துச் சீவராசிகளின் வைப்பு நிதியாய்
  இதய வங்கியில் ஆனந்தக் காசு
  சேர்க்கும் தண்மதி வெண்ணிலவே!////அழகிய வரிகள்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 09, 2011 @ 17:54:36

   எனக்கும் இது பிடித்த வரியே. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரா உங்கள் இனிய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 14. கோவை கவி
  ஏப் 09, 2015 @ 07:43:28

  Mikka nanry Pune Thamil sankam.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: