18. இரட்டைக் கட்டிலில்..(சிறு கட்டுரைகள்.)

வணக்கம் அன்புறவுகளே சுமார் 2 கிழமையின் பின் தொடர்கிறேன்.
(இந்த ஆக்கம் இலண்டன் தமிழ் வானொலி ” ஓடி விளையாடு பாப்பா” நிகழ்வில் 2004ல் ஒலி பரப்பானது)

இரட்டைக் கட்டிலில்..

( இதைக் குழந்தைகள் உலகம் ஆக்கமாகவும் நீங்கள் எடுக்கலாம். தொடராக விரும்பியவர்களும் எழுதலாம். கௌரி சிவபாலன் இந்த வேண்டுகோளை தொடர் பதிவிட எனக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடக் கூடியது.)

காதலுடன் கணவரோடு துயில்வது, அவரது உடற் சூடு, உடலின் மணம் எப்படி சுகத்தைத் தருகிறதோ , அப்படியே ஒரு குழந்தைக்கும் உலகிலேயே தனக்கு மிகவும் பிடித்தவர்களான அம்மா அப்பாவுடன் துயில்வது சுகம் தருகிறது.

கருப்பையின் இருட்டில் தாயின் உடற் சூட்டுடன் மிகப் பாதுகாப்பாக தூங்கியது குழந்தை. அம்மாவின் உடலில் இருந்து வெளியேறும் மூச்சுச் சத்தம், இதயத் துடிப்பைக் கவனித்த பிள்ளை,

அம்மாவின் இருமலின் போதும், குறட்டை விட்ட போதும், சிரிக்கும் போதும், கதைத்த போதும் கேட்டுப் பழகியபடி தூங்கியது. இத்தனை ஆரவாரத்துடன் துயின்ற பிள்ளையைத் தனியே குழந்தை அறையில் படுக்கப் போடுவது மிகவும் கொடுமை அல்லவா!

குழந்தைப் படுக்கையறைக் கதவை இழுத்து மூடுங்கள். உங்கள் இரட்டைக் கட்டிலுக்கு குழந்தையை எடுத்து அணைத்துத் துயிலுங்கள். அப்பா அம்மாவுடன் இரட்டைக் கட்டிலில் படுக்க வைக்க நெருக்கடியாக இருந்தால் சிறு தொட்டில் படுக்கையோ எதுவோ உங்கள் கை எட்டும் படியாகப் படுக்க வையுங்கள்.

குழந்தை உங்களை (உணர), உங்கள் மணம், உங்கள் குரலையும் கேட்டு உணரட்டும். பசித்த போது அம்மா மார்பைச் சுவைக்கட்டும்.

பிள்ளை அருகிலிருந்தால் தான் பிள்ளைக்கு ஏற்றபடி தாயால், தந்தையால் உடனே இயங்க முடியும். குழந்தையின் சமிக்ஞையை உடனே அறிய முடியும். இது குழந்தைக்கு நம்பிக்கை தரக் கூடியது. சுய பெறுமதியைத் தரும். குழந்தையின் தேவைகள் உடனே பூர்த்தியாகும்.
தனி அறையில் படுத்துத் தாயைத் தேடிப் பலமாகக் கத்தத் தேவையில்லை. பிள்ளை அருகிலிருப்பதால் தாயும் சேயும் நிம்மதித் தூக்கம் பெற முடியும்.

நாள் முழுதும் விலகியிருக்கும் தந்தையின் நெருக்கமும் ஒன்றாகத் தூங்கும் போது கிடைக்கிறது.

தந்தையின் நெருக்கமும், உடற் தொடர்பும் பிள்ளைக்குப் பாதுகாப்பு உணர்வு தருகிறது. இப்படி ஒன்றாகத் துயிலும் மன பலம் பின்னால் பிள்ளை தனியே தனது அறையில் துயில்வதற்கு மனத்துணை ஆகிறது.

”  வெள்ளி நிலாக் குழந்தையைத்
தள்ளியே தூர வைக்காது
உள்ளம் நிறைந்த உங்களன்பைக்
கிள்ளிக் கொடுக்காது, வாரி
அள்ளியள்ளிக் கொடுங்கள்.”

. –வேதா—

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-5-2004

  

                             

 

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. soundarapandiann
  நவ் 29, 2011 @ 05:54:57

  ஓ.. பாசம் பொங்கும் பதிவு….
  வாழ்த்துக்கள்..

  மறுமொழி

 2. soundarapandiann
  நவ் 29, 2011 @ 05:57:09

  கிராமப்பகுதியில் புடவையில் தூளிக்கட்டி குழந்தையை தூங்க வைப்பார்கள்.. அது ஏன் என்றால் அந்த புட வையில் இருக்கும் தாயின் வாசனை குழந்தைக்கு நாம் தாயின் மடியில் தான் தூங்குகிறோம் என்ன எண்ணத்தை உண்டுப்பண்ணுமாம்…

  தமிழரின் அத்தனை செய்கையிலும் அர்த்தம் இருக்கிறது..

  பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 29, 2011 @ 18:02:27

   உண்மை சகோதரா. ஒவ்வோரு செயலும் நமக்குப் பைத்தியக்காரத் தனமாகத் தெரியலாம் ஆனால் அத்தனையும் அர்த்தம் நிறைந்தது. மிக நன்றி உமது கருத்திற்கும் வருகைக்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. rathnavel
  நவ் 29, 2011 @ 06:52:07

  என்னை மனம் கவர்ந்து அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  மனப்பூர்வ வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. தமிழ்த்தோட்டம்
  நவ் 29, 2011 @ 07:09:28

  பாராட்டுக்கள் நமது தோட்டத்திலும் பூத்துள்ளது

  மறுமொழி

 5. Vetha ELangathilakam
  நவ் 29, 2011 @ 07:19:00

  மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 6. jaghamani
  நவ் 29, 2011 @ 10:09:11

  வெள்ளி நிலாக் குழந்தையைத்
  தள்ளியே தூர வைக்காது
  உள்ளம் நிறைந்த உங்களன்பைக்
  கிள்ளிக் கொடுக்காது, வாரி
  அள்ளியள்ளிக் கொடுங்கள்.

  கனிவான அன்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 29, 2011 @ 18:04:25

   நல்லது சகோதரி! உங்கள் இனிய வருகையும் கருத்திடலும் மகிழ்வு தருகிறது. மனம் நிறைந்த நன்றியும் உரித்தாகுக. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. கலைநிலா
  நவ் 29, 2011 @ 10:33:13

  குழந்தை உங்களை (உணர), உங்கள் மணம், உங்கள் குரலையும் கேட்டு உணரட்டும். பசித்த போது அம்மா மார்பைச் சுவைக்கட்டும்.

  உணர்வுகளை உங்களுக்கே உண்டான வரிகளால்
  விதைத்தது அருமை …

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 29, 2011 @ 18:09:17

   மிக நன்றி சகோதரா. உங்கள் இனிய வருகைக்கும் கருத்திடலிற்கும் மிக்க மகிழ்வும் நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. Kowsy
  நவ் 29, 2011 @ 17:52:57

  முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன் .சுந்தரபாண்டியன் சொன்னதும் உங்களுடைய கருத்துக்கு ஒத்துப் போகின்றது. ஐரோப்பிய நாட்டினர்தான் தனி அறையில் பிள்ளையை உறங்க விடுகின்றார்கள். இதைப் பார்த்த எம்மவரும் இம்முறைத் தொடங்கி விட்டார்கள். அப்போதுதான் பிள்ளை தன்னம்பிக்கை உள்ள பிள்ளையாக வளருமாம். ஆனால் தற்பொழுது இங்குள்ள பத்திரிகையில் படித்தேன். தனியறையில் உறங்கும் பிள்ளை பயந்த சுபாபம் உள்ள பிள்ளையாக வளர்வதனால் பெற்றோரின் அரவணைப்பு பிள்ளைக்குத் தேவை என்று எழுதியிருந்தார்கள். அதன்படி உங்கள் ஆக்கம் கூட இதனை வலியுறுத்துவது சந்தோசத்தை தருகின்றது

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 29, 2011 @ 18:18:53

   ஐரோப்பியர்களைப் பார்த்து நானும் ஒரு காலத்தில் தனியறையை நல்லதெனக் கூறியவள் தான். இங்கு எழுதியது ஐரோப்பியர் கருத்துத் தான். அவர்களே இதைக் கூறுகிறார்கள். எனது மகளே அம்மா மடியில் படுக்கவும், அணைக்கவும் ஆனந்தமடைகிறாள்.(முப்பதுகளைத் தாண்டியவள்) அன்பும் அணைப்பும் பைத்தியக்காரனையும் வசப்படுத்துவது தானே. நல்லது கருத்திடலிற்கும், வருகைக்கும் மகிழ்ச்சியும், நன்றியும் . இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. வேடந்தாங்கல் - கருண்
  நவ் 30, 2011 @ 02:31:08

  மிக உயர்ந்த சிந்தனை…

  மறுமொழி

 10. SUJATHA
  நவ் 30, 2011 @ 06:37:24

  குழந்தையின் வருகையில் பெற்றவர் மகிழ்வு காணும் இன்பம், ஓரு புறம் தாயின் தாலாட்டில் உறங்கும் குழந்தையின் முகம் பார்த்து
  மகிழும் தாய்க்கு ஒரு தாலாட்டு பாடல் கொடுக்கும் இசை அத்தனையும் இணைந்து வாழ்வது வரு குடும்பம். அருமை வளர்க உங்கள் பணி!!!!!!!!!!!!!

  மறுமொழி

 11. மாலதி
  நவ் 30, 2011 @ 10:06:48

  சிறப்பான படங்களுடன் ஒரு நல்ல செய்தியை பதிவு செய்து உள்ளீர் மிகவும் பயனுள்ளசெய்தி பாராட்டுகளும் நன்றியும்

  மறுமொழி

 12. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  டிசம்பர் 01, 2011 @ 11:19:37

  அருமையான பதிவு.அன்பும் அரவணைப்பும் இருந்தால் எங்கும் வசந்தமே !!நன்றி சகோதரி …….

  மறுமொழி

 13. பிரபுவின்
  டிசம்பர் 02, 2011 @ 03:02:41

  இது மிகவும் அவசியமான பதிவு. பெற்றோரின் இவ்வாறான செயற்பாடு தான் அவர்களை முதியோர் இல்லத்திற்கு கொண்டு செல்ல வைக்கின்றதுவோ என்னமோ!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 03, 2011 @ 20:03:00

   நல்ல மனதத்துவக் கேள்வி. இருக்கலாம் என்று பதில் கூறுவது சரியோ தெரியவில்லை. இனிய கருத்திற்கும், வரவிற்கும் மிக மகிழ்வும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 14. பழனிவேல்
  டிசம்பர் 02, 2011 @ 05:15:32

  இளைய சமுதாயத்திற்கு இது நல்ல வழிகாட்டி..
  நல்ல பதிவு… மேலும் தொடரவும்…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 03, 2011 @ 20:17:46

   உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா. இளைய சமுதாயம் பார்க்க வேண்டுமே! ஆண்டவன் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 15. jayaram t
  டிசம்பர் 02, 2011 @ 18:31:04

  அருமையான பதிவு சகோதரி ,,
  பகிர்ந்ததற்கு நன்றி ..

  மறுமொழி

 16. vinothiny pathmanathan
  டிசம்பர் 02, 2011 @ 21:43:09

  தாயின் நெருக்கம் என்றுமே பிள்ளைகளுக்கு அவசியம். நல்ல விடயம். பகிர்விற்கு நன்றி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: