216. பேனா முனை

 

பேனா முனை

 

ர் முனையாய் உலகை உழும்
கூர் முனையாம் பேனா முனை.
யார் தடுத்தும் ஓயா முனை.
தீர்வெடுக்கும் தீர முனை.
மேலாடை கழற்ற நிர்வாணமாகும்
காலாடக் கசியும் கரு நாளம்,
நூலாடும் கருத்துச் சொல்லோவியம்
மேலோடிச் சமூக அழுக்ககற்றும்.

ழுத நீலக் குருதியிழப்பு, உலகின்
பழுது சுட்டி, அழுக்கு விலக்கும்.
புத்துணர்வுப் பதியமிடும் கூர்முனை.
பேனாவை உடைத்து அழிக்கலாம், அதில்
ஊனாகும் உயிர்க் கனவு அழியாது.
தூணாகும் மனுநெறிக் காவலன் பேனா.
பூமி வெடித்துப் பூப்பது போல்
பூக்குமுணர்வின் ஓங்கார முனை.

நெஞ்சத்து உணர்வோவியச் சித்திரத் தூரிகை
கிஞ்சித்துமஞ்சாது அஞ்சலிக்கும் அமுத முனை.
அஞ்சித் தொழுது கைகள் கூப்பாது
நெஞ்சு நிமிர்த்தி வெளிவிடும் துளிகளால்
நெரிபடும் மனிதர் பேனாவை ஆள்பவனின்
நேசவாழ்வையே எடுத்து விடுகின்றார்.
கூரான கருத்தைச் சார்பாக எண்ணாத
நேரற்ற மனிதரும் பேனாவை எறிவாரோ!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-7-2006.

(இலண்டன் தமிழ் வானொலியிலும், சி.ஐ.ரிவியிலும் கவிதை நேரங்களில் என்னால் வாசிக்கப்பட்டது.)

(வேறு)
 இது – எனது முதல் கவிதை நூலான வேதாவின் கவிதைகளில் வெளியானது.

                                         

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GANESH
  டிசம்பர் 12, 2011 @ 08:27:02

  புத்துணர்வு பதியமிடும் கூர்முனை என பேனா முனையைப் பற்றி நீங்கள் புனைந்த கவி அருமை. எள் முனையளவும் மிகையற்ற நிஜங்கள் ஒவ்வொரு வரியும்! மனதில் பதிந்து எனக்குப் பிடித்த வரிகளாயின. உம் தமிழ் சிறக்க இதயபூர்வமான வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 12, 2011 @ 09:00:40

   மிக மிக மகிழ்ச்சியும், நன்றியும் சகோதரா. உங்கள் இனிய வருகை மிகக் காத்திரமானது. என்னை தட்டிக் கொடுப்பது. மேலும் என் பணியை உறுதிப் படுத்துவது. சோம்பியிருக்காது சிறு முயற்சி செய்ய முடியும். (உலகை மாற்றியமைக்க என்னால் முடியாது) நன்றி நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. சத்ரியன்
  டிசம்பர் 12, 2011 @ 08:59:00

  எழுதுகோலுக்கு எழுதியிருக்கும் கவிதை அருமை.

  மேலாடை களற்ற – என்னும் சொல்லில் ‘ழ’ கரம் மாறியிருக்கிறது. கவனியுங்கள்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 12, 2011 @ 09:10:59

   நன்றி சகோதரா. ”ழ” கரம் மாற்றி விட்டேன். ஒரு பிழை விடாமல் தமிழ் எழுதுபவள். 25 வருட டெனிஸ் ஒட்டலால் இப்படித் தடுமாறுகிறேன். இதனால் வெட்கமும் படுகிறேன் . சந்தேகம் வந்தால் அகராதி பார்த்துத் தீர்ப்பேன். இப்படிச் சுட்டுவதை வரவேற்கிறேன் மறுபடியும் நன்றி. இதை விட கருத்திடலிற்கும், வரவிற்கும் மிக மகிழ்ச்சியும், மறுபடி நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. Tharshi
  டிசம்பர் 12, 2011 @ 09:48:26

  ஆயுதமுனையால் சாதிக்க முடியாததை ஒரு பேனா முனையால் சாதிக்கமுடியும் என்பார்கள்
  பேனா பற்றிய தங்களின் கவிதை அருமை
  உழுத நீலக் குருதியிழப்பு, உலகின்
  பழுது சுட்டி, அழுக்கு விலக்கும்.
  புத்துணர்வுப் பதியமிடும் கூர்முனை.
  பேனாவை உடைத்து அழிக்கலாம், அதில்
  ஊனாகும் உயிர்க் கனவு அழியாது.
  தூணாகும் மனுநெறிக் காவலன் பேனா.
  அழகு வரிகள்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 12, 2011 @ 12:22:20

   தர்சி மிக மகிழ்ச்சியும் நன்றியும் உமது உடன் வருகைக்கு, கருத்திற்கு இது எத்தனை பெரிய உற்சாகம் தருவது தெரியுமா! ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும். நன்றி, நன்றி.

   மறுமொழி

 4. வே.நடனசபாபதி
  டிசம்பர் 12, 2011 @ 09:52:23

  // யார் தடுத்தும் ஓயா முனை.
  தீர்வெடுக்கும் தீர முனை.//
  சரியாகச் சொன்னீர்கள். நான் இரசித்த வரிகள் இவை.வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 5. பழனிவேல்
  டிசம்பர் 12, 2011 @ 10:29:23

  “மேலாடை கழற்ற நிர்வாணமாகும்
  காலாடக் கசியும் கரு நாளம்,
  நூலாடும் கருத்துச் சொல்லோவியம்”
  வரிகள் ஆளுமை…
  அற்புதம்…

  மறுமொழி

 6. மகேந்திரன்
  டிசம்பர் 12, 2011 @ 14:05:53

  //////நெஞ்சத்து உணர்வோவியச் சித்திரத் தூரிகை
  கிஞ்சித்துமஞ்சாது அஞ்சலிக்கும் அமுத முனை./////

  முத்துப்போன்ற சொற்களால் கோர்த்த
  அழகிய ஆரம் சகோதரி.
  எம்முனைக் கூரெனினும்
  அம்முனையையைக் காட்டிலும்
  பன்மடங்கு கூராம்
  எழுதுகோலின் முனை…

  உள்ளதை உள்ளபடி தான்
  சொல்லத் தெரியும்
  பொய்யுரைக்கத் தெரியாத
  எழுதுகோலின் முனைக்கோர்
  அழகிய கவி.

  மறுமொழி

 7. rathnavel
  டிசம்பர் 12, 2011 @ 14:35:09

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 8. dhavappudhalvan
  டிசம்பர் 12, 2011 @ 14:47:45

  “உள்ளதை உள்ளபடி தான்
  சொல்லத் தெரியும்
  பொய்யுரைக்கத் தெரியாத
  எழுதுகோலின் முனைக்கோர்
  அழகிய கவி.”

  உண்மையையும் உரைக்கும், பொய்யையும் உரைக்கும் பேனாமுனை. பேனாவை பயன்படுத்தும் மனிதனின் எண்ணம் போல் தான் பேனாமுனை எழுதுமே தவிர, உண்மையை மட்டுமே எழுதும் என்பது தவறு.

  மறுமொழி

 9. கலைநிலா
  டிசம்பர் 12, 2011 @ 14:57:24

  ஏர் முனையாய் உலகை உழும்
  கூர் முனையாம் பேனா முனை.
  யார் தடுத்தும் ஓயா முனை.
  தீர்வெடுக்கும் தீர முனை.
  உங்கள் கூறிய முனை
  கண்ட அழகினை
  பாராட்டுக்கிறேன்…தொடருங்கள்

  மறுமொழி

 10. dhavappudhalvan
  டிசம்பர் 12, 2011 @ 17:00:17

  ஆனாலும் அருமையான சொற்களைக் கொண்டு புதுமையான கவிதையை வடித்திருக்கிறிர்கள். வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 11. கலாம் காதிர்
  டிசம்பர் 12, 2011 @ 18:11:02

  அழிக்க முடியாத
  உண்”மை” களால்
  கிழிக்க முடியாத
  எண்ணத்தாளில்
  கூராக எழுதும்;

  சமுத்திரமாய்ப் பொங்கும்
  சமுதாயப் பிரளயங்களை
  சிரட்டை அளவேனும்
  சிரத்தையுடன் அள்ளித்
  தடுக்கும்

  “கவியன்பன்” கலாம்

  மறுமொழி

 12. vinothiny pathmanathan
  டிசம்பர் 12, 2011 @ 22:24:27

  கூரான கருத்தைச் சார்பாக எண்ணாத
  நேரற்ற மனிதரும் பேனாவை எறிவாரோ!
  என்னைக் கவர்ந்த வரிகள். அருமை

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 13, 2011 @ 06:39:13

   உண்மை தானே சகோதரி. பிறரை நசுக்குவோர் தாமே பேனாலை எறிய மாட்டார்களே! அப்போ அங்கு என்ன நீதி வாழப்போகிறது?
   மிக்க நன்றி சகோதரிஇனிய வருகைக்கும், கருத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 13. ramani
  டிசம்பர் 13, 2011 @ 08:50:07

  எழுதுகோல் தெய்வம்
  எழுத்தும் தெய்வம் என்பான் பாரதி
  இப்பதிவில் எழுதுகோல் படங்களும் அழகு
  எழுதுகோலின் அருமை பெருமைகளை
  சொல்லிப் போகும் பதிவும் மிக மிக அழகு
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 14. Vetha ELangathilakam
  டிசம்பர் 13, 2011 @ 17:01:55

  உங்கள் இனிய வருகையும், கருத்திடலும் மிக மகிழ்வைத் தருகிறது. இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 15. பிரபுவின்
  டிசம்பர் 14, 2011 @ 05:20:11

  சட்டப்புத்தகங்களிலும், பாடப் புத்தகங்களிலும் சேர்க்க வேண்டிய பதிவு.
  நன்றி சகோதரி.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 14, 2011 @ 08:05:00

   ஓ! பிரபு! அவரவருக்கு என்ன விதியோ அது நடக்கும். என் கடன் பணி செய்து கிடப்பதே. உமது இனிய வரவிற்கும், நம்பிக்கை வரிகளுக்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 16. பி.தமிழ் முகில்
  ஜூன் 19, 2013 @ 21:10:08

  “உழுத நீலக் குருதியிழப்பு, உலகின்
  பழுது சுட்டி, அழுக்கு விலக்கும்.”

  “அஞ்சித் தொழுது கைகள் கூப்பாது
  நெஞ்சு நிமிர்த்தி வெளிவிடும் துளிகளால்”

  இவ்வரிகளை மிகவும் இரசித்தேன் கவியே….. வாழ்த்துகள் !!!

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 29, 2013 @ 05:41:55

   உங்கள் இனிய வருகையும், கருத்திடலும் மிக மகிழ்வைத் தருகிறது. இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: