38. பூமழை நீரோவியங்கள்! (பாமாலிகை)

பூமழை நீரோவியங்கள்!

வானத் தண்ணீர்த் தொட்டியால்
வாரி இறைக்கிறதே நீர்ச்சாரல்!
வாளால் தொட்டியை யாரறுத்தார்!

வானக் கூட்டுமாறு களன்றதோ!
தானமாய் யார் ஈர்க்குச்சிகளை
ஏனாம் தரையிலவிழ்த்துக் கொட்டுகிறார்!

கார்மேக நீள்வானம் நேர்
நீர்க் கோடுகள் போடத்தயார்!
யார் ஓடாது நிற்கிறார்!

வானுக்கும் மண்ணுக்குமான நீட்சி
வரையறையற்ற கண்ணீர் வீழ்ச்சி.
வானத்தோடு யார் சண்டையிட்டது!

வானத்துப் பன்னீர்க் குடமுடைந்ததோ!
வருவது நீர்ப் பிரசவமோ!
வன்முறை ஐலப் பிரளயமோ!

வானத்து நயகரா அருவியதோ!
வசீகர உலகைக் கழுவித் துடைக்க
வற்றாது வழிந்து கொட்டுகிறதோ!

தடதடவென வீழும் மழையின்

சடசட சத்தத்தால் குழந்தை

பயந்தலறி தாயை அணைக்கிறது.

தக்கா தையவெனக் கைகொட்டி
எக்காளமிட்டு ஆரவாரித்து மறு
குழந்தை மழையை வரவேற்கிறது.

சாயக் குப்பிகள் கவிழ்த்தும்
மாயக் கரைசல்கள் செய்யும்
ஓவியச் சிதறல்கள் மழை.

  

பூமாதேவியெனும் வரை தாளில்
பூமழை நீர் ஓவியங்களால்
பூக்கள் பூக்க வைக்கும் சாரல்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-11-2011.

In Anthimaalai web site :-    http://anthimaalai.blogspot.com/2011/11/blog-post_07.html

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் 8-11-2011 செவ்வாய் கவிதை பாடுவோம் நிகழ்வில் என்னால் இக் கவிதை வாசிக்கப்பட்டது)

இதோடு தொடர்பான மழைக் கவிதை இன்னொன்று- அதன் இணைப்பு..https://kovaikkavi.wordpress.com/2010/07/25/24-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b/

Another one  train  :-       https://kovaikkavi.wordpress.com/2013/12/14/54-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

                             

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. சத்ரியன்
  நவ் 05, 2011 @ 05:19:23

  பூ மழை ஊர்வலப் பாடல் வசீகரிக்கிறது.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 05, 2011 @ 07:45:41

   அன்பின் சத்ரியன்! காலை வணக்கம். முதல் வரவு, நல் வரவு! மிக்க நன்றி உமது இனிய வருகைக:கும் வரியிடலுக்கும் ஆண்டவன் ஆசி கிடைக்க வேண்டும்.

   மறுமொழி

 2. Kalai Moon
  நவ் 05, 2011 @ 05:41:11

  பூமாதேவியெனும் வரை தாளில்
  பூமழை நீர் ஓவியங்களால்
  பூக்கள் பூக்க வைக்கும் சாரல்.
  வித்தியாசமான நடை.
  தொடரட்டும் உங்கள் கவிநடை.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 05, 2011 @ 07:55:09

   சகோதரா!
   பூரிப்படைகிறேன் உங்கள்
   பூத்தூவலான கருத்தினால்.
   பூணாரமாய்(அணிகலன்) உங்கள் பணியும்
   பூக்கட்டும் இவ்வுலகிற்காய்.
   உங்கள் இனிய வருகைக்கும்
   இனிய வரிகளுக்கும் மிக்க நன்றி.
   இனிதாய் நானும் மகிழ்ந்தேன்.
   இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. vinothiny pathmanathan
  நவ் 05, 2011 @ 07:26:23

  மழை பற்றிய உங்களின் கவி சூப்பர். படங்கள் அருமை. பாராட்டுக்கள்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 05, 2011 @ 08:06:26

   விநோதினி! மிக விநோதம்
   விரைவான காலைக் கருத்திற்கு.
   வியப்பு, மகிழ்வு, மிக்க நன்றி.
   விக்கினமில்லா இனிய நாள்
   விரியட்டும் மகிழ்வாக.
   இங்கு விரல் நுனிகளால்
   விருப்பமுடன் என் நன்றியை
   விதைக்கிறேன். வாழ்க!
   விமலன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. மகேந்திரன்
  நவ் 05, 2011 @ 08:45:13

  அணிகளை மாலையாய் தொடுத்து
  மழைமகளுக்கு ஆரம் அணிவித்திருக்கிறீர்கள்.

  வானத்துப் பன்னீர்க்குடம் உடைந்ததோ!!!
  என்னைக் கட்டிபோட்ட வரி இது….

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 05, 2011 @ 16:26:22

   மழை மகளுக்கு ஆரம்
   மகேந்திரன் நெஞ்சிலே ரசனை ஈரம்.
   உமது கருத்தின் சாரம்
   காட்டியது வரிகளில் பாரும்.
   எனது நன்றிகளும் சேரும்
   உமது வரவிற்கும் சேர்த்து.
   இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. ramani
  நவ் 05, 2011 @ 09:14:59

  மனம் நனைத்து குளிர்வித்து
  எம்மை குதூகலிக்கச் செய்கிறது
  படங்களும் அருமையான பதிவும்
  தாங்கள் ரசித்தததை நாங்களும்
  அப்படியே ரசிக்கத் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 05, 2011 @ 16:31:22

   மிக்க சந்தோசம் சகோதரர் ரமணி. நீங்கள் ரசித்தது தெரிகிறது. மிகத் திருப்தி. அதில் தான் எனது வெற்றி அடங்குகிறது. உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. Ravindarz Collections
  நவ் 05, 2011 @ 09:16:51

  Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  மறுமொழி

 7. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  நவ் 05, 2011 @ 10:51:20

  “சாயக் குப்பிகள் கவிழ்த்தும்
  மாயக் கரைசல்கள் செய்யும்
  ஓவியச் சிதறல்கள் மழை!”

  அற்புதமான படிமங்கள்!!

  சாயக் குப்பிகள்… மாயக் கரைசல்கள்… ஓவியச் சிதறல்கள்…

  இந்த அணிகள் என்னை இரசிக்க வைக்கின்றன…
  கவித்துவமுள்ள படைப்பு!!

  வாழ்த்துக்கள் அம்மா!!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 05, 2011 @ 17:05:40

   நன்றி சகோதரா உங்கள் ரசனைக்கும், வருகைக்கும், கருத்திடலுக்கும். எனது ஒவ்வோரு இடுகையையும் பிடித்ததாகவே செய்கிறேன். கருத்துகள் மூலம் பிறரின் கருத்தை அறிகிறேன். மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் உங்கள் வருகைக்கு, கருத்திற்கு, உங்கள் ரசனைக்கு. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. nathnaveln
  நவ் 05, 2011 @ 14:34:22

  அருமை அம்மா.
  சாரல் பொழிகிறது.
  அருமையான கவிதை.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 05, 2011 @ 17:08:34

   மிக நன்றியும், மகிழ்ச்சியும் ஐயா உங்கள் இனிய வருகைக்கும் கருத்திடலுக்கும் இறைவனின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. சம்பத்குமார்
  நவ் 05, 2011 @ 17:34:14

  //வானத்துப் பன்னீர்க் குடமுடைந்ததோ!
  வருவது நீர்ப் பிரசவமோ!
  வன்முறை ஐலப் பிரளயமோ!

  வானத்து நயகரா அருவியதோ!
  வசீகர உலகைக் கழுவித் துடைக்க
  வற்றாது வழிந்து கொட்டுகிறதோ!//

  அருமையான வரிகள் சகோ.

  அழகான கவிமழையில் நனைய வைத்துவிட்டீர்கள்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 05, 2011 @ 19:56:51

   மிக்க மகிழ்ச்சி சகோதரர் சம்பத்குமார் உங்கள் இனிய லருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மகிழ்ந்தேன் நன்றியும் கூட.ஆண்டவன் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 10. SUJATHA
  நவ் 06, 2011 @ 19:13:36

  பூமாதேவியெனும் வரை தாளில்
  பூமழை நீர் ஓவியங்களால்
  பூக்கள் பூக்க வைக்கும் சாரல்.

  பூமழை கொட்டிய கவியோடு
  இணைந்த புகைப்படங்களையும்
  வர்ணிக்க வார்த்தைகளே இல்லை….
  அருமை!!!!!!!!!!!!!”வேதா”

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 06, 2011 @ 19:58:05

   படங்கள் தேடுவது சிரமம் தான். என் கணவர் கூறினார் இருந்த எல்லாப் படமும் போட்டு விட்டாய் போல உள்ளதே என்று. இதை விட நல்ல படங்கள் இன்னும் இருந்தது. ஆனால் வலைக்குப் போட்டதும் மழைத்துளி (அனிமேஷன் போல) விழவில்லை. கல்லுப் போல நிற்கிறது. அசையும் ( அனிமேசன்) படமாகவே தேடிப் போட்டேன்.
   மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். சுஜாதா வரவிற்கும், கருத்திடலிற்கும். மிக்க நன்றி..நன்றி ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. ramani
  நவ் 07, 2011 @ 03:32:31

  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
  பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
  தற்போதைய அவசர பிரச்சனைகள் நிரம்பிய
  நிலவின் அழகையும் குயிலின் இனிய கானத்தையும்
  ரசிக்க போதிய நேரம் காலம் மன நிலைஇல்லாத சூழலில்
  வசன கவிதைக்கும் உரை நடைக்கும் இடையிலான
  எனது முயற்சி இது.இலக்கணம் அறிந்துதான்
  இலக்கணம் மீறி எழுதுகிறேன்.இது குறித்து மார்ச் பதிவில்
  யாதோ என ஒரு பதிவிட்டிருக்கிறேன்
  தாங்கள் நேரமிருப்பின் பார்த்து தங்கள் பதிலைப்
  பதிவு செய்யவும் இப்போது நான் சொல்லியுள்ள
  எவ்வித இலக்கண அலங்காரங்கள் அற்ற
  விஷயம் அலங்காரங்களுடன் சொல்ல முயன்றால்
  நான் கவிஞன் என அங்கீகரிக்கப் படலாம்
  நான அந்த நோக்கத்திற்காக எழுதவில்லை
  நான் எனது அனுபவத்தை நான அனுபவித்தபடி
  அனைவரும் எளிதாக அறிந்து கொள்வதற்காக எழுதுகிறேன்
  அதனால்தான் யாதோரமணிஎனவும் பெயர் வைத்துக் கொண்டுள்ளேன்
  உண்மையில் தங்களைப் போன்ற கவிஞர்களுக்கு
  நிச்சயம் ஏமாற்றமளிக்கும் என எனக்குத் தெரியும் மன்னிக்கவும்
  நான் தங்கள் கவிதையின் ரசிகன் தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 07, 2011 @ 20:59:09

   யாதோ படித்தேன் சகோதரா. எனக்குப் பிடித்துள்ளது. உங்கள் சிந்தனைகள் நன்று. நல்ல அனுபவக் கருத்துகள். ஆனால் மக்கள் புரிந்தோ, புரியாமலோ கவிதை என்று கூறியதையே குறிப்பிட்டேன். வேறு ஏதுமில்லை. சிறப்பான கருத்துகள் என்பது மறுக்க முடியாத உண்மை வாழ்த்துகள். பணி தொடரட்டும்.

   மறுமொழி

 12. பழனிவேல்
  நவ் 08, 2011 @ 05:26:28

  “பூமாதேவியெனும் வரை தாளில்
  பூமழை நீர் ஓவியங்களால்
  பூக்கள் பூக்க வைக்கும் சாரல்.”

  அழகாகவும், தெளிவாகவும் உள்ளது இந்த சாரல் மழை…
  நானும் நனைந்து மகிழ்ந்தேன்…

  மறுமொழி

 13. Vetha ELangathilakam
  நவ் 08, 2011 @ 07:31:50

  அன்பின் சகோதரா உங்கள் மழைக் கவிதையும் குறைந்ததல்ல. மிக அருமையான கவிதை. நான் மிக ரசித்தேன் வாழ்த்துகள். உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக மகிழ்ச்சியும் நன்றியும் இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 14. முனைவென்றி நா சுரேஷ்குமார்
  நவ் 10, 2011 @ 05:07:44

  அருமை.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 10, 2011 @ 21:45:01

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா, உமது இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: