39. வண்ணவில்! வானவில்!

 

ண்வில்!  வாவில்!

 

எந்தக் குழந்தைத் தூரிகையின்
பாந்தமான அழகு விசிறல்
இந்த ஏழு வண்ண வானவில்!

மழையோடு இணைந்த வெயில்
அழைத்து வானிற்கு இட
குழைத்த திலகமோ வானவில்!

கோணலாய்  வளைந்தேன் கிடக்கிறது
வானத்தெருவின் சமிக்ஞை விளக்கு!
வாருங்களேன் தூக்கி நிறுத்தலாம்!

நிலத்தில் தானே வளைகிறது!
நில்லாது வாருங்கள் ஓடுவோம்!
நிச்சயமாய்த் தொட்டு ரசிப்போம்!

அட்சர கேத்திர கணிதத்தில்
அசகாய சூரனோ இயற்கை!
அருமையாக வளைத்துள்ளானே வானவில்லை!

விப்ஜியோர் (VIBGYOR ) ஏழு நிறங்கள்
விரிக்கும் ஆரம்ப எழுத்துகள்
அரிதாய் ஐந்தாம் வகுப்பில் கற்றது.

வானவில்லில் தோரணம் கட்டி
வஞ்சி மகளுக்கு ஊஞ்சலிட்டு
இஞ்சு இஞ்சாய் ரசிப்போம் வானவில்லை.


பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-11-2011.

 

                           
 

Advertisements

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  நவ் 09, 2011 @ 05:29:48

  வானவில்லுக்கே தோரணம் கட்டும் கவிதை
  மிகவும் அற்புதம்!!

  வாழ்த்துக்கள் அம்மா!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 09, 2011 @ 07:18:05

   இனிய காலை வணக்கம் சகோதரா. உங்கள் வரவு, வரிகள் மகிழ்வு தருகின்றது. மிகுந்த நன்றி. ஆண்டன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. பழனிவேல்
  நவ் 09, 2011 @ 05:34:55

  வண்ணவில்லாம் வானவில்லை கண்டு ரசித்தேன்…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 09, 2011 @ 07:35:44

   சகோதரா! ஒருவர் கவிதையை வாசித்தால் அது பல உணர்வுகளைக் கிளறி விடுமானால், பல உணர்வுகளுக்குத் தூண்டுகோலாக அமையுமானால் அதுவே அக் கவிதையை எழுதியவருக்கு வெற்றி. அவ்வகையில் உங்கள் மழை செய்த வேலைகள் தான் எனது இந்த கவிதையும். வாழ்த்துகள் சகோதரா.மேலும் வளர்க!. உங்கள் அன்பான வருகைக்கும், வரிகளுக்கும் அன்பு நன்றியும், மரிழ்ச்சியும்.இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

   • பழனிவேல்
    நவ் 10, 2011 @ 12:59:29

    உங்களால் முதல் முறை வெற்றியை ருசித்துள்ளேன்…
    “உங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்”
    நன்றி…

 3. Kalai Moon
  நவ் 09, 2011 @ 06:14:49

  படமும் வரிகளும் போட்டி போடுது .தொடருங்கள்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 09, 2011 @ 07:37:28

   கலை மதி. உங்கள் இனிய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும், மிக மகிழ்ந்தேன். மிக்க நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. jaghamani
  நவ் 09, 2011 @ 06:19:55

  எந்தக் குழந்தைத் தூரிகையின்
  பாந்தமான அழகு விசிறல்
  இந்த ஏழு வண்ண வானவில்!

  Nice…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 09, 2011 @ 07:41:09

   குழந்தைகள் பல வண்ணங்களை எடுத்து கை போன படி விசிறுவார்கள். அவை அழகு ஓவியங்களாக எமக்குத் தெரியும். 3-12 வயது பிள்ளைகளோடு 14 வருடங்கள் பணி புரிந்த இனிய அனுபவங்கள் இது. மிக்க நன்றி சகோதரி உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. karthikeyan
  நவ் 09, 2011 @ 11:01:26

  நல்ல ரசனை உங்களுக்கு

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 09, 2011 @ 15:59:26

   ஓ! கார்த்திக் நன்றி நல்லது. உமது பொட்டு கவர்ச்சியாக உள்ளது வலையில். வாழ்த்துகள் மிக்க நன்றி வந்ததற்கும் வரிகளுக்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ரெவெரி
  நவ் 09, 2011 @ 14:19:03

  சிறப்பு வானவில்லா…உங்கள் வரிகளா…தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது…மை லார்ட்…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 09, 2011 @ 16:02:42

   Thank you கனம் நீதிபதி அவர்களே!….நான் எந்தப் பிழையும் செய்யவில்லை..மனசில வந்ததைத் தானே எழுதினேன் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 7. சாகம்பரி
  நவ் 09, 2011 @ 16:05:57

  வானிற்கு இட
  குழைத்த திலகமோ வானவில்//
  இது நன்றாக இருக்கிறது. வானவில் மிகவும் அழகாக தெரிகிறது தங்கள் கவிதையில்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 09, 2011 @ 17:58:21

   மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரி உங்கள் இனிய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. ம.தி.சுதா
  நவ் 09, 2011 @ 18:10:52

  வானவில் போலவே வார்த்தைகளும் ஜொலிக்கிறது…

  அருமைங்க..

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 09, 2011 @ 22:41:27

   மிக்க நன்றி மதிசுதா. உமது அருமையான வரவிற்கும், கருத்திற்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. SUJATHA
  நவ் 09, 2011 @ 19:24:28

  கவிக்கு வடிவம் கொடுக்கும் ஒவியங்களுடன்
  கவியும் ரசிக்கவோ அருமை……

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 09, 2011 @ 22:42:53

   மிக்க மிக்க நன்றி சுஜாதா. உமது அருமையான வரவிற்கும், கருத்திற்கும் மிக மிக மகிழ்ச்சியும், நன்றியும்.
   எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. ramani
  நவ் 10, 2011 @ 02:14:56

  இஞ்சு இஞ்சாய் வானவில் குறித்த
  தங்கள் கவிதையை ரசித்து படித்தேன்
  அழகை உணர்தலும் உணர்ந்ததை உணர்ந்தபடி
  கவியாக்கி அனைவரும் ரசிக்கக் கொடுப்பதும்
  உங்களைப்போல் ஒரு சிலரால்தான் முடிகிறது
  மனம் கவ்ர்ந்த பதிவு
  தொடரவாழ்த்துக்கள்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 10, 2011 @ 07:50:29

   மிக்க நன்றி சகோதரா ரமணி. உங்கள் இனிய வரவிற்கும், அழகிய, அனுபவித்த கருத்திற்கும் மிக மகிழ்ந்தேன், மிக்க நன்றியும் கூட. ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. கவி அழகன் --
  நவ் 10, 2011 @ 04:19:55

  படமும் கவிதையும் பட்டயகிளப்புது

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 10, 2011 @ 07:53:46

   கவிஅழகன் மிகுந்த நன்றியும் மகிழ்ச்சியும் உமது வரவிற்கும், பின்னூட்டத்திற்கும். இறை அருள் கிட்டவேண்டும்.

   மறுமொழி

 12. rathnavel
  நவ் 10, 2011 @ 09:30:09

  அருமை

  மறுமொழி

 13. angelin
  நவ் 11, 2011 @ 23:43:05

  என் பின்னூட்டம் எங்கே .
  வானவில்லின் ஏழு வண்ணம் காணக்கான இன்பமே பாடல் நினைவுக்கு வருகிறது

  மறுமொழி

 14. angelin
  நவ் 11, 2011 @ 23:47:12

  இப்ப சரியாகிவிட்டது பதிவு லிங்குடன் முகவரி இருந்ததால் பின்னூட்டம் விழவில்லை

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 12, 2011 @ 18:21:32

   மிக்க நன்றி சகோதரி. எனக்கும் இப்படிப் பிரச்சனை வருவதுண்டு. எரிச்சல் எரிச்சலாய் வரும் எனக்கு மட்டும்தான் இப்படியோ என்று. அங்கள் அன்பான வருகைக்கும் கருத்திடலிற்கும் மிக்க நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 15. கிரேஸ்
  நவ் 19, 2013 @ 06:39:00

  மிக அருமை! வானின் எல்லை சென்று பிடித்துவிடலாமோ? அருமை 🙂

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: