40. கண்ணடிக்கும் மின்னல்.

 

கண்ணடிக்கும் மின்னல்…..

 

காரசாரமான மேக உரசலில்
ஆரவாரமான ஒளி மின்னலில்
கார்மேகம் எதைத் தேடுகிறது!

டைந்த மின்சார இணைப்பை
உதாசீனமாக யார் தொட்டார்!
உக்கிரமாயுள்ளதே இந்த மின்னல்!

மின்சார எழுதுகோலால் குழச்தையின்
தன்னார்வக் கோடுகள் மேகத்தில்
கன்னாபின்னா வெனக் கண்ணடிக்குதே!

மேகக் கன்னிகளின் காம
மோகாக்கினிப் பிளம்புகளோ இந்த
வேகமான ஒளி மின்னல்கள்!

ண்ணைப் பொத்திப் பலர்
கட்டிலடியில் ஒளிக்கிறார்!
கண்பறிக்குமாம் மின்னல் என்று

த்தனை வயதாகியும் பல
அப்பு  ஆச்சிக்கு இன்றும்
அநியாயப் பயமாம் மின்னலிற்கு.

   

ன்னல்கள் இழுத்து மூடி
கண்களையுமிறுக மூடிச் சிறுவராய்
மின்னலிற்குப் போர்வையுள்ளான ஞாபகம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-12-2011.

 

                            

 

29 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. oppilan mu.balu
  டிசம்பர் 09, 2011 @ 06:12:23

  மின்னல் …அழகான கவிதை ..இயற்கையின் அதிசயங்களில் இதுவும் ஒன்று ..! படங்களில் தோன்றும் மின்னல்கள் கண்ணை பறிக்கத்தான் செய்கின்றன ..அழகான புகைப்படமும் ..!அருமை சகோதரி

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 09, 2011 @ 21:19:42

   அதிசயமும், ஆபத்தும் நிறைந்த அழகு. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா. உங்கள் இனிய வருகை, கருத்து, இனிமை. இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 2. பழனிவேல்
  டிசம்பர் 09, 2011 @ 07:37:36

  ஆஹா… என்ன அழகான மின்னல்!
  அதிலும்

  “உடைந்த மின்சார இணைப்பை
  உதாசீனமாக யார் தொட்டார்!
  உக்கிரமாயுள்ளதே இந்த மின்னல்!”
  வரிகள் என் கண்ணில் மின்னிக்கொண்டே இருக்கிறது…

  மறுமொழி

 3. jaghamani
  டிசம்பர் 09, 2011 @ 08:46:01

  மின்சார எழுதுகோலால் குழச்தையின்
  தன்னார்வக் கோடுகள் மேகத்தில்
  கன்னாபின்னா வெனக் கண்ணடிக்குதே!

  மின்னலடிக்கும் படங்களுடன் அருமையான
  மின்னல் கவிதைக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  மறுமொழி

 4. rathnavel
  டிசம்பர் 09, 2011 @ 10:53:13

  அருமை.

  மறுமொழி

 5. Vidu
  டிசம்பர் 09, 2011 @ 11:51:59

  அழகான வருணனை. மின்னலின் ‘ஒளி’யும் இடியும் ‘ஒலி’யும் ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து மேகங்கள் மோதுவதால் ஏற்பட்டாலும், ஒளி ஒலி-யை முந்தும் என்பதால் மின்னல் முதலில் நமக்கு தெரிகிறது, பின் சில நாழிகை கழித்துத் தான் இடியின் ஒலி நம்மை வந்து சேருகிறது என்று சின்ன வயதில் அப்பா மின்னலைக் காட்டி சொல்லிக் கொடுத்த ஞாபகம் வருகிறது. 🙂
  நல்ல கவிதைக்கு நன்றி!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 09, 2011 @ 18:55:30

   விது! இதே விளக்கம் என் அப்பாவும் எனக்குத் தந்தவர். பின்பு படித்து அறிந்தோம். மிக நன்றி விது. உமது அன்பான வருகைக்கும் கருத்திடலிற்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. rishvan
  டிசம்பர் 10, 2011 @ 06:52:55

  மின்சார எழுதுகோலால் குழச்தையின்
  தன்னார்வக் கோடுகள் மேகத்தில்

  nice lines…. please read my tamil kavithaigal in http://www.rishvan.com

  மறுமொழி

 7. rishvan
  டிசம்பர் 10, 2011 @ 06:54:05

  மின்சார எழுதுகோலால் குழச்தையின்
  தன்னார்வக் கோடுகள் மேகத்தில்////

  nice lines… please read my tamil kavithaigal in http://www.rishvan.com

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 11, 2011 @ 08:57:25

   அன்பின் றிஷ்வான்! உங்கள் இடுகை ஸ்பாம் பகுதியில் மாட்டுப் பட்டிருந்தது. இப்போது தான் கண்டு விடுவித்தேன் உங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலிற்கும் மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும் ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. Tharshi
  டிசம்பர் 10, 2011 @ 09:31:22

  கண்ணைப்பறிக்கும் மின்னல்…மனதையும் பற்றிச்செல்கின்றது..
  உடைந்த மின்சார இணைப்பை
  உதாசீனமாக யார் தொட்டார்!
  அழகு வரிகள்..
  சன்னல்கள் இழுத்து மூடி
  கண்களையுமிறுக மூடிச் சிறுவராய்
  மின்னலிற்குப் போர்வையுள்ளான ஞாபகம்….
  மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் ஒரு
  அழகான கவிதை…அழகிய படங்களுடன்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 10, 2011 @ 10:06:28

   அந்தப் போர்வையுள்ளான காலத்தில் விரல்களைக் கூட மடக்கி, எதையும் சுட்டக் கூடாதென்று தம்பி, தங்கைமாரையும் பாதுகாத்தது. நினைக்க, நினைக்கச் சிரிப்பு வருகிறது. மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் தர்சி. உமது வரவிற்கும், கருத்திடலிற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. SUJATHA
  டிசம்பர் 10, 2011 @ 12:12:13

  கவியோடு கண்டிக்கும் மின்னலும் எம் கண்ணைப்பறிக்க வைக்கின்றதே…அழகாக காட்சியோடு கவியும் அற்புதம்..தொடரட்டும் பணிகள்!!!!!!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 10, 2011 @ 12:48:44

   எங்கே மடம் இரவு கொஞ்ச நேரம் காணேல்லையே! வெள்ளி தானே!..good! பிடித்திருந்தால் மகிழ்ச்சி தான். மிக மிக மகழ்ச்சி வந்து எழுதியதற்கு.It means a lot . Thank you very much. God bless you all.

   மறுமொழி

 10. vinothiny pathmanathan
  டிசம்பர் 11, 2011 @ 21:49:59

  இந்தக் கவிதாயினியின் கவிக்கு மின்னலும் தப்பவில்லை .அருமையான கவி வரிகள். காட்சிகளும் பிரமாதம் .

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 11, 2011 @ 22:53:40

   நன்றி சகோ. மிக மிக மகிழ்ச்சி லேட் நைட் என்றாலும் வாசித்துக் கருத்திட்டமைக்கு. கவிதையை எழுதினாலும் அதை மினுக்கப் படுவது கஷ்டம், அதற்கு ஏற்ற படங்கள் தேடுவது அதை விடக் கஷ்டம். எதுவும் இலேசானதல்ல. பல முன்னேற்பாடுகள் செய்து தான் வலை ஏற்ற வேண்டும். வாசிப்பவர்கள் மகிழ்ச்சி திருப்தி தானே எழுத்தாள்பவனின் எண்ணம். இறை அருள் கிட்டட்டும் விநோ.

   மறுமொழி

 11. பிரபுவின்
  டிசம்பர் 12, 2011 @ 05:02:02

  அழகான அருமையான புகைப்படங்கள்.

  வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

 12. மகேந்திரன்
  டிசம்பர் 12, 2011 @ 14:10:00

  ////மேகக் கன்னிகளின் காம
  மோகாக்கினிப் பிளம்புகளோ///

  ஊற்றெடுக்கும் உவமை நயம்..
  மின்னலுக்கோர் மின்னற் கவி…
  நன்று சகோதரி.

  மறுமொழி

 13. கலைநிலா
  டிசம்பர் 12, 2011 @ 14:58:47

  உடைந்த மின்சார இணைப்பை
  உதாசீனமாக யார் தொட்டார்!
  உக்கிரமாயுள்ளதே இந்த மின்னல்!
  அழகான வார்த்தை வழிபாடு ,
  இந்த கவிதையில் உடன் பட்டு
  ஈர்க்கிறது

  மறுமொழி

 14. ramani
  டிசம்பர் 13, 2011 @ 08:46:09

  படங்களும் பதிவும் மிக மிக அருமை
  வார்த்தைகளின் வர்ண ஜாலங்களில்
  மனம் பறிகொடுத்துப் போனேன்
  அழகிய பதிவு தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 13, 2011 @ 17:03:12

   உங்கள் இனிய வருகையும், கருத்திடலும் மிக மகிழ்வைத் தருகிறது. இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 15. வேல்முருகன்
  டிசம்பர் 30, 2011 @ 08:32:19

  தானே புயலில்
  தாக்குண்டு இருக்கையில்
  தங்கள் மின்னல் கவிதை
  மிரட்டுகிறது

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 30, 2011 @ 16:11:33

   ஆகா! அருமையாக எழுதியுள்ளீர்கள்! உங்கள் இனிய வருகைக்கும், பின்னாட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் சகோதரா. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: