3. தொலைத்தவை எத்தனையோ.

தொலைந்தவை எத்தனையோ!

பகுதி. 3

கூப்பிடு தூரத்தில் தான் எனது தந்தையின் தாய் தந்தையர், கண்ணாடியப்பா – ஆச்சி, என் மாமிமார்  சித்தப்பா பெரியப்பாவை வாழ்ந்தோம்.

மாமிமார் (கடந்த முறை பகுதி 2ல் படங்கள் போட்டிருந்தேன்.) சங்கீதம் படித்தனர். சங்கீதப் பரீட்சையெல்லாம் எழுதினார்கள். பரீட்சை பற்றி கிறேட் வன், ரூ (grade one two) என்று அவர்கள் பேசியது என் காதில் விழுந்துள்ளது. நான் சிறு பிள்ளை (5, 6 வயதிருக்கும்.) அதன் விவரங்கள் புரியவில்லை.

இவர்கள் அரசகுமாரிகள் போலத்தான் வாழ்ந்தார்கள்

சாம்பசிவம் வாத்தியார் என்பவர் சனிக்கிழமைகளில் சைக்கிளில் வீட்டிற்கு வந்து சஙகீதம் சொல்லித் தருவார். என்ன வேலையிருந்தாலும், அம்மா கூப்பிட்டாலும் கேட்காமல் சனிக்கிழமையானால் மாமி வீட்டிற்கு ஓடி விடுவேன். ஒரே வீட்டையே ஆச்சி வீடு, அப்பு வீடு, மாமி வீடு என்று நினைத்த நேரம் நினைத்த மாதிரி பேசுவோம்,

வாத்தியார் வர மாமிமார் வெளி விறாந்தையில் உயரமான திண்ணையில் பாய் கொண்டு வந்து விரிப்பார்கள். பாயின் ஒரு நுனியில் வாத்தியார் இருப்பார். மறு நுனியில் இரண்டு மாமிமாரும் சப்பாணி கொட்டி இருப்பினம். மாமியின் ஆர்மோனியப் பெட்டியுடன் தான் வகுப்பு நடக்கும். நான் மிகச் சிறு பிள்ளை,  ஒரு ஓரமாகச் சப்பாணி கொட்டி முழுப்பாடமும் இமை வெட்டாது கேட்டு ரசிப்பேன்.

(google photo)

வெள்ளிக் கிழமை இருட்டிய மாலை நேரங்களில் ”வா! பேபி! (baby) தேவாரம் படிப்போம்!” என்று மாமி வீட்டில் வந்து தன் வீட்டிற்குக் கூட்டிப் போவா. மாமி ஆர்மோனியம் வாசிக்க நாமிருவரும் மாமியோடு பாடுவோம். சிலவேளைகளில் என் தம்பி, தங்கைகளும் என்னோடு வருவார்கள். மாமி எழுந்து போக நாங்களும் ஆர்மோனியம் வாசிப்போம். இப்படியே என் உடம்பில் இசை ஊறியது.
நாவலர் பாடசாலையிலும் மங்களேஸ்வரி ஆசிரியர் சங்கீத ஆசிரியையாக இருந்தார். அங்கு படித்தவை மிக பயனள்ளவை மறக்க முடியாதவை.

நான் 5ம் வகுப்பில் (9 வயது) ஸ்கொலர்சிப் சோதனையில் சித்தியடைந்த போது (தந்தையார் என்ன வேலை என்றால் எப்போதுமே அப்பா கமக்காரன் என்றே போடுவார். (ஆட்கள் தான் வயல் செய்வது.) எங்களையும் போடச் சொல்லுவார். அதனால் எனக்கு ஸ்கொலர்சிப் பரீட்சை எழுத முடிந்தது. ஏனப்பா இப்படி செய்கிறீர்கள் என்று அப்பாவோடு வாதாடியது ஒரு புறமான கதை. தான் ஒரு கமக்காரன் என்று கூறுவதை அவர் பெருமையாகக் கருதினார்.)

10வயதில் ஸரான்லிக் கல்லுரியில் விடுதியில் இருந்து படித்தேன்.

எல்லாப் பாடங்களுடன் சங்கீதம், நடனமும் பாடங்களாக இருந்தது.
நடனத்திற்கு பிரபல நடன ஆசிரியர் கொக்குவில் சுப்பையா ஆசிரியர். சங்கீத ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை (சுப்பிரமணியமோ..என்னமோ). நடனம் கும்பலோடு கோவிந்தாவாக பழக்குவார். பாடசாலையில் விழாக்களின் போது பிரபலங்களுக்கு பயிற்சிகளே பெரும்பாலும் நடக்கும். நாங்கள் அமர்ந்து பார்த்து ரசிப்போம்.

சங்கீதமும் தவணைப் பரீட்சை நடக்கும்.

இப்படி ஒரு தடவை பரீட்சையின் போது எல்லோரும் தனித்தனியாகப் பாடினோம். புள்ளிகள் வழங்கினார்கள். எனது முறை வந்த போது

” எழுந்தாளே பூங்கோதை,

தீயிலிருந்து எழுந்தாளே சீதை…” எனும் கீர்த்தனம் பாடினேன்.

எனக்கே கூடிய புள்ளி கிடைத்தது. நான் நன்கு பாடியது, கூடிய புள்ளி எடுத்தது சங்கீத, நடன வாத்திமாருக்கு ஒரே ஆச்சரியம்! இந்தப் பாடலை அவர்கள் சொல்லித் தரவும் இல்லை. பின்பு கேட்டார்கள் ” எங்கு வேதா இந்தப் பாடலைப் பழகினீர்?” என்று.
அத்தனையும் என் மாமிமார் வகுப்பில் கேட்டது என்று கூறினேன்.

இசையில் எனக்கு இவ்வளவு ஆர்வம் வந்ததற்கு இந்தச் சிறு வயது அனுபவமும் ஒரு காரணமுமாகும்.

இந்திய இசை விழாக்களிற்கு எனது ஒரு சித்தப்பா திருமணம் புரியும் வரை வருடந் தோறும் செல்வார். வந்து கதை கதையாகக் கூறுவார். இந்தச் சித்தப்பா நாவலர் பாடசாலையில் பயிற்றப் பட்ட ஆசிரியராகிப் பின் பாடசாலை அதிபரும் ஆகி ஓய்வு பெற்றார்.

சுவாமிநாதர் கனகசபை ஆகிய இவரை படத்தில் காண்கிறீர்கள்.

73_big-1

இன்று கனடாவில் வசித்தார் – காலமாகிவிட்டார்.
எனது அப்பாவும் சித்தப்பா கனகசபையும் தமது காணிகளைக் கொடுத்து கோப்பாய் பொலிஸ் நிலையக் கட்டிடம் கட்டி சேர் ஜோன் கொத்தலாவலை வந்து திறந்த படம் இது.( இது தனிக் கதை).

பெரிய மாமி காலமாகிவிட்டார். சின்ன மாமி சுகயீகமாகி கனடாவில் வசிக்கிறார் .

அந்த இனிய காலங்கள் என் வாழ்விற்கு இனிப்பூட்டிய காலம்.
என் வளர்ச்சிக்கு வேலியான காலம்.
பாசம், நேசமான இனித் திரும்பி வராத காலம்.
அப்படியே காலமும் நாமும் இருந்திருக்கக் கூடதோ என்று ஏங்கும் காலம்.
இவை தொலைத்த காலங்கள் தானே!

அது ஒரு நிலாக் காலம்!
அது ஒரு கனாக் காலம்!
புது தேன் சிந்திய காலம்!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-12-2011

In Anthimaalai web site:-      http://anthimaalai.blogspot.com/2011/12/3.html

                            

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. rathnavel
  டிசம்பர் 07, 2011 @ 06:41:21

  அருமை அம்மா.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. தமிழ்த்தோட்டம்
  டிசம்பர் 07, 2011 @ 06:42:39

  நமது தோட்டத்திலும் பூத்துள்ளது அக்கா

  மறுமொழி

 3. Peruntha Pia Ramalingam
  டிசம்பர் 07, 2011 @ 09:42:52

  Very good aunt. You’re so good:-)

  மறுமொழி

 4. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  டிசம்பர் 07, 2011 @ 12:02:33

  தொலைந்த காலங்களை மீட்டிப் பார்க்கும் ஒரு அற்புதமான பதிவு!!! வாழ்த்துக்கள் அம்மா!!!

  மறுமொழி

 5. ramani
  டிசம்பர் 07, 2011 @ 13:41:20

  தங்கள் படைப்புகளில் இயல்பாக வார்த்தைகள்
  நடம் புரிவதைக் கண்டே
  தங்கள் இரத்தத்தோடு தமிழும் இசையும்
  சிறுவயதிலேயே கலந்திருக்கவேண்டும் என
  உறுதியாக கண்டு கொள்ள முடிகிறது
  தங்களை பதிவின் மூலம் தொடர்பு கொள்வதில்
  பெருமிதம் கொள்கிறேன்
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. SUJATHA
  டிசம்பர் 07, 2011 @ 18:38:10

  கடந்து வந்த காலங்கள் மனதை வருடுவது உண்மை. காலங்கள்
  கடந்தாலும் அது ஒரு பெட்டகம். நீங்கள் சிறந்த பாடகியாக இருந்து உங்கள் குரல் உங்களுக்குள் ஒளிந்திருப்பது கவலைக்குரிய விடயம். கற்றுக்கொடுத்த உங்கள் உறவுகள் உங்கள் நெஞ்சத்தில் வாழ்கின்றார்கள் அது ஒரு நிறைவு, பகிர்வுக்கு நன்றிகள்!!!!!!!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 07, 2011 @ 20:50:21

   அது தான் எனது மகள் நன்கு பாடினாவே. (குழுக்களிலும் முன்பு பாடியுள்ளா) டென்மார்க்கில் அவ பெயரெடுத்துள்ளா. இலண்டனிலும் பாடினா. திருமதி யோகா தில்லைநாதனின் ”கானக் குயிலி” லும் பாடி இடம் எடுத்தவா. சரி அதை விடுவோம். உமது கருத்திற்கும், வருகைக்கும் மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. மகேந்திரன்
  டிசம்பர் 07, 2011 @ 19:13:26

  அன்புநிறை சகோதரி,
  அழகாக சொன்னீர்கள்..
  மனதுக்குள் அசைபோடும் நினைவுகளை
  தென்றலின் இன்னிசையோடு கூடிய இனிமையாக
  இயைபுடன் பகிர்ந்துள்ளீர்கள்.
  இதுபோன்ற தகனம் செய்யப்பட்ட நினைவுகள் எத்தனை எத்தனையோ….
  அத்தனையும் இனியவையாக இருக்கட்டும்…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 07, 2011 @ 20:42:02

   மிக நன்றி சகோதரா மகேந்திரன். உமது இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மகிழ்வும் நன்றியும். எல்லாம் வல்ல இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. b.ganesh
  டிசம்பர் 08, 2011 @ 01:33:54

  ரொம்ப நாளைக்கப்புறம் இலங்கைத் தமிழை இங்கதான் பாக்குறேன். மெத்த சந்தோஷமா இருக்கு. உங்களோட அனுபவங்கள் படிக்கும் போது, மாலைத் தென்றலில் கடற்கரையில் நடப்பதுபோல இனிமையாகவே இருக்கு. இளம் பருவத்தை நினைத்துப் பார்ப்பதே தனிசுகம்தான். அதை எங்களோட பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றிங்க வேதா!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 08, 2011 @ 18:15:04

   21 தலைப்புகளில் ஆக்கங்கள் எனது வலையில் உள்ளது நேரமிருக்கும் போது வாசித்துப் பாருங்களேன். உங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலிற்கும் மக மகிழ்வும், நன்றியும் ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. வசந்தா சந்திரன்.
  டிசம்பர் 08, 2011 @ 09:36:47

  உங்கள் ஆர்மோனியப் பெட்டியை பார்த்தவுடன், எங்கள் ஆசிரியை எப்போ எழும்பி போவார் என்று காத்திருந்து கட்டையை அமர்த்தி பேச்சு வாங்கிய எல்லாம் மறக்க முடியுமா
  தொலைத்தது எத்தனை ஒன்றா இரண்டா, பாடசாலையிலிருந்து, வீட்டில் சிரட்டையில் சமைத்து விளையாடியது, இப்படி எத்தனை சொல்லிக்கொண்டே போகலாம் . …)))

  மறுமொழி

 10. வே.நடனசபாபதி
  டிசம்பர் 08, 2011 @ 11:15:05

  தங்களது மலரும் நினைவுகளை, அழகாக இலங்கைத் தமிழில் கொண்டு வந்தமைக்கு நன்றி.

  மறுமொழி

 11. Tharshi
  டிசம்பர் 10, 2011 @ 10:41:53

  தொலைத்தவை எத்தனையோ…. தெலையாமல் இருப்பவை ஞாபகங்கள் மட்டும் தான்
  அருமையான படைப்பு வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 12. sabai
  டிசம்பர் 12, 2011 @ 04:42:12

  Kadantha Kala Ninayugal,
  Kadugalave annalum
  KADL ALAIGAL

  மறுமொழி

 13. பிரபுவின்
  டிசம்பர் 12, 2011 @ 05:08:41

  இலங்கைத் தமிழின் அழகுக்கு நிகர் வேறு ஏது.புலம் பெயர்ந்தும் தமிழை மறவாமல் நேசிக்கும் உங்களுக்கு கடவுளின் அனுக்கிரகம் எப்போதும் இருக்கும்.இது சத்தியம்.என்ன அழகு நடையில் எழுதியுள்ளீர்கள்!வாழ்த்துக்கள் வைர மங்கையே!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: