215. தாலாட்டு.(பாமாலிகை (கதம்பம்)

 

தாலாட்டு.

(புலம் பெயர் வாழ்வில் அன்னையர் தாலாட்டு என்றவாறு….)

தங்கக் குழந்தை தொட்டிலிலே
தலை சாய்த்துக் கண்ணயர
தாலாட்டு ஒரு சீராட்டு.
தாய் மடி இணைவில் அமைதியுற
தளிர்ச் செல்வத்தை வசமாக்கத்
தானாகப் பாடுவது தாலாட்டு.

இன்பத்தில் மனிதக் குரலுயரும்,
இணையும் வார்த்தைகள் சந்தமாகும்,
இராகம் ஒன்றும் இழையோடும்.
இரத்தினச் சிற்பக் குழந்தையோ
இழைந்து வசப்படும் தாலாட்டில்
இசையில் வசப்படாதார் யாருளர்!

தாயோடு கேட்டறிந்த தாலாட்டை
வாயாரப் பாடினோம் ஆராரோ.
சாயாத தளமாகத் தினமிங்கு
ஓயாது பூக்கிறது நவஇசைகள்.
வரமாகுமொரு குழந்தைக்காய் நாம்
தரமாகப் பாடலாம் தாலாட்டாய்.

மோதிவரும் நவீன அலைகளால்
ஆதி எழுதுகோலிறகு இங்கு
ஆச்சரியக் கணனியாகியது போல்
அருமைத் தாலாட்டும் அருகியிங்கு
அற்புதக் கதம்ப இசைகளாகிறது.
கற்பனை பெருகிய இசைப்பாட்டாகிறது.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-11-2006.
(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் ஒலிபரப்பாகியது.)

In  Anthimaalai web site:_    http://anthimaalai.blogspot.com/2011/12/blog-post_4655.html

  

                        
 

Advertisements

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. SUJATHA
  டிசம்பர் 04, 2011 @ 08:20:42

  தாயோடு கேட்டறிந்த தாலாட்டை
  வாயாரப் பாடினோம் ஆராரோ.
  சாயாத தளமாகத் தினமிங்கு
  ஓயாது பூக்கிறது நவஇசைகள்.
  வரமாகுமொரு குழந்தைக்காய் நாம்
  தரமாகப் பாடலாம் தாலாட்டாய்.

  தாலாட்டு பாடலிலே கண்ணுறங்கும் குழந்தையின் முகம் பார்த்து
  பெற்றவர்கள் மகிழ்ந்து பூரிக்கும் மகிழ்ச்சியை போல் வருமா? தாலாட்டில் ஒரு சுகம்….குழந்தை முகம் பூரித்து கதைகள் பல பேசிடும் முத்துச்சிரிப்பு போல் வருமா?? அருமை…..தொடரட்டும் உங்கள் பணி!!!!!!!!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 04, 2011 @ 19:58:29

   முதல் வருகை சுஜாதா. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் உமது அன்பான வருகைக்கு. கருத்திடல் என்பதும் ஒரு கலை தான், பிறரைத் தட்டிக் கொடுத்து ஆர்வம் தருதல். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. Kavialagan
  டிசம்பர் 04, 2011 @ 11:02:25

  Padamum paddum thool kilapputhu

  மறுமொழி

 3. nathnavel
  டிசம்பர் 04, 2011 @ 13:02:55

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. எம்.கே.முருகானந்தன்
  டிசம்பர் 04, 2011 @ 14:31:19

  “..இன்பத்தில் மனிதக் குரலுயரும்,
  இணையும் வார்த்தைகள் சந்தமாகும்,..”
  சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. பிரபுவின்
  டிசம்பர் 05, 2011 @ 07:01:28

  இவ்வாறான அருமையான பதிவுகள் தொடர வேண்டும் என்பதே என் அவா.
  நன்றி சகோதரி.

  மறுமொழி

 6. Vetha ELangathilakam
  டிசம்பர் 05, 2011 @ 07:45:27

  நன்றி நன்றி பிரபு! உமது அன்பான வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக மகிழ்ச்சி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 7. கலைநிலா
  டிசம்பர் 05, 2011 @ 10:13:21

  மோதிவரும் நவீன அலைகளால்
  ஆதி எழுதுகோலிறகு இங்கு
  ஆச்சரியக் கணனியாகியது போல்
  அருமைத் தாலாட்டும் அருகியிங்கு
  அற்புதக் கதம்ப இசைகளாகிறது.
  கற்பனை பெருகிய இசைப்பாட்டாகிறது.

  உண்மையை சொல்லும்
  தாலாட்டு கேட்டு
  எனது பாராட்டு…
  http://vazeerali.blogspot.com/

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 05, 2011 @ 15:59:18

   உண்மையாக எனக்குத் தெரிந்த ஒரு பாடகி ஓடியோ கசட்டைப் போட பிள்ளை பாட்டைக் கேட்டபடி நித்திரையாகும். இன்று இளவயதுப் பிள்ளை பாட்டை ரசிக்கும் பிள்ளை.
   மிக்க நன்றி சகோதரா உமது இனிய வரவிற்கும், கருத்திற்கும்.
   இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. பழனிவேல்
  டிசம்பர் 06, 2011 @ 04:54:21

  அன்னையின் தாலாட்டு கேட்டு உறங்கிய காலம் மாறி…
  ஐபாடு பாடக் கேட்டு உறங்கிப் பழகிவிட்டோம்…

  அருமையான தாலாட்டு …மேலும் தொடரவும்…

  மறுமொழி

 9. jayaram t
  டிசம்பர் 06, 2011 @ 05:40:37

  மொத்தமும் அருமை
  அதில் முத்தாய் இந்த வரிகள்

  தாயோடு கேட்டறிந்த தாலாட்டை
  வாயாரப் பாடினோம் ஆராரோ.
  சாயாத தளமாகத் தினமிங்கு
  ஓயாது பூக்கிறது நவஇசைகள்.
  வரமாகுமொரு குழந்தைக்காய் நாம்
  தரமாகப் பாடலாம் தாலாட்டாய்.

  மறுமொழி

 10. மகேந்திரன்
  டிசம்பர் 06, 2011 @ 11:13:41

  தங்கத் தமிழ்
  சங்கத் தமிழில்
  ஓர் அழகிய தாலாட்டு…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 06, 2011 @ 18:37:15

   உங்க தமிழ் பக்கம் வந்தேன். சிவந்த மிளகாய் ஆக்கம் தான் கண்டேன். உமது இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக்க மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. vinothiny pathmanathan
  டிசம்பர் 06, 2011 @ 15:07:01

  அருமையான வரிகள் .பாராட்டுக்கள் அன்ரி

  மறுமொழி

 12. jaghamani
  டிசம்பர் 06, 2011 @ 19:17:04

  தாயோடு கேட்டறிந்த தாலாட்டை
  வாயாரப் பாடினோம் ஆராரோ.

  படமும் பாட்டும் இசைந்து மனம் கவர்ந்த
  அருமையான ஆக்கத்திறகு நிறைவான
  வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 06, 2011 @ 20:50:02

   வழி வழியாக வரும் தாலாட்டு பற்றய உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மனமார்ந்த மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: