17. நீங்கள் ஒழுங்கானவரா?

 

நீங்கள் ஒழுங்கானவரா?

( இந்த இடுகையின்  இரண்டு – ஓடி விளையாடு பாப்பா – அனுபவக் குறிப்புகளும் 2004 ம் ஆண்டு இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பானது.)

நீங்கள் எடுத்துப் பாவித்த பொருட்களை எடுத்த இடத்திலேயே திரும்ப வைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் ஒழுங்கானவர் தான் வாழ்த்துகள்!
உங்கள் பிள்ளைகளுக்கும் இப் பழக்கத்தைப் பழக்குகிறீர்களா?

ஏன்?

மறந்துவிட்டீர்களா?

இன்றே பழக்கிடுங்கள்!

  – மேசையிலிருந்து அல்லது சாய்வுக் கதிரையிலிருந்து படித்த பின் புத்தகங்களை,               எழுதுகோலை உரிய இடத்தில் வைக்கிறீர்களா?

– சாப்பிட்டபின் சாப்பாட்டுத் தட்டுகளைக் கழுவி உரிய இடத்தில் கவிழ்ப்பீர்களா?

– பாண் வெட்டிய பின் மேசையைத் துடைத்து, பாண் வெட்டிய பலகையை உரிய இடத்தில் வைக்கிறீர்களா?

– காலணிகளைக் (சப்பாத்துகளைக்) களற்றி உரிய இடத்தில் வைப்பீர்களா?

– மேலாடையை (ஜாக்கெட்டை) களற்றி கண்ட இடத்தில் போடுகிறீர்களா? அதற்குரிய இடத்தில் கொளுவுவதில்லையா?

– அழுக்குத் துணிகளை அழுக்குக் கூடையில் போடுகிறீர்களா?

இப்படி ஒவ்வொரு செயல்களையும் சிறு வயதிலிருந்து பழகும் போது எதிர் காலத்தில் உங்கள் வாழ்வில் நீங்கள் சிறந்த கணவனாக, சிறந்த மனைவியாக வாழ முடியும்.
உங்கள் பழக்க வழக்கத்தால் நீங்களும் பெற்றோரும் சிறப்படைவீர்கள், பெருமையடைவீர்கள்.

பிள்ளைகளுக்குப் பெற்றோர் உதவி செய்ய, பிள்ளைகள் பெற்றோருக்கும் உதவி செய்யலாமன்றோ!

22-8-2004.

 

 

ராகுல் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதில்லை.

வழக்கமாக ராகுல் கழிவறையில் (ரொய்லெட்டில்) நின்று கொண்டு தான்
சிறுநீர் கழிப்பான். இப்போதெல்லாம் இருக்கையில் அமர்ந்து சிறுநீர் கழிக்கிறானாம். இது அம்மா ரோகிணிக்கு மிகவும் ஆச்சரியம். ஏப்படி இப்படி மாறினான்!  இதன் காரணம் என்ன?

பாலர் நிலையத்திற்கு ராகுல் வரத் தொடங்கி மூன்று கிழமை தான் ஆகிறது. மூன்று வயது ராகுலின் அம்மா ரோகிணி பாலர் நிலையத்தில் இது பற்றி அறிய கேள்விக் கணை தொடுத்தார்.

” ஆண் பிள்ளை நின்று தானே சிறு நீர் கழிப்பார். எப்படி கழிவறை இருக்கையில் அமர்ந்து சிறு நீர் கழிக்க முடியும்? வெளியே எல்லாம் சிந்திடாதா? ” 
இலேசான புன்முறுவலுடன் கேள்விக் கணை தொடுத்தார் ரோகிணி என்னிடம்.

” ஆமாம்! சிறுநீர் கழிக்கும் இருக்கையில் அமர்ந்து, சிறுநீரை வெளியேற்றும் சின்ன மனிதனை (சிறுநீரை வெளியேற்றும் உறுப்பை) ஒரு விரலால் கீழே அழுத்திக் கொடுக்க வேண்டும். சிறுநீர் உள்ளேயே இறங்கும். நிச்சயமாக கழிவறை விஜயம் முடிய கைகளைச் சவர்க்காரமிட்டுக் கழுவ வேண்டும். இதையும் முக்கியமாக சொல்லிக் கொடுக்கிறோம்” என்று பதிலிறுத்தேன்.

”ஓகோ! அது தான் இப்போதெல்லாம் ராகுல் இருக்கையில் அமர்ந்து சிறு நீர் கழிக்க விரும்புகிறான்.” என்று திருப்தியாகச் சிரித்தார்.

எமது பயிற்சி வெற்றியளித்தது எமக்கும் மகிழ்ச்சியே.

ஒரு பெண் குழந்தை பாலர் நிலையத்தில் நின்றபடி சிறு நீர் கழிப்பது வெள்ளைக்காரர்களுக்கு ஒரு ஆச்சரியமான விடயம். 

சோமாலியப் பெண் குழந்தை
பாத்திமா கூட ஆரம்பத்தில் நின்று கொண்டு தான் சிறுநீர் கழித்தாள். வாராந்தர ஊழியர்கள் கூட்டத்தில் இது பற்றிக் கலந்துரையாடிய பின், அவளுக்குப் பயிற்சி கொடுத்தோம். இப்போது அவளும் அமரப் பழகிவிட்டாள்.

சிறுவர்கள் மட்டுமா?

எமது ஆசியக் குடும்ப நண்பர் டொமினிக் எமது வீட்டிற்கு விஜயம் செய்வதானால் எனக்கு ஒரே திண்டாட்டம் தான் போங்கள்!

அவர் போன பின்பு கழிவறை, தரை விரிப்பு, இருக்கை எல்லாம் சிந்திய சிறு நீரைத் துடைத்து, கிருமிநாசினி போட்டுக் கழுவாவிடில் இரவு எனக்குத் தூக்கமே வராது.

என்ன! தொட முடியதா புள்ளியைத் தொட்டு விட்டேனா?

சுத்தம் சுகம் தருமன்றோ!

எல்லாம் பேச முடிந்த விடயங்கள் தானே!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-8-2004.

                                

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பிரபுவின்
  நவ் 11, 2011 @ 05:51:12

  அதிக வேலைப் பளு காரணமாக நீண்ட நாட்களாக இணையப் பக்கம் வரவில்லை.தொடர்ந்து வருவேன் சகோதரி.

  படத்தில் காட்டப்பட்டுள்ள கழிவறையில் படுத்து உறங்கலாம் போல இருக்கே?!

  மறுமொழி

 2. பழனிவேல்
  நவ் 11, 2011 @ 06:02:33

  பேச வேண்டிய விடயங்கள் தான்…
  புள்ளிகள் தொடரட்டும்…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 11, 2011 @ 06:07:46

   மிக்க நன்றி சகோதரா. உங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி….நன்றி. இறை ஆசி தொரட்டும். கிடைக்கட்டும்.

   மறுமொழி

 3. Vetha ELangathilakam
  நவ் 11, 2011 @ 06:05:49

  ஆமாம் அப்படித்தான் ஒழுங்காக இருக்க வேண்டும். பலர் இப்படி வைத்திருக்கிறார்கள். மிக்க நன்றி பிரபு உமது இனிய வருகைக்கு, கருத்திற்கு.. ஆம் பிரபு இனிய வருகை என்று தான் கருதுகிறேன். மிக மகிழ்ச்சி. நான் உம்மைத் தேடினேன். இறைவன் உமக்கு மகிழ்வையும் அமைதியையும் தரட்டும் .

  மறுமொழி

 4. gokul
  நவ் 11, 2011 @ 06:45:24

  நிச்சயமாக எல்லாமே பேச முடிந்த விடயங்கள் தான்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 11, 2011 @ 07:01:44

   மிக்க நன்றி கோகுல், உமது இனிய வருகைக்கும், கருத்திற்கும். நான் மிக மகிழ்வடைந்தேன். ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 5. சத்ரியன்
  நவ் 11, 2011 @ 09:32:05

  சரியான ஆலோசனைகள்.

  அனைத்தும் பகிர்தலுக்குரியவைகளே!

  மறுமொழி

 6. rathnavel
  நவ் 11, 2011 @ 10:08:37

  நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 7. vathiri .c. raveendran.
  நவ் 11, 2011 @ 14:31:40

  சரியான ஆலோசனைகள்.

  மறுமொழி

 8. angelin
  நவ் 11, 2011 @ 23:44:59

  அருமை
  உண்மைதான் .
  மற்றும் நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களும் அவசியமானவை

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 12, 2011 @ 07:06:54

   நன்றி சகோதரி உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மனம் நிறைந்த மகிழ்வும், நன்றியும் ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. SUJATHA
  நவ் 12, 2011 @ 05:25:52

  இளவயதில் கற்றுக்கொள்வதற்குரிய ஆலோசனைகள் ஆரோக்ய
  வாழ்விற்கும் இடமளிக்கின்றது. கருத்துக்கள் அருமை…பணிகள்
  தொடரட்டும்!!!!!!!!!!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 12, 2011 @ 07:08:13

   நன்றி சுஜாதா, உமது இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மனம் நிறைந்த மகிழ்வும், நன்றியும் தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. jayaram
  நவ் 13, 2011 @ 07:08:03

  அருமை
  but உண்மை உண்மை

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 13, 2011 @ 08:42:35

   மிக்க நன்றி சகோதரா! மிக்க மகிழ்ச்சியுமடைந்தேன் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும். நன்றி. நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. Kowsy
  நவ் 13, 2011 @ 12:04:16

  பயனுள்ள தகவல்கள். வாழ்த்துகள்

  மறுமொழி

 12. Vidu
  நவ் 14, 2011 @ 09:33:52

  //எல்லாம் பேச முடிந்த விடயங்கள் தானே!//

  இவையெல்லாம் பேசவேண்டிய விடயங்களன்றோ!! பேசியதில் மகிழ்ச்ச் 🙂

  மறுமொழி

 13. arulmozhisrinievasan
  நவ் 14, 2011 @ 10:46:06

  ஆமாம்! சிறுநீர் கழிக்கும் இருக்கையில் அமர்ந்து, சிறுநீரை வெளியேற்றும் சின்ன மனிதனை (சிறுநீரை வெளியேற்றும் உறுப்பை) ஒரு விரலால் கீழே அழுத்திக் கொடுக்க வேண்டும். சிறுநீர் உள்ளேயே இறங்கும். நிச்சயமாக கழிவறை விஜயம் முடிய கைகளைச் சவர்க்காரமிட்டுக் கழுவ வேண்டும். இதையும் முக்கியமாக சொல்லிக் கொடுக்கிறோம்” என்று பதிலிறுத்தேன்.///கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 28, 2011 @ 13:46:44

   சிலபேர் வீட்டிற்கு வந்தால் இது ஒரு பிரச்சனை . துப்பரவாக இருக்கமாட்டார்கள். குழந்தைகளுக்குப் பழக்கும் போது அவர்களும் பழகட்டுமே. உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 14. வேல்
  நவ் 15, 2011 @ 13:11:45

  மக்கள் மந்தைக்க செல்லக் கூடாது என அரசு ரூ.1500 க்கு கட்டிக் கொடுத்த கழிப்பறைகளை கண்டவர்கள் நாங்கள். இது புதுசு ஆனால் அனைவருக்கும் இதுபோன்ற கழிப்பறைகள் கிடைக்க வேண்டும்

  மறுமொழி

 15. vinothiny pathmanathan
  டிசம்பர் 02, 2011 @ 21:47:19

  தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது தானே உண்மை. குழந்தைகளாக இருக்கும் போதே நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்வது மிகவும் அவசியம். பாராட்டுக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: