வாழ்வியற் குறட்டாழிசை. 19.

வாழ்வியற் குறட்டாழிசை. 19.

 

ஒழுக்கம்.

 

ழுக்கமுடையோர் மேல் சாதி. வாழ்வில்
ஒழுக்கமற்றோர் கீழ் சாதி.

து, புகை, பொய், களவு
மாது தீய ஒழுக்கத்துள்ளாகும்.

ழுக்கவாளன் வழுக்கும் அழுக்கு விலக்கி
இழுக்கின்றி நிதானமாய் நடப்பான்.

ழுக்கமுடையோன் இதயம் நாளும் துளி
அழுக்கின்றி நிம்மதியாக வாழ்கிறது.

ண்ணாடியில் நடப்பது போன்றது ஒழுக்கமான
பண்புடைய நல்லவன் வாழ்வு.

ல்லவனைக் கெட்டவன் ஆக்கவும் உலகம்
வல்லமையாய்ப் பாடு படுகிறது.

ழுக்கம், நூல்கள், மரபு, சூழலால்
விழுப்பமாய்(சிறப்பாக) காக்கப் படுகிறது.

ழுக்கம் வாழ்வு தரும். ஊழலுலகத்தில்
ஒழுக்கயீனமே வாழ்வு தருகிறது.

த்தம அறிவிருந்தும் ஒழுக்க மிழப்பவன்
உத்தமர்களால் கீழ் நோக்கப் படுகிறான்.

வீரியமான ஒழுக்க சீலனிடம் மலர்வது
தைரியப்பூ, உண்மைப் பூ.

ழுக்கத்தை ஆள்பவன் வார்த்தை வங்கியிலும்
இழுக்கற்ற பேச்சை எதிர் பார்க்கலாம்.

ழுக்கமெனும் உரைகல்லில் மனிதப் பண்பு
அப்பழுக்கற்ற சந்தனம் ஆகிறது.

 
க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2-12-2011.

  

 

                              

                              

 

 

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பழனிவேல்
  டிசம்பர் 02, 2011 @ 05:13:01

  “உத்தம அறிவிருந்தும் ஒழுக்க மிழப்பவன்
  உத்தமர்களால் கீழ் நோக்கப் படுகிறான்.”

  என்ற குறள் மிகவும் என்னை கவர்ந்துள்ளது

  மறுமொழி

 2. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  டிசம்பர் 02, 2011 @ 06:10:53

  ஒழுக்கவாளன் வழுக்கும் அழுக்கு விலக்கி
  இழுக்கின்றி நிதானமாய் நடப்பான்.

  அற்புதமான வாழ்க்கை நெறிகள்!!
  வாழ்த்துக்கள் அம்மா!!

  மறுமொழி

 3. kkarun09
  டிசம்பர் 02, 2011 @ 07:25:16

  மிகவும் அருமையாக வாழ்வின் நெறிகளை சொல்கிறது பாடல்கள்..

  மறுமொழி

 4. rathnavel
  டிசம்பர் 02, 2011 @ 08:09:27

  அருமை அம்மா.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. சத்ரியன்
  டிசம்பர் 02, 2011 @ 08:51:49

  //ஒழுக்கம் வாழ்வு தரும். ஊழலுலகத்தில்
  ஒழுக்கயீனமே வாழ்வு தருகிறது.//

  இந்த இடத்தில் “ ஊரோடு ஒத்து வாழ்’ என்னும் பழமொழி முரண்படுவதை கவனித்தீர்களா?

  சிறப்பான ஆக்கம். பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 03, 2011 @ 16:37:31

   ஆமாம் சகோதரா. உன்னிப்பாக கவனித்துள்ளீர்கள் மகிழ்ச்சி. வாழ்த்துகள். வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி .இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ramani
  டிசம்பர் 02, 2011 @ 09:07:40

  அருமையான பதிவு
  மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் சொல்லாட்சி
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. Dr.M.K.Muruganandan
  டிசம்பர் 02, 2011 @ 13:11:59

  ஒழுக்கம் பற்றிய உங்கள் பதிவு
  மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.

  மறுமொழி

 8. ramesh
  டிசம்பர் 02, 2011 @ 13:35:15

  கருத்துள்ள குறள்கள் சகோ

  மறுமொழி

 9. கலைநிலா
  டிசம்பர் 02, 2011 @ 16:17:05

  அழகான வரிகள்
  ஒழுக்கத்தை
  ஒப்பித்த விதம்
  அருமை .தொடருங்கள்
  http://vazeerali.blogspot.com/

  மறுமொழி

 10. jayaram t
  டிசம்பர் 02, 2011 @ 18:33:08

  //ஒழுக்கத்தை ஆள்பவன் வார்த்தை வங்கியிலும்
  இழுக்கற்ற பேச்சை எதிர் பார்க்கலாம்.

  ஒழுக்கமெனும் உரைகல்லில் மனிதப் பண்பு
  அப்பழுக்கற்ற சந்தனம் ஆகிறது.//

  என்னை மிகவும் கவர்ந்த வரிகள் ..
  அருமையான பதிவு சகோதரி ,,
  பகிர்ந்ததற்கு நன்றி .

  மறுமொழி

 11. ssakthithasan
  டிசம்பர் 02, 2011 @ 19:32:43

  அன்பினிய சகோதரி வேதா,
  அருமையான ஒழுக்க நெறிகள், வாழ்க்கைக்கு இன்றியமையாத அற்புத வழிகள். மிகவும் அழகாக இலக்கண அழகோடு, இலக்கிய ரசனையோடு எடுத்தியம்பியுள்ளீர்கள். அன்பான வாழ்த்துக்கள் உரித்தாகுக.
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 12. vinothiny pathmanathan
  டிசம்பர் 02, 2011 @ 21:37:30

  வாழ்வில் ஒழுக்கமுடையவர்களை மேல் சாதியினராகவும் , ஒழுக்கமற்றவர்களை கீழ்சாதியினராகவும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது சாதிவெறி பிடித்த கயவர்களுக்கு ஒரு நெற்றியடி. பாராட்டுக்கள் வேதா அன்ரி

  .

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 03, 2011 @ 16:47:18

   சகோதரி உமது இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக நன்றியும், மகிழ்ச்சியும். இதை யார் குறிப்பிடுவார்கள் என்று எண்ணினேன். நீரே எழுதியுள்ளீர் மிக்க மிக்க நன்றி. இரட்டிப்பு நன்றி. இது முக்கிய புள்ளி அல்லவா! ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. SUJATHA
  டிசம்பர் 04, 2011 @ 07:23:47

  ஒழுக்கம்f சூழல், மரபு,நூல்களால் வாழ்வின் சிறக்கின்றது…அருமை குறள்கள் அழகாக வாழ்வியலிற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. தொடர்க பணி!!!!!!!!!!!!!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 04, 2011 @ 07:59:43

   அதிகாலை சுஜாதாவின் கருத்து. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். எனக்கு வேலை உமக்கு விடுமுறை என்று நினைக்கிறேன் இன்று. மிகுந்த நன்றி சுஜா. காலையில் ஒரு ஆக்கம தாலாட்டு என்று வலை ஏற்றினேன் .பழைய தமிழ் அலை – தலைப்பு தந்த கவிதை. இனிய நாள் அமையட்டும்.இறை ஆசியும் கிட்டட்டும்.

   மறுமொழி

 14. பிரபுவின்
  டிசம்பர் 06, 2011 @ 08:28:23

  “உத்தம அறிவிருந்தும் ஒழுக்க மிழப்பவன்
  உத்தமர்களால் கீழ் நோக்கப் படுகிறான்”

  நிதர்சனமான வரிகள் சகோதரி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: